இடுகைகள்

யூத இனத்தைச் சேர்ந்த மூன்று போராட்டக்காரர்கள்! இன ஒழிப்புக்கு எதிர்ப்பு, மரங்களைக் காக்கும் முயற்சி, எல்ஜிபிடியினருக்கான கஃபே!

படம்
                  தாலியா வுடின் இவர் சூழல் மற்றும் சமூக நீதிக்காக போராடி வருகிறார் . ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார் . தற்போது இவர் மரத்தில் வசித்து வருகிறார் . இங்கிலாந்து அரசு அதிவேக ரயில் சேவைக்காக இருப்புப்பாதை அமைக்கவிருக்கிறார்கள் . காலன் வேலி எனும் அந்த இடத்தில் பிற சூழலியலாளர்களுடன் இணைந்து தொன்மையான மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கும் முயற்சியில் தாலியா ஈடுபட்டுள்ளார் . லண்டனுக்கு வெளியிலுள்ள இந்த இடத்தில் கடந்த ஐந்து மாதங்களாக மரங்கள் வெட்டப்படுவதை தடுத்து வருகிறார்கள் . தாலியா வுடனின் பெற்றோர் இருவருமே சூழலியல் போராட்டக்கார ர்கள் . இதனால் இளம் வயதில் சூழல் தொடர்பான அக்கறை தாலியாவுக்கு வந்துவிட்டது . சூழலியல் தொடர்பான அக்கறை தனியாக எதையும் கற்பது போல இல்லை . அது என்னுடைய வாழ்வினூடே இருந்து வந்தது . நான்குவயதில் தாலியாவின் தந்தை நுரையீரல் புற்றுநோய்க்கு பலியானார் . இத்தனைக்கும் அவர் புகைப்பழக்கம் இல்லாதவர் . இதனால் தாலியா காற்று மாசுபாடு பற்றிய கவனம் கொண்டார் . இங்கிலாந்தில் மட்டும் 64 ஆயிரம் பேர் காற்று மாசுபாட்டிற்கு பலியாகிறார்கள் . இவரத

புத்தகம் புதுசு! - தேசியவாதம், தேச துரோகம் ஆகிய சொல்லாடல்களின் வரலாறு

படம்
                தி பேட்டில் ஆப் பிலாங்கிங்க்ஸ் சசி தரூர் ஆலெப் ப . 462 ரூ .799 இன்று ஏழை எளிய இந்தியர்களை விட குறிப்பிட்ட இந்தியர்கள் மட்டும் அவர்களை ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் . இவர்கள் இதற்காக தேசியவாதம் , நாட்டுப்பற்று , சமூக விரோதிகள் , தேச துரோகி என பல்வேறு சொல்லாடல்களைப் பயன்படுத்தி வருகின்றரர் . இவற்றின் அர்த்தம் என்ன , இதனை எப்படி எதிர்கால தலைமுறையினர் பயன்படுத்துவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான ச சிதரூர் விவரித்துள்ளார் . சைபர் ஸ்ட்ராங் அஜய் சிங் சேஜ் ப . 296 ரூ . 495 வணிகத்திற்கு எப்படி சைபர் பாதுகாப்பு சமாச்சாரங்களை அமைக்கவேண்டும் என்று இந்த புத்தகம் சொல்லித்தருகிறது . இன்று நாட்டிற்கு அதிக ஆபத்து ஏற்படுத்தும்விதமாக இணையத் தாக்குதல்கள் உள்ளன . இவற்றைப் பற்றிய எச்சரிக்கையை நூல் ஏற்படுத்துகிறது . தி காமன்வெல்த் ஆப் கிரிக்கெட் ராமச்சந்திர குஹா ஹார்பர் கோலின்ஸ் ப . 336 ரூ . 1722 குஹா , வரலாற்று ஆய்வாளர் என்று பலருக்கும் தெரியும் . அதேபோல கிரிக்கெட்டை ரசிப்பவரும் கூட . இந்த நூலில் அதனை நிரூபித்திருக

சூழலியலில் போராடி வரும் இளைஞர்கள்!

படம்
              இளைய போராளிகள் ஜான் பால் ஜோஸ் இந்தியாவைச் சேர்ந்த சூழலியல் போராட்டக்கார ர் . உலகளவில் நடைபெறும் இயற்கை பேரிடர்களில் இந்தியாவைச் சார்ந்து கருத்துகளை முன்வைத்த சூழலியல்வாதி . இவர் எழுத்தாளரும் கூட . டெலானி ரினால்ட்ஸ் இவர் அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்தவர் . மியாமி பல்கலைக்கழகத்தில் படித்தவர் . கடல்நீர்மட்டம் உயர்வது பற்றி மக்களிடையே விழிப்புணர்வு செய்கிறார் . ஷியா பட்டிஸ்டா அமெரிக்காவைச் சேர்ந்தவர் . நியூயார்க்கில் வசித்து வருகிறார் . பிரைடேஸ் பார் ப்யூச்சர் யூத் வெப்பநிலை மாற்ற சூழல் போராட்டத்தின் முக்கியமான தலைவர் . ஹோலி கில்லிபிராண்ட் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர் .. இங்கிலாந்து நாட்டில் பருவநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க வற்புறுத்திவர்கள் இவர்ரகள முக்கி ஆட்டும் பெல்டியர் கனடாவாசி . தூய்மையான தண்ணீருக்கு போராடி வருகிறார் . இதற்கான பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார் . பருவநிலை மாறுதல் போராட்டங்களில் முன்னிலை வகித்து போராடி வருகிறார் . ரித்திமா பாண்டே பதினொரு வயது சிறுமி . 2013 ஆம்

வேலைவாய்ப்பு, மேம்பாடு ஆகிய நேர்மறை விஷயங்களை தேஜஸ்வி யாதவ் பேசி வாக்குகளைப் பெற்றார்!

படம்
            சஞ்சய் குமார் பேராசிரியர் சென்டர் ஃபார் தி ஸ்டடி ஆஃப் டெவலப்பிங் சொசைட்டிஸ் காங்கிரஸ் கட்சி தான் நினைத்த இலக்கை எட்ட முடியவில்லை . கூட்டணிக் கட்சியாக இருந்தும் இந்த நிலை . மாநில கட்சிகள் வலுப்பெற்று வருவதை இந்த நகிழவுகள் காட்டுகின்ற்ன என்று கூறலாமா ? பீகாரில் 70 இடங்களை வாங்கி 19 இல் மட்டும் வென்ற காங்கிரஸ் , தனது அந்தஸ்தை இழந்துவிட்டது என்றுதான் கூறமுடியும் . மாநிலங்களில் வலுவாக உள்ள கட்சிகளோடு காங்கிரஸ் கூட்டணி வைத்துத்தான் சில மாநிலங்களை ஆண்டு வருகிறது . அந்த மாநில கட்சிகள் பலம் பொருந்தியவையாக மாறுகின்றன . காங்கிரஸ் அப்படி வலுவாக மாறவில்லை . இதனை பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசியல் நிலையைப் பார்த்தாலே புரிந்துகொள்ளமுடியும் . லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த சிராஜ் பாஸ்வான் மகாபந்தன் கூட்டணியை வெற்றிபெறச்செய்திருப்பாரா ? அப்படி முழுமையாக கூறிவிட முடியாது . நிதிஷூக்கு எதிரான ஓட்டுகளை சிராஜ் பாஸ்வான் பெற்றிருக்கிறார் . ஆனால் இது எப்படி ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சிக்கு உத வும் . அவர்கள் சிராஜின் வாக்குகளைப் பெற முடியாது . பாஜகவின

மீண்டும் மவுசு பெறும் பிட்காயின்! - பல்வேறு நிறுவனங்கள் பணப்பரிவர்த்தனைக்கு ஏற்கின்றன!

படம்
            மீண்டு வரும் பிட்காயின் . பேபால் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பிட்காயின்களை வாங்கவும் பிற கரன்சிகளை கையாளவும் அனுமதி வழங்கியுள்ளது . இந்த நிறுவனத்தைப் போலவே 26 நிறுவனங்கள் பிட்காயின்களை வாங்க விற்க அனுமதியை வழங்கிவிட்டன . பிட்காயின் கணக்கு வழக்கு இல்லாமல் புழங்கவில்லை . தேவைக்கு மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது . ஸ்கொயர் என்ற ஸ்டார்ட்அப்பை டிவிட்டர் நிறுவனர் ஜேக் டோர்சி தொடங்கியுள்ளார் . இந்த நிறுவனம் தங்களது நிதி வர்த்தகத்தில் பாதியை பிட்காயின் பக்கம் திருப்பியுள்ளது . பிட்காயின் மியூசுவல் பண்ட் கூட திட்டம் தயாராக உள்ளது . இதனை ராபின்ஹூ்ட் , ரிவோல்ட் ஆகிய நிறுவனங்கள் செயல்படுத்த உள்ளனர் . பெருந்தொற்று காலம் பிட்காயின் வணிகத்தை ஊக்குவிக்கிறது . உலகளவில் பங்குசந்தைகள் நிலையில்லாமல் சரிந்து வருகின்றன . இதனால் முதலீட்டாளர்கள் பிட்காயினை பாதுகாப்பான் முதலீடாக பார்க்கின்றனர் . அடிக்கடி ஏற்ற இறக்கங்களை பிட்காயின் சந்தித்து மீண்டு வந்துள்ளது . குறிப்பாக 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட சரிவு பிட்காயின் மீது நம்பிக்கை குறைய முக்கியமான காரணமாகும் . சைப

கொரோனா கற்றுத் தந்த பாடங்களை மறக்க கூடாது!

படம்
        சின்மய் தும்பே     சின்மய் தும்பே பொருளாதார பேராசிரியர் ஐஐஎம் அகமதாபாத் பெருந்தொற்று காலத்தில் நாம் கற்று்க்கொண்ட விஷயங்களை பின்பற்றுவதுதான் எதிர்காலத்தில் ஏற்படும் பேரிடர்களை காக்கும் என்கிறீர்கள் . இந்தியா அப்படி பாடங்களை கற்றுக்கொண்டது என நினைக்கிறீர்களா ? ஆம் , இல்லை என இரண்டுவிதமாகவும் இதற்கு பதில் சொல்லலாம் . நோய்த்தொற்றுக்கு எதிராக முன்னமே நடவடிக்கை எடுப்பது பெருந்தொற்றை கட்டுப்படுத்த உதவும் . 1817 றற்றும் 1920 ஆகிய ஆண்டுகளில் பெருந்தொற்று ஏற்பட்ட வரலாற்றை இந்தியா அம்னீசியா வந்த து போல மறந்துவிட்டது . இந்த பாதிப்பில் 40 மில்லியன் மக்கள் இறந்துபோனார்கள் . கடந்துபோன பெருந்தொற்றை கவனித்தால் , தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து வருவதை எளிதாக கணித்திருக்க முடியும் . சீனாவில் 1911 ஆம் ஆண்டு ரயில்வே நிர்வாகம் தொழிலாளர்களை சிறப்பாக கையாண்டது . அக்காலகட்டத்தில் நடந்து சென்ற தொழிலாளர்கள் பனியில் சிக்கி இறந்தனர் . நாம் நேரடியாக அதனை எடுத்துக்காட்டாக கொள்ளமுடியாவிட்டாலும் கூட அப்பாடங்களை மறக்க கூடாது . கொரோனா முதலில் சீன வைரஸ் என்று கூறப்பட்டது . பின்னாளில்