இடுகைகள்

இயற்கைச் சூழல் என்பது அனைத்து உயிரினங்களுக்குமானது! - நிதின்சேகர்

படம்
  நேர்காணல் நிதின் சேகர் இயற்கை செயல்பாட்டாளர், எழுத்தாளர் காட்டுக்குள் நீங்கள் தங்கியிருந்திருக்கிறீர்கள். அதில் உங்களுக்கு பிடித்தமான நினைவுகள் ஏதேனும் இருக்கிறதா? நாங்கள் ஒரு யானையைப் பிடித்து கட்டி வைத்திருந்தோம். அதன் பெயர், திகாம்பர். ஒருநாள் நான் அதன் நின்றபடி நோட்டில் குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது திடீரென எனது நெஞ்சில் ஏதோ ஒன்று வேகமாக வந்து பட்டது. கீழே விழுந்த பொருளைப் பார்த்தேன். அப்போதுதான் பிடுங்கி எறியப்பட்ட செடி.  திகாம்பர் தான் சலிப்பு தாங்காமல் என்மேல் செடியை எறிந்துள்ளது என புரிந்துகொண்டேன். திரும்ப அதே செடியை அதன் காலடியில் போட்டேன். திரும்ப திகாம்பர் என் மீது செடியை தும்பிக்கையால் பற்றி என் மீது எறிந்தது. ஆம் இப்போது நாங்கள் இருவரும் விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்பதை சில நிமிடங்களுக்கு பிறகே அறிந்தேன். யானையை சுதந்திரமாக வைத்திருக்க நினைக்கிறோம். அதற்காக சூழலியலாளர்களாக நாங்கள் நிறைய உழைக்கிறோம்.  காட்டின் நடுவே சிறு குடிலைக் கட்டிக்கொண்டு வாழ்ந்திருக்கிறீர்கள். அதுவும் அங்கு வாழும் மக்களின் மொழியும் கூட உங்களுக்குத் தெரியாது அல்லவா? மேற்கு வங்கத்தில

இன்டர்நெட் ஆஃப் அனிமல்ஸ் என்பது ஆச்சரியகரமானது! - மார்ட்டின் விக்கெல்ஸ்கி

படம்
  மொழிபெயர்ப்பு நேர்காணல் மார்ட்டின் விக்கெல்ஸ்கி விலங்கியலாளர் ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் விலங்குகளின் குணங்கள் ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குநராக மார்ட்டின் விக்கெல்ஸ்கி உள்ளார். இவர் உருவாக்கிய சிந்தனைதான், ஐகாரஸ். இன்டர்நேஷனல் கோ ஆப்பரேஷன் ஃபார் அனிமல் ரிசர்ச் யூசிங் ஸ்பேஸ். 20 ஆண்டுகளுக்கு முன்னரே இக்கருத்தை உருவாக்கினார் மார்ட்டின். இப்போதுதான், ஜெர்மனி மற்றும் ரஷ்யா விண்வெளி அமைப்புகள் இதற்கு ஆதரவை வழங்கியுள்ளன. 2020ஆம் ஆண்டு பிளாக்பேர்ட் பெலாரஸிலிருந்து அல்பேனியாவிற்கு, 1530 கி.மீ. தொலைவுக்கு பயணித்தது. இதனை சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் கண்காணித்தது. இதற்கு காரணம், அதன் உடலில் பொருத்திருந்த ட்ரான்ஸ்மீட்டர்தான்.  ஐகாரஸ் திட்டத்தில் நீங்கள் கண்டுபிடித்த விஷயம் என்ன? ஐரோப்பிய ஈல் எப்படி இனப்பெருக்கம் செய்கிறது, ஐரோப்பிய நாரைகள் 70 சதவீதம் அழிவது ஏன் என்ற கேள்விகளுக்கு விடைகளை அறிந்தோம். இதற்காக,  15 ஆயிரம் நாரைகளுக்கு நாங்கள் டேக்குகளை பொருத்த முடிவு செய்தோம். நாரைகள் திடீரென பெரும் எண்ணிக்கையில் இறந்துபோவதை நினைத்துப் பாருங்கள். இவை, காடுகளில் இப்படி இறந்துகிடப்பதை யாரும் பார்

நீலப்பொருளாதாரம் மக்களுக்கு முக்கியமானது! கெர்ஸ்டன் ஃபோர்ஸ்பெர்க்

படம்
  நேர்காணல் கெர்ஸ்டன் ஃபோர்ஸ்பெர்க் கடல் உயிரியலாளர் பிளானட்டோ ஓசனோ என்ற குழுவில் என்ன விஷயங்களை  முக்கியத்துவப் படுத்துகிறீர்கள்?  எங்கள் குழுவினர் கடல் சார்ந்த உயிரினங்களின் பாதுகாப்பு, பிரசாரம், உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு உதவி வருகிறோம். இதில் குழந்தைகள், ஆசிரியர்கள், மீனவர்கள், அரசு அதிகாரிகள், தனியார் நிறுவனங்கள் என அனைவருமே உள்ளடங்குவர். இவர்களை வைத்து கடல் சார் ஆராய்ச்சி, கல்வி, நிலைத்த மேம்பாடு ஆகியவற்றை அடைய முயல்கிறோம்.  மீனவர்கள், கடல் உயிரினப் பாதுகாப்பிற்கு எதிரியாயிற்றே?  அவர்களோடு எப்படி பணிபுரிகிறீர்கள்? மண்டா ரே, ஆமைகள் ஆகியவற்றை நாங்கள் மீனவர்களுடன் சேர்ந்து பாதுகாக்க முயல்கிறோம். மீனவர்களுக்கு நாங்கள் இதுபற்றி விழிப்புணர்வு பிரசாரம் செய்துள்ளோம். அவர்களது வலையில் மண்டா ரே மீன், ஆமைகள் சிக்கினால் எங்களுக்கு தகவல் கொடுப்பார்கள். நாங்கள் அந்த உயிரினங்கள் பற்றிய தகவல்களை மீனவர்களிடம் இருந்து தான் பெறுகிறோம்.  நீல பொருளாதாரம் என்று கூறுகிறீர்களே? அதை விளக்கி கூறுங்களேன். மீன்வளம், சுற்றுலா, கடல்மேம்பாடு, துறைமுகம் என நிறைய துறைகள் கடல் சார்ந்து இயங்குக

இயற்கையுடனான மனிதர்களின் தொடர்பு வரலாற்று ரீதியானது! - கிரெச்சன் காரா டெய்லி

படம்
  நேர்காணல்  கிரெச்சன் காரா டெய்லி (Gretchen cara daily) சூழலியல் அறிவியலாளர், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் நீங்கள் செய்துவரும் நேச்சுரல் கேபிடல் புராஜெக்ட் பற்றி கூறுங்கள். மனிதர்களுக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்புகளை வெளிச்சமிட்டு காட்டுவதுதான் எனது திட்ட நோக்கம். நம் அனைவருக்குள்ளும் தனித்துவமான இயற்கைத்தொடர்பு இருந்தாலும் அதை மறைந்திருக்கிறது. எனவே, நாம் மண், தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றை கைகளால் தொடுவதற்கான உந்துதல் கொண்டுள்ளோம். இப்படி தொடுவது மனிதர்களின் உடல், மனம் இரண்டிற்கும் பயன்களைத் தருகிறது. நமக்கு பயன்தரும் இயற்கையை அறிந்துகொள்ள உதவும் கொள்கை, திட்டம், முதலீடு தேவைப்படுகிறது.  இயற்கை அனுபவம் மனிதர்களின் அறிவாற்றலை மேம்படுத்துகிறதா? இன்று ஆராய்ச்சி செய்யப்படும் முக்கியமான துறை இதுதான். அமெரிக்காவின் இலினாய்ஸில் உள்ள பள்ளியில் மாணவர்களிடையே சோதனை ஒன்று செய்யப்பட்டது. இதில், இரு வகுப்பு மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு பிரிவினர், இயற்கை காட்சிகளை பார்க்கும்படியும், மற்றவர்களுக்கு அந்த வசதி இல்லாமலும் வகுப்புகளை அமைத்தனர். இறுதியில், இயற்கை காட்சிகளை பார்த்த மாணவர

வீட்டுக்கு எளிதாக கடன் கிடைக்கிறது. ஆனால் கல்விக்கடனை வாங்குவது சுலபமல்ல! - ஆசிஷ் பரத்வாஜ்

படம்
  நேர்காணல் ஆசிஷ் பரத்வாஜ் சூழல் அறிவியலாளர் சூழல் அறிவியலாளராக ஆக எப்படி முடிவு செய்தீர்கள்? நான் தொடக்கத்தில் வேலை செய்த நிறுவன உரிமையாளர்கள், இத்துறையைத் தேர்ந்தெடுக்க உதவினர். 2015ஆம் ஆண்டு நான் வேலைக்கு போகலாம் அல்லது மேற்படிப்பு படிக்கலாம் என இரண்டு வாய்ப்புகளில் ஒன்றை தேர்ந்தெடுக்கவேண்டியிருந்தது. குடும்பத்தினரின் ஆதரவு கிடைத்ததால் படிப்பை தேர்ந்தெடுத்தேன். அதுதான் என் வாழ்க்கையில் எடுத்த முக்கியமான முடிவு.  படிக்கும்போது என்னென்ன சவால்களை சந்தித்தீர்கள்? கார் அல்லது வீடு வாங்க கடன் பெறுவதை விட கல்விக்கடன் பெறுவது கடினம். கல்வி உதவித்தொகை கிடைத்ததோடு, குடும்பத்தினரின் ஆதரவும் எனக்கு கிடைத்தது.  ஐரோப்பாவில் வேலை கிடைப்பது கடினம். அங்கு வேலை கிடைக்க திறமையோடு, மொழியைப் பேசவும் தெரிந்திருக்க வேண்டும். இதனால் இன்டர்ன்ஷிப் செய்து திறனோடு மொழியை பேசவும் கற்றேன்.  தற்போது செய்துகொண்டிருக்கும் பணி, அதில் எதிர்கொண்ட  சிக்கல்களையும் கூறுங்கள். புதுப்பிக்கும் ஆற்றல் (நீர், ஹைட்ரஜன் செல், சூரிய ஆற்றல், காற்று ) தொடர்பாக பணியாற்றி வருகிறேன். எனது குழுவிற்கு தகவல், ஆய்வு பற்றிய தகவல்களை சேகரி

பறவைகள் இல்லாத உலகை கற்பனை செய்யவே முடியாது! - ஸ்காட் வி எட்வர்ட்ஸ்

படம்
  நேர்காணல் ஸ்காட் வி எட்வர்ட்ஸ் பேராசிரியர், ஹார்வர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்கா. பேராசிரியர் ஸ்காட், பரிணாம உயிரியல் துறையில் பணியாற்றுகிறார். பரிணாம வளர்ச்சியில் பறவைகளின் இயல்பு பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார்.  பல்லுயிர்த்தன்மையில் பறவைகள் எந்தளவு முக்கியமானவை? அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள பிராங்க்ஸ் நகரில் தான் வளர்ந்தேன். பத்து வயதிலிருந்தே, அங்குள்ள நிறைய மரங்கள், அதில் வாழ்ந்து வந்த பறவைகள் மீது ஈடுபாடு உருவானது. 10 ஆயிரம் இனங்களுக்கு மேல் பறவைகள் கண்டறியப்பட்டுள்ளதால் அவற்றை ஆய்வு செய்வதும் எளிது. பிற விலங்கினங்களை விட பறவைகளின் சூழலியல் மற்றும் அதன் வாழ்க்கை இயல்புகளை அறிவது எளிது.  காலநிலை மாற்றத்தை பறவைகள் எப்படி சமாளிக்கின்றன? தற்போது, பறவைகளுக்கு நிறைய சவால்கள் உள்ளன. அதில் முக்கியமானது, வாழிட இழப்பு. மனிதர்கள் காடுகளை பெருமளவில் அழித்துவிட்டதால், பறவைகள் வாழ்க்கை சிக்கலாகிவிட்டது. இந்தியாவின் அரணாக உள்ள இமாலயத்தில், சில தனித்துவமான பறவைகள் வாழ்கின்றன. காலநிலை மாற்றத்தால் அவற்றின் வாழிடமும் சுருங்கினால், அவையும் அழிந்துவிடும். வேட்டையாடல், பறவைகளை செல்லப்பறவைகளாக வளர்

கலாப்பகோஸ் தீவு ஆச்சரியகரமானது! - வில்லியம் ஹெச் துர்ஹாம்!

படம்
  நேர்காணல் வில்லியம் ஹெச் துர்ஹாம்  அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பரிணாம மானுடவியல் மற்றும் உயிரியல் துறை பேராசிரியராக உள்ளார். கலாப்பகோஸ் தீவில் உள்ள உயிரினங்கள் பற்றிய ஆய்வு செய்து வருகிறார்.  கலாப்பகோஸ் தீவு மனித வாழ்க்கையோடு எந்த விதத்தில் இசைவாக உள்ளது? கலாப்பகோஸ் தீவு, மனித வாழ்க்கை எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்தது என்பதை விளக்கும் தனித்துவமான இடம். மனிதர்களின் பலம், திறன்கள், பாதுகாப்பு ஆகியவற்றை பிற உயிரினங்களிடமும் காணலாம். நாம் பெரும் உயிரினங்களின் இனக்குழுவில் ஒரு அங்கம். தாவரங்கள், மரங்கள், பூச்சிகள், விலங்குகள் ஆகியவையும் நமக்கு உறவினர் போலத்தான். இதை உணர்ந்தாலே இயற்கை சூழலை கையாளும் முறைகள் மாற வாய்ப்புள்ளது.  காலநிலை மாற்றத்தால் கலாப்பகோஸ் தீவு பாதிக்கப்பட்டுள்ளதா? தீவில் உள்ள உடும்பு (Marine iguana), நீளமானது. காலநிலை மாற்றத்தால் அதன் நீளம் தற்போது குறைந்து வருகிறது. இம்மாற்றம் 1905 தொடங்கி 2000 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடைபெற்றுள்ளது. எல் நினோ பருவநிலை மாற்றம், வெப்பம் தொடர்ந்து அதிகரிப்பது கடலிலுள்ள பாசிகளை அழிக்கிறது. கடல் பாசிகளை உடும்புகளின் முக