இடுகைகள்

ஜப்பான் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சினிமா பார்த்து கொலைகாரர் ஆனார்!

படம்
அசுரகுலம் செய்சாகு நகமுரா ஜப்பானில் 1924 ஆம் ஆண்டு பிறந்த செய்சாகு நல்ல புத்திசாலி. ஆனால் காது கேட்காத குறைபாடு உண்டு. சமூக அந்தஸ்தில் மிகவும் பின்தங்கிய குடும்பம். ஊர் முழுக்க இவரது குடும்பத்தை கேலி பேச அதுவே காரணமானது. எனவே அமைதியாக தன் மனதின் உள்முகமாக திரும்பியவர், ஜப்பானின் கடானா வாள் சண்டைப்படங்களைப் பார்க்கத் தொடங்கினார். ரசித்து மகிழ்ந்தார். அதுவே பின்னாளில் அவரது இயல்பு மாறவும் காரணமானது. ஒன்பது நபர்களை இரக்கமின்றி ஆசையோடு கத்தி கொண்டு குத்தினார். சிசுவோகா எனும் பகுதியில் நிகழ்ந்த குற்றச்சம்பவங்கள் அவை. 1938 ஆம் ஆண்டு செய்சாகு தன் குற்றத்தொடரைத் தொடங்கினார். ஆக.22 அன்று இரண்டு பெண்களை காம்போவாக கற்பழிக்க முயன்று தோற்றார். அந்த சின்ன விஷயத்திற்கு லபோ திபோ என அப்பெண்கள் வாயில் கைவைத்து எம்ஜிஆர் கால நாயகி போல அலற, அவர்களின் மூச்சை நிரந்தரமாக நிறுத்தினார். அப்போது செய்சாகுவின் வயது பதினான்கு. செய்சாகு தன் வேலையைக் காட்டிய காலம் போர் காலம் என்பதால் அரசும் பெரியளவு கண்டுகொள்ளவில்லை. இதனால் அவரின் கொலைவெறி எல்லை தாண்டி சென்று அவரின் அண்ணன், அண்ணன் மனைவி, குழந்தை, தந்தை

நோரியோ நகாயாமா - கொலைகாரர் எழுத்தாளர் ஆன கதை!

படம்
அசுரகுலம் நோரியோ நகாயாமா எழுத்தாளர் கொலைகாரர் ஆவரா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். நோரியோ  கொலைகார ர் பிரபலமான நாவல் எழுத்தாளர் ஆக முடியும் என நிரூபித்துக் காட்டியபோது அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு விட்டது. 1949 ஆம்ஆண்டு ஜப்பானின் அபாஸிரி எனுமிடத்தில் பிறந்தார். இவரது குடும்ப நிலை தெரியவில்லை. சிபுயா எனுமிடத்தில் வேலைக்குச் சேர்ந்தார். வேலை செய்தார். ஆனால் திடீரென 1968 ஆம் ஆண்டு அக்.11 முதல் 1969 நவ.5 வரையிலான காலகட்டத்தில் துப்பாக்கி மூலம் நான்கு பேர்களை இரக்கமின்றி கொன்றார். கொன்றவர்களில் இருவரிடம் 16,420 யென்களை கொள்ளையடித்தார். இப்படி குற்றச்சாட்டு வந்தால் அந்நாட்டு நீதிமன்றம் என்ன செய்யும்? மரணதண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் நம் அரசியல் தலைவர்கள் போகாத பொழுதை எப்படி ஓட்டுவார்கள் அதேதான. சும்மாதான் எழுத தொடங்கினார். விரைவில புகழ்பெற்ற எழுத்தாளராக மாறிவிட்டார். அதிலும் உச்சமாக வுடன் பிரிட்ஜ் என்ற நாவலுக்கு ஜப்பான் இலக்கியப் பரிசே அளித்து விட்டார்கள். ஆனாலும் அப்பீலுக்கு சட்டம் மசியவில்லை. கடமை கண்ணியம் கட்டுப்பாடு என நோரியோவுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட

நீலி பழிக்குப்பழி வாங்கினானா? - கடவுள் மற்றும் சாத்தானின் கதை!

படம்
தி டேல்ஸ் ஆப் டிமோன்ஸ் அண்ட் காட்ஸ் ஜப்பான் அனிமே மேட் ஸ்னெய்ல் 224 அத்தியாயங்கள் முந்தைய பிறவியில் மன்னர் ஒருவரால் கொல்லப்படும் நீலி, எப்படி மீண்டும் குளோரி சிட்டியில் பிறந்து எதிரிகளின் வாலை ஒட்ட நறுக்கி, தன்னைக் கொன்ற மன்னரை போட்டுத்தள்ளுகிறார் என்பதே இந்த மாங்கா காமிக்ஸின் கதை. கதை இன்னும் முடியவில்லை என்பதை மனதில் கொள்ளுங்கள். பதிமூன்று வயது சிறுவன் நீலி, வகுப்பறையில் தனது முந்தைய காலத்தை நினைவுகூர்கிறான். மெல்ல நிகழ்காலத்திற்கு வந்தால் ஆசிரியர் வருணபேத த்தைக் கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறார். அதாவது, இவர்களுக்கு இது இதுதான் வரும் என. கோபத்தில் கொந்தளிக்கும் நீலி, இரண்டு மாதங்களில் சில்வர் ரேங்க் வரை வந்துகாட்டுகிறேன் என சவால் விடுகிறான். முதலில் அனைவரும் சிரித்தாலும்,. அவனையொத்த பொருளாதார ரீதியாக தாழ்ந்த குடும்ப வாரிசுகள் ஐவர் அவனை தங்களது முன்னோடியாக பார்க்க நாயகன் உருவாகிறான் மொமண்ட். உண்மையில் நீலி யார் என்ற உண்மை 224 அத்தியாயங்களிலம் சொல்லப்படவில்லை என்பதுதான் ட்விஸ்ட். அவன் முன்னதாகவே பல்வேறு மந்திரங்கள் ஆயுதங்களைக் கற்றிருக்கிறான். எனவே மேல்சாத

அசுரகுலம்: ஜப்பானைக் குலைக்கும் மனநிலை நோய்!

படம்
அசுரகுலம் ஹிக்கிகோமோரி ஜப்பானில் இளைஞர்களை ஆட்டிப்படைத்த இன்றும் நடப்பிலுள்ள மனநிலைக்கோளாறு இது. குறிப்பிட்ட துறையிலுள்ள இளைஞர்கள் தன் துறை சார்ந்து சாதிக்க ஏதுமில்லை என்ற நினைப்பு தோன்றினால் முடிந்தது. வீடு புகுந்து கதவைச் சாத்திக்கொண்டு ஆறுமாதம் காமிக், அனிமே என பார்த்துக்கொண்டே இருப்பார்கள். இதில் அவர்களுக்கு நம்பிக்கை தோன்றினால் திரும்ப சமூகத்திற்கு தன் கதவுகளைத் திறப்பார்கள். இல்லையெனில் சிக்கல்தான். அவர்களுக்கும் பிறருக்கும். கடந்த பிப்ரவரியில் வந்த ஜப்பான் டைம்ஸ் செய்திப்படி, அங்கு ஹிக்கிகோமோரி பாதிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்திற்கும் அதிகம். குறிப்பாக சொல்ல வேண்டுமா? 6,13,000. இந்த பாதிப்பு பதினைந்து வயதிலிருந்து தொடங்குகிறது. 2015 ஆம்ஆண்டு ஆய்வுப்படி 5 லட்சத்திற்கு மேற்பட்டோர் இப்பாதிப்பில் சிக்கியுள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்த மனநிலை பாதிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கும் அதிகம். பள்ளிக்கோ, வேலைக்கோ செல்லாமல் வீட்டிலேயே ஆறுமாதம் அடைந்து கிடக்கும் பாதிப்பு வயது வந்தவர்களுக்கும் உள்ளது. இது பெரும் சமூக பாதிப்பாக மாறி வருகிறது என்கி

கொலை செய்ய எலி சொன்னது தவறா?

படம்
அசுரகுலம் சுட்டோமு மியசாகி 1988 ஆம் ஆண்டு வாக்கில் ஜப்பான் மக்களை பயமுறுத்தி சைக்கோ கொலைகாரரின்  பெயர் சுட்டோமு மியசாகி. அங்குள்ள சிறுவர், சிறுமிகளை மட்டும் கடத்தி சித்திரவதை செய்து கொன்று நீட்டாக பேக்கேஜ் செய்து அவர்களுக்கு வீட்டுக்கு அனுப்பி பெற்றோரின் மனநிலையை உடைப்பது சுட்டோமுவுக்கு ரொம்ப பிடிக்கும்.  சுட்டோமுவின் தாத்தா இறந்துபோன மூன்று மாதங்களுக்கு பிறகு வேட்டையைத் தொடங்கினார். அன்று ஆக.22, 1988 ஆம் ஆண்டு. மாரி கொன்னோ என்ற நாலு வயது சிறுமி வீட்டின் வெளியே தன் தோழியுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.  அவளைப் பார்க்க பார்க்க சுட்டோமுவின் மனதில் இருள் சாத்தானின் நிழல் படிந்தது. உடனே பாய்ந்தவர் அச்சிறுமியை தூக்கிக்கொண்டு  மரங்கள் நிறைந்த காட்டுக்கு கொண்டு சென்று கழுத்தை திருகி ஆசையாக கொன்றார்.  இரண்டு மாதங்களுக்குப் பிறகு மசாமி யோசிஸாவா என்ற அடுத்த இலக்கை குறிவைத்தார் இருபத்தாறு வயதேயான சுட்டோமு. அதிகமில்லை ஏழுவயதான சிறுமி. தூக்கிச்சென்று கொன்னோவைக் கொன்ற அதே இடத்தில் வைத்து கொன்றார். அடுத்து டிச. 12 அன்று நான்கு வயது சிறுமி எரிகா நன்பாவை கடத்

அசத்தும் ஜப்பான் மலையாள அகராதி! - அரசு அதிகாரி சாதனை

படம்
Add caption பெருமை பேசும் உழைப்பு -  ஜப்பான் மலையாள அகராதி கொச்சியைச் சேர்ந்த கேபிபி நம்பியார், அரிய சாதனை ஒன்றை செய்துள்ளார். ஏறத்தாழ 1500 பக்கங்களுக்கு ஜப்பான் மலையாள அகராதியை தொகுத்துள்ளார். ஆறு லட்சம் வார்த்தைகளைக் கொண்ட இந்த அகராதி, பதினைந்து ஆண்டுகள் உழைப்பில் தயாரானது. இதிலுள்ள மலையாள வார்த்தைகளின் எண்ணிக்கை 53000. அனைத்து வார்த்தைகளையும் கையில் எழுதியிருக்கிறார் மனிதர். மொத்தம் கையெழுத்தி பிரதியாக 3 ஆயிரம் பக்கங்கள் வந்திருக்கிறது. எழுதியவுடன் அதனைப் பதிப்பிக்க பல்வேறு பதிப்பகங்களை நாடியுள்ளார். ஆனால் ஜப்பான் எழுத்துரு யாரிடமும் இல்லை என்பதால் உடனே நிராகரித்துள்ளனர். உடனே ஜப்பானின் டோக்கியோவுக்கு சென்றவர், டோக்கியோ அயல் உறவுகள் பல்கலைக்கழகத்தின் உதவியை நாடினார். அங்கு மொழி சார்ந்த மென்பொருளை பேராசிரியர்கள் ஜூன் தகாசிமா, மகாடோ மினேகிஷி ஆகியோர் உருவாக்கி உதவினர். அப்போதுதான் நம்பியார் செய்த தவறு ஒன்று தெரிய வந்திருக்கிறது. ஜப்பான் - மலையாள அகராதிக்கு அவர் பயன்படுத்திய ஜப்பான் அகராதி அறுபது ஆண்டுகள் பழமையானது. உடனே தினசரி ஏழு மணிநேரம் உழைத்து, அக

செக்ஸ் இல்லாத ஜப்பானியர்கள்!

படம்
askmen.com செக்ஸ் அனுபவம் இல்லாத இளைஞர்கள் - இது ஜப்பான் கூத்து ஜப்பானில் புதிய பிரச்னை தலைதூக்கியுள்ளது. ஆம். பத்தில் ஒருவர் அங்கு செக்ஸ் அனுபவமே இல்லாமல் வாழ்கிறார் என்கிற பகீர் செய்திதான் அது. முப்பதுகளில் வாழும் வாலிபர்கள் செக்ஸ் அனுபவமின்றி வாழ்வது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஜப்பானில் தேசிய கருத்தரிப்பு மையம் இதுகுறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. காலகட்டம் 1987 - 2015. இதனை மேற்பார்வை செய்தது  ஜப்பான் சுகாதாரத்துறை அதிகாரிகள். 2015 ஆம்  ஆண்டு 30- 34 வயதுக்குள்ளான பெண்கள் 11.9%, 12.7% ஆண்கள் ஆகியோர் எந்தவித செக்ஸ் அனுபவமுமின்றி இருந்ததாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 35-39 வயதுக்குள்ளான ஆண், பெண் பிரிவில் 8.9%(பெண்), 9.5%(ஆண்) சதவீதம் பேர் பாலுறவு அனுபவம் பெறாதவர்கள் என்கிறது இந்த ஆராய்ச்சி. 18-39 வயதுக்குள்ளான பிரிவில் கால்பகுதி ஆண்,பெண்களுக்கு பாலுறவு அனுபவம் கிடைக்கவில்லை என்று ஆய்வறிக்கை தாக்கல் செய்துள்ளது டோக்கியோ பல்கலைக்கழகம். இந்த நிலைக்கு முக்கியக் காரணம், ஜப்பானில் குறைந்து வரும் மக்கள்தொகை விகிதமே. தற்போது ஜப்பான் அரசு, இந்த பிரச்னையைத் தீர்க்க

3டி மாஸ்கில் தவறு கிடையாது

படம்
The Japan Times 3டி மாஸ்க் தவறு கிடையாது. ஜப்பானின் மேற்குப் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் 3டி மாஸ்க்கை பெருமையுடன் காட்டுகிறார் ஒசாமு கிட்டகாவா. உலகின் முதல் 3டி மாஸக்கை ஒசாமுவின் ரியல் எஃப் நிறுவனம் தயாரித்துள்ளது. சிலர் நினைக்கலாம். இந்த மாஸ்க்கை வைத்து ஃபோர்ஜரி செய்வதற்கு வாய்ப்பிருக்கிறதே? ஆனால் ஒசாமு மருத்துவத்துறை, ரோபோட்டிக்ஸ் சார்ந்த முயற்சிகளுக்கு பயன்படுத்தவே முதலிடம் என்ற உறுதியாக பேசுகிறார் ஒசாமு. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி 3டி முகங்களை உருவாக்கியுள்ளார். எனக்கு மனிதர்களை காப்பி செய்து உருவாக்குவது முதலிலேயே பிடிக்கும். அதற்குத்தான் 2டி புகைப்படங்களை பிளாஸ்டர் மூலம் 3டி யாக்க முயற்சித்து வந்தேன் என்கிறார். சவுதி அரேபியாவைச் சேர்ந்த அரசு குடும்பத்தினர் இந்த டெக்னாலஜி மீது ஆர்வம் காட்டியது உலகமெங்கும் இந்த 3டி முகமூடிகளை பிரபலப்படுத்தியது. விளம்பரத்திற்காக ஜப்பான் நடிகர்களின் முகமூடிகளை விளம்பரத்தியது ரியல் எஃப் , பின்னர் வியாபாரம் பிச்சுக்கொள்ள தனித்துவமான முகங்களை உருவாக்கி வருகிறது. உங்களுடைய போர்ரைட் படங்களைக் கொடுங்கள். அச்சு அசலாக உங்கள்

ஹென்டாய்தான் டாப்! எப்படி சாத்தியம்?

படம்
2018 ஆம் ஆண்டு இணையத்தில் ஹென்டாய் செக்ஸ் படங்களை மக்கள் அதிகம் தேடியுள்ளது பார்ன்ஹப் வலைத்தளத்தின் செய்தி வழியாக தெரிய வந்துள்ளது. அனிமேஷன் கதாபாத்திரங்களால் பாலுணர்வுக்கு ஆட்படுவதை சூப்பர் நேச்சுரல் ஸ்டிமுலஸ் என்று குறிப்பிடுகின்றனர். அமெரிக்கா, கனடாவில் பாலியல் படங்கள் அதிகமாக எடுக்கப்படுவதோடு அதனை அதிகமாக பார்ப்பதும் அவர்கள்தான். ட்ரம்ப் மீது புகார்களை சொன்ன ஸ்டோர்மி டேனியல்ஸ் என பாலியல் வீடியோ சூப்பர்ஸ்டாரை அதிகம் நெட்டில் தேடி ஆனந்தம் கொண்டிருக்கின்றனர் இணையவாசிகள். ஹென்டாய் என்று இன்று டைப் செய்து தேடினாலும் இதற்கு முன்பே சுங்கா என்ற செக்ஸ் ஓவியங்கள் ஜப்பானில் வெகு பிரபலம். இதில் முழுக்க அஜந்தாவிலுள்ள பாலுறவு இன்ப வடிவங்கள் மரங்களில் செதுக்கப்பட்டு இருக்கும். இது மிகவும் அரிதானவையே. விக்கியில் தேடினால் https://en.wikipedia.org/wiki/Shunga கிடைக்கும் தகவல்கள் வியப்பூட்டுகின்றன. இன்று ஹென்டாய் வடிவ பெண்களில் ஆண்கள் மையம் கொண்டிருக்கின்றனர். இதற்கு என்ன காரணம்? ஆண்களின் ஆர்வம் பெண்கள் குறித்து மாறுவது என கொள்ளலாமா? இன்று மட்டுமல்ல முன்பிருந்தே ஆண்கள், பெண்கள்