இடுகைகள்

குற்றத்தைக் கண்டுபிடிக்க உதவும் உளவியல்!

படம்
  கொலை நடந்துவிட்டது என்றால் அதைக் கண்டுபிடிக்க ஆய்வாளர்கள் அரும்பாடு படுவார்கள். பல்வேறு துறைகளிலுள்ள திறன்களையும் அவர்கள் கொண்டிருந்தால் அல்லது நிபுணர்களின் துணை இருந்தால்தான் அவர்களால் உண்மையை அறிய முடியும். மானுடவியல், பொருளாதாரம், மருத்துவம், தத்துவம், உளவியல், சமூகவியல் என பல்வேறு துறைகளிலும் துப்பறிவாளர்கள் திறமை பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் வழக்கிலுள்ள இயல்புகளை அவர்களால் புரிந்துகொள்ள முடியாமல் போகவும் அதிக வாய்ப்புள்ளது. குற்றங்களை ஆராய்ந்து அதனை துப்பு துலக்குவதில் முக்கியமான துறை, குற்றவியலாகும். இதிலும் கொலை, அதன் காரணம், ஆகியவற்றை கோட்பாடாக உருவாக்கி பிறகுதான் அதன் பின்னாலுள்ள உண்மையை அறிய முடியும். இதில் சில மாற்றுக்கருத்துகளும் உள்ளன. அதாவது, குற்றவியல் துறை அதன் சிறப்புத்தன்மைகளுக்காக சமூகவியலைச் சார்ந்துதான் இருக்கிறது என கூறி வந்தனர். ஆய்வாளர்கள் வோல்ஃப் கேங், ஃபெராகுடி ஆகியோர்,   1967ஆம் ஆண்டு, குற்றவியல் துறை அதன் கோட்பாடுகள், நுட்பங்களால் பிற துறைகளிலிருந்து வேறுபட்டு இயங்கும் தன்மையுடையது என கூறினர். குற்றங்களை முழுக்கவே உளவியல் சார்ந்து விளக்கிவிட முடிய

க்ரீசிலுள்ள ஆன்மிகத் தலங்கள்

படம்
  மன வலிமையை சோதித்துப் பார்க்கும் ஆன்மிகத் தலங்கள் – க்ரீஸ்   ஆசிய அளவிலும் கூட கோவில்களை எளிதாக சமதளத்தில் கட்ட மாட்டார்கள். சாதாரணமாகிவிடுகிறதே… அதனால் அதை மலைப்பாங்கான சற்று தொலைவு பயணித்துச் சென்று களைப்போடு அண்ணாந்து பார்த்தால் கண்களில் பட்டாம்பூச்சி பறக்கும் தெய்வீக அனுபவத்தோடு இணைத்து இருப்பார்கள். க்ரீசும் இதேபோல கோக்குமாக்காக யோசிக்கும் ஆட்களின் கைகளில் இருந்திருக்கிறது. எனவே, அங்கு மெட்டோரா எனும் நகரில் ஏராளமான ஆன்மிக புனித தலங்கள் உண்டு. அங்கு செல்வதே உடலுக்கும் மனதுக்குமான சிறந்த சோதனைதான். தொலைதூர நிலங்களில்தான் முதலில் ஆன்மிகத் தலங்கள் இருந்தன. ஆனால் கிறிஸ்துவ மத வெறியர்களின் போர்களால் ஆன்மிகத் தலங்கள் அழிந்தன. பிறகு ஆன்மிகத் தலங்களை எளிதில் அணுக முடியாத மலைப்பாங்கான இடத்தில் அமைத்தனர். இந்த வகையில் மெட்டோராவில் 24 ஆன்மிகத் தலங்கள் செயல்பட்டு வந்தன. ஆனால் இப்போது செயல்பாட்டில் உள்ளவை ஆறு மட்டுமே. தலா மூன்று யூரோக்களை செலவிட்டால் இங்கு சென்று ஆன்மிக அனுபவத்தை, துறவிகளின் வாழ்க்கை எப்படி இருந்தது என அறியலாம். ஆண்கள், பெண்கள் தங்கள் உடல் பாகங்களை முகம், கை, கால்களை தவ

டிவி நிருபர் காதலைச் சேர்த்து வைக்க ஆடும் ருத்ர தாண்டவம் - பங்காரம்- தரணி

படம்
  பங்காரம் இயக்கம் தரணி இசை வித்யாசாகர் ஒளிப்பதிவு கோபிநாத் டிவி சேனலில் வேலை பார்க்கும் நிருபர், தீவிரவாதி ஒருவரை பேட்டி எடுக்கச் செல்கிறார். ஆனால் அந்த வேலையை டிவி உரிமையாளர் நினைத்தபடி செய்யாததால் வேலை இழக்கிறார். கூடவே வேறு வேலைக்கும் போகமுடியாதபடி சூழல் மாறுகிறது. இதை சரி செய்ய டிவிக்கு நிதி அளிக்கும் பெத்த ரெட்டி என்பவரை சந்திக்கச் செல்கிறார். அதுதான் படத்தின் முக்கியமான திருப்பு முனை. இதுவரையில்தான் படம் சற்று படமாக தெரிகிறது. அதற்குப் பிறகு, போட், ஜேபிஎல் என எந்த ஸ்பீக்கரை காதில் வைத்திருந்தாலும் நுவ்வு செப்பக்கூடாதுடா ரே, சம்பெய்ண்டா வாடே, நறுக்குத்தானு, ஏய்..என வில்லன் குழுக்கள்   எழுப்பும் கூச்சல்களால் உடலே அடிக்கடி அதிர்ச்சியில் தூக்கிப் போடுகிறது.   படத்தில் மீரா சோப்ரா இருக்கிறார். ஆனால் அவருக்கும் பங்காரத்திற்கும் காதல் போல பாடல்களை வைப்பார்கள். ஆனால் காதல் கிடையாது என்பதுதான் ட்விஸ்ட். ஆனால் படத்தில் இருக்கும் ஒரே அம்சம். சண்டைதான். கோடரியால் வெட்டுவது, கழுத்தை அறுப்பது, நெருப்பால் சுடுவது, மூங்கில் குச்சியால் நாயகின் வயிற்றில் குத்துவது என படம் நெடுக ரத்த க

உதயமாகும் பேரரசன்- ஆனந்த் மகிந்திரா - புதிய மின்னூலின் அட்டைப்படம்

படம்
 

விளம்பர இடைவேளை - கூகுள் பிளே புக்ஸில் ஆராபிரஸ் நூல்கள் வெளியீடு

படம்
 

சைக்கோபாத்களிடம் பாதுகாப்பாக இருப்பது எப்படி?

படம்
  அசுரகுலம் 5 சைக்கோபாத்களிடம் எப்படி பத்திரமாக பாதுகாப்பாக இருப்பது பற்றிய வழிமுறைகளைப் பார்த்து வருகிறோம். மேலும் என்னென்ன விஷயங்கள் இருக்கிறதென காணலாம். ராபர்ட் ஹரே எழுதி கட்டுரைகள் நாளிதழ்களில் வெளிவரத் தொடங்கியபோது, அவருக்கு நிறைய தொலைபேசி அழைப்புகள், கடிதங்கள் வரத் தொடங்கின. அவையெல்லாமே எனது கணவர், காதலர் சைக்கோபாத் அறிகுறிகளைக் கொண்டவராக இருக்கிறார் என்றுதான் இருந்தன. இதில் அவருக்கு போன் செய்த பெண்மணியின் கதை வித்தியாசமானது. அந்த பெண்மணி தன் கணவர் சைக்கோபதி அறிகுறிகளைக் கொண்டவராக இருக்கிறார். ஆனால் அவரை முறையாக மருத்துவர்களிடம் அழைத்துச் செல்வது ஆகியவற்றை மனைவி செய்திருக்கிறார். ஆனால் சைக்கோபாத் கணவர், தனது வசீகரமான பேச்சால் நடத்தையால் ஆழ்மனதில் உள்ளதை மறைத்துக்கொண்டு பேசியிருக்கிறார். இதனால் அவரைச் சந்தித்த மருத்துவர்கள் அவர் நார்மல் என அறிக்கை கொடுத்திருக்கின்றனர். இப்படி அறிக்கைகள் கிடைக்க மனைவி, தான் கணவரைப் பற்றி நினைப்பதுதான் தவறு. தனக்குத்தான் பிரச்னை என நினைக்கத் தொடங்கியிருக்கிறார்.   சைக்கோபதி பற்றித் தெரிந்தவர்களிடம் சிகிச்சைக்கு சென்றால் பயன் இருக்கும். இல்லாதப

காதலியின் லட்சியக் கனவுக்காக காதலை ஒத்திவைக்கும் காதலன்! - தொலி பிரேமா - ஏ.கருணாகரன்

படம்
  தொலி பிரேமா 1998 பாலு, அனுவை முதல் முறையாக பார்க்கும் காட்சி தொலி பிரேமா 1998 - இறுதிக்காட்சி  தொலி பிரேமா பவன் கல்யாண், கீர்த்தி ரெட்டி, அலி, வேணு, நாகேஷ் இயக்கம் ஏ.கருணாகரன் இசை தேவா பாலு என்ற படிப்பில் தேறாத இளைஞன் ஹார்வர்ட் பல்கலையில் சேரும் லட்சியத்துடன் படிக்கும் இளம்பெண்ணை காதலிக்கிறான். அவன் காதல் நிறைவேறியதா என்பதே கதை. படம், வெளிவந்த காலத்தில் அன்றைய இளைஞர்களிடையே பிரபலமாக இருந்த கோக், பைக் என பல்வேறு விஷயங்களை அடையாளப்படுத்தி எடுத்திருக்கிறார்கள். அதனால் படம் பார்க்கும்போது நிறைய பேருக்கு அவர்களின் இளமைக்காலம் நினைவுக்கு வரலாம். காதலே லட்சியம் என நினைக்கும் இளைஞர், ஆராய்ச்சிப் படிப்பே லட்சியம் என வாழும் இளம்பெண். இதுதான் இருவருக்குமான முரண்பாடு. பாலு, படத்தில் நாயகி சொன்னது போல உருப்பட்டு எதையும் சாதிக்கவில்லை. ஆனால் அவர் தனது காதலை இளம்பெண்ணிடம் சொல்லிவிடுகிறார். அவரின் பெரியப்பாவான நாகேஷ் எப்படி நிம்மதி அடைகிறாரோ அதே திருப்தியை படத்தை பார்க்கும் பார்வையாளர்களும் அடைகிறோம்.   காதலித்தால் கூட கல்யாணம் செய்துகொள்ள விரும்பினால் கூட பெண்ணின் கனவுக்கு குறுக்கே