இடுகைகள்

முஸ்லீம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முஸ்லீம் பெண்களின் மீது இறுகும் கட்டுப்பாடுகள்! - ஹிஜாப்பிற்குத் தடை

படம்
  ஹிஜாப்களை பொது இடத்தில் பயன்படுத்துவதை முதலில் அனுமதித்த மேற்கு நாடுகள், முஸ்லீம்கள் மீதான பயத்தின் காரணமாக அவர்களை இப்போது நெருக்கி வருகிறார்கள். அண்மையில் பிரான்சில் முஸ்லீம்களை முகத்தை மூடக்கூடாது என்று கூறியது நினைவு வருகிறதா?  பிரான்ஸ்   இங்கு 2011ஆம் ஆண்டு ஏப்ரல் 11 அன்று முஸ்லீம்கள் நிகாப், பர்கா ஆகிய உடை வகைகளை அணியக் கூடாது என அரசு கூறியது. இதில் ஹிஜாப் மட்டும் விதிவிலக்கு. முகத்தை மறைக்காமல் அணியவேண்டும் என கூறப்பட்டது.  அமெரிக்கா 1837ஆம் ஆண்டு அமெரிக்காவில் அனைத்து வகை முகத்தை மூடும் உடைகளும் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாது என சட்டம் உள்ளது.  2019ஆம் ஆண்டு இந்த சட்டம் மாற்றப்பட்டது. ஏனெனில் இல்கான் ஓமர் என்ற பெண்மணி தேர்தலில் வென்று மன்றத்திற்கு வந்தார். அவருக்கான சட்டத்தில் மாறுதல்களை செய்தனர்.  பெல்ஜியம் இங்கு 2011ஆம் ஆண்டு நிகாப் முதற்கொண்டு முகத்தை மூடும் அனைத்து உடைகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்யப்பட்டன.  ஸ்விட்சர்லாந்து 2021ஆம் ஆண்டு இங்கு வாழும் மக்கள், பொது இடங்களில் முஸ்லீம் மக்கள் முகத்தை மூடும் உடைகளை அணிவதற்கு தடை விதிக்கலாம் பொது வாக்களிப்பு செய்

முகத்தை, தலையை மறைப்பதில் இத்தனை வகைகளா?

படம்
  கர்நாடக மாநிலத்தில் முஸ்லீம் பெண்களை சமூக ரீதியாக தனிமைப்படுத்தும் வேலைகளை மதவாத கும்பல்கள் ஒன்றிய அரசின் ஆசியுடன் செய்து வருகின்றன. இதுநாள் வரை கல்விநிலையங்களில் சிறுபான்மையினர் எப்படி உடை அணிந்து வரவேண்டும் என்று கூறவில்லை. ஆனால் இப்போது, உடை ஒழுக்கம் என்பதை பள்ளி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். பெண்களின் கல்வி கெட்டாலும் பரவாயில்லை ஆட்சி அதிகாரம்தான் முக்கியம் என லோட்டஸ் குழுவினர் உறுதியாக நம்பி வன்முறை, கலவரம் ஆகியவற்றை ஏற்படுத்தி வருகின்றனர்.  இப்போது நாம் பெண்கள் அணியும் பல்வேறு உடல், முகத்தை மறைக்கும் வகைகளைப் பார்ப்போம்.  ஹிஜாப் நீளமான துணியை எடுத்து கழுத்து, தலையைச் சுற்றியிருப்பார்கள். இது இந்து மதத்தில் பெண்கள் சேலை தலைப்பை எடுத்து தலைமீது போட்டுக்கொள்வார்களே அதுபோன்றதுதான். இதனை இந்து மதத்தில் கூன்காட் என்று அழைக்கிறார்கள்.  நிகாப் இதில் முகத்தில் கண்கள் மட்டும்தான் அடையாளம் தெரியும். பிற பகுதிகளை கருப்பு உடையால் மறைத்து இருப்பார்கள்.  பர்கா இது முகம், உடல் என முழுக்க உடையால் மூடியிருப்பார்கள். கண்கள் உள்ள பகுதியில் மட்டும் வெளியே பார்க்கும்படி உடையில் இழைகளில் நெகிழ்வுத்தன

மசூதியை மாற்றிய மழைநீர் சேகரிப்பு!

படம்
தண்ணீர் பஞ்சம் என்பது இப்போதைக்கு தமிழ்நாட்டிற்கு இல்லை. ஆனாலும் கூட நீராதாரங்களை காப்பாற்றி வைப்பது எதிர்காலத்திற்கான முக்கியமான தேவை. அப்படியில்லாதபோது மழைப்பொழிவு குறைந்தகாலத்தில் பஞ்ச பருவத்தில் படாதபாடு படும் நிலை ஏற்படும். கோவையில் உள்ள முஸ்லீம்கள் அதனை உணர்ந்து நீரை சேகரிக்க தொடங்கியுள்ளனர். கோவையில் உள்ள 135க்கும் மேற்பட்ட மசூதிகள் நீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளன. இப்போது அங்கு உருவாக்கப்பட்டுள்ளன ஆழ்துளை கிணறுகளில் நீர் வரத்து கூடியுள்ளது. தொழுகைக்கு முன்னர் முஸ்லீம்கள் தங்கள் முகம், கை, கால்களை கழுவிக்கொள்வது வழக்கம். இதனை வுசு என்கின்றனர். இதற்காக செலவிடும் நீரையும் நிலத்திற்கு திருப்பிவிட்டிருக்கின்றனர். கூடவே மழைநீர் சேகரிப்பையும் செய்து வருகிறார்கள். இப்படி செய்வதற்கு காரணமான சம்பவம், 2016-17இல் நடைபெற்றது. அப்போது மசூதிகளில் இருந்த ஆழ்துளை கிணறுகள் வறண்டுபோய்விட்டன. நீருக்காக லாரி டேங்கர்களை நாடினர். இதற்கு தினசரி 8 ஆயிரம் ரூபாய் செலவானது. பிறகுதான் வுசு ஐடியா அத்தர் ஜமாத் தலைவர் ஷா நாவாஸூக்கு வந்திருக்கிறது. சிறுதுளி தன்னார்வ தொண்ட

புத்தக வாசிப்பு வட்டமா? அப்ஸ்காண்ட் ஆயிருங்க ப்ரோ!- மயிலாப்பூர் டைம்ஸ்

படம்
மயிலாப்பூர் டைம்ஸ்! நமக்கான பிரச்னைகள் நாம் செய்யும் செயலால் உருவாகிறது என்று சொல்லுவார்கள். எனக்கும் அப்படித்தான் நடக்கிறது. என்ன அதன் டிசைன்தான் கொஞ்சம் வேறுவடிவில் இருக்கிறது. சில பல ஆண்டுகளுக்கு முன்னரே புத்தக வாசிப்பு, விமர்சன கூட்டங்களுக்கு போவது வேண்டாம் என்ற முடிவெடுத்தேன். அதற்கு காரணம், அரைகுறையாக படித்துவிட்டு அந்த கூட்டத்திற்கு வருபவர்களும், எழுத்தாளரை கேள்வி கேட்டால்போதும் அவரை மடக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட சினிமாவில் இயங்கும் உதவி இயக்குநர்களும்தான். இப்படி இலக்கிய அக்கறையைக் காட்டிக்கொண்டாலும் இவர்கள் படம் எடுக்கும்போது கதை என்ற தலைப்பில் தனது பெயரை மட்டுமே போட்டுக்கொள்வார்கள் என்பதை தனியாக சொல்லவேண்டியதில்லை. எங்கேயோ சிக்கிக்கொண்ட கதையைத்தானே சொல்ல வருகிறாய் என இந்நேரம் யோசித்திருப்பீர்கள். அதேதான். மோசமான டைமிங்கில் மாட்டிக்கொண்ட சம்பவம். எனது மடிக்கணினி அடிக்கடி பிடிவாதம் பிடித்த குழந்தையாக வேலை செய்யமாட்டேன் என அடம்பிடித்துக்கொண்டிருந்தது. எனவே இதனை வாங்கிக்கொடுத்த டெக் நண்பரிடம் உதவி கேட்டேன். அவரைப் பொறுத்தவரை இதெல்லாம் ஒரு விஷயமா என்ற ரீதியில் எனது

காமெடி டோஸில் தேசப்பற்று படம்! - சூர்யவன்சி - ரோகித் ஷெட்டி

படம்
  சூர்யவன்சி ரோகித் ஷெட்டி மும்பையில் தொண்ணூறுகளில் நடைபெறும் குண்டுவெடிப்பு அதைத்தொடர்ந்து அதை ஏற்பாடு செய்து வைக்கும் தீவிரவாதிகளை எப்படி சூர்யவன்சி என்ற போலீஸ் அதிகாரி களையெடுக்கிறார் என்பதே கதை.  ரோகித் ஷெட்டி இந்தியில் தெலுங்கு சினிமா எடுப்பவர் என்பதால், ஆக்சன் காட்சிகள், வண்டிகள் வெளிப்பது. பசூக்காவிலிருந்து புறப்பட்டும் குண்டுகளை கூட தோளை சற்றே கீழிறக்கி நாயகன் தப்பிப்பது, புல்லட் ப்ரூப் ஜாக்கெட் கூட போடாமல் சண்டை போடுவது என அத்தனை டூமாங்கோலித்தனங்களும் படத்தில் உண்டு.  அத்தனையையும் தாண்டி படத்தை ரசிக்க வைப்பது படத்தின் கதையும், இந்து முஸ்லீம்கள், இந்தியாவை துண்டாட நினைக்கும் பாகிஸ்தான் முஸ்லீம்கள் என பிரித்து வைத்து நேர்மையாக பேச நினைத்திருப்பதுதான். அந்த வகையில் படம் தனித்து தெரிகிறது.  இந்தி படம்தான். கையாளும் விஷயம் கூட சீரியஸ்தான். ஆனால் படம் நெடுக காட்சிகள் நகைச்சுவையோடு நகர்கின்றன. நாயகன் சூர்யாவிற்கு அமைச்சர் கொடுக்கும் அந்த லூசாய்யா என்ற பில்டப் மட்டுமே. மற்றபடி அவர் தன்னுடைய சக குழு உறுப்பினர்களின் பெயரையே மாற்றிச்சொல்லும் வியாதி இருக்கிறது. அதையே காமெடிக்காக பயன்படுத்

நூல்களை தடை செய்வது என்றால் நாம் நாஜி ஜெர்மனி திசையில் நகர்கிறோம் என்று அர்த்தம்! - வினய் லால், பேராசிரியர்

படம்
  பேராசிரியர் வினய் லால் வினய்லால்  பேராசிரியர், வரலாற்றுத்துறை கலிபோர்னியா பல்கலைக்கழகம் சங் பரிவார் அமைப்புகள் வரலாற்றைத் திருத்தி எழுதுகின்றனர் என்ற பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள். என்சிஇஆர்டி யில் கூட பாடத்திட்டங்களை மாற்றி அமைத்திருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். ஏன் இதனை யாருமே பெரியளவு எதிர்க்கவில்லை? இதை கொஞ்சம் விரிவான பார்வையில் பார்க்க வேண்டும். வரலாற்றை திருத்தி மாற்றி எழுவது புதிதான விஷயமல்ல. அதிகாரத்தில் உள்ளவர்கள் காலம்தோறும் செய்து வரும் விஷயம்தான் இது. உலகம் முழுக்க நடைபெற்றுள்ளது. இந்தியாவில் மட்டும் நடந்துள்ளது என நினைத்து அதிர்ச்சியாகவேண்டாம். நான் இதைப்பற்றி பல்லாண்டுகளுக்கு முன்னரே கேள்விகளை எழுப்பியுள்ளேன்.  2003இல் எழுதிய தி ஹிஸ்டரி ஆப் ஹிஸ்டரி பாலிடிக்ஸ் அண்ட் ஸ்காலர்ஷிப் இன் மாடர்ன் இந்தியா வரலாற்றை எழுதுவதில் உள்ள அரசியலைப் பற்றியது இந்த நூல்.  உலக நாடுகளில் உள்ள வரலாற்றுப் பாடல் என்பது எப்போது விவாத த்திற்குரியதாகவே இருந்து வருகிறது. இது நாம் சிந்திக்கும் முறையில் உள்ள பிரச்னை. இந்திய பத்திரிகையாளர்கள், உலகின் பிற பகுதிகளில் உள்ள வ

கருணை மனுக்கள் மூலம் சாவர்க்கர் ஆங்கிலேயரிடம் கெஞ்சியது சங்கடமானது! - டாக்டர் வினய் லால், வரலாற்றுத்துறை பேராசிரியர்

படம்
  டாக்டர் வினய் லால் டாக்டர் வினய் லால் இவர், அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வரலாற்றுத்துறை பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். தி ஹிஸ்டரி ஆப் ஹிஸ்டரி, இன்ட்ரோடியூசிங் ஹிஸ்டரி, தி அதர் இண்டியன்ஸ் எ பொலிட்டிகல் அண்ட் கல்ச்சுரல் ஹிஸ்டரி ஆப் சவுத் ஆசியன்ஸ் இன் அமெரிக்கா ஆகிய நூல்களை எழுதியுள்ளார். அவரிடம் இந்திய அரசியல் நிலை, வரலாறு பற்றி பேசினோம்.  சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் எழுத காந்திதான் பரிந்துரைத்தார் என ராணுவ அமைச்சர ராஜ்நாத்சிங் கூறியிருக்கிறார். இது உண்மையா? இந்துத்துவ தலைவர்கள் சுதந்திரப் போராட்டத்திற்காக போராடினார்களா? இதில் உங்கள் கருத்து என்ன? சாவர்க்கரின் நூல்களைப் படித்து விட்ட ராணுவ அமைச்சருக்கு முன்னரே பலரும் காந்திதான் கருணை மனுவுக்கு மனு செய்ய உதவினார் என்று கூறி வந்தனர். ஆனால் இது ஆதாரமே இல்லாத அப்பட்டமான பொய். இதில் பல்வேறு புனைவுகளும் வதந்திகளும்தான் உள்ளன. ஏஜி நூரானி எழுதிய சாவர்க்கர் அண்ட் இந்துத்துவா தி கோட்ஸே கனெக்ஷன் (2002) என்ற நூலில் சாவர்க்கர் எழுதிய கருணை மனுக்களை ஒருவர் எளிதாக அடையாளம் கண்டு வாசிக்க முடியும். அதில் சாவர்க்கர் பரிதா

புறக்கணிக்கும் கலாசாரம்! - நமது முதுகெலும்பு உறுதியாக நேராக இருக்கிறதா?

படம்
  புறக்கணிப்பு கலாசாரம் ட்விட்டரில் பெரும்பாலான போராட்டங்கள் புறக்கணிப்போம் என்றே தொடங்கி வருகின்றன. இவற்றை பெரும்பாலும் தேசபக்தி கூட்டம்தான் முன்னெடுக்கிறது. இவற்றில் பெரிய புத்திசாலித்தனம் ஏதும் இருக்காது. கிறுக்குத்தனமாக ஒன்றை புரிந்துகொண்டு உடனே புறக்கணிப்போம், கொடி பிடிப்போம் என ஹேஷ்டேக்கை கட்டைவிரலால் அழுத்திக்கொண்டிருப்பார்கள். பெரும்பாலும் இப்படிப்பட்ட போராட்டங்களை அசலான பிரச்னைகளிலிருந்து மக்களை திசைதிருப்ப ஆளும் ஒன்றிய அரசின் ஐடி விங் ஆட்கள் செய்கிறார்கள். அல்லது அப்படி செய்பவர்களுக்கு காசு கொடுத்து ஊக்கப்படுத்துகிறார்கள்.  இந்தியர்களுக்கு சிறப்பாக வேலை செய்யும் உறுப்பு, காது. அதில் கேட்கும் செய்திகளை மோசமாக பிறருக்கு சொல்ல பயன்படும் உறுப்பு வாய் என்று கூறுவார்கள். அந்த வகையில் போலிச்செய்திகளுக்கும் வெறுப்பை உண்டாக்கவும் ட்விட்டர் முக்கியமான கருவியாகிவிட்டது.  ஃபேப் இந்தியாவின் விளம்பரம் முன்னர் டாடாவின் தனிஷ்க் நிறுவனத்தின் மதமாற்றுத்திருமணத்தைப் பேசிய ஏகத்துவம் என்ற விளம்பரத்திற்கு மனது புண்பட்டுவிட்டது என ஓலங்களை எழுப்பினார்கள். விளம்பரத்திற்காக இந்த கூச்சலா என பதறிப்போன த

முஸ்லீம்களை முழுமையாக அரசு அமைப்பு மூலம் களையெடுத்தல்! - அசாமில் பரவும் மதவாதமும் வெறுப்பு அரசியலும்!

படம்
  அசாம் நெல்லி இனப்படுகொலை அசாமில் முஸ்லீம்களின் குடியிருப்பை செப்.23 அன்று அசாம் மாநில அரசு அகற்றியது. பலவந்தமாக செய்த இந்த நடவடிக்கையால் முஸ்லீம்களோடு வங்காள இந்துகளும் ஆயிரக்கணக்கில் வீடுகளை இழந்தனர். இங்கு கவனிக்கவேண்டியது அரசு, மேம்பாட்டுப் பணிகளுக்காக வீடுகளை இடித்து முஸ்லீம்களை நடுத்தெருவில் நிறுத்தவில்லை.  பூர்விக அசாம் மக்கள் முஸ்லீம்கள் ஆற்று ஓரத்தில் குடியிருக்கும் இடங்களில் விவசாயம் செய்வார்களாம். அதற்காக நிலங்களை அரசு அவர்களுக்கு அளிக்குமாம். இப்படி சொன்னாலும் அரசு நிலங்களை பூர்விக மக்களுக்கு அதாவது தகுதியுள்ளவர்களுக்கு அளிக்கும் வரையில் தனது கையில்தான் வைத்திருக்கும்.  அரசு 28 வயதான மைனல் ஹாக்கிக் என்பவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது காவல்துறை. இறந்து கிடக்கும் உடல் மீது புகைப்படக்கார ர் பிஜய் பனியா என்பவர் வெறியோடு குதிக்கும் காட்சி சமூக வலைத்தளத்தில் பலரும் பார்த்திருப்பார்கள். இப்படி அரசின் ஆதரவோடு மதவாத, இனவெறியை அங்கு பரப்பி வருகின்றனர். எதற்கு? மக்களை பிரித்தால்தானே தேர்தலில் ஜெயிக்கவேண்டும். அனைத்து மக்களுக்கும் பொதுவான எதிரியை உருவாக்கவேண்டும் என்கிற நாஜி கருத்த

முஸ்லீம்களின் மீதான வெறுப்பை இயல்பானதாக்குகிறது பாஜக! - மனித உரிமை வழக்குரைஞர் அமான் வதூத்

படம்
  மனித உரிமைகள் வழக்குரைஞர் அமான் வதூத் முஸ்லீம்களை இப்படி குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றுவது அரசின் மிகப்பெரிய திட்டம் என்று கூறுகிறீர்களா? ஆமாம். இது பெரிய திட்டத்தின் சிறிய பகுதிதான். இதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம். மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா, பிற மாவட்டங்களிலிருந்து மக்கள் எதற்கு இங்கு வந்து தங்கவேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார். இந்திய அரசியலமைப்புச்சட்டம் 19(டி, இ எஃப்) ஆகியவற்றின் படி இந்தியாவில் வாழும் மக்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் சென்று குடியேறி வாழலாம். அதற்கான உரிமை அம்மக்களுக்கு உண்டு.  மக்களை வெளியேற்றும்போது நான்கு மசூதிகளை இடித்தார்கள் ஆனால் அங்குள்ள கோவிலை எதுவும் செய்யவில்லை என்று கூறப்படுகிறதே உண்மையா? மக்கள் கோவிலின் அருகே குடியிருந்தார்கள் என அரசு வாதிடுகிறது. ஆனால் கோவில் மக்களின் வாழிடத்திலிருந்து தூரமாகவே இருந்தது.  மக்களின் குடியிருப்புகளிலிருந்து அவர்களை வெளியேற்றிய அரசு, அவர்களுக்கான மறுவாழ்வு குடியேற்றங்களை அமைத்து தருவதாக கூறியது. ஆனால் அத்திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லையே? 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வாழ்ந

முஸ்லீம் மக்களை துரத்தவே அரசு இந்துத்துவ திட்டங்களை அமல்படுத்துகிறது! - அமான் வதூத், மனித உரிமைகள் வழக்குரைஞர்

படம்
  அமான் வதூத் மனித உரிமை வழக்குரைஞர் செப்.23 அன்று சிபாஜ்கரில் நடைபெற்ற மக்களின் குடியேற்றம் அகற்றல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? முதலில் நான் கூறவிரும்புவது, இப்போது அரசால் குடியிருப்புகள் அகற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் அனைவருமே பல்லாண்டுகளுக்கு முன்னரே இங்கு வந்தவர்கள். பலரும் 1970களிலிருந்து இங்கிருக்கிறார்கள். எனவே இதனை அரசு புதிய குடியேற்றம் என்று கூறமுடியாது. இவர்கள் ஆற்றுநீரின் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு பெர்பெடா, காம்ரூபா ஆகிய மாவட்டங்களிலிருந்து இங்கு வந்தவர்கள்.  ஆற்று வெள்ளம் காரணமாக தங்கள் வீடுகளையும் நிலங்களையும் இழந்தவர்கள் இங்கு வந்து தங்கினார்கள். பலரும் கூலி வேலைகளை செய்பவர்கள்தான். நிலமற்ற மக்கள்.  இங்கு தங்கியிருப்பவர்கள் பெரும்பாலும் ஆற்றையொட்டியுள்ள நிலங்களில் தங்கியிருந்தவர்கள்தான். பொதுவாக அசாம் மக்கள் ஆற்றையொட்டி தங்க மாட்டார்கள். இப்போது முஸ்லீம் மக்கள் உள்ள இடங்களை , அசாமின் பூர்விக மக்களுக்கு தருவதாக கூறியுள்ளது. இங்கு அவர்கள் விவசாயம் செய்வார்கள் என்று அரசு கூறுகிறது. விவசாயம் செய்ய எதற்கு ஆற்றுக்க்கு அருகில் உள்ள நிலங்களை தேர்ந்தெடுக்கிறார்கள் என்று தெரியவி

உத்தரப்பிரதேசத்தில் மக்கள்தொகை கொள்கை 2021-2030 ஏற்படுத்தும் விளைவுகள்!

படம்
 உத்தரப்பிரதேசத்தின் லக்னோ நகரில் பழைய ஜெயில் ரோட்டில் சட்ட கமிஷன் அலுவலகம் அமைந்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.என்.மிட்டல் தலைமையிலான மூன்று பேர் மக்கள்தொகை கட்டுப்பாட்டு கொள்கையை உருவாக்கியுள்ளனர். இதனை இணையத்தில் மாநில அரசு வெளியிட்டுள்ளது.  மாநில அரசின் புதிய மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டப்படி, அரசின் கொள்கையை மீறுபவர்களுக்கு அரசின் எந்த சலுகைகளும் கிடைக்காது. உள்ளூர் தேர்தலிலும் அவர்கள் நிற்க முடியாது. அரசு வேலைக்குக் கூட மூன்று குழந்தைகள் கொண்டவர்களை தடுக்கிறது புதிய சட்டம்.  மாற்றுத்திறனாளிகளை வைத்துள்ள பெற்றோர், ட்வின்ஸ்களுக்கு புதிய சட்டத்தில் சலுகைகள் உண்டு.  தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அரசின் கொள்கைகளை கடைப்பிடித்தால் தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றில் கட்டண சலுகை உண்டு. பி.எப் விஷயத்திலும் கூட உபகாரம் உண்டு.  அரசு ஊழியர்கள் அரசின் குழந்தை பிறப்பு கட்டுப்பாட்டை கடைபிடிக்காதபோது பதவி உயர்வு, பிஎஃப் ஆகிய விஷயங்கள் கிடைக்காது. அரசின் வீடுகள் ஒதுக்குவதிலும் சிக்கல் ஏற்படும்.  குடும்ப அட்டையில் நான்கு பேருக்கு மட்டுமே இடமுண்டு.  மக்கள் தொகை கட்டுப்பாடு என யோகி கூறியபோதே உ.பியில் வா

முஸ்லீம் மக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது! - ஹிமந்தா பிஸ்வா சர்மா, அசாம் முதல்வர்

படம்
              ஹிமந்தா பிஸ்வா சர்மா அசாம் முதல்வர் அசாமிற்கான அடுத்த பத்தாண்டுகள் திட்டம் என்ன ? அசாமில் தீர்க்கவேண்டிய நிறைய பிரச்னைகள் உள்ளன . சமூக திட்டங்களில் அசாம் முக்கியமான இடத்தில் இல்லை . அடிப்படைக் கட்டமைப்பு , பெண்கள் , குழந்தைகள் மேம்பாடு , குழந்தைகளின் இறப்பு சதவீதம் குறைப்பு ஆகியவற்றில் நிறைய பணிகள் செய்யப்பட வேண்டியதுள்ளது . வடகிழக்கு மாநிலங்களுக்கான நுழைவாயில் அசாம்தான் . எனவே இங்கு செய்யும் மாற்றங்கள் வடகிழக்கு மாநிலங்களுக்கு நிறையவே உதவும் . எல்லை தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகள் சுற்றுலா மற்றும் அடிப்படை கட்டமைப்புகளுக்கு உதவும் . மாநிலத்தை புள்ளிவிவரப்படி ஆராய்ந்தால் முஸ்லீம்களின் மக்கள்தொகை 29 சதவீதமாக அதிகரித்துள்ளது . இந்துக்களின் வளர்ச்சி 10 தான் அதிகரித்துள்ளது . இதற்கு முஸ்லீம்களிடையே உள்ள கல்வி அறிவின்மை , வறுமை ஆகியவையே காரணம் . எனவே , நாங்கள் மக்கள்தொகையை கட்டுப்படுத்தினால்தான் கல்வி , சுகாதாரம் தொடர்பான பல்வேறு திட்டங்களை உருவாக்க முடியும் . மாநில அரசு முஸ்லீம்களின் மக்கள்தொகையை குறைக்க திட்டங்கள் தீட்டி வருகிறதா ? அரசு , ம

செடி, கொடிகளுக்கு காவி வண்ணம் பூசும் புதிய சட்டங்கள்! - லட்சத்தீவு மக்களுக்கான அடடே சட்டங்கள்!

படம்
                    லட்சத்தீவுக்கு ஆரஞ்சு வண்ணம் பூசும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன . இதன்படி அதன் நிர்வாகி பிரபுல் கே படேல் பல்வேறு சட்டங்களை உடனே அமல்படுத்தியுள்ளார் . இதெல்லாம் எதற்கு என பார்த்தவுடனே படிக்கும் யாருக்கும் தெரிந்துவிடும் குடுமிகளை கொண்ட திட்டங்கள் அவை . .. தீவில் முறையான சான்றிதழ் இல்லாமல் யாரும் பசுக்களை கொன்று சமைத்து சாப்பிடக்கூடாது . மாட்டுக்கறியை விற்பதும் குற்றம் என அறிவிக்கப்படுகிறது . மீறினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதோடு , ஓராண்டிற்கு மேல் சிறைத்தண்டனையும் ஏற்பாடாகியிருக்கிறது . சுற்றுலாவுக்கு ஏற்ற இடமாக மாற்ற இந்த சட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறதாம் . இதற்கு எதிராக உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள் . அவர்களின் அனுமதி பெறாமல் சட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது என கருத்து கூறியுள்ளனர் . இரண்டே குழந்தைதான் 2021 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கிராம பஞ்சாயத்து திட்டப்படி இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் யாரு்ம் பஞ்சாயத்து உறுப்பினராக முடியாது . இப்போது பதவியில் இருப்பவர்களுக்கு இரண்டு குழந்தைகளுக்க

இந்திய பன்மைத்துவத்தை நொறுக்கும் வெறுப்புவாதம்! - குஜராத் இந்துத்துவம் மோடி - மருதன்

படம்
                குஜராத் இந்துத்துவம் மோடி மருதன் கிழக்கு மோடி , குஜராத்தில் பெற்ற வளர்ச்சி எப்படிப்பட்டது , அது உண்மையானதா என்பதை இந்த நூல் மூலம் அறியலாம் . இந்த நூலை ஆசிரியர் குஜராத்திற்கு சென்று பல்வேறு இடங்களை பார்வையிட்டு எழுதியிருக்கிறார் . கூடவே ஏராளமான தகவல்களையும் கூறியுள்ளார் . கூடுதலாக நூலை எழுத தான் படித்த நூல்களிலிருந்து முக்கியமான கருத்துகளையும் முன்வைத்து எப்படி பிரிவினை மூலம் பாஜக குஜராத்தை தனது கைபிடிக்குள் கொண்டு வந்தது என்பதையும் விளக்கியுள்ளார் . உண்மையில் குஜராத் வளர்ச்சி அடைந்துவிட்டது என்பதை விட அப்படி பிறரை நம்ப வைக்க மோடி மெனக்கெடுகிறார் என்ற வார்த்தை முக்கியமானது . ஏறத்தாழ இந்த வரியைப் படித்தபிறகு மோடி ஊடகங்களில் தன்னை எப்படி காண்பித்துக்கொள்கிறார் . தன்னுடைய எதிரிகளை எப்படி ஒழித்துக்கட்டுகிறார் என்பதை ஹரன் பாண்டே எடுத்துக்காட்டு மூலம் அதிர்ச்சியுறும்படி காட்டியுள்ளார் . உயர்சாதி இந்துக்களுக்கான இடமாக குஜராத் மாறியுள்ளதோடு , சிறுபான்மையினரை எப்படி அடிப்படை வசதிகள் கூட கிடைக்காதபடி அச்சுறுத்தி வைத்துள்ளார் என்பது களப்

பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஒழுங்காக வளர்த்தாலே குற்றங்கள் குறைந்துவிடும்! - ஆனந்த்பென் படேல், உத்தரப்பிரதேச மாநில ஆளுநர்

படம்
                    ஆனந்த்பென் படேல் உத்தரப்பிரதேச ஆளுநர் நீங்கள் பதவியேற்றபிறகு பல்கலைக்கழக கல்வி தொடர்பான உறுதியான முடிவுகளை எடுத்திருக்கிறீர்கள் . பெருந்தொற்று தொடங்கியபிறகு அனைத்து விஷயங்களும் மாறியுள்ளன என்று கூறலாமா ? நான் பொறுப்பேற்ற பிறகு பல்கலைக்கழகம் எப்படி செயல்படுகிறது என்பதைப் பற்றி விசாரணை செய்தேன் . 2014 ஆம் ஆண்டு தொடங்கி 260 கோப்புகள் தேங்கி கிடப்பதை அறிந்தேன் . அவற்றை சரிசெய்யத்தொடங்கியுள்ளேன் . நாம் எதிர்பார்த்த முடிவுகள் இன்னும் இந்த விவகாரத்தில் கிடைக்கவில்லை . பெருந்தொற்று காரணமாக இந்த ஆண்டு இம்முறையில் முடிவுக்கு வந்துள்ளது . நீங்கள் பெருந்தொற்று தொடங்கியபிறகு நிறைய இடங்களை சென்று பார்வையிட்டு உள்ளீர்கள் . சட்டம் ஒழுங்கு பற்றி உங்கள் பார்வை என்ன ? நான் கிராமத்திலுள்ள பெண்களை விசிட்டின் போது சந்தித்தேன் . முன்னர் இருந்த நிலைக்கு இப்போது சட்டம் ஒழுங்கு பரவாயில்லை என்று கூறுகிறார்கள் . தொழில்துறைகளும் நிறைய வாய்ப்புகளை வழங்குவதாகும் தெரியவந்துள்ளது . பெண்களுக்கு எதிராக நிறைய குற்றங்கள் நடைபெற்று வருகிறதே ? இந்த சமூகத்தில்