இடுகைகள்

பொருளாதாரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நிர்வாகத்தில் சாதித்த பெண்கள்! - கீது வர்மா, கீதா கோபிநாத், மாதுலிகா குகாதாகுர்தா, கிருத்திகா ரெட்டி, ரேவதி அதுவைத்தி

படம்
              சாதனைப் பெண்கள் கீது வர்மா ஆரோக்கியமான உணவுப்ப்பொருட்கள் பிரிவு தலைவர் , இந்துஸ்தான் யுனிலீவர் கீது வர்மா , நிறுவனத்தின் ஆரோக்கியமான உணவுப்பொருட்கள் பிரிவை விரிவாக்கியுள்ளார் . உலகமெங்கும் ஆரோக்கியமான பானங்கள் , உணவுப்பொருட்களுக்கான கவனம் அதிகரித்து வருகிறது . நாங்கள் இப்போது உள்ளூரில் விளையும் பல்வேறு பொருட்களை எங்கள் தயாரிப்புக்கு பயன்படுத்தி வருகிறோம் , நோய் எதிர்ப்பைத் தூண்டும் விட்டமின் சி , ஜிங்க் ஆகியவற்றை நாங்கள் உணவுப்பொருட்களில் இருக்குமாறு பார்த்துக்கொள்கிறோம் என்றார் . 2018 ஆம் ஆண்டு நிறுவனத்தில் புதிய பொறுப்புக்கு வந்தார் கீது வர்மா . வெஜிடேரியன் பட்சர் , கிரேஸ் ஆகிய பிராண்டுகளை இவர் கையகப்படுத்தி நிறுவனத்தின் வருமான வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளார் . நாங்கள் இப்போது இறைச்சியை தவிர்த்து தாவர புரதங்களில் இருந்து இறைச்சியை தயாரிக்க உள்ளோம் என்றார் . கீதா கோபிநாத் உலக நாணய நிதியத்தின் பெண் பொருளாதாரவியலாளர் ரகுராம் ராஜனுக்குப் பிறகு இரண்டாவது இந்தியராக உலக நாணய நிதியத்தில் பணியாற்றும் வாய்ப்பு பெற்றவர் கீதா . தனது ப

பொன்ஸி திட்டங்களின் மீது மக்களுக்கு குறையாத ஆர்வம்! - மேற்குவங்கம், தமிழகம் முன்னிலை-

படம்
      சார்லஸ் பொன்ஸி         நுணுக்கமாக ஏமாற்றுவது எப்படி ? அமெரிக்காவில் 1920 ஆம் ஆண்டில் பெருந்தொற்று பாதிப்பிற்கு பிறகு பொருளாதாரம் வளரத்தொடங்கியுள்ளது இதனால் பல்வேறு பங்குகளில் முதலீடு செய்வதற்கு பணக்காரர்கள் முதலீடு செய்ய முண்டியடித்தனர் . இதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு தன்னை வளர்த்துக்கொண்டவர்தான் சார்லஸ் பொன்ஸி . இவருடன் கூட்டணி சேர்ந்து தன்னை வளர்த்துக்கொண்டவர் பெர்னி மேடாப் . இவர் செய்த குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு 150 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது . கடந்த வாரத்தில்தான் இவர் மறைந்தார் . பெர்னி , பொன்ஸி என இருவரின் காம்போதான் வரலாற்றில் பெரும் பொன்ஸி திட்டத்தை நடைமுறைப்படுத்தி மக்களை ஏமாற்றியவர்கள் . பொன்ஸியை விட அதிக காலம் முதலீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டவர் பெர்னி . முதலீட்டாளர்களிடம் 64 பில்லியன் டாலர்களைப் பெற்று அவர்களுக்கு ஆண்டுக்கு 10 சதவீத தொகையை திருப்பிக் கொடுத்தார் . எப்படி ? எதிலும் முதலீடு செய்யவில்லை . புதிதாக ஆட்களை அறிமுகம் செய்யவேண்டும் . அப்படி செய்தால் கூடுதலாக தொகை கிடைக்கும் . புதிதாக திட்டத்தில் இணையும

பெண்கள் குழந்தை பெற்றுக்கொண்டு வீட்டு வேலைகளை செய்யவேண்டும் என்பது மூடநம்பிக்கை! பேராசிரியர் லிண்டா ஸ்காட்

படம்
              நேர்காணல் பேராசிரியர் லிண்டா ஸ்காட்   பொருளாதார வல்லுநர்களில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருக்க காரணம் என்ன ? காரணம் , ஆண்களின் மேலாதிக்கம்தான் . பெண்கள் இத்துறையில் வளர்ந்து வந்தாலும் கூட அவர்களை கிண்டல் செய்து விரைவில் வெளியேற்றிவிடுகிறார்கள் . அலுவலகம் வீடு இரண்டையும் சமாளிப்பது என்று கூறப்படுவதை எப்படி பார்க்கிறீர்கள் ? நீங்கள் கூறும் வார்த்தை முழுக்க பெண்களை நோக்கியே கேட்கப்படுகிறது . இதில் நியாயமில்லை . ஆண்களுக்கும் , பெண்களுக்கு்ம் சமத்துவமாக வேலை வழங்கப்படாத நிலையில் இப்படி கேள்வி கேட்கப்படுவது தவறு . பெண்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாதது , சம்பளம் உயர்த்தப்படாதபோது நீ்ங்கள் கூறிய வார்த்தை ஒரு மன்னிப்பாக கூறப்படுகிறது . குழந்தைகளைப் பெற்று வளர்க்கும் பெண்களை நோக்கியே இதுபோன்ற வார்த்தைகள் வீசப்ப்படுகின்றன . இந்தியாவில் பெண்களுடைய நிலைமை பற்றி தங்களுடைய கருத்து ? பிற நாடுகளை விட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு குறைவு . பெண்கள் வாழ்வதற்கு கடினமான நாடுகளில் இந்தியாவும் ஒன்று . பெண்கள் கடத்தப்படுவது , பாலிய

பொருளாதாரத்தை வீழ்த்திய கொரோனா! 2020இல் என்ன நிலையை உலகம் சந்தித்து கடந்து வந்தது?

படம்
                 உலகப் பொருளாதாரத்தை வீழ்த்திய கொரோனா! சீனாவில் 2019 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா நோய்த்தொற்று தற்போதுவரை 188 நாடுகளைத் தாக்கியுள்ளது . முன்னதாக பொதுமுடக்க அறிவிப்புகளை அறிவிக்காத நாடுகள் கூட இப்போது இரண்டாவது அலை கொரோனா தொற்றைத் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன . உலக நாடுகளில் உள்ள பங்குச்சந்தைகளும் , ஓய்வூதியம் , தனிநபர் சேமிப்பு கணக்குகள் உட்பட அனைத்தும் பெருந்தொற்று சூழலால் பாதிக்கப்பட்டன . நாடுகளிலுள்ள மத்திய வங்கிகள் மக்களுக்காக வட்டி சதவீதத்தைக் குறைத்தன . மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக்கப்பட்டன . உலக நாடுகளின் அரசுகள் மானிய உதவிகளையும் , கடன் தவணைகளை நீட்டித்து தொழிற்துறைக்கு உதவின . கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெருநிறுவனங்கள் பணியாளர்களுக்கு சம்பள வெட்டை அமல்படுத்தின . இன்னும் சில நிறுவனங்கள் பணியாளர்களை பணிநீக்கம் செய்தன . வீட்டிலேயே வேலை செய்யும் முறை அறிமுகமானது . உலகின் பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவில் வேலையிழப்பு 10.4 சதவீதம் என உலக நிதி கண்காணிப்பகம் கூறியுள்ளது . வல்லரசு நாடுகளின்

டிஜிட்டல் பரிமாற்றத்தில் செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை

படம்
      டிஜிட்டல் பரிமாற்றத்தில் செய்யவேண்டியவை , செய்யக்கூடாதவை இணையம் , மொபைல் வழி பரிமாற்றம் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை தட்டச்சு செய்து இணைய வழி பணப்பரிமாற்றம் செய்வது முக்கியம் . முகவரியில் HTTPS என்று ்இருப்பதை சோதியுங்கள் . எஸ் என்ற எழுத்து பாதுகாப்பை குறிக்கிறது . கூடவே உள்ள பூட்டு அடையாளம் பாதுகாப்பான பரிமாற்றத்திற்கு சான்று . உங்கள் கணக்கிற்கு அளிக்கும் பாஸ்வேர்டு எவரும் கணிக்க முடியாதபடி , #*@$ ஆகிய எண்கள் , சிறப்புக்குறியீடுகளைக் கண்டிப்பாக கொண்டிருக்க வேண்டும் . பணப்பரிமாற்றத்திற்கு பயன்படுத்தும் ஆப்களை ( வங்கி , வங்கியல்லாதவை , வாலட் ) மேம்படுத்திக்கொண்டே இருப்பது அவசியம் . வங்கிக் கணக்கோடு ஒருவரின் ஸ்மார்ட்போன் எண் , மின்னஞ்சல் முகவரி ஆகியவை இணைக்கப்பட்டால் , குறுஞ்செய்தி , மின்னஞ்சல் மூலம் உடனுக்குடன் பரிமாற்றத்தை அறியலாம் . நீங்கள் செய்யாத பணப்பரிமாற்றம் வங்கிக் கணக்கில் நடந்தால் , அதுபற்றிய புகாரை வங்கிக்கு அளிக்கவேண்டும் . செய்யக்கூடாதவை இணையத்தில் வங்கி இணைய முகவரியை சர்ச் எஞ்சினில் தேடி , பணப் பரிமாற்றம் ச

வங்கிகளின் வகைகள் என்ன, அதன் தகுதி, திறன்கள்!

படம்
          பணம் கையாளப்பழகுவோம் வங்கிகளின் புதிய பிரிவுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் பாரம்பரியமான வங்கிகள் மட்டுமன்றி , நவீன காலத்திற்கேற்ப நிதி வங்கிகள் , சிறிய வங்கிகள் தொடங்கப்பட்டு வருகின்றன . இவ்வகை நிறுவனங்கள் பாதுகாப்பான சூழலில் மக்களுக்கு சேவைகளை வழங்கி வருகின்றன .     நிதி வங்கி வாடிக்கையாளர்களிடம் ரூ .1 லட்சம் அளவுக்ககு மிகாமல் டெபாசிட் பெறலாம் . ஏடிஎம் , டெபிட் கார்டுகளை வழங்கலாம் . கிரடிட் வழங்க முடியாது . கடன்களை வழங்க முடியாது . நிதி வங்கிகள் மியூசுவல் பண்ட் மற்றும் காப்பீடு தொடர்பான சேவைகளை வழங்குகிறார்கள் . சிறு வங்கிகள் இவை சிறு , குறு தொழில்நிறுவனங்கள் மற்றும் விவசாயிகளுக்கு ரூ .25 லட்சம் வரை கடன்களை வழங்குகின்றன . முறைப்படுத்தாத துறை சார்ந்து சிறு வங்கிகள் செயல்படுகின்றன . வணிகப் பிரதிநிதி   இவர் வங்கி சார்ந்து அதன் பிரதிநிதியாக செயல்படுபவர் . தொலைதூர கிராமங்களில் உள்ள வாடிக்கையாளர்களை தேடிச்சென்று அவர்களுக்கு தேவையான வங்கிச் சேவைகளை வழங்குவார் . பிரதிநிதியின் பணிகள் வங்கிக்கணக்கு தொடங்க உதவுவது

மத்திய அரசு மாநில அரசுகளுக்கான நிதியை உடனே அளிக்க வேண்டும்! - பிரனாப் சென், பொருளாதார நிலைக்குழு புள்ளியலாளர்

படம்
      நேர்காணல் பிரனாப் சென் பொருளாதார புள்ளிவிவர நிலைக்குழு தலைவர் . அரசு மூன்றாவது முறையாக நிதி ஊக்கத்தொகையை அறிவித்துள்ளது ? இதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள் ? இந்திய பொருளாதாரம் ஏற்கெனவே கடுமையான பாதிப்பில் உள்ளது . கடந்தாண்டு மட்டும் 18 முதல் 20 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளது . வரி வருவாயில் 8 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளது என தோராயமாக மதிப்பிடலாம் . பிற இழப்பு தொழில்துறை , நிறுவனங்கள் சார்ந்த இழப்பாக கூறலாம் . இயல்பு நிலைக்கு திரும்ப இழந்த இழப்புகளை சரி செய்யவேண்டியது அவசியம் . தற்போது மெல்ல நிலை மீண்டு வருகிறது கடந்த மூன்று மாதங்களாக சில்லறை விற்பனை மெல்ல அதிகரித்து வருகிறது . காரணம் , மக்கள் கடந்த சில மாதங்களாக எதையும் செலவு செய்ய அனுமதிக்கப்படவில்லை . திருவிழாக்கள் நடைபெறும் காலம் வேறு . எனவே மெல்ல நிலை மாறி வருகிறது . ஆனால் இதன் பொருள் நாம் முன்னர் இழந்த அத்ததனையும் திரும்ப பெற்றுவிடமுடியும் என்று உறுதியாக கூறமுடியாது என்பதுதான் . இரண்டாவது மூன்றாவது காலாண்டில் விற்பனை சரிந்தாலும் கூட அடுத்த காலாண்டில் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது .