தியோ ஏஞ்சலோ பவுலோஸின் சினிமா தத்துவம்
36 நாட்களில், பயணிக்கும் வீரர்கள், வேட்டைக்காரர்கள் மற்றும் மெக்அலெக்ஸாண்ட்ரோஸ் எனும் வரலாற்று பின்புலம் கொண்ட படங்களை இயக்கியுள்ளீர்கள். 1870 இல் மாரதோன் பகுதியில் கிரீக் பண்டிட்கள் ஆங்கில சுற்றுலாப் பயணிகளை கடத்தினர் என்பது போன்ற பாதியளவு உண்மைகளைத்தான் வரலாற்றில் இருந்து எடுத்து பயன்படுத்தியுள்ளீர்கள். 15 ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த ஒருவரை விடுதலைப்போராளியை மெசியா என்று நாடே அவரை நினைக்க அவர் சிறிது காலத்திலேயே கடும் சர்வாதிகாரியாக மாறுகிறார் என்பது நிகழ்வாக இருக்கையில் படம் தன்னுள் இதுபோன்ற ஒன்றை புனைவாக தன்னுள் கொண்டிருக்கிறது. எதார்த்தம் மற்றும் கனவு எதார்த்தம் என இரண்டுக்கும் இடையில் உங்களுடைய படங்கள் எப்போது தோன்றத் தொடங்கின? மெக்அலெக்ஸாண்ட்ரோஸ் தத்துவரீதியான – அரசியல் அதிகார பிரதிபலிப்பைக் கொண்ட அதிகாரத்தின் பிரச்சனைகளைப் பேசுகிற என்னுடைய மூன்று படங்களும் கசப்பான முடிவுகளைக் கொண்டுள்ள படமாகும். மனிதனுடைய நம்பிக்கை எப்படி குறிப்பிடப்பட்டாலும் என்னுடைய படத்தில் அவை தனக்குள்ளேயே சிறிதாகி மறைந்துபோகும் துன்பியல் தன்மையைக் கொண்டுள்ளது. மெக் அலெக்ஸாண்ட்ரோஸ் கிழக்