இடுகைகள்

பேருயிரின் அழுகை: நூல்வெளி2 - ப்ராட்லி ஜேம்ஸ்

படம்
யானைகள் ஆதியில் இருந்தன கோவை சதாசிவம் தடாகம் வெளியீடு விலை ரூ.40 தலைப்பு உணர்த்துவதுதான். பத்திரிகைச் செய்திகளில் அட்டகாசம்  அட்டூழியம் என்று திட்டமிட்டு எழுதி எழுதி எப்படி ஒரு பேருயிரை மனிதர்களுக்கு எதிராக நிறுத்தி பொதுக்கருத்து ஒன்றினை உருவாக்கி அதனை எப்படி மெல்ல அழித்தார்கள் என்பதை விளக்குகின்ற நூல் இது. காடு இதழில் வெளிவந்த கட்டுரையின் முழுவடிவம் இது. இதுவேறுபடுவது எங்கென்றால் சங்க காலப் பாடல்களிலிருந்து யானைகள் குறித்த தரவுகளை மேற்கோள் காட்டி விளக்கி இன்றைய காலத்தில் நிலைமை எப்படியுள்ளது என்று விளக்குகின்ற தன்மையில்தான்.  அதோடு யானை என்றால் பொதுவாக அதன் பழக்கவழக்கங்கள் எப்படி என்று அறியாது அறியாமையால் கூறிவரும் சில பொதுவான வழக்குகளான யானைக்கும் அடி சறுக்கும், தன் தலையில் தானே மண் வாரி போட்டுக்கொண்டது என்பது போலான வார்த்தைகளுக்கு அறிவியல் பூர்வமான முறையில் விளக்கமளித்துள்ளார் ஆசிரியர் சதாசிவம்.  சங்க காலத்தில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனுக்கு பரணி பாடுவதிலிருந்து அலங்காரப் பொருட்களுக்காக அதனை சுட்டுக்கொல்வது வரையிலான பல குற்றங்களை பட்டிலிடும்போது உண்மையிலே மனம்

உரையாடல்போல அமைதியும் பொருள் கொண்டதுதான் -3

படம்
குறிப்பிட்ட மையக்கருத்துகளே உங்களது படத்தில் திரும்ப வருகின்றன. வாழும் நிலப்பரப்பின் மீதான காதல் கொண்ட மக்கள், வட கிரீஸ் பகுதியைச்சேர்ந்த மக்கள் திருமணம் சாரந்த கொண்டாட்டங்களைக் கூறலாம்.       இறுதிக் கேள்விக்கான பதிலாக நான் மூன்று மகள்களை பெற்றிருக்கிறேன் ஆனால் இன்னும் மணம் புரியவில்லை. ப்ராய்டின் தத்துவப்படி என் வாழ்வில் இழந்ததை படத்தில் ஈடு செய்ய நினைக்கிறேனோ என்னமோ? எப்படியாயினும் இவற்றை நான் படத்தில் திரும்ப திரும்ப பயன்படுத்தி வருகிறேன். சிறுவர்கள் (அ) இளமையான மனிதர்கள் போலவே செய்கிறேன். இது முக்கியமானதுதானா என்று தெரியவில்லை. சினிமா விமர்சகர்கள் என் படத்தில் 80 காட்சிகள் இருப்பதாக கூறுவார்கள். எத்தனைக் காட்சிகள் படத்தில் உள்ளன என்பதை நான் அறிவேன். ஆராய்ச்சியாளர்கள், சினிமா ஆய்வாளர்கள் தாண்டி இது யாருக்கேனும் அர்த்தமுடையதாக உள்ளதா? 80 காட்சிகள் என்பதற்குப் பதில் 85 இருந்தால் என்ன வேறுபாடு இருக்கப்போகிறது? எப்படியாயினும் ஆராய்ச்சியாளர்கள் உங்களுடைய இந்த கருமையான படத்தைக் குறிப்பிட எந்தத் தேவையும் இல்லைதான். அனைத்து காட்சிகளும் கடும் பழுப்பு நிறத்தில் அமைந்

தலித் எழுத்து என்று ஒன்று இல்லை - சோ. தர்மன் நேர்காணல்

படம்
தலித் எழுத்து என்று ஒன்று இல்லை                            அபர்ணா கார்த்திகேயன்   தமிழில்: அன்பரசு சண்முகம் புதிய, வழக்கமானது அல்லாமலுமான கதைகளைக் கூற தொடர்ந்து முயற்சிக்கிறேன் என்று கூறும் சோ. தர்மனின்  கூகை நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த தருணத்தில் தன் கருத்துக்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.  சுதந்திரத்திற்கு பிறகான தலித் மக்களின் வாழ்க்கையினை திடமாகப் பேசும் சோ.தர்மனின் கூகை நாவல் ஆங்கிலத்தில்  The Owl (OUP)  வெளியாகியுள்ளது. கோவில்பட்டியைச் சேர்ந்த எழுத்தாளரான சோ.தர்மன் மொத்தம் 9 நூல்களை எழுதியுள்ளார். புனைவு கட்டுரை சிறுகதை என்று எழுதியுள்ள இவரது எழுத்துக்களின் மீது அதிகளவிலான விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டுள்ளன.  கூகை நாவல் புனைவுதான் என்றாலும் தலித் மக்களின் சமூக வரலாற்றினை தெளிவாகக் கூறும் ஆவணம் போல இருக்கிறது. இப்போது அம்மக்களின் நிலை என்னவாக இருக்கிறது? இன்று நடைபெறும் அந்த செயல்பாட்டினை நவீனத்தீண்டாமை என்றே கூறமுடியும். தீண்டாமை ஒழிப்புச்சட்டம் தலித் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது மேலும் தலித் சமுதாய மக்கள் அரசியல் இயக்கங்

வனங்களின் சிப்பாய்

படம்
எறும்புகள்: ஆறுகால் மனிதர்கள் நக்கீரன் தடாகம் வெளயீடு விலை : ரூ. 30 இந்த நூலில் எறும்புகள் எனும் சிற்றுயிர்கள் மனிதர்களுக்கு என்ன செய்கின்றன என்பதைக் குறித்து விளக்கமாகப் பேசுகிறார் நூலாசிரியர் நக்கீரன். குரங்களுக்கும் மனிதனுக்கும் இருக்கும் ஒற்றுமையைக்காட்டிலும் எறும்புகளுக்கும் மனிதனுக்கும் இருக்கும் ஒற்றுமையை பல்வேறு எடுத்துக்காட்டுக்கள் வழியே நிறுவுகின்ற இடம் சிந்திக்கவைப்பதாக உள்ளது.  இன்றைய நாளில் மனிதர்கள் தம்மைத்தாண்டி எந்த உயிர் குறித்தும் நினைப்பதேயில்லை. ஆனால் அப்படி அமெரிக்காவில் சிவப்பு எறும்புகளை அழிக்கச் செய்த விபரீத முயற்சி பின்னாளில் அந்த விளைநிலத்தை பாலைவனமாக்கி விவசாயிகளின் வாழ்வை அழித்த கதையோடு அதை நடத்தி பூச்சிக்கொல்லி வணிகர்கள் எப்படி பொய்யாக கட்டுக்கதையை உருவாக்கினார்கள் என்பதையும் விரிவாகப் பேசுகிறார் நக்கீரன்.  பிரம்ம புத்திரா ஆற்றின் மறுபுறமிருந்த மணல் திட்டுகளை உள்ளடக்கி மலட்டுத்தன்மை கொண்ட மண்ணை எறும்புகள் மூலம் தனிமனிதர் அதனை அடர்வான காடாக உருவாக்கிய செய்தி தனிமனிதராக ஒருவரின் ஆழமான எண்ணத்தின் ஆற்றலை கூறுகிறதாக இருந்தாலும் அரசு இது குறி

தி கிரேட் லோக்கல் டிவி வழங்கும் ரீல் 23

படம்
ஜானி விக் என்றால் விக் வைத்துக்கொண்டெல்லாம் கீனு ரீவ்ஸ் நடிக்கவில்லை. நீளமயிர்சிகையோடு கையில் துப்பாக்கியோடு சுட்டிருக்கிறார். உதைத்திருக்கிறார். குத்தியிருக்கிறார். குதிக்கிறார். மறுபடியும் சொல்கிறேன். இது அத்தனையின் போதும் துப்பாக்கி கையிலேயே இருக்கிறது. இன்னொன்றை சொல்ல வேண்டுமா வண்டி ஓட்டும் போதும் கூட கூடவே  வைத்திருக்கிறார். நடிக்கவில்லையா என்றெல்லாம் கேட்கவே கூடாது. கதை என்னன்னா கீனு ரீவ்ஸ்டோட சம்சாரம் நோய் வந்து கணவரை வருத்தப்படற வீடியோ புடிச்சு வச்சுட்டு படக்குனு ஒரு நாளு இறந்தர்றாங்க. அப்ப புடிச்சு நம்ம ஜானி மூஞ்சி செவத்துல அப்புன சாணி மாரியே படம் முடியறவரையும் இருக்குது ஏம்ப்பான்னு கேட்ட முருகேசனோட கேள்விக்கு பதில் கெடச்சிருச்சில்ல. செம லாஜிக் இல்ல. படம் தொடங்குன கொஞ்ச நேரம் இறந்துபோன ஜானி சம்சாரம் வீடியோவுல என்ன பண்ற ஜானி? ன்னு படம் பார்க்க வந்த நாம கேட்கற கேள்வியையே கேட்கறாங்க. ஜானி உடம்புல எக்கச்சக்க குளுக்கோஸ் பற்றாக்குறை ஆன மாதிரியே படம் முழுக்க வர்றாரு. காரணம் என்னன்னு மறுபடியும் கேட்காதீங்க சென்றாயன்களே! செத்த சம்சாரம் நம்மை புதைத்த ஈரம் காயறக்குள்

கிறுகிறுவானம்: தீராத கதைகளின் வானம்

படம்
கிறுகிறுவானம் எஸ்.ராமகிருஷ்ணன் பாரதி புத்தகாலயம் விலை ரூ. 25 புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள கிறுகிறுவானம் குழந்தைகளுக்கான கதைப்புத்தகமாக நேர்த்தியாக 10 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. இது முழுக்க கிராமத்து சிறுவனின் தினசரி வாழ்க்கை, ஏக்கங்கள், தவிப்பு, ஆசை, கஷ்ட நஷ்டங்களைப் பேசுகிறது.  எஸ்.ராமகிருஷ்ணன்தான் அந்த குழந்தையாக மாறி எழுதுவது என்பது சில விவரிக்கும் செயல்பாடுகளில் தெரிகிறது எ.கா: சுடு சோறும், முட்டைப்பொரியலும் சாப்பிட்ட சக மாணவனின் கையை நக்குவது, பக்கத்துவீட்டில் சாப்பிடும்போது இரண்டாவது தோசையைக் கேட்பது என்பதைக் குறிப்பிடலாம்.  குழந்தைகள் பேருந்துகள், ரயில்வே என எங்கும் பேசிக்கொண்டே இருப்பார்கள். இதிலும் ஓட்டப்பல்லு என்றழைக்கப்படும் சிறுவன் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறான். தனக்கு பிடித்தவர்களைப் பற்றிக் கூறும் போது தன் வீட்டில் இருக்கிற ஆடு, கோழியையும் எளிமையாக வகைப்படுத்தி தன்னோடு சேர்த்து ஓர் உயிராக  பார்க்கும் பார்வை வசீகரம்.  சாப்பாடும் கூப்பாடும்,  கைநிறைய பொய், அழுவேன் உருள்வேன் எனக்கு மிகப்பிடித்த பகுதிகளாக கூறுவேன். இவற்றில் அவர் எப்போதும் எழுதும்

உரையாடல் போல அமைதியும் அர்த்தம் கொண்டதுதான் தொடர்ச்சி 2

படம்
1999 ஆம் ஆண்டினை படத்தில் அதிக இடங்களில் குறிப்பிடுகிறீர்கள். அது என்ன முக்கியமான விஷயத்தை கூறவருகிறது? அது ஒரு புனைவாக ஒன்று. மூடுபனிநிலம் படத்தில் சிறுவர்கள் ஜெர்மனி சென்று சேர முயலும் புனைவியல் தன்மையைக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு 1999 புதிய தலைமுறையின் தொடக்கமாக, தனிப்பட்ட, சிறிய வலிமையற்ற வன்முறையும் நிரம்பிய இன்றைய நாள் போல இல்லாமல் இதற்கு பதிலாக உலகம் முழுவதும் ஒரு கனவை அனைவருமாக பகிர்ந்துகொள்வதுபோல் இருக்கவேண்டும். மக்கள் செர்ப்ஸ், க்ரோட்ஸ், துர்க்ஸ், அல்லது வேறு இதுபோன்ற கனவுகளைக் கொண்டிருக்கும் வேறு யாராக இருந்தாலும் அவர்களை ஒன்றிணைக்கலாம். பல ஆண்டுகளுக்கு முன்பு செர்பிய மனிதனும் கொசோவோ பகுதியைச்சேர்ந்த முஸ்லிம் பெண்ணுக்கும் நிகழும் காதல் உறவு குறித்த கதை கொண்ட யூகோஸ்லேவ் திரைப்படம் ஒன்றைப் பார்த்தேன் (ஸ்ட்ஜன் கரனோவிக்கின் ‘ஃபிலிம் வித் நோ நேம் ’ ) இது போலவே அமைந்திருந்த இஸ்ரேலியர் ஆண் ஒருவரும்  அரேபிய பெண் ஒருவரும் காதலிப்பது போன்ற கதையில் அமைந்த இஸ்ரேலியப் படம் ஒன்றையும் பார்த்தேன்(நிஸிம் தயனின் ‘எ வெரி நேரோ ப்ரிட்ஜ் ’ ) இது போன்ற கொள்ளை நோயிடமிருந்