இடுகைகள்

ரத்த சாட்சி 1.0 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாத்தானின் விசுவாசியால் கொல்லப்பட்ட மக்கள்!

படம்
  அசுரகுலம் ரத்த சாட்சி 1.0   சில கொலைகாரர்கள் உண்டு. இவர்கள் கொலை செய்வது என்பது தங்களின் மகிழ்ச்சிக்காகவே. போரில் ராணுவ வீரர்களைப் பாருங்கள். அவர்கள் அவர்களின் அடையாளம் அறியாத இன்னொரு நாட்டு ஆட்களை கொல்லுகிறார்கள். எதற்காக, அவர்களைப் பற்றி வீர ர்களுக்கு தெரிந்திருக்காது. அவர்களுக்கு குடும்பம் இருக்கலாம். குழந்தைகள் இருக்கலாம். ஆனால் ராணுவ வீர ர்களைப் பொறுத்தவரை கட்டளைகளை மீறாமல் சட்டத்திற்கு உட்பட்டு கொலைகளை செய்கிறார்கள். கேட்டால் தேசியவாதம், நாட்டுப்பற்று என ஏதேனும் உளற வேண்டும்தான். இதற்கான உருட்டுகளைத்தான் காசுக்கு விலைபோன இன்றைய இந்தியா, குடியரசு, மற்றும் தொழிலதிபர்கள் நடத்தும் செய்தி சேனல்கள் போன்ற ஊடகங்கள் செய்வார்கள். மக்களைக் கொல்ல நாட்டுப்பற்று மட்டுமல்ல மதமும் கூட ஒரு கருவிதான். இன்று இந்தியாவில் சிறுபான்மையினர் மீது அதிகளவில் மத ரீதியானபடுகொலைகள்தான் அதிகம். அந்த வகையில் ரிச்சர்ட் ராமிரெஸ் பற்றி அறிந்திருப்பீர்கள். இவர் சாத்தனை வழிபடுவதாக தன்னைக் கூறிக்கொண்டவர். குத்துபட்டு, ரத்தம் பீறிட ஒருவர் இறப்பதைப் பார்ப்பதே தனக்கு மகிழ்ச்சி என சிறைக்காவலர்களிடம் பேசியவர் ரா

கொலை செய்வதற்கு காரணம் தேவையில்லை! - கொலைகாரர்களின் உளவியல் ரகசியம்

படம்
  அசுரகுலம் ரத்த சாட்சி 1.0 கொலை செய்வதற்கான காரணங்கள் என்பதை காவல்துறையினர் எப்போதும் தேடுவார்கள். ஆனால் அப்படியெல்லாம் எந்த காரணமும் இல்லை என்று சொல்லும் குற்றவாளிகள் உலகில் உண்டு. அவர்களில் ஒருவர்தான் கில்மோர். இவர், 1976இல் எரிபொருள் நிலையத்திற்கு துப்பாக்கியுடன் சென்றார். அங்கு பணியாற்றிய மேக்ஸ் என்பவரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார். அவரும் பணிந்தார். கையில் உள்ள, ட்ராயரில் உள்ள பணத்தைக் கூட தர நினைத்தார். ஆனால் கில்மோர் அதைப்பற்றியெல்லாம் பெரிதாக கவலைப்பட வில்லை. முட்டிபோட்டு உட்காரவைத்து பின்புறத்தில் இருந்து சுட்டுக்கொன்றவர், அதை தனக்கும் தன்னை விட்டுச்சென்ற காதலிக்குமான நினைவுப்பரிசாக நினைத்தார். இதற்குப் பிறகு அப்படியே சென்றவர், மோட்டல் ஒன்றில் நுழைந்தார். அங்கு இருந்தவரையும் துப்பாக்கி காட்டி மிரட்டியவர், அவர் அதற்கு பணிந்தவுடன் அவரையும் கொன்றார். கில்மோரை அவரது உறவினரே காட்டிக்கொடுத்தார். எதற்காக அந்த கொலை செய்தார் என்றால் தான் தொடர்ச்சியாக கொலை செய்யவேண்டும். மிரட்டிய விவகாரம் தெரிந்தால் காவல்துறை அவரை கைது செய்துவிடும் என கில்மோர் நினைத்தார். மூன்றாவது கொலை செய்

தனிமைத் துயரைப் போக்கும் பிணங்கள் - ஜெப்ரி டாமர்

படம்
  அசுரகுலம் ரத்த சாட்சி 1.0 ஜெப்ரி டாமர் பெயரை குற்ற உலக வரலாறு எப்போதும் மறந்திருக்காது. இவரது பெயரில் ஓடிடியில் தொடரைக் கூட வெளியிட்டு வருகிறார்கள்.   1991ஆம் ஆண்டில் பதினேழு பேர்களை வெட்டி கொலை செய்திருந்தார். இவர் கொலை செய்ய திட்டமிட்டவர்களில் ஒருவர் மட்டும்   தப்பிப் போய் காவல்துறைக்கு தகவல் கொடுத்து கொலைத் திருவிழாவை தடுத்துவிட்டார். இல்லையென்றால் கொலைகள் ஒருவழியாக ரவுண்ட் ஃபிகராக வந்திருக்கும். கொலை செய்தவர்களின் உடல்களை, வெட்டியெடுத்த உடல் பாகங்களை தடய அறிவியல் துறையை விட தெளிவாக புகைப்படம் எடுத்து வைத்திருந்தார் டாமர். அதெல்லாம் காவல்துறைக்கு அவரது குற்றத்தைப் புரிந்துகொள்ள உதவின. குளிர்பதனப் பெட்டியில் குடல், குண்டாமணி, இதயம், நுரையீரல் என அனைத்தையும் பங்கு பாகம் பிரித்து வைத்திருந்தார். உடல்களை கரைக்க, பதப்படுத்தவென பேரல் நிறைய அமிலங்களும் இருந்தன.   காவல்துறை சேகரித்தது பதினொரு ஆண்களின் உடல் பாகங்களைத்தான். அதற்கும் மேல் ஆறு பேர் உண்டு என கூடுதல் தந்து உதவினார் டாமர். பின்னே இதெல்லாம் சாதனைதானே? பதினெட்டு வயதில் ஸ்டீவ் ஹிக்ஸ் என்பவரைக் கொலை செய்து ரத்த ருசி கண்டார்.

பிணங்களோடு வாழ்வதே இன்பம் - நீல்சனின் வாழ்க்கை முறை

படம்
  அசுரகுலம் ரத்த சாட்சி 1.0 ஜெஃப்ரி டாமர், நீல்சன் ஆகிய இருவரும் அமைதியாக இருக்கும் நபர்கள்தான். ஆனால் செய்த கொலைகள் எல்லாமே பீதியூட்டும் ரகத்தைச் சேர்ந்தவை. டாமரைப் பொறுத்தவரை உடலுறவில் ஈடுபடவென தனி ஜோம்பி போன்ற உடல் தேவைப்பட்டது. அதை உருவாக்க முடியும் என நம்பினார். நீல்சனைப் பொறுத்தவரை தன் ஆயுளுக்கும் தன்னை விட்டு நீங்காத ஒருவரை தேடிக்கொண்டிருந்தார். இவர்கள் மட்டுமல்ல கொலைகளை செய்யும் பலரும் மக்களை உயிருள்ளவர்களாக பார்க்கவில்லை. அவர்கள், பொருட்களை எப்படி தேவைக்கு எடுத்து பயன்படுத்துகிறோம். அதுபோல நினைத்து பயன்படுத்தினார்கள். நீல்சன் தனக்கு தேவையான இரைகளை   பப்களில் கண்டுபிடித்தார்.   இவருக்கு பிறரை தனக்கு வேண்டிய விஷயங்களைச் செய்யச் சொல்லி கேட்பது அவமானமாக இருந்தது. எனவே தன்னைத் தானே இறந்துபோனது போல மாற்றிக் கொண்டு   கண்ணாடி முன்னே சரி பார்த்துக்கொள்வார். ஆனால் இதெல்லாம் கூட அவருக்கு மனதில் நினைத்த மகிழ்ச்சியைத் தரவில்லை. 78களில் நீல்சன்,   பப் ஒன்றுக்குச் சென்றார். அங்குள்ளவரை தனது வீட்டுக்கு வரச்சொல்லி அழைத்துச் சென்றார். வீட்டுக்கு சென்றதும் சில பீர்களை குடித்தார்கள். என்னதா

நெக்ரோபிலி - பிணங்களோடு மனிதர்கள் கொள்ளும் உடலுறவு ஆசை

படம்
  அசுரகுலம் ரத்த சாட்சி 1.0 இறந்தவர்களோடு வாழ்தல். இறந்த காதலியை தோளில் போட்டுக்கொண்டே திரிதல், அந்த உடலுடன் வாழ்தல், கொலை செய்து அல்லது இறந்த பிணங்களை தோண்டியெடுத்து அறையில் அருங்காட்சியகம் போல அமைப்பது, அழும் தசை துர்நாற்றத்தை சகித்துக்கொள்வது என வாழும் மனிதர்கள் உலகில் உண்டு. இதில் உடல்ரீதியான இன்பம் அனுபவிக்கும் பழக்கங்களையும் மனிதர்கள் செய்கிறார்கள். இதை உளவியல் மருத்துவர்கள் நெக்ரோபிலியா என்கிறார்கள். இறந்த உடல்களைப் பார்த்து ரசிப்பது, மனநல குறைபாடு கொண்ட மனிதர்களுக்கு பிடித்தமானது. உடலே விதையாக.. இங்கிலாந்தில் நடந்த கதை இது. அங்குள்ள லண்டன் நகரில் ப்ரௌன் என்பவர் ஒரு இடத்தை வாங்கினார். அறையில் இருந்து வரும் துர்நாற்றம் அவரை என்னடா இது என வெறுப்பு கொள்ள வைத்தது. சுவரில் ஒட்டியிருந்த வால்பேப்பரை உருவி எலி செத்திருக்கிறதோ என பார்த்தவர் நொடியில் முதுகுத்தண்டில் மின்சாரம் தாக்கியது போல அதிர்ந்தார். சுவரில் கான்க்ரீட் கலவையில் மூடியபடி நிர்வாணமாக ஒரு உருவம். பெண். தொட்டுப் பார்த்து உறுதி செய்தவர், உடனே காவல்துறைக்கு தகவல் சொன்னார். அவர்கள் வந்து சுவரை இடித்துப் பார்க்க இன்ன

இயங்க முடியாத என்னை உன் கண்களால் பார்க்காதே- சிகாட்டில்லோவின் கொலை அட்டூழியங்கள்!

படம்
  அசுரகுலம் ரத்த சாட்சி 1.0 ஓநாயின் வாரிசு   ஒருவர் தன்னை ஓநாயாக உணர்ந்து அப்படியே நடந்துகொண்டால் எப்படியிருக்கும்? பதற்றமாக இருக்குமா இல்லையா? அப்படியான மனநிலை பிரச்னைகள் உலகில் நடந்துள்ளன. அப்படி ஒன்றுதான் இப்போது நீங்கள் படிக்கப் போவதும் கூட. பிரான்ஸ் நாட்டில் ஜீன் கிரேனியர் என்ற பதிமூன்று வயது சிறுவன்தான் கதையின் கதை நாயகன். பாதிரியாரின் மகன் என்று தன்னைக் கூறியவன், தனது ஆன்மாவை சாத்தானுக்கு விற்றுவிட்டதாக அர்ப்பணித்துவிட்டதாக சொல்லி சிறுமிகளை பிடித்து ரத்தம் உறிஞ்சிக் குடிக்கத் தொடங்கினான். ஓநாயின் தோலாடையை அணிந்தால் ஒருமணி நேரத்தில் ஓநாயாக மாறிவிடுவேன் என்று கதை கட்டியவன், ஊர் முழுக்க வதந்தியைப் பரப்பி வந்தான். அவன் சொன்னதையும் நம்பி ஒன்பது பேர் அவனிடம் செட்டு சேர்ந்து நண்பர்களாக மாறினார்கள். பிறகு குற்றச்செயல்கள் அதிகரிக்க அங்குள்ள உள்ளூர் நிர்வாகம் இதுபற்றி ஆராய்ச்சி செய்து ஜீனைக் கண்டுபிடித்து விசாரித்தது. அவன், அலட்டிக்கொள்ளாமல் எம் என்ற பெயருடைய கருப்பு நிற மனிதன் தனக்கு ஓநாய் உடையைக் கொடுத்து விரைவில் ஓநாயாக மாறிவிடுவாய் என்று கூறியதாக கூறினான். பிறகுதான், தான் குழந்தை, சிற