இடுகைகள்

சமூக வலைத்தளங்கள் வலதுசாரித்துவத்தை ஊக்குவிக்கின்றன

படம்
Resume சமூக வலைத்தளங்கள் செய்திகளை உணர்ச்சிகரமாக்குகின்றன ஸ்வீடன் பத்திரிகையாளர் கரின் பீட்டர்சன் தமிழில்: ச.அன்பரசு இன்று மக்கள் தமது செய்திகளை பெரும்பாலும் சமூக வலைத்தளங்களிலிருந்து பெறுகிறார்கள். அதில் தவறான செய்திகள் நிறைய புழங்குகின்றன. ஊடகங்களுக்கு சமூக வலைத்தளங்கள் செய்திகளுக்கான முக்கிய ஆதாரமாக மாறியுள்ள நிலையில் இந்த போலிச்செய்திகள், வதந்திகளை எப்படி சரி செய்வது? தொடக்கத்தில் ஊடக நிறுவனங்கள் சமூக வலைத்தளங்களை கண்டுகொள்ளாமல் அமைதி காத்தன. காரணம், இதில் வெளியிடப்படும் செய்திகள் மற்று பிற விஷயங்களின் தாக்கம், அவற்றை எப்படி எதிர்கொள்வது என்பதில் தடுமாற்றம் இருந்தன. மக்களுக்கு செய்திகளை சரியான முறையில் வழங்குவதற்காக இன்று ஃபேஸ்புக்குடன் பல்வேறு செய்தி நிறுவனங்கள் கைகோர்த்துள்ளன.  இதன் அடிப்படையில் சந்தா கட்டி படிக்கும்படியான திட்டங்களும், நன்கொடை பெற்று செய்திகளை வழங்குவதும் இன்றைய டிரெண்டிங்காக உள்ளது.  சமூக வலைத்தளத்திற்கு நீங்கள் தெரிவிக்கும் ஆதரவு என்பது கருத்தியல் சார்ந்ததா? சமூக வலைத்தளத்தில் வலதுசாரித்துவத்தின் வேகத்தை எளிதாக நீங்கள் கண்டுணர முட

லவ் இன்ஃபினிட்டி: பெண் தோழிகளிடம் கவனம்!

படம்
kelly oneal/pinterest லவ் இன்ஃபினிட்டி  குமார் சண்முகம் தொகுப்பு: ஹவில்தார் கேசரி, ரிஷ்விதா கௌர் நீங்கள் நான் பேசுவது, யோசிக்கிறது இதையெல்லாம் வெச்சு பெரிய ஸ்த்ரீ லோலன் அப்படியெல்லாம் யோசிச்சிருப்பீங்க. ஏன்னா அதுதான் நம்மோட இயல்பு,  ஒருத்தரை பார்க்கும்போதே டிரஸ், முகம், தலை சீவியிருக்கிறதுன்னு கணக்குப்போட்டு கேரக்டரை செட் பண்றது. ஆனால் நான் இதில் எதிலயும் வரமாட்டேன். சேரமாட்டேன். ஏன்னா, நான் கும்பலாச் சேர்ந்து காரியம் செய்றதைவிட தனியாக செய்யணும் என்பதுதான் என்னோட பேராசை. சுமதி, கிராமத்துப் பொண்ணுதான். என்னோட ஒப்பிட்டா அவ கேள்வி மூலமாகவே நிறைய தெரிஞ்சு வெச்சிருந்தா. பிளஸ்டூ படிக்கிறான்னா அவ உடம்பு பத்தி அவளுக்கு தெரியாதா என்ன, பீரியட் வரும், அதுக்கு நாப்கின் யூஸ் பண்றதுன்னு அவளும் அப்ப தொடங்கியிருந்தா. அவளச்  சமாளிக்கிறதுல எது கஷ்டம்னா, அவ ஒரு இடத்துல இருந்தான்னு வெச்சுக்கோங்க. எதேச்சையா நானு அங்க இருந்து தொலைக்கிறேன். உடனே என்னைக் கண்டுபிடிச்சு, கவனிக்க ஆரம்பிச்சிருவா.  அவள் முழு உடம்பிலும் கண்கள் முளைச்சா மாதிரி பார்க்கிறான்னு என்னோட ஆறாவது அறிவு கண்டுபிடிச்சிடும்.

அவல நகைச்சுவையின் உச்சம் - அமர்பாரி டோமர்பாரி நக்ஸல்பாரி

படம்
குட்ரீட்ஸ் அமர் பாரி, டோமர் பாரி  நக்ஸல்பாரி கிராபிக் நாவல் சுமித் குமார் வடிவமைப்பு: ஷிகாந்த் சப்லானா ஹாரிசன் புக்ஸ் சத்தீஸ்கர், ஆந்திரம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் உருவான நக்ஸல்பாரிகள் பற்றிய கதைதான். ஆனால் சொன்ன மொழியில்தான் அத்தனை காமெடியும் அரங்கேறுகிறது. முழுக்க முழுக்க அரசியல் செய்திகளின் அடிப்படையில் உருவான கிராபிக் நூல். ஓவியர் பாலமுருகன் இது பற்றிக்கூறிய போது, ஓவியங்கள் முதிர்ச்சியாக அமையவில்லை என்று கூறினார். ஆனால் படிக்கும்போது நீங்கள் விஷயங்களை சற்று உணர்ந்து இருந்தால், அது ஒரு பெரிய பிரச்னையாகவே தெரியாது. அப்படி ஒரு காமெடியாக படங்களையும், கார்ட்டூன்களையும் இணைத்து காமிக்ஸ் புத்தகமாக மாற்றியிருக்கிறார் சுமித் குமார். ஸ்க்ரோல்.இன் அதிலும் இதில் காமெடி எப்படி உருவாகியிருக்கிறது என்றால், உண்மையில் நடந்த சம்பவம் மிகவும் கொடூரமானது. ஆனால் அதனை சுமித் குமாரின் ஓவியங்களிலும் எழுத்துக்களிலும் பார்த்தால் சிரிக்காமல் கடக்க முடியாது. அப்படி ஒரு அவல நகைச்சுவை சுமித்துக்கு இயல்பாகவே கைவந்திருக்கிறது. இதற்கு இரண்டு உதாரணங்கள்: பழங்குடிகளை சாரு மஜூம்தார்

ஹெட்ஜ் பண்டுகள் இந்த ஆண்டு எப்படி?

படம்
FinMarketGuru கடந்த ஆண்டு குவிந்த ஹெட்ஸ் நிதித்தொகைகளின் எண்ணிக்கை 3.24 ட்ரில்லியன் டாலர்கள். ஹெட்ஜ் நிதி குறைந்துள்ள அளவு 6.7% உலகிலேயே பிரிட்ஜ் வாட்டர் அசோசியேட்ஸ் என்ற நிறுவனம், 125 பில்லியன் டாலர்கள் அளவு சொத்துக்களை பின்பற்றுகிறது. கடந்த ஆண்டின் டாப் 10 முதலீட்டாளர்களின் ஹெட்ஜ் நிதி வருமான அளவு 7.7 பில்லியன் டாலர்கள். கடந்த ஆண்டில் மூடப்பட்ட ஹெட்ஜ் நிதி நிறுவனங்களின் எண்ணிக்கை 580. திறக்கப்பட்டவற்றின் எண்ணிக்கை 552. 2015 இல் மூடப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 3000 இந்த ஆண்டின் ஜனவரியில் கென் கிரிஃபின் என்ற நிறுவனம் அதிக விலைமதிப்பு கொண்ட இடத்தை வாங்கியது. இதன் மதிப்பு, 238 மில்லியன். பொன்சீ திட்டத்தை நடத்தி மோசடி செய்த நிதிநிறுவனர் பெர்னி மேட்ஆஃபின் சிறைதண்டனைக்காலம், 150 ஆண்டுகள். நன்றி: க்வார்ட்ஸ்

குப்த ராஜ்யத்தைக் காப்பாற்றப் போராடும் நாயகன்- சாண்டில்யன்

படம்
மெரினாபுக்ஸ் மலைவாசல் - சாண்டில்யன் வானதி பதிப்பகம் ரூ.200 1969 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நாவல் 2016 ஆம் ஆண்டுடன் 36 ஆவது பதிப்பை எட்டியுள்ளது. அப்படி இந்த நூலில என்ன உள்ளது?  சுவாரசியம் தவிர வேறு எதுவும் இல்லை. உடையார் நாவல் வந்தபின்தான் மக்களைப் பற்றிய வரலாற்று புனைவுகள் சிறிதேனும் அதிகரித்து உள்ளன.  முதலில் எழுதிய வரலாற்றுப் புனைவுகள் அனைத்தும் மன்னரின் குடும்பம், அவரின் காதல்கள், சிற்பக்கலை ஆகியவற்றை தாண்டி வந்தாலே பெரிய விஷயம். சாண்டில்யனின் நாவல், குப்தர்களின் வாழ்க்கையைப் பேசுகிறது. குப்தர்களின் மன்னரான ஸ்கந்தகுப்தர் நோயால் நலிவடைந்து கிடக்க, நாட்டின் பொருளாதாரம் காலியாகி கிடக்கிறது. காரணம், ஹூணர்களுடன் செய்த அடுக்கடுக்கான போர்கள். படைக்கு பணம் வழங்க முடியாமல், நாணய மதிப்பையே குறைத்து உத்தரவிட்டு நோய்மையால் தடுமாறுகிறார் ஸ்கந்தகுப்தன்.  அவரின் சித்தி மகன் பூரகுப்தன், வாரிசுரிமை என்பதைத் தாண்டி  சக்ரவர்த்திக்கான எந்த அம்சங்களும் இல்லாதவன். அவனை விட அவனை சக்ரவர்த்தி ஆக்க அவனது தாய் ஆனந்திதேவி முயற்சிக்கிறார். இதற்காக ஹூணர்களிடம் சேர முயற்சிக்கிறார். குப்தர்களின

ஹெட்ஜ் நிதியில் லாபம்!

வணிகத்தில் லாபம் பார்ப்பதற்கான முக்கிய வழி, ஹெட்ஸ் நிதிகளில் இணைவதுதான். இந்த முதலீடு, பல்கிப் பெருகி நம் வங்கிக்கணக்கை அடைவது நாட்டின் தொழில்வளர்ச்சியைப் பொறுத்துள்ளதே.  ஹெட்ஜ் நிதி என்பது வெளிநாட்டு முதலீடு. கடல்கடந்து இன்று நீங்கள் அமெரிக்காவில் ஏன் இங்கிலாந்தில் கூட முதலீடு செய்யலாம். இணையம் அனைத்தையும் பார்த்துக்கொள்ளும். நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்டு ஆன்லைன் வணிகத்தில் நீங்கள் ஈடுபடலாம். உலகிலுள்ள பணக்காரர்கள் இவ்வகையில் வளரும் தொழில்துறையில் முதலீடு செய்கின்றனர். நாட்டின் வளர்ச்சிக்கு இந்த ஹெட்ஜ் நிதி அவசியம். கடந்த ஆண்டில் மட்டும் இவ்வகையில் கிடைத்த முதலீட்டு நிதி 88 பில்லியன் டாலர்கள். நாட்டின் தொழில்வளர்ச்சி சரியான திசையில் சென்றால்தான் முதலீட்டு நிதி கிடைக்கும். அரசியல் தடுமாற்றங்கள், தொழில்துறை சரிவு, போராட்டங்கள் நாடு திகைத்து நின்றால் மெல்ல ஹெட்ஜ் நிதி சரிவைச் சந்திக்கும். கடந்த ஆண்டின் செப்டம்பரில் 955 பில்லியன் டாலர்கள் முதலீட்டு நிதி கிடைத்தது. ப்ளூம்பர்க் அறிக்கைப்படி இது சாதனையான தொகைதான். சிக்கல்களைச் சந்தித்தாலும் இன்றும் ஹெட்ஜ் நிதிகளில் பணம் குவிவது

பாதுகாப்பு கேமரா - இந்தியா வேகம்

படம்
கண்காணிப்பில் முந்தும் இந்தியா! இந்தியா, தன் எல்லைப்பகுதியை ஹை டெக்காக மாற்றி வருகிறது. ஏறத்தாழ இரண்டு கோடி செலவில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட கேமராக்களை வாங்கி எல்லைப்பகுதியில் பொருத்தி வருகிறது என்ன பிரயோஜனம்? ஏறத்தாழ பத்து கி.மீ. வரையிலான மனிதர்களின் நடமாட்டத்தை இக்கேமராக்கள் மூலம் அறியலாம். வாகனங்களை இருபது கி.மீ. தொலைவிலேயே அறிய முடியும். எதற்காக இந்த பரபரப்பான பணி? சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் ஏற்படுத்தும் தீவிரவாத தாக்குதல்களை சமாளிக்கத்தான். சீன - திபெத் பகுதியில் வீரர்கள் அசாதாரண வானிலையை சமாளித்து பாதுகாப்பு பணிகளை செய்வது கடினம். எனவே, பாதுகாப்பு கேமராக்களை இந்திய அரசு நாடியுள்ளது. - தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்