இடுகைகள்

உறவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மகனின் திருமணத்தின்போது அம்மாவின் அந்தரங்கம் வெளியே கசிந்தால்... மஜா மா - மாதுரி தீட்சித்

படம்
  மஜா மா இந்தி மாதுரி தீட்சித், கஜராஜ் ராவ், சைமன் சிங்   அமெரிக்காவில் வேலை பார்க்கும் இளைஞருக்கு காதல் பூக்கிறது. ஆனால் ஒப்பீட்டளவில் காதலியின் பெற்றோர் வசதியானவர்கள். அதேசமயம் பையன் மட்டுமல்லாமல் அவன் மணம் செய்துகொள்ளும் குடும்பம் பாரம்பரியமாக கலாசாரம் கொண்டதாக அமைய வேண்டும் என பெண் வீட்டார் நினைக்கிறார்கள். ஆனால் இந்த நேரத்தில் மணமகனின் அம்மா லெஸ்பியன் என்ற உண்மை தெரிய வருகிறது.. இதனால் நடக்கும் சமூக, குடும்ப களேபரங்கள்தான் கதை. எல்ஜிபிடியினரின் கதையை தைரியமாக எடுத்து இயக்கி அவர்களின் பிரச்னைகளை கூற முனைந்த இயக்குநருக்கு மனமார்ந்த பாராட்டுகள். பல இயக்குநர்களும் பிற்போக்கில் புராணம், இட ஒதுக்கீடு, வன்முறை என செல்லும்போது சமூகத்தில் சிறுபான்மையினராக உள்ளவர்களின் உணர்ச்சிகளை, வாழ்க்கையை சொல்ல முயன்றிருக்கிறார் மஜா மா இயக்குநர். இந்த படமே, மாதுரி தீட்சித்தின் நடிப்பை நம்பியுள்ளது. அவரும் தனது பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். அப்பா, மகன், மகள் என தான் பலமென நம்பிய குடும்ப உறுப்பினர்கள் பலரும் அவர்களின் சுயநலத்தை மட்டுமே மனதில் வைத்து நடந்துகொள்வதைப் பார்த்து விரக்தி கொள்க

துரோகத்தால் வீழ்த்தப்பட்ட தீயசக்தி பேரரசன் பழிவாங்க மீண்டும் உயிர்த்தெழுந்தால்... மேஜிக் எம்பரர்

படம்
  மேஜிக் எம்பரர் சீனா மங்கா காமிக்ஸ் 350 அத்தியாயங்கள் தொன்மைக் கால தீயசக்தி பேரரசன், அவனது வளர்ப்பு மகனால் சதி செய்யப்பட்டு வீழ்த்தப்படுகிறான். அவனது இறப்புக்கு காரணம், ஒரு மந்திர நூல். அதையும் தன்னோடு எடுத்துக்கொண்டு உடலை எரித்துக்கொண்டு இறக்கிறான். இதனால் அவனது ஆன்மா, மறுபிறப்பு எடுக்கிறது. ஆன்மா, பொருத்தமான உடலை தேடுகிறது. அப்போதைக்கு காட்டில் குற்றுயிராக கிடக்கும் லுவோ குடும்ப பணியாளன் ஜூவோ ஃபேன் உடலில் நுழைகிறது. அந்த நேரத்தில் லுவோ குடும்பத்தை இன்னொரு பகையாளி குடும்பத்தினர். காட்டில் வைத்து வேட்டையாடிக் கொண்டிருக்கின்றனர். தீயசக்தி பேரரசன் , தனது சக்தியெல்லாம் இழந்தாலும் மந்திரசக்தி முறைகளை நினைவில் வைத்திருக்கிறான். அதைக் கொண்டு குற்றுயிராக கிடப்பவனைக் கொன்று அவன் ரத்தத்தை தனது உடல் ஆற்றலுக்குப் பயன்படுத்துகிறான். அந்த சக்தியை வைத்து ஆபத்தில் உள்ள லுவோ குடும்பத்தை (மிஸ் லுவோ, மிஸ்டர் லுவோ அக்கா, தம்பி) என இருவரையும் காக்கிறான். அச்சமூகத்தில்,லுவோ குழு, மூன்றாவது தரத்தில் உள்ள குடும்பம். அக்கா, தம்பி, விசுவாச வேலைக்காரன் பாங் ஆகியோர்தான் லுவோ குடும்பம். ஒன்றுமே இல்லாத

அண்ணன் கள்ளக்கடத்தல் செய்ய, காவல்துறை அதிகாரியான தம்பி அதைத் தடுக்க... ரன்வே - திலீப், காவ்யா, இந்திரஜித்

படம்
  ரன் வே திலீப், இந்திரஜித் சுகுமாரன், காவ்யா மாதவன் தம்பி காவல்துறை அதிகாரி, அண்ணன் மதுபான பாட்டில்களைக் கடத்தும் குற்றவாளி   என இருந்தால் அவர்களது சொந்த வாழ்க்கை, தொழில்வாழ்க்கை என்னவாகும்? இருவருக்கும் எதிராக இருக்கும் தொழில் எதிரிகள் ஒன்று சேர்ந்தால் இறுதியாக வெல்வது உறவா? கடமையா என்பதே திரைப்படத்தின் கதை. முதல் காட்சியில் காவ்யா மாதவன் அவரது தந்தையுடன் வாடகைக்காக வீடு வருகிறார். அந்த வீட்டின் மூத்த பிள்ளை உண்ணி, துபாயில் வேலை பார்க்கிறார். அவர்தான் வீட்டு செலவுகளைப் பார்த்துக்கொள்கிறார். இளைய பிள்ளை பாலு காவல்துறைக்கான தேர்வு எழுதிக்கொண்டிருக்கிறார். தங்கை பள்ளியில் படிக்கிறாள். இவர்கள் குடும்பத்திற்கு தொழில் செய்த காரணத்தால் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக பெரும் கடன் உள்ளது. அதைக்கட்டுவதற்குத்தான் உண்ணி துபாய் சென்றிருக்கிறான் என அவன் அம்மா கூறுகிறாள். இதை வாடகைக்கு வந்தவர்களுக்கும் கதையாக கூறுகிறார்கள். படத்தில் காவ்யா மாதவன் பாத்திரம் பாடல்களுக்கு மட்டும் பயன்படுகிறது. மற்றபடி கதையில் பெரிய உதவி ஏதும் கிடையாது. உண்ணி என்ற பெயரை நினைத்துப் பார்த்து அவர் பாட்டுக்கு மனதில் கற்பனை

பிடிஎஸ்எம் வாழ்க்கை முறையில் பயன்படுத்தும் சொற்கள், பொருள்

படம்
  டாப்/டாமினன்ட்/டாம்/டாமே (Top, Dominant, Dom, Domme) சூழலைக் கட்டுப்படுத்துபவர், இவர் கட்டளைகளை சப்மிசிவ் நிலையில் உள்ளவர்களுக்கு கூறுவார். இந்த நிலையில் உள்ள பெண்களுக்கு டாமே என்று பெயர். இவர்கள் முழுநேரமாக டாமினன்ட் நிலையில் இருப்பவர்கள் அல்ல. மாஸ்டர் /மிஸ்ட்ரஸ் (Master / Mistress ) டாமினன்ட்/ சம்மிசிவ் உறவில் ஒருவர் முழுமையாக முழுநேரமும் இருந்தால் அவர்களில் கட்டளைகளை வழங்குபவரை மாஸ்டர் என்றும் அதற்கு அடிபணிபவரை மிஸ்ட்ரஸ் என்றும் அழைப்பார்கள். ஒன்றாக வாழும் தம்பதியர் பிடிஎஸ்எம் முறையை எப்போதும் கடைபிடிப்பவர்களை இப்படி கூறலாம். பாட்டம் / சப்மிசிவ் (Bottom, submissive) பிறரால் கட்டுப்படுத்தும் மனிதரைக் குறிக்கும் வார்த்தை. பிறருக்கு கட்டுப்பட்டு நடப்பதன் மூலம் உணர்ச்சி அல்லது உடல் ரீதியாக மகிழ்ச்சியை பெறுபவர். ஸ்லேவ் (Slave) சப்மிசிவ் என்ற கூறிய நிலையின் ஆழமான பகுதி. ஸ்லேவ் என்பவர் மாஸ்டர் அல்லது டாமினன்ட் நபரால் முழுமையாக ஆதிக்கம் செலுத்தப்படுபவர். தங்கள் உரிமைகளை, தேவையை முழுக்க கைவிட்டுவிட்டவர் என்று பொருள் கொள்ளலாம். எஜமானர் மகிழ்ச்சி அடைந்தால் அடிமை மகிழ்ச்சி அடைவா

இரு கைகள் இல்லாமல் காலில் தேர்வு எழுதி ஆங்கில முதுநிலைப்பட்டம் வென்ற பெண்!

படம்
  நெருங்கிய உறவில் திருமணம் செய்வது மருத்துவ அறிவியல் அடிப்படையில் குழந்தைகள் ஊனமாக முக்கிய காரணம் என அறிந்திருப்பீர்கள். ஆனால் கிராமங்களில் இன்றும் சொத்து, உறவு என ஏதோ காரணம் காட்டி பெண்ணை அவளது தாய்மாமனுக்கு திருமணம் செய்வது நடந்து வருகிறது. ஆர்காடு கிராமம் முகையூர் கிராமத்தில் வாழ்ந்த வீரம்மாளின் மகள் மாயாவுக்கும் இப்படித்தான் அவளது மாமாவுடன் திருமணம் நடந்தது. ஆனால் குழந்தை பிறந்தபோதுதான் திருமணத்தில் கோரமான விளைவு தெரிய வந்தது. பிறந்த குழந்தைக்கு இரண்டு கைகளும் இல்லை. குழந்தையைப் பார்க்க வந்த உறவினர்கள், குழந்தையை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்துவிடலாம் என கூறியிருக்கிறார்கள். ஆனால் பேத்தியை வீரம்மாள் அப்படியெல்லாம் கைவிடவில்லை. நான் உயிரோடு இருக்கும்வரை பேத்தி என்னோடு இருக்கட்டும் என நினைத்து குழந்தையை துணியில் பொதிந்து தூக்கி வந்துவிட்டார். இப்படி குழந்தை ஊனமாக பிறப்பதற்கு காரணம், உறவுமுறை திருமணம் என உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் கூறியிருக்கிறார். இப்படித்தான் வளர்ந்த பெண் குழந்தை வித்யா ஶ்ரீ இன்று ஆங்கிலப் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவராக, அரசு ஆசிரியையாக மு

பாரனாய்ட்டும், ஸிஸோபெரெனியாவும் ஒரே குறைபாடா?

படம்
  ஆளுமை பிறழ்வு குறைபாட்டில் பாரனாய்ட் மற்றும் ஸிஸோய்ட் மற்றும் ஸிஸோடைபல் ஆகிய இரண்டுக்கும் சில ஒத்த அறிகுறிக்ள் உண்டு. அதாவது, நிகழ்காலம் மெல்ல மறந்துவிடும். புதிய பாத்திரங்கள், உலகத்தை உருவாக்கியபடி வாழ்வார்கள்.    ஸிஸோய்ட் குறைபாடு உள்ளவர்களுக்கு சமூக உறவுகள் குறைவாகவே இருக்கும். இவர்கள் தங்களது உணர்ச்சிகளையும் குறைவாகவே வெளிப்படுத்துவார்கள். தங்களுக்கே இப்படியென்றால் பிறரைப் பற்றி நீங்களே கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள். கவலையே பட மாட்டார்கள்.  ஸிஸோடைபல் குறைபாடு உள்ளவர்களுக்கு, நெருங்கிய உறவுகளைக் கையாள்வது கடினமாக இருக்கும். இவர்களை எதிர்கொண்டு புரிந்துகொள்வது நெருங்கிப் பழகுபவர்களுக்கு சவால். அப்படியெனில் புதிதான ஆட்களுக்கு எப்படி இருக்கும்?பீதியூட்டும் குணம் கொண்ட மனிதர்களாக தெரிவார்கள் என்று அர்த்தம்.  ஆளுமை பிறழ்வு விவகாரத்தில் ஒருவருக்குள் பல்வேறு மனிதர்கள் எந்த வித ஒற்றுமையும் இல்லாமல் இருப்பது சாத்தியம். மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸார்டர் என  இதைக் கூறலாம். மனம் குறிப்பிட்ட வாழ்க்கை சம்பவத்தில் காயமுற்று அதிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கும்போது உயிரை, உடலைக் காக்கும் நோக்கத்த

உறவும் கிடையாது, நம்பிக்கையும் கிடையாது! பாரனாய்ட் பர்சனாலிட்டி டிஸார்டர்

படம்
பாரனாய்ட் என்பதை,  மனதை விட்டு வெளியே என சுருக்கமாக சொல்லலாம். ஆங்கிலத்தில் பேசுபவர்கள் பாரனாய்ட் என்பதை் எளிதாக இயல்பாக பயன்படுத்துவார்கள். பாரனாய்ட் எனும் ஆளுமை பிறழ்வு கொண்டவர்கள் பிறரை எளிதாக நம்ப மாட்டார்கள். இவர்களது தினசரி நடவடிக்கையில் பிறரை நம்பாமல் நடந்துகொள்வது தெரியும்.  அலுவலகமோ, வீடோ, பிற இடங்களோ அங்குள்ள அனைவருமே பாரனாய்ட் பிறழ்வு உள்ளவர்களுக்கு எதிரிகள்தான். அவர்கள் தன்னை தாக்க முயல்கிறார்கள் என்றே நோயாளி நினைப்பார். இதனால், அந்த தாக்குதலுக்கு எப்படி பதில் தருவது என யோசித்தபடி, மனதில் பயந்துகொண்டிருப்பார். இவர்களை சொற்கள், உடல் என யாராவது தாக்கினால் அவர்கள் பாடு கஷ்டம்தான். பழிவாங்க நேரம் பார்த்துக்கொண்டிருப்பார்கள், திருப்பி பதிலடி தருவதிலும் சளைக்காத மனிதர்கள். வார்த்தைக்கு வார்த்தை கண்களுக்கு கண் என எதையும் மறக்காத மன்னிக்காத ஆட்கள்.  பாரனாய்ட் ஆளுமை பிறழ்வு கொண்டவர்களுக்கு ஸீசோபெரெனியா குறைபாடும் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வன்முறை எண்ணங்களும், உணர்ச்சிக் கொந்தளிப்பும் பாரனாய்ட் நோயாளிகளுக்கு அதிகம் உண்டு. நடக்காத விஷயங்களை நடப்பதாக, சந்திக்காத மனிதர்களை சந்திப்பதாக

ஆளுமை பிறழ்வின் அறிகுறிகள்

படம்
  தற்கொலை அல்லது தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளும் எண்ணம் ஆரோக்கியமான உறவை பராமரிக்க முடியாத குணம் செய்யும் வேலையைத் தக்க வைத்துக்கொள்ள இயலாமை எப்போதும் சட்டத்தை மீறிக்கொண்டே இருப்பது கட்டுப்படுத்த முடியாத கோபம் திறன் இன்மை பற்றிய தீராத ஆதங்கம் , ஏக்கம் சமூகத்தோடு இணையாமல் நிகழ்ச்சிகளை தவிர்ப்பது பிறரின் மீது கருணையின்றி இருப்பது பிறரின் கவனத்தை ஈர்க்க அதீதமாக முயல்வது துன்புறுத்தப்படுவது பற்றிய பயம் பிறரது மீது நம்பிக்கையின்மை படம் - பின்டிரெஸ்ட் 

இந்திய சமூகத்தில் செக்ஸ் அனுபவிப்பதில் ஆர்வம் காட்டும் பெண்கள்!

படம்
1  இந்தியா டுடே இந்தியா முழுக்க ஒரே வாரம் மட்டும் பரபரப்பாக விற்கும். அந்த வாரம் அப்படி என்ன கவர் ஸ்டோரி என மனதிற்குள் கேள்வி ஓடுகிறதா? அது மக்களின் முக்கியமான வாழ்வாதார பிரச்னை என்னவென்று தெரியுமா? செக்ஸ்.  செக்ஸ் வாழ்க்கை இந்தியா முழுக்க எப்படியிருக்கிறது என சர்வே ரெடி செய்வார்கள். ஆணுறை பிராண்டுகளில் சர்வதேச பிராண்டுகள் வரை விளம்பரம் கொடுத்து அமர்க்களப்படுத்துவார்கள். இந்தியாடுடே, செக்ஸ் சர்வே என்பதற்காகவே தனியாக போட்டோஷூட் வேறு நடத்துவார்கள்.  பின்னே வாழ்க்கை பிரச்னை அல்லவா? செக்ஸ் சம்பந்தமான விஷயங்களின் ஆதாரமே பெண்கள்தான். அவர்கள்தான் இதில் முக்கியமான இயற்கை வளம். அதனை வெற்றிகொள்ளத்தான் ஆண்கள் அரும்பாடு படுகிறார்கள். இதற்காக டைம்ஸ் ஆப் இந்தியா முதல் இந்துஸ்தான் டைம்ஸ் வரை பல்வேறு டிப்ஸ்களை வாரம்தோறும் வெளியிட்டு மனித சமூகத்திற்கு அருந்தொண்டு ஆற்றுகிறார்கள்.  பழங்குடிகளைப் பொறுத்தவரை குறிப்பிட்ட வயதில் விருப்பமானவர்களை தேர்ந்தெடுத்து தனியாக தங்க வைக்கிறார்கள். இதில் பெண், ஆணோடு உறவு கொள்வது தொடங்கி வாழ்வது வரையிலான பல்வேறு பயிற்சிகள் முயன்று பார்க்கிறார்கள். இதனால் அவர்களது வாழ்க்க

சிங்கிளாக நிற்கும் சிறுத்தை, சிங்கங்களின் விருப்பம் என்ன?

படம்
  டேட்டிங் விருப்பங்கள் என்னென்ன? டேட்டிங் பிளாட்பாரங்கள்தான் விர்ச்சுவலாக ஒருவர் சந்தித்துக்கொள்ளும் பீச், பார்க், கஃபே என்றாகிவிட்டது. அதிலுள்ள டிரெண்டுகளைப் பார்ப்போம்.  வீடியோ டேட்டிங் 2021ஆம் ஆண்டு நாகரிகப்படி, ஒரு பெண்ணை அறிமுகம் செய்துகொள்ள மிகவும் மெனக்கெட வேண்டாம். வீடியோ டேட்டிங்கை முயன்று பார்க்கலாம். பம்பிள் டேட்டிங் வலைத்தளம் எடுத்த ஆய்வில் 39 சதவீதம் பேர் முதல் டேட்டிங் நாளுக்கே வீடியோவை நாடியிருக்கிறார்கள். நேரடியாக நேரில் பார்ப்பதைவிட வீடியோவில் விர்ச்சுவலாக பார்ப்பது பாதுகாப்பு என 48 சதவீதப் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். கூடவே நேரத்தையும் காசையும் மிச்சம் செய்கிறது என்று வேறு கூடுதல் மக்கள் கருத்தும் கிடைத்திருக்கிறது.  மெல்லகா மெல்லகா.... ஜாலி வாலி பெண்கள் எல்லாம் அடக்கமாக உட்கார வைக்கப்பட்டு டிண்டர் என் வாழ்க்கையை மாத்துச்சு என சொல்லுவார்களே அதே வலைத்தளம்தான் உறவை மெதுவாக செலுத்த சிங்கிள்கள் விரும்புகிறார்கள் என கூறுகிறு. இந்த வகையில் 62 சதவீதம்பேர், டேட்டிங் உடனே சீரியசாக வேண்டாம் நட்போடு தொடங்கட்டுமே என்கிறார்களாம். கோ ஸ்லோ என போர்டை பார்த்து நாம் என்றைக்காவது வண்

எங்கெங்கோ செல்லும் பயணத்தின் கதை! கடிதங்கள்

படம்
            இனிய தோழர் முருகு அவர்களுக்கு , வணக்கம் . வணக்கம் . இதோ இங்கு இன்னும் வெறித்தனமாக பட்டாசு வெடித்துக்கொண்டே இருக்கிறார்கள் . காற்று மண்டலம் கற்கண்டாக மாறுகிறது என ரேடியோவில் சொல்லுவார்கள் . இங்கு கந்தக மண்டலமாக மாறிவிட்டது . புகை மூட்டத்தில் மூச்சுத் திணறத் தொடங்கிவிட்டது . தினகரன் , விகடன் , இந்து தவிர்த்த தீபாவளி மலர்களில் ஆன்மிகம் தூக்கலாக இருக்கிறது என தினமலர் நாளிதழ் கூறியிருக்கிறது . இந்த ஆண்டு தினகரன் தீபாவளி மலரில் வேலை செய்துள்ளது மகி்ழ்ச்சியாக உள்ளது . வாய்ப்பு கிடைத்தால் நூலை வாங்கிப் பாருங்கள் . குங்குமத்திலிருந்து சென்றுவிட்ட வெ . நீலகண்டன் , கோகுலவாச நவநீதன் ஆகியோரின் இடத்தை முழுமையாக நிரப்ப முடியவில்லை என்பது உண்மை . தீபாவளி மலர் வேலைகளை முடித்தவுடனே அடுத்து பொங்கல் மலருக்கான வேலைகள் இருக்கின்றன . நீங்கள் ஏதாவது புதிதாக படித்தீர்களா ? நான் மாதம்தோறும் காலச்சுவடு , தீராநதி இதழ்களை படித்துவிடுகிறேன் . இனி புதிய நூல்களை விட பழைய புத்தக கடைகளில் நூல்களை வாங்கலாம் என நினைத்துள்ளேன் . பயணம் ஒன்று போதாது - தீபன் எழுதிய நூல்தான் அண்மையில் ப

பிராமணராக பிறந்ததுதான் வளர்ச்சிக்கு காரணம்! - இந்திரா நூயி முன்னாள் இயக்குநர், பெப்சி

படம்
  இந்திரா நூயி  இந்திரா நூயி முன்னாள் இயக்குநர், பெப்சிகோ மை லைஃப் இன் ஃபுல் - வொர்க் ஃபேமிலி அண்ட அவர் ஃப்யூச்சர் என்ற சுயசரிதை நூலை எழுதியுள்ளார். இதில் பணி சார்ந்தும்,. சொந்த வாழ்க்கை சார்ந்தும் எடுத்த முடிவுகளை எழுதியுள்ளார்.  உங்கள் நூலில் மகளுக்கும் அம்மாவுக்கும் உள்ள சிக்கலான உறவை எழுதியிருக்கிறீர்களே? அம்மாக்களைப் பொறுத்தவரை தான் பெற்ற மகள்தான் அவர்களுக்கு குத்துச்சண்டைக்கான மணல் நிரம்பிய மூட்டை. அதில்தான் குத்தி பயிற்சி செய்வார்கள். எனது அம்மாவும் அப்படித்தான். நாம் வேலை செய்துகொண்டிருக்கிறோம். பல்வேறு விஷயங்களை நாம் சமாளித்து வாழ வேண்டியிருக்கிறது. நீரில் வாத்து நீந்துவதைப் பார்த்திருப்பீர்கள். மேலே அழகாக நகர்ந்து போனாலும் நீருக்கு அடியில் கால்களால் நீரை உதைத்துத் தள்ளியே நகரும். வாழ்க்கையிலும் உறவுகள் இப்படித்தான் இருக்கும். நாம் சந்திக்கும் அத்தனை சவால்களையும் வெளியே கூறிவிட முடியாது.  டோரிடோஸ் சிப்ஸ், கென்டல் ஜென்னர் விளம்பர சர்ச்சை பற்றி நூலிக் கூறப்படவில்லையே? நீங்கள் சொன்ன விளம்பரத்தை எடுத்தது ஆப்ரோ அமெரிக்கர்தான். பெண்கள் பொதுவாக சிப்ஸ்களை சத்தம் போட்டு சாப்பிட மாட்டார

வறுமை வளர்ந்து பாகுபாட்டை உருவாக்கிய வரலாறு! - புத்தக அறிமுகம்

படம்
                புத்தகம் புதுசு ! தி வார் ஆப் தி புவர் எரிக் வுயலார்ட் மார்க் பொலிசோட்டி பான் மெக்மில்லன் வரலாற்றில வறுமையும் , பாகுபாடும் , பணக்கார ர் , ஏழை இடைவெளியும் எப்படி தோன்றியது எனபதை ஆசிரியர் விளக்கியுள்ளார் . இதே எழுத்தாளரின் தி ஆர்டர் ஆப் தி டே என்ற நூல் விற்பனையில் சாதனை படைத்துள்ளது . இந்த நூல் வரலாறு எழுதப்பட்ட பின்னணியை ஆராய்கிறது . ஆந்த்ரோவிஷன் கிலியன் டெட பெங்குவின் வாங்கும் பழக்கம் மக்களிடையே ஏற்படுத்துகிற விளைவு , பல்வேறு கலாசாரம் சார்ந்த பண்பு , தொழில்துறை கார்பன் வெளியீடு குறைந்த வணிக மாடல்களுக்கு மாறவேண்டிய அவசியம் பற்றி இந்த நூலில் கூறப்படுகிறது . வொய் வீ நீல் , ஹவ் வீ ரைஸ் மைக்கேல் ஹோல்டிங் சைமன் அ்ண்ட் ஸ்சஸ்டர் இனவெறியால் பாதிக்கப்பட்ட வீரரின் கதை , இனவெறியை எதிர்க்கு்ம் அமைப்புகளின் போராட்டம் . விளையாட்டு வீரர்களின் போராட்டமான வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றி உணர்ச்சிப்பூர்வமாக இந்த நூல் விளக்குகிறது . தி ஹார்ட்பீட் ஆப் ட்ரீஸ் இயற்கைக்கும் மனிதர்களுக்கும் ஆதிகாலத் தொடர்பை அறிவியல் துண

ரூல்ஸ் பேசும் பையனும், விதிகளை காற்றில் பறக்கவிட்டு அன்பாக பழகும் பெண்ணும் ஒரே வீட்டில் வாழ்ந்தால்... எவரிவேர் ஐ கோ துருக்கி தொடர்

படம்
              எவரிவேர் ஐ கோ துருக்கி தொடர் 75 எபிசோடுகள் ரூல்ஸ் பார்த் தேதான் அனைத்தும் செய்யும் பொறியாளரும் , அன்பிற்கு எதற்கு ரூல்ஸ் என அனைவரிடமும் பிரியம் காட்டி வாழு்ம பெண்ணும் ஒரே வீட்டில் இருக்கும்படி இருந்தால்…… அதுதான் ப்ரோ கதை . டெமிர் எராண்டல் ஜப்பான் நாட்டிலிருந்து துருக்கியிலுள்ள இஸ்தான்புல்லுக்கு வருகிறார் . அவர் வருகைக்கு ஒரு நோக்கம் இருக்கிறது . ஜப்பானில் இருந்தபடியே இஸ்தான்புல்லில் ஒரு வீட்டை விலைக்கு வாங்குகிறார் . அந்த வீடு அவரின் கடந்த காலத்தோடு தொடர்புடையது . அதனை மனதிற்கு நெருக்கமாக நினைக்கிறார் . அதேநேரம் இஸ்தான்புல்லில் உள்ள ஆர்டிம் என்ற கட்டுமான நிறுவனத்தில் பங்குகளை வாங்கி அதன் மேனேஜராக பதவியேற்கவிருக்கிறான் .    தான் வாழும் வீட்டைப் பார்க்க வருபவனுக்கு அதிர்ச்சி . அவனுக்கு முன்னாலேயே அங்கு யாரோ குடியிருக்கிறார்க்ள . அது யார் என்று பார்க்கும்போதுதான் அவனை இளம்பெண் ஒருத்தி கட்டையாலே தலையில் அடித்து மயங்க வைக்கிறாள் . கண்விழித்துப் பார்த்தால் டெமிரை கைது செய்ய போலீஸ் நிற்கிறது . ஏன் என்று விசாரிக்கும்போதுதான் தெ