இடுகைகள்

எழுத்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிகரெட் பிடிப்பதை நிறுத்துவதற்கு உதவும் சிம்பிளான சில பழக்கங்கள்!

படம்
            சிகரெட் புகைப்பதை எப்படி நிறுத்துவது ? நடக்கலாம் குதிக்கலாம் ஓடலாம் பொதுவாக சிகரெட் பிடிப்பதற்கான துடிப்பு ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்குள்ளாகவே ஏற்படுகிறது . எனவே அந்த நேரத்தில் எழுந்து நடப்பதை வழக்கமாக்கி கொள்வது நல்லது . இதன்மூலம் உடனே சிகரெட் பிடிப்பதற்கான எண்ணம் ஏற்படாது . தினசரி உடற்பயிற்சி செய்வது என்பது மன அழுத்தத்தைப் போக்கும் . புகைப்பதை எழுதுங்களேன் எப்போது புகைப்பிடிக்க தோன்றினாலும் உடனே அதனை நோட்டில் எழுதி வையுங்கள் . இதன்மூலம் எந்த நேரத்தில் சூழலில் புகைப்பது தொடங்குகிறது என்பதை அறியலாம் . கொஞ்சம் பழங்கால டெக்னிக்காக இருந்தாலும் சூப்பரான வெற்றி சூத்திரம்தான் . தயங்காமல் பயன்படுத்தலாம் . ஆலோசனை குழுவாக , தனியாக ஆலோசனை செய்யலாம் . இதன்மூலம் பிறரின் அனுபவங்கள் இழப்புகள் ஆகியவை மற்றவருக்கு பாடமாக அமையும் . போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கு குழு தெரபி கூட வழங்கப்படுகிறது .. ஒருவர் டூ ஒருவர் என ஆலோசனை செய்வது புகைப்பிடிப்பதில் பெரிய பலனை அளிக்காது . இணையத்தில் பல்வேறு ஆலோசனைகள் கிடைக்கின்றன . இதற்கென தொலைபேசி எண்களும் உ

கருப்பின ஆப்பிரிக்க அமெரிக்க எழுத்தாளராக அறியப்பட நினைக்கிறேன்! - எழுத்தாளர் ஸ்டெபானி எல் பிளேர்

படம்
              ஸ்டெபானி எல் ப்ளேர் குயானிஸ் அமெரிக்க எழுத்தாளர் உங்கள் நூலை பேஸ்புக் வழியாக அறிமுகப்படுத்தினீர்கள் . அதில் சாக்லெட் நிறத்தில் உள்ள என்னைப்போன்ற பெண்ணின் கதைகளை யாரும் படித்திருக்க மாட்டீர்கள் என்று சிறுமி கூறுவது போல அமைத்திருந்தீர்கள் . அதற்கு என்ன காரணம் ? நான் ப்ரூக்ளினில் வளர்ந்தேன் . அங்கு உள்ள அழுத்தம் வேறுவிதமானது . உங்களுக்கு நீங்கள் அங்கு குடியேறியுள்ளீர்கள் என்பது எப்போதும் தோன்றிக்கொண்டே இருக்கும் . அச்சூழலில் அதிகளவு உணர்ச்சிகளை வெளிப்படுத்த நேரமில்லாதபடி தினசரி வேலைகள் நெருக்கும் . பொதுவாக அங்கு வாழும் வெளிநாட்டினர் அனைவருமே ஏழைகள் என்ற எண்ணம் அமெரிக்கர்களுக்கு உண்டு . என்னைப் பொறுத்தவரை நிறம் , இனம் , வேறுநாடு என்பதைச் சார்ந்து பிறர் என்னைப் பற்றிய முன்முடிவுகளை மனதில் கொண்டிருப்பார்கள் . இதுபோன்ற பிரச்னைகளை கரீபிய குடும்பங்கள் நிறைய எதிர்கொள்ள வேண்டியுள்ளது . அமெரிக்க மதிப்புகளை கரீபியர்கள் ஏற்றுக்கொள்வதிலும் தடுமாற்றங்கள் உள்ளன . உங்கள் குடும்பத்தில் நிலைமை எப்படி இருந்தது ? உங்களையும் கரீபிய குடும்பத்தினர் அமெரிக்க கண் கொ

பெமினா - தலைமைத்துவ ராணிகள் - நடிகை , தொழிலதிபர், எழுத்தாளர்

படம்
              தலைமைத்துவ ராணிகள் ! சாய் தம்ஹாங்கர் திரைப்பட நடிகை இவர் விருது பெற்ற நடிகை என்பதோடு மட்டுமல்லாமல் மாநில அளவிலான கபடி விளையாட்டு வீரர் . தற்போது தொழில்முனைவோராகவும் செயல்பட்டு வருகிறார் . சினிமாவில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் கூட அதனை அவர் தனக்கான பெரிய வாய்ப்பாக கருதுவதில்லை . பொழுதுபோக்குத்துறை தன்னைத் தேர்ந்தெடுத்தது என்று கூறுகிறார் . கல்லூரியில் படித்தபோது நாடகத்தில் நடித்தவர் பின்னாளில் சினிமாவில் நடித்தபோதும் தான் செய்யும் விஷயங்களை தனித்தன்மையுடனும் விருப்பத்துடனும் செய்து வந்திருக்கிறார் . கல்லூரி காலத் தோழியின் உதவியுடன் சாரி ஸ்டோரி என்ற கடையைத் தொடங்கியுள்ளார் . புடவை என்பது இந்தியப் பெண்களின் தனித்தன்மையை உலகிற்கு சொல்லுவது என தனது தொழில்முயற்சியை விவரிக்கிறார் . இவரை நாம் இங்கு எழுதுவதற்கு காரணம் , இவரால் பல்வேறு செயல்பாடுகளை செய்யமுடிகிறது என்பதும் அதனை சிறப்பாக செய்துவருகிறார் . கல்லூரி கால தொழில்முனைவு ஐடியாவை தான் சினிமாவில் சிறப்பாக நடித்தாலும் கூட பின்பற்றி வருகிறார் . படங்கள் , புகைப்பட படப்பிடிப்பு , த

உங்களால் முடிந்த பெஸ்டை கிடைக்கின்ற வாய்ப்புகளில் கொடுத்தால் போதும் ஜெயித்துவிடலாம்! சசி தரூர் - அரசியல்வாதி, எழுத்தாளர், அறிவுஜீவி

படம்
            சசிதரூர் பிரபல எழுத்தாளர் , காங்கிரஸ் கட்சி தலைவர்களுள் ஒருவர் . 2009 இல் தான் அரசியலில் காலடி எடுத்து வைத்தார் தரூர் . அதற்கு முன்னர் 1997-2007 வரை ஐ . நாவில் தகவல்தொடர்பு தொடர்பான பணியில் இருந்தார் . கேரளத்தை பூர்விகமாக கொண்டவர் , திருவனந்தபுரத்தில் நின்று வென்று மக்களவை உறுப்பினரானார் .   வெளிநாடுகளைப் பற்றிய கட்டுரை நூல்கள் , நாவல் , தத்து வம் என டஜன் கணக்கிலான நூல்களை எழுதி குவித்துள்ளார் . டிவிட்டர் இவர் எழுதும் பல்வேறு கருத்துகளை எட்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் படிக்கின்றனர் . விவாதிக்கின்றனர் . 2006 இல் சசி தரூரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஐ . நா தலைவராக்க பரிந்துரைத்தது . ஆனால் அத்திட்டம் நிறைவேறவில்லை . 22 வயதில் ஐ . நாவில் அதிகாரியாக இணைந்து பணியாற்றிய அனுபவத்தில் , ஐ . நா தலைவர் போட்டியில் இருந்து பின்வாங்கினார் . இந்த பதவி முழுக்க பல்வேறு நாடுகளின் அரசியல்போட்டியை உள்ளடக்கியது என்று கூறினார் . 50 வயதில் அடுத்து நான் என்ன செய்வது என யோசித்துக்கொண்டிருந்தேன் . அப்போது ஒரு வேலையைத் தேடுவது என்பது சரியான முடிவல்ல . நான் எடுத்த முடிவு சரிதா

வாசிக்கவேண்டிய சாகச நூல்கள்!

படம்
பலரும் கொரோனா பாதிப்பால் தனிமையாக இருக்கும்படி நேரலாம். மேற்குலகில் தனியறையில் என்றால் இந்தியாவில் இங்கு குடும்பமே ஒன்றாக உட்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டிருக்கும். டிவியில் படங்கள் சுவாரசியமாக இருந்தாலும் நூல்களைப் போன்ற அனுபவங்களை திரைப்படங்கள் தருவது இல்லை. சில சுவாரசியமான திரில் தரும் நூல்களைப் பார்ப்போம். லத்தீன் குடும்பத்தில் பிறந்த அமெரிக்காவைச் சேர்ந்தவர் நோ ஆல்வாரெஸ். இவரது குடும்பத்தில் கல்லூரி படிக்கட்டில் கால் வைத்த முதல் ஆள் இவர். கனடா தொடங்கி குவாத்திமாலா வரை ஓடத்தொடங்கினார். இதன்பிறகுதான் அல்ட்ரா மாரத்தான்கள் பிரபலமாயின. இதுதொடர்பான அனுபவங்களை இந்த நூல் பேசுகிறது. அமெரிக்காவில் உள்ள தேசியப் பூங்காக்களுக்கு இப்போது போக முடியாது. அதற்காக அப்படியே விட்டுவிட முடியுமா? அதற்குத்தான் அந்த பூங்காக்களின் சிறப்பு என்ன, அங்குள்ள தாவர வகைகள் ஆகியவற்றைப் பற்றி அறிய இந்த நூல் உதவும். மியாமியிலுள்ள வின்வுட் வால்ஸ் என்ற இடம் பிரபலமானது. இந்த இடத்தில் பல்வேறு கலைஞர்கள் சுவர் ஓவியங்களை வரைந்திருப்பார்கள். அதனை படம் எடுக்க இளைஞர்கள் அலைமோதுகின்றனர். இங்கு சுவரோ

சிறந்த இலவச மென்பொருட்கள் 2020

படம்
நார்ட் லாக்கர் - Nordlocker இதில் விபிஎன் வசதியும் உண்டு. எனவே இலவச கணக்கில் 5 ஜிபி வரையில் தகவல்களை, ஆவணங்களாக சேமித்து வைத்துக்கொள்ளமுடியும். சிறப்பாக செயல்படுகிறது. இதன் கோகிரிப்ட் எனும் என்கிரிப்ஷன் வசதி சிறப்பாக உள்ளது. உங்களது தகவல்கள் நெருங்கிய நண்பர்கள் சிறந்து பார்க்கும்படி கூட செட்டிங் அமைத்துக்கொள்ளலாம். பீஃப்டெக்ஸ்  beeftext இமெயிலை கூட வெண்முரசு சைசுக்கு எழுதுபவர்களுக்கு இந்த இலவச மென்பொருள் உதவும். இதில் டைப் செய்பவர்களுக்கு உதவும் நிறைய விஷயங்கள் உள்ளன. அதனை நீங்கள் பயன்படுத்தும்போடு கற்றுக்கொள்வீர்கள். வேவ் எடிட்டர் அடாசிட்டியைப் போன்றதுதான். ஆனால் சிறப்பாக இயங்குகிறது. எம்பி3 பாடல்களுக்கான தொகுப்புகளுக்கு ஏற்றது. டாஸ்க் எக்ஸ்ப்ளோரர் விண்டோஸ் டாஸ்க் மேனேஜரின் பணியைத்தான் செய்கிறது. இதனை டெக் ஆட்கள் சிறப்பாக பயன்படுத்த முடியும். அந்தளவு விரிவான அம்சங்களைக் கொண்டிருக்கிறது. பயன்படுத்திப் பாருங்கள். நன்றி - வெப் யூசர் இதழ்

விண்ணரசு என்ஜிஓக்களுக்கு கிடைக்குமா?

படம்
ப்ரீயா பேசுவோம் என்ஜிஓ எழுத்து கட்டுரை, நாவல் அனைத்திலும் என்ஜிஓ எழுத்து பிறந்துள்ளது. அப்படி என்றால், இவர்கள் பல்வேறு துறைகளில் எதற்கு வேலை செய்கிறோம் என்றே தெரியாமல் வேலை பார்ப்பார்கள். சிபாரிசு மூலம் நல்ல சம்பளம் வாங்கிக் கொள்வார்கள். ஆனால் வேலை? அதெல்லாம் கேட்டால் கஷ்டம். பசங்க படம் அனைவருக்கும் பிடித்தாலும் அதில் நல்லவன் கெட்டவன் என்ற தன்மை பலரும் ஆட்சேபித்த ஒன்று. என்ஜிஓ எழுத்தாளர்களும் அப்படித்தான். சூழல் பற்றி எழுதச்சொன்னால், கட்டுரை நெல்மணிகள் அறுத்துவிட்டு வயலில் எறிந்த வைக்கோலைப் போல இருக்கும். சத்தும் இருக்காது. விஷயமும் இருக்காது. அப்படியே மேற்கத்திய அறிவிலிருந்து தரவிறக்கி எழுதுவது. இதனால் வலுக்கட்டாயமாக எழுதிய உணர்வு கட்டுரைகளை படிக்கும் அனைவருக்கும் இருக்கும். ஏன் நான் கூட அதுபோல செயற்கையாக எழுதிய நண்பர்களுக்கு அனுப்பி வைத்து படிக்க டார்ச்சர் செய்திருக்கிறேன். ஆனால் அத்தவறை விரைவில் புரிந்துகொண்டு எழுதும் முறையை மாற்றிக்கொண்டேன். ஆனால் இந்த என்ஜிஓ சங்க எழுத்தாளர்கள், தாங்கள் எழுதும் கட்டுரையைக் கூட படிக்க முடியாமல் ஸ்டீபன் ஹாக்கிங், சார்லஸ் டிக்க