இடுகைகள்

வேட்டைக்காரர்கள் அத்தியாயம் நிறைவு: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
இரண்டாவது கேள்வி பயணிக்கும் வீரர்கள் உள்ள கதாபாத்திரங்கள் பெற்றோர்கள், குழந்தைகள், நண்பர்கள், காதலர்கள் என முன்பே தெரிந்த சூழல் போன்றே இருக்கிறது மேலும் இங்கு...        இங்கு அவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். கதாபாத்திரங்கள் தம்பதிகளாக பிரிக்கப்பட்டு ஆண் / பெண், ஆண் / பெண் கதாபாத்திரங்களாகவே இருக்கிறார்கள். இந்த பாத்திரங்களிடையே தெளிவான உறவு இல்லாததால் பார்வையாளர்கள் இவர்களை நம்புவது சிரமமானதாக இருக்கும். ஆனால் கதாபாத்திரங்களிலே இருக்கும் தொடர்பு அவசியம் குறித்து எனக்கு நம்பிக்கை இல்லை. இவை அனைத்தையும் ஒரு மனிதனின் முகங்களாகவே இருக்கமுடியும். மீண்டும் அழுத்தமாக கூற விரும்புவது படமானது ஒற்றை மனசாட்சியை பல்வேறு கோணங்களுக்கு கொண்டு செல்வதேயாகும்.        அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஒரு மர்மமான மையத்தில் ஒன்றாக இணைந்துள்ளது போல் இருந்தாலும், அதன் இயற்கையான தன்மை வெளிப்படுத்தப்படுவதில்லையே?        நேரம் குறித்த விஷயங்கள், இறந்து கால நிகழ்வுகள் ஆகியவற்றை விரிவாக கூறாததினால் ஹிட்ச்சாக்கின் ‘ஹாரியினால் சிக்கல் ’ எனும் படம், ஒரு சவம் ஒன்றினை விடுவிக்க பல கதாபா

வேட்டைக்காரர்கள்: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
பயணிக்கும் வீரர்கள் படத்தினை வெம்மை கொண்டது என்று குறிப்பிட்ட நிலையில் குறிப்பிட்டுச் சொல்லுமாறு தன்னகத்தே ஒரு அழகை அது கொண்டுள்ளது. வேட்டைக்காரர்கள் படத்தில் ஒவ்வொரு நிகழ்வும் அதற்கான தனித்த ஒரு தொனியைக் கொண்டிருக்கிறது உதாரணத்திற்கு? உதாரணமாக, நீங்கள் இதுவரை எப்போதும் பயன்படுத்தாத கிளாப்போர்டு ஒன்றினை முன் கூறப்பட்ட பாடகி மற்றும் நடிகை குறித்த காட்சியில் பயன்படுத்தியிருப்பது. அல்லது காதல் காட்சி ஒன்றினை முற்றிலும் வேறுபட்ட முறையில் காட்சிபடுத்தியிருப்பது குறித்தும் கூறமுடியும்.        அது சரியானதே. நான் அவற்றை குறிப்பிட்ட லயம் மற்றும் குறிப்பிட்ட மையம் என்பதை உடைக்கப் பயன்படுத்தினேன். இரண்டாவது காட்சி, இருவர் காதல் செய்வது தொடர்பான காட்சியில் குழுவாக மக்கள் மேசையில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருக்க, அமெரிக்கப் பெண் நடந்து வந்து எதை வேண்டுமானாலும் வாங்க தயக்கமில்லாமல் கூறுவாள். அரசியல்வாதி அங்கே சாதாரண உடையில் அமர்ந்திருப்பார். ஒருவரிலிருந்து மற்றொருவர் என்று விரிந்து செல்லும் கேமரா இயக்கம் அந்தக் காட்சியின் மைய முக்கியத்துவத்தை நமக்குப் புரிய

வேட்டைக்காரர்கள்: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
லயம் மற்றும் மௌனம் அலறலை அடிக்கோடிட்டு காட்ட உதவுகிறது வேட்டைக்காரர்கள் ப்ரான்சிஸ்கோ கேசட்டி – 1977 ஆங்கில மூலம் -  டான் பைனாரு தமிழில் - லாய்ட்டர் லூன் இந்தப்படத்திற்கு எப்படி என்ன முறையில் உங்களை தயார்படுத்திக்கொண்டீர்கள்?        படத்தினைத் தொடங்கும்போது திரைக்கதையின் வடிவம் என்பது வரைபடம் என்பதைத்தாண்டி குறிப்புகள் போல உருவாகி இருந்தது. பிறகு படப்பிடிப்பிற்கான இடங்களைத் தேடி கண்டறிய முயலும்போது கிரீஸ் முழுக்க அலைய வேண்டியிருந்தது. பயணிக்கும் வீரர்கள் படத்தோடு இதை ஒப்பிட்டால் அது எவ்வளவோ எளிதானது என்றுதான் கூறுவேன். வேட்டைக்காரர்கள் கதையின் அமைப்பே பல்வேறு இடங்களுக்கு மாறிச்செல்வதுதான் எனும்போது ஒரு இடத்திற்கு சென்று விடுதியில் தங்குவது என்பது பெரும் சவாலாக இருந்தது.        இடம் கிடைத்துவிட்டால் நான் அங்கே அமர்ந்து படப்பிடிப்பு குறிப்புகளை இன்னும் செம்மையாக எழுதியிருக்கக்கூடும். காட்சியை படப்பிடிப்பில்  மேம்படுத்துவதற்கான இடத்தையும் காலியாக விட்டுவிட்டு பிறவற்றை எழுதுவேன். படப்பிடிப்பில் காட்சிகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு இந்தப்படத்தில்

பயணிக்கும் வீரர்கள் அத்தியாயத்தின் நிறைவுப்பகுதி

படம்
தொடர்ச்சியான காட்சிகள் மரபான தொகுக்கும் எளிய தன்மையை தருகிறதா?        இது என்னுடைய தனிப்பட்ட கருத்துதான். மிகவும் அந்தரங்கமானது என்றுகூட சொல்லலாம். தொடர்ச்சியான காட்சியினை படமாக்குவது என்பது என்னைப் பொறுத்தவரை பெரும் சுதந்திரத்தைத் தருகிறது. ஆனால் பார்வையாளர்கள் அதில் ஆழ்ந்து கவனம் கொண்டு இணைந்திருக்க வேண்டியது அவசியம் என்பது உண்மைதான். மரபான தொகுக்கும் முறையில் தொடர்ச்சியான காட்சிகளை தொகுப்பது சிரமம்தான். காலியாக இருக்கும் திரையில் இயக்கம் எங்கு வேண்டுமானாலும் நிகழலாம். தொடர்ச்சியான காட்சி என்பது மான்டேஜ் எனும் கருத்தினை உள்ளே கொண்டதாக உள்ளது. ஆனால் அதற்கு பதிலாக மரபான தொகுக்கும் முறை என்பது பல்வேறு விஷயங்களை ஒரு காட்சியில் சொல்ல உதவுகிறது. கேமராவின் இயக்கத்தினோடு பார்வையாளர்களிடம் வேறு இடத்தை காணக்கூறுவது போல. நடுவில் உள்ள காட்சியினை வெட்ட மறுப்பது, அக்காட்சியினை பார்வையாளர்களை ஆழமாக கவனிக்க வைத்து அவர்களது கண்ணில் படும் விஷயங்களை குறிப்பிடத் தகுந்ததாக மாற்றிவிட முடியும். படத்தின் தயாரிப்பின் போது எதிர்கொண்ட சிக்கல்கள் என்ன? முதல் சிக்கலாக நான் நினைப்ப

பயணிக்கும் வீரர்கள்- கிரேக்க வரலாற்றினூடே ஒரு பயணம்

படம்
உங்களின் முதல் இரு படங்கள் போலில்லாது சில எழுச்சியூட்டும் சம்பவங்களுக்கு பயணிக்கும் வீரர்கள் படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தில் அரசியல் விஷயங்களுக்கும் எழுச்சியூட்டும் விஷயங்களுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?        பாலியல் சார்ந்த விஷயங்கள் உருவாவது கதாபாத்திரங்களுக்கிடையேதான். கிளிமெம்னெஸ்ட்ரா, ஈகிஸ்டஸ் மீது கொள்ளும் காதல் மற்றும் எலக்ட்ராவின் எதிர்வினை அவர்களுடைய ஆளுமை சார்ந்த அவற்றை மட்டுமே அடிப்படையாக கொண்டதுதான். இது போன்ற உறவுகள் தனிப்பட்ட ரீதியில் நின்றுவிடக்கூடியவைதான். அம்மாவின் காதலன் என்பதைத் தாண்டி ஈகிஸ்டஸ் சில குணங்களை கொண்டவனாக இருக்கிறான். அவன் ஒரு நம்பிக்கைத் துரோகி கூட. அவன் கொல்லப்படுவது கிளிமெம்னெஸ்ட்ராவுடன் கொண்ட காதலுக்காக மட்டுமல்ல அவனது அகும்மெம்னோனை விடுவித்து ஜெர்மன்காரர்களிடம் காட்டிக் கொடுத்ததன் காரணமாகத்தான். எலக்ட்ராவின் மீதான வன்புணர்ச்சி முழுக்க அரசியல்ரீதியிலானது, எந்த ஒரு வடிவிலான வன்முறையின் கீழேயும் அதன் ஆதாரமாக பாலுணர்வுத் தூண்டுதல்தான் இருக்கிறது. எலக்ட்ரா விசாரணையின்போது வன்புணர்ச்சி செய்யப்படுவது  படத்தி

கிரேக்க நிலப்பரப்பினூடே ஒரு வரலாற்றுப்பயணம்-பயணிக்கும் வீரர்கள்

படம்
உங்களது கதாநாயகர்களை புராண புனைவில் ஈடுபடுத்தி வெவ்வேறு வரலாற்று உள்ளடக்கங்களில் பொருத்துவது ஆபத்தானதாக தெரியவில்லையா?  நோக்கம் மற்றும் சூழல்கள் வேறுவேறானவை. ஒன்றுபோன்றவையல்ல. வரலாறு அவர்களை பாதிக்கிறது. மாற்றங்களை செய்யத்தூண்டி அவர்களை மாற்றுகிறது. மிகத்துல்லியமாக ஒரு வரலாற்றுத் தருணத்தில் கிடைக்கும் இடங்களில் அவர்கள் நகர்ந்து செல்வதற்கு உதவும் வகையில் கதாபாத்திரங்களை வடிவமைக்க முயற்சிக்கிறேன். ஆகஸ்ட் 4 ஆம் தேதி விருந்தொன்றில் ஈகிஸ்டஸ் எனும் ராணுவ வீரன் பொய்யான ஒரு கூட்டிணைவை ஜெர்மன் வீரரிடம் ஏற்படுத்திக்கொள்கிறான். அகமெம்மோன் இறப்பிற்கு பின்னே அவனது அதிகாரம் கொண்ட ஆளுமை மற்றவர்களுக்கு தெரியவருகிறது. ஈகிஸ்டஸ் யார் என்பதை ஆராய்ந்து பார்த்தால் தனிப்பட்ட நோக்கம், உளவியல் சார்ந்த தன்மையை முதன்மையாக கொள்ள வேண்டியிருக்கிறது. அது எனக்கு ஆர்வமூட்டுவதாக இல்லை. ப்ரெச்டியன் புராணம் போல படத்தினை உருவாக்க முயற்சி செய்ய விரும்புகிறேன். என்றாலும் உளவியல் தன்மையின் முன்னிலையை விரும்பவில்லை. எப்படி இதில் திரைக்கதையினை இணைக்க முடிந்தது? புராண புனைவை பயன்படுத்தியிருக்கிற விதம

கிரேக்க நிலப்பரப்பினூடே ஒரு வரலாற்றுப்பயணம்: பயணிக்கும் வீரர்கள்

படம்
கிரேக்க நிலப்பரப்பினூடே ஒரு வரலாற்றுப்பயணம்: பயணிக்கும் வீரர்கள் மைக்கேல் டிமோ பவுலோஸ் மற்றும் ப்ரைடா லியப்பாஸ் – 1974 ஆங்கில மொழிபெயர்ப்பு: டான் பைனாரு தமிழில்: லாய்ட்ட்டர் லூன் பயணிக்கும் வீரர்கள் படத்தினை திட்டமிட்டு தொடங்கும்போது, அந்த நேரத்தில் அரசியல் சூழ்நிலைகள் எப்படி இருந்தன?       படத்தினை உருவாக்கத் தொடங்கிய காலம் மார்க்கென்சினிஸின் விடுதலை பெறுவதற்கான கலகங்கள் தொடங்கிய காலமாகவும் தொடர்ச்சியான வன்முறைச் சம்பவங்கள் நிகழ்வதற்கு முந்தைய காலமாகவும் இருந்தது. 1939 – 52 காலத்தில் குறிப்பிடவேபடாத பல வரலாற்று நிகழ்வுகளை கொண்டுள்ளதை தணிக்கை அமைப்பு அங்கீகரிக்க மறுத்துவிட்டது. ஆயினும் நாங்கள் படத்தினை காட்சிபடுத்த திட்டமிட்டோம். நாங்கள் படத்தினை தொடங்கும் முன்னே வன்முறைச் சம்பவங்கள் நிகழத்தொடங்கிவிட்டன. இந்த முறையில் படத்தினை உருவாக்கினால் கிரீசில் அதனைத் திரையிட என்றுமே முடியாது. ஆனால் இந்த முடிவில் என்ன புத்திசாலித்தனம் உள்ளது? தயாரிப்பாளரிடம் இது குறித்து பேசி படம் கிரீசில் தடை செய்யப்பட்டால் அதனைக் கொண்டே அயல்நாட்டில் திரையிடும் வாய்ப்பை பெற முயற்சிக்கலாம்