இடுகைகள்

சினிமா விமர்சனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எதிரியை மாறுகை மாறுகால் வாங்கிவிட்டு அமைதியை போதிக்கும் படம்! சமரசிம்ஹா ரெட்டி - பாலைய்யா, சிம்ரன், அஞ்சலா ஜாவேரி

படம்
  சமரசிம்ஹா ரெட்டி பாலகிருஷ்ணா, சிம்ரன், அஞ்சலா ஜாவேரி இயக்கம் - ஜி கோபால் கதை வி விஜயேந்திர பிரசாத் வசனம் பாருச்சி பிரதர்ஸ்  இசை மணிசர்மா  ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் மோட்டல் ஒன்றுக்கு அப்புலு வருகிறான். அவன் கையில் பணம் இல்லை என்பதால் சுயநலமான சுமித்ராவின் ஹோட்டலில் வேலைக்கு சேருகிறான். இந்த ஹோட்டலுக்கு போட்டியாக சிட்டம்மா என்ற பெண்மணி ஹோட்டல் வைத்திருக்கிறார். இவர்கள் இருவருக்கும் தொழில்போட்டி உள்ளது.   அப்புலுவைப் பார்த்ததிலிருந்தே சிட்டம்மாவுக்கு இவன்தான் தனக்கு ஏற்றவன் என மனம் சொல்லுகிறது. ஹோட்டலில் மூன்று பெண்கள் வேலை செய்கிறார்கள். இவர்களை சுமித்ரா கடுமையாக திட்டி வேலை செய்யச் சொல்லுகிறார். இந்த பெண்களுக்கு அத்தைதான் ஹோட்டலை நடத்தும் பெண்மணி என அப்புலு தெரிந்துகொள்கிறான்.  மூன்று பெண் பிள்ளைகளில் முதல் பெண் திருமணத்திற்கு தயாராகி நிற்கிறாள். அடுத்தவள் படிக்கவேண்டும் என ஆசைப்பட்டு வேலைநேரம் போக படித்துக்கொண்டு இருக்கிறாள். கடைக்குட்டியான சிறுமி, அத்தையால் அடித்து உதைக்கப்பட்டு கால் முடமாகி கிடக்கிறாள். இவர்களுக்கு அப்புலு ஏன் உதவி செய்ய நினைக்கிறான் என்பதுதான் படத்தின் கிளைக்

வளர்ப்பு தந்தைக்காக தன்னை தியாகம் செய்யும் மகனின் தியாக கதை!

படம்
  சின்னோடு  சுமந்த், சார்மி கௌர் இயக்குநர் கண்மணி  சிறைக்கைதியாக இருக்கும் பெண்ணின் குழந்தையை சிறை வார்டன் தனி கவனமெடுத்து பார்த்துக்கொள்கிறார். கைதி திடீரென நோய்மையால் இறந்தபிறகு, குழந்தையை தனது வீட்டுக்கு எடுத்து வந்து தானே வளர்க்கிறார். வார்டனின் அப்பா, அவரது தம்பிக்கு இது பிடிக்கவில்லை. இந்த நிலையில் வார்டனின் தம்பி தலையில் அடிபட்டு இறந்துகிடக்கிறார். அப்போது, அருகில் ரத்தக்கறை படிந்த பூச்சாடியோடு வளர்ப்பு மகன் சின்னா நிற்கிறான். இதனால் அவனை வளர்த்த வார்டன் கடும் கோபத்திற்கு ஆளாகிறார். அவனை வெறுக்கத் தொடங்குகிறார். சிறைக்கு சென்ற சின்னா திரும்பி வரும்போது அவனை குடும்பம் ஏற்றுக் கொண்டதா என்பதே படக்கதை.  படத்தில் முக்கியமான விஷயமே, காட்சியை பார்த்ததும் என்ன நடந்திருக்கும் என பார்வையாளர்களுக்கு தெரிந்துவிடும். ஆனால் அந்த உண்மையை காட்சியில் உள்ள மற்றவர்கள் தெரிந்துகொண்டிருக்க மாட்டார்கள். இதனால் காட்சிகள் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கும். படத்தில் இப்படி சென்றுகொண்டிருப்பதில் சற்றே மாறுதல் ஏற்படுத்துவது வேணு, அலி காமெடி காட்சிகள் தான்.  மற்றபடி, படம் சற்று சீரியசான ஒன்று.  சிறையில் இர

மக்களுக்கு துணையாக நிற்கும் இரு நண்பர்களின் வெட்டுக்குத்து கதை!

படம்
  மகாநந்தி ஸ்ரீஹரி, சுமந்த், அனுஷ்கா இயக்கம் வி சமுத்ரா ஒருவழியாக படம் முடிந்தபோது.... கதையின் கரு நண்பர்களுக்குள் வரும் முட்டல் மோதல், நம்பிக்கை தான் கதை.  ஆந்திராவில் உள்ள கிராமம். அங்கு தனது நிலபுலன்களை விற்று ஊர் மக்கள் வேலை செய்வதற்கு தொழிற்சாலை கட்ட நினைக்கிறார் சுவாமி நாயுடுவின் அப்பா. ஆனால், அதை ஊரில் உள்ள பணக்கார ர் ஏற்கவில்லை. அப்படி தொழிற்சாலைக்கு மக்கள் வேலைக்கு போனால் நமக்கு மதிப்பிருக்காது. நீ தொழிற்சாலை கட்டக்கூடாது என்று மிரட்டுகிறார். பிறகு ஒரு நல்லநாள் பார்த்து சுவாமி நாயுடுவின் பெற்றோரை வீடு புகுந்து தாக்கிக் கொல்கிறார்.  இதனால் சுவாமிநாயுடுவும் அவரது தங்கையும் அனாதை ஆகிறார்கள். படம் இப்படித்தான் தொடங்குகிறது.  பிறகு சில ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் எதிரிகளை பழிவாங்கிய சுவாமி நாயுடு ஊரில் பெரிய ஆளாக மாறியிருக்கிறார். அவருக்கு வலது இடது என இரு கரமுமாக இருப்பவன்தான் சங்கர். பார்த்தால் அண்ணன் தம்பி போல  தோன்றும் ஆனால் இருவரும் நண்பர்கள். சுவாமி நாயுடுவைப் பொறுத்தவரை அப்பாவின் கனவை நிறைவேற்றுவதுதான் பேஷன், ஆம்பிஷன், கனா எல்லாமே. இப்படி தொழிற்சாலை கட்டி முடிக்கும்போது எத

முதலமைச்சரை பணயக்கைதியாக்கி சாமானியனின் இறப்புக்கு நீதி கேட்கும் பத்திரிகையாளர்! - பிரதிநிதி - தெலுங்கு - நர ரோகித்

படம்
  பிரதிநிதி தெலுங்கு  இயக்கம் பிரசாந்த் மந்தரா நர ரோகித்தின் படம் என்றாலே எதிர்பார்ப்பு ஒன்றுண்டு. கதை என்பது வித்தியாசமாக வினோதமாக இருக்கும் என்பதுதான் அது. அந்த வகையில் இந்த படமும் விதிவிலக்காக அல்ல.  முதலமைச்சர், முதியோர் இல்லம் ஒன்றை திறந்து வைக்க போகிறார். அங்கு அவரை கடத்தி பணயக் கைதியாக்கி விடுகிறார்கள். அவரை கடத்தியவர் தான் என்ன செய்கிறோம் என்பதை தெளிவாக உணர்ந்திருக்கிறார். அவர் கேட்கும் கோரிக்கைகள் என்ன, ஏன் அந்த கோரிக்கைகளை முன் வைக்கிறார் என்பதே திரைப்படத்தின் கதை.  நர ரோகித் யார் என்பதை ஸ்ரீவிஷ்ணு போலீஸ் விசாரணையில் தான் சொல்லுகிறார். அவர் இப்படி இருப்பார் என்பதை நாம் அவரது நினைவுக்குறிப்பில்தான் அறிகிறோம். இதன்படி, அவரது பாத்திரம் வித்தியாசமாக இருக்கிறது. குறிப்பாக, சாலையில் கோக் டின்னை எறியும் ஸ்ரீவிஷ்ணுவை துரத்தி வந்து... எப்படி பைக்கில் தான்.  கேனை திரும்ப காருக்குள் எறிகிறார். குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என்ற நற்கருத்தை அமைச்சர் மகனின் மனதில் விதைக்கிறார் நர ரோகித். கூடவே, ஸ்ரீவிஷ்ணுவின் உயிரையும் அதே இடத்தில் காப்பாற்றி அவரின் நட்புக்கு பாத்திரமாகிறார். அவரின் பெயர

அப்பாவின் வெறுப்பால் குடும்பத்தை விட்டு தனி மனிதனாகும் சத்யம்! சத்யம் -2003

படம்
  சத்யம் சுமந்த் அக்கினேனி படத்தின் தலைப்புதான் நாயகனின் குணம். அவன் உண்மை சொல்லும் சந்தர்ப்பம் எல்லாம் தவறாகவே போகிறது. இதனால் அவன் வீட்டை விட்டு வெளியே போய் வாழும்படி ஆகிறது. பிறரின் நலனுக்காக தன்னையே தியாகம் செய்யும் குணம், அவனுக்கு நான்கு நண்பர்களை சம்பாதித்துக் கொடுக்கிறது. இருவர் அவனது அறையில் தங்கி நண்பர்களானவர்கள், மீதி இருவர்களில் ஒருவர் ஜோதிடர், மற்றொருவர் இவர்கள் தங்கியிருக்கும் அறைகளின் உரிமையாளர்.  படம் நெடுக நான்கு நண்பர்கள் சுமந்திற்கு எப்பாடு பட்டேனும் உதவுகிறார்கள். அவர்களுக்கும் சுமந்த் பார்ட்டி கொடுத்து உற்சாகப்படுத்துகிறார். விடுங்கள் கதை பார்ட்டி பற்றியது அல்ல.  சத்யத்தை நம்பும் ஒரே நபர், அவனது தங்கை மட்டும்தான். சத்யத்தைப் பொறுத்தவரை மனத்திற்கு தோன்றினால் வேலைகளை செய்வது இல்லையெனில் அதை செய்யக்கூடாது அவ்வளவுதான். இது பலருக்கும் புரிவதில்லை. ஏன் அவனது பெற்றோருக்கு கூட. குறிப்பாக அவனது அப்பாவுக்கு அவனை புரிந்துகொள்ள முடியாத இயலாமை மெல்ல கோபமாக மாறுகிறது. சத்யத்தைப் பொறுத்தவரை கவிதை எழுதுவது அதற்கான கவியுலகிலேயே இருப்பது பிடித்தமானது. இப்படி இருப்பவன் நடைமுறை வாழ்க்க

அலப்பறை டில்லுவுக்கு ஆப்பு வைக்கும் செக்ஸி காதலி! - டிஜே டில்லு - சித்து, நேகா ஷெட்டி

படம்
  டிஜே டில்லு கதை, திரைக்கதை சித்து ஜோனல்கட்டா இயக்கம் விமல் கிருஷ்ணா இசை ஸ்ரீசரண் பகலா ராம் மிர்யாலா பின்னணி இசை  தமன் எஸ் தெலுங்கானாவில் வாழ்பவர் டிஜே டில்லு. இவர் அப்பா வைத்த பெயர் பால கங்காதர திலகர். அதை ஸ்டைலாக மாற்றி வைத்துக்கொண்டு உள்ளூர் விசேஷங்களுக்கு பீதி ஏற்படுத்தும் படி டிஜே செய்துகொடுத்து அலப்பறை கொடுத்து வருகிறார்.  இவர் வாழ்க்கையில் வருகிறார் ராதிகா. டிஜே டில்லு மொழியில் ஆஸ்கார் அவார்ட் வின்னர் ராதிகா ஆப்தே. இவரை டில்லு உண்மையில் காதலிக்கிறார். ஆனால் ராதிகா டில்லுவை காதலெல்லாம் செய்யவில்லை. சில சிக்கல்களுக்கு பயன்படுத்திக்கொள்கிறார். இவற்றிலிருந்து டில்லு எப்படி மீள்கிறார் என்பதே கலாட்டாவான கதை.  சித்துவின் எழுத்திலும் திரைக்கதையிலும் உள்ள பகடி இப்படத்திலும் உண்டு. முந்தைய படங்களை விட இதில் காமெடி சிறப்பாக மெருகேறியுள்ளது.  என்னை எப்பவுமே ஏன் டில்லு நம்ப மாட்டேங்குற? ராதிகா, நிஜமாகவே இந்த கேள்வியை நீ என்கிட்ட கேட்கிறியா? பிளானை சரியா போட மாட்டியா? பாரு பிகின்னர்ஸ் மிஸ்டேக்ஸ்.... கான்ட்ரிபியூஷன் பண்ணாம கரெக்ஷன்  மட்டும் சொல்லிக்கிட்டு இருக்குற... பிரஷ்ஷர் எனக்கு பிளஸ்ஸர்

எதிரிகளை ஆல் இன் ஆலாக வதம் செய்யும் அகோரி அகண்டா! - அகண்டா - பொயபட்டி ஸ்ரீனு- தெலுங்கு

படம்
  அகண்டா - பாலகிருஷ்ணா(NBK) அகண்டா பொயபட்டி ஸ்ரீனு என்பிகே, பிரக்யா ஜெய்ஸ்வால் முரளி கிருஷ்ணா, புகழ்வாய்ந்த பணக்கார விவசாயி. இவர், தன்னுடைய பிராந்தியத்தில் உள்ள ரவுடிகளை அடித்து திருத்தி நம்நாடு எம்ஜிஆர் போல பக்குவப்படுத்துகிறார். அப்படி ஒருவரை அடித்த அடியில் நேர்மையான மனிதராக மாறி, அத்தொகுதியில் வென்று எம்.பியாகிறார். இந்த நேரத்தில் அங்கு சாமியாராக உள்ளவர், தனக்கென ரவுடி கூட்டத்தை வைத்து சுரங்கங்களை தோண்டுகிறார். அதில் கிடைக்கும் யுரேனிய பாதிப்பு பற்றி அரசு அதிகாரிகளுக்கு கூட சொல்லுவதில்லை.  கழிவுகளை ரிவர்ஸ் போரிங் முறையில் நிலத்திற்கு அடியில் செலுத்துகிறார்கள். இதனால் மண், நீர் மாசுபட மக்களும் , குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் முரளி கிருஷ்ணாவிற்கும் சுரங்க மாஃபியாவிற்கும் முட்டல் மோதல் தொடங்குகிறது. இதன் அடுத்த விளைவாக, முரளி கிருஷ்ணாவின் மருத்துவமனையில் குண்டு வைத்து வெடிக்க வைக்கப்படுகிறது. இதில் பிராந்திய எம்பி பலியாகிறார். சாமியாரின் தந்திரத்தால் தேசிய புலனாய்வு முகமையால் முரளி கிருஷ்ணா கைதாகிறார். அவரது மனைவியின் மாவட்ட ஆட்சியர் பதவியும் பறிபோகிறது. இப்போது அவர்களை யா

நிஜ உலகில் உள்ள வில்லனை வீழ்த்த உதவும் செயற்கை நுண்ணறிவு பாத்திரம்! - ஃப்ரீ கய் 2021

படம்
  ஃப்ரீகய் ரியான் ரினால்ட்ஸ் ப்ரீசிட்டி எனும் விளையாட்டு இரண்டு கணினி விளையாட்டு வல்லுநர்களின் கோடிங்குகளை திருடி உருவாக்கப்பட்டது. அதனை கண்டுபிடிக்கும் இருவரும் அதனை எப்படி மீட்கின்றனர் என்பதுதான் கதை.  கதையில் வரும் நாயகன் ரியான் ரினால்ட்ஸ் செயற்கை நுண்ணறிவு கொண்ட பாத்திரம் ஆகும். உண்மையான வாழ்க்கையில் நாயகன் என்பது கீஸ் எனும் பாத்திரம் ஆகும்.  படத்தில் ரியான் ரினால்ட்ஸ் ஒரு செயற்கை நுண்ணறிவு கொண்ட பாத்திரம்தான். ஆனால் அதனை அவர் புரிந்துகொள்ள மாட்டார். அவருக்கு வங்கியில் வேலை. தினசரி ஒரே மாதிரியான காபியைக் குடித்துவிட்டு வேலைக்கு செல்வார். அவருக்கு வங்கி செக்யூரிட்டிதான் நண்பர். தினசரி அவரது வங்கியில் கொள்ளை நடைபெறும். அதை எதிர்க்காமல் பணத்தை திருடு கொடுப்பது அந்த வங்கியின் வழக்கம். ஒருநாள் இந்த வழக்கத்தை ரியான் ரினால்ஸ்ட் மாற்றுகிறார். அதாவது அவரது பாத்திரமான கய். இதனால் சில நாட்களில் அவர் ப்ளூ சர்ட் என்ற பெயரில் பிரபலமாகிறார்.  இந்த நேரத்தில் கணினி விளையாட்டுக்குள் வந்து தான் எழுதிய கோடிங்குகளை தேடுகிறார் மிலி என்ற இளம்பெண். அந்த பெண்ணை பார்த்ததும் கய்க்கு காதல் சிறகுகள் முளைக்கின்

காதலிக்கும் பெண் சொல்லும் தத்துவங்களை காதலன் கண்டடையும் பயணம்! - மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர் 2021

படம்
  மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர் தெலுங்கு பொம்மரில்லு பாஸ்கர் கோபி சுந்தர் திருமணத்திற்கான தேவை, அதை செய்துகொள்பவர்களின் தகுதி பற்றி பேசியிருக்கும் படம்.  நவீன காலத்தில் திருமணம் பற்றி நமக்கிருக்கும் கருத்துகள் எல்லாம் பிறர் உருவாக்கியவை. அக்கருத்துகளை நாமே யோசித்து உருவாக்கினால்தான் கல்யாண வாழ்க்கை உருப்படியாகும் என பாஸ்கர் தனது படத்தில் பேசியிருக்கிறார்.  ஹர்ஷா, அமெரிக்காவில் வேலை செய்கிறார். ஐடி கம்பெனியேதான். அங்கிருந்து இந்தியா வர ஏற்பாடாகிறது. எதற்கு? இருபதே நாட்களில் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து கல்யாணம் செய்துகொண்டு அமெரிக்காவுக்கு செல்வதுதான் திட்டம். மொத்தம் இருபது பெண்களை சந்தித்து பேசுவது பிளான். இதில் எந்த பெண் ஓகே என்றாலும் உடனே கல்யாணத்தை செய்து கூட்டிபோக அத்தனை ஏற்பாடுகளும் ரெடியாக வைத்திருக்கிறார்கள். அப்போதுதான் ஹர்ஷாவின் வாழ்க்கையில் தனிக்குரல கலைஞராக விபா வருகிறாள். திருமணம் பற்றி ஹர்ஷா நினைக்கும் அத்தனை விஷயங்களையும் உடைக்கிறாள். இதனால் ஹர்ஷாவுக்கு அவளை பிடித்துப்போகிறது.  அவள் தன்னிடம் கேட்கும் அத்தனை கேள்விகளையும் தான் பெண் பார்க்கப் போகும்

உண்மையான காதலைத் தேடும் பயணம்! - காதலை மூழ்கடிக்குமா காமம்?

படம்
        கிராஜூவேட்       கிராஜூவேட்   Director: Mike Nichols Produced by: Lawrence Turman Screenplay by: Calder Willingham, Buck Henry படத்தின் லைன் சிம்பிள்தான் . பென் , தனது கல்லூரிப்படிப்பை முடித்துவிட்டு வீடு திரும்புகிறான் . அடுத்து என்ன செய்வது என்று குழப்பமாக உள்ளது . அவர்களது வீட்டில் அவனுக்கு திருமணம் செய்து வைத்துவிடலாம் என்று சொல்லி நண்பரின் மகள் எலைனைப் பரிந்துரைக்கிறார்கள் . ஆனால் எலைனின் அம்மாவுக்கு வீடு திரும்பிய பென்னின் உடல் மீது மட்டுமே கண் . முதலில் அ்வனை வீட்டுக்கு கூட்டிப்போய் மெல்ல மசிய வைக்கப் பார்க்கிறாள் . ஆனால் அது வேலைக்கு ஆகவில்லை . பென் மிரண்டு போய் திரும்பி பார்க்காமல் வீடு வந்து விடுகிறான் . ஆனால் அடுத்தடுத்த ஹோட்டல் சந்திப்புகளில் தினசரி நீச்சல் பயில்வதைப் போல காமமும் கை வந்த கலையாகிவிடுகிறது . ஒரு பெண்ணுடனே தொடர்ச்சியாக காமம் என்றால் போரடிக்குமே ? பென்னுக்கும் போரடிக்கிறது . அவனை , நண்பரின் மனைவி பயன்படுத்திக்கொள்வதாக நினைக்கிறான் . அப்போது , பார்த்து பல்கலைக்கழகத்தில் படிக்கும் நண்பரின் மகள் எலைன் வருகிறாள் . அவளுக்கு பென்னைப்

பியோனா மூலம் கடந்த கால வாழ்க்கையை கண்டுபிடிக்கும் அடியாள்! - அன்லீஸ்டு

படம்
                அன்லீஸ்டு நடிப்பு , தயாரிப்பு ஜெட்லீ கந்துவட்டி தலைவனின் நாய் போல வளர்க்கப்படும் இளைஞனின் முன்கதையை அவன் அறிந்துகொள்ளும்போது என்னாகிறது என்பதுதான் படத்தின் மையக்கதை . டேனியாக ஜெட்லீ அப்பாவித்தனமும் , கழுத்திலுள்ள பெல்ட்டை அவிழ்த்தால் வெறிநாயாக மாறி எதிரிகளை அடித்து பிளந்து நடித்திருக்கிறார் . வெறும் அடிதடி மட்டுமன்றி , தனது தாய் யார் என்று தெரிந்துகொள்ளும் தவிப்பிலும் , தனது ஆதரவளிக்கும் பியானோ மெக்கானிக்கின் வளர்ப்பு மகள் மீதான பிரிய முத்தத்தை சிரித்தபடியே ஏற்பது , தாயின் இறப்பிற்கு காரணமான கந்து வட்டி தலைவனை அடித்து பிளப்பது என நடிப்பிலும் வேறுபாடு காட்டியிருக்கிறார் . உளவியல் ரீதியான கடுமையாக பாதிக்கப்பட்ட மனிதராக டேனி உள்ளார் . அவரை மெல்ல இசைமூலம் நடப்பு உலகிற்கு விக்டோரியா என்ற பெண் இழுத்து வருகிறார் . அதற்கு தடையாக இருப்பது கந்துவட்டித் தலைவன் . அவனை எப்படி டேனி தன்னுடைய வாழ்க்கையிலிருந்து அகற்றுகிறான் என்பதுதான் இறுதிப்பகுதி . விக்டோரியா டேனியை எப்படி காதலனாக ஏற்கிறாள் என்பது நிறைய இடங்களில் பொருந்தாதது போலவே உள்ளது . மனத்தளவி

யோகிபாபுவின் நடிப்பு மட்டுமே ஆறுதல்! நாங்க ரொம்ப பிஸி!

படம்
                  நாங்க ரொம்ப பிஸி இதனை படம் என்றே சொல்லமுடியாது . டெலிபிலிம் போல எடுத்து வைத்திருக்கிறார்கள் . நேர்மையான எஸ்ஐ , எப்படி குடும்ப பிரச்னைக்காக தனது கொள்கை தவறி மோசமான வழியில் செல்கிறார் , தனது காதலியை கைப்பிடிக்க காதலன் எப்படி முறைதவறிய வழியில் பயணிக்கிறான் , சிறிய திருட்டுகளை செய்து வரும் தில்லாலங்கடி திருடன் பெரிய கொள்ளையை செய்து செட்டிலாக நினைக்கிறான் . இந்த மூவரும் ஒன்றாக இணைந்து கருப்பு பணத்தை கொள்ளையடிக்க நினைக்கிறார்கள் . அதனை சரியாக செய்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை . பணமதிப்பு நீக்க நடவடிக்கையை பிரதமர் மோடி கொண்டு வந்த காலத்தில் நடக்கும் கதை .   இந்த லைன் மட்டுமே சுவாரசியம் . மற்றபடி ப டத்தின் மற்ற விஷயங்கள் எல்லாமே எப்போது முடியும் என்று என்ற எண்ணத்தை ஏற்படுத்துகி்ன்றன . படத்தின் ஒரே ஆறுதல் , யோகி பாபுவும் , சி . சத்யாவின் இசை மட்டும்தான் . இவர்கள் மட்டும்தான் முடிந்தளவு தங்கள் உழைப்பை போட்டு கொஞ்சம் ரசிக்க வைத்திருக்கிறார்கள் . நீங்கள் பிஸியாக ஏதாவது வேலையில் இருந்தால் இந்த படத்தை பார்க்காமல் இருப்பதே நல்லது . பட

பிறருக்கு சாரி சொல்லிப் பழகுங்கள்! - அன்ஹிங்க்டு படம் சொல்லும் செய்தி!

படம்
              அன்ஹிங்க்டு சாரி என்ற சொல்லை சொல்லாத காரணத்தால் இளம்பெண் தனது உறவினர்களை பலிகொடுக்க நேரிடும் சூழல் உருவாகிறது . எப்படி அச்சூழ்நிலையை அவள் சமாளிக்கிறாள் என்பதுதான் கதை . படத்தின் ஒரே படம் ரஸ்ஸல் க்ரோவ்தான் . ஹல்க் போல சதை போட்டு மக்கள் மீது பெரும்கோபமாக அலைகிறார் . அவர் டிராஃபிக்கில் நிற்க தனது மகனை பள்ளியில் விடச்செல்லும் ரேச்சல் ஹண்டர் என்ற பெண் சலூனுக்கு செல்ல தாமதம் ஆவதால் அவரை வேலையை விட்டு நீக்கிவிடுகிறார் அவரது முதலாளி டெபோரா . இதனால் கடுப்பில் இருந்த ரேச்சல் , காரை சாலையில் வேகமாக ஓட்டாமல் நிறுத்தியிருந்த டாமை கண்டபடி திட்டிவிடுகிறாள் . இதனால் எரிச்சலுக்கு உள்ளாகும் டாம் ரேச்சலை துரத்தி பழிவாங்குவதுதான் கதை . ஒரே லைனில் கதை செல்கிறது . சைக்கோ கொலைகாரனிடம் ரேச்சலின் போன் சிக்கிவிட அதை வைத்து எப்படி அவளின் உறவினர்கள் , தெரிந்தவர்கள் என பழிவாங்க நினைக்கிறான் . அதனை ரேச்சல் எப்படி தடுக்கிறாள் என்பதுதான் கதை . படத்தில் நியூசிலாந்து நடிகை ரேச்சல் ஹண்டராக சிறப்பாக நடித்துள்ளார் . மற்றபடி படத்தில் சொல்ல ஏதுமில்லை . முடிந்தவரை உணர்ச்

தூங்கி எழுந்தால் காதலன் பெயரில் இன்னொருவன் படுக்கையில் இருக்க, தவிக்கும் காதலி! - பியூட்டி இன்சைட் 2015 -

படம்
            பியூட்டி இன்சைட்  Directed by Baik (Baek Jong-yul) Produced by Park Tae-joon Written by Kim Sun-jung Noh Kyung-hee Based on The Beauty Inside by Drake Doremus Starring Han Hyo-joo Music by Jo Yeong-wook Cinematography Kim Tae-gyeong       இன்றுள்ள மனிதர், நாளைக் காலையில் இருப்பதில்லை. அதாவது இன்று அவர் கற்றுக்கொள்ளும் விஷயங்களைப் பொறுத்து நாளை வேறுமாதிரியாக உலகை எதிர்கொள்வார். கொரியாவில் வாழும் கிம் வூ ஜின், வித்தியாசமான பல்வேறு பர்னிச்சர்களை உருவாக்கும் திறன் கொண்டவர். இவருக்கு இரவில் படுத்து தூங்கி காலையில் எழுந்தால் முகம், உடல் என வேறு ஆளாக மாறிவிடுவார். மனம், புத்தி எல்லாமே சரியாக இயங்கும். ஆனால் உடலின் அனைத்து அளவுகளும் மாறிவிடும். கண்பார்வை, உடலில் அணியும் ஆடைகளின் அளவு, செருப்பின் அளவு.  இப்படிப்பட்ட பாதிப்பு இருக்கும் இவர், அவரது அம்மாவுக்கே பாரமாகிறார். இதனால் தனியாக தான் தயாரிக்கும் நாற்காலி தொழிற்சாலையிலுள்ள அறையில் தங்கிக்கொள்கிறார். கிம் தினசரி தான் மாறும் புதிய மனிதரின் அடையாளத்துடன் கணினியில் தன் அனுபவத்தை பதிவு செய்து வைப்பது முக்கியம். வயதுக்கான பிரச்னைகளோ