இடுகைகள்

அறிவியல் நியூஸ்!

படம்
வாட்டர் பாட்டில் கட்டிடம் ! கான்க்ரீட்டில் கட்டப்படும் கட்டிடங்களை இன்னும் ஸ்ட்ராங்காக்க பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம் என எம்ஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் . 20% வலு கூடும் என்கிறது ஆராய்ச்சி தகவல் . பிளாஸ்டிக்கை ரீசைக்கிள் செய்வதால் 4.5% கார்பன் வெளியீடும் குறையும் என்பது கூடுதல் பிளஸ் . " சிமெண்டில் கலக்கப்படும் பிளாஸ்டிக் அளவு குறித்து கவனித்து வருகிறோம் . சரியான முடிவை அறிய சிமெண்ட் மிக்சர் அளவை கச்சிதாக உருவாக்குவது அவசியம் " என்கிறார் ஆராய்ச்சிக்குழுவைச் சேர்ந்த குணால் கப்வாடே பாடீல் . ஒளியை பிரதிபலிக்கும் தன்மை பிளாஸ்டிக்கில் இருப்பதால் காமா கதிர்வீச்சு அபாயம் பற்றி சர்ச்சை எழுந்தது . " இந்த வகை பிளாஸ்டிக்கில் கதிர்வீச்சு உருவாக பெரிய வாய்ப்பில்லை " என்கிறார் எம்ஐடியின் அணு பொறியியல் ஆராய்ச்சியாளர் மைக்கேல் ஷார்ட் . 2 தொழிற்சாலைகளை மூடிய சீனா ! சீனாவின் காற்றுமாசுபாடு உலகறிந்த பிரச்னை என்பதால் உடனடியாக அதை சரிசெய்ய அரசு களமிறங்கியுள்ளது . " தற்போது ஃபேக்டரிகளுக்கு மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் திடீர் இன்ஸ்பெக்சன் சென

முத்தாரம் நேர்காணல்:பிரணாப் முகர்ஜி, முன்னாள் குடியரசுத்தலைவர்

படம்
முத்தாரம் நேர்காணல் " இந்திராகாந்தியின் முடிவு புத்திசாலித்தனமானதுதான் " பிரணாப் முகர்ஜி , முன்னாள் குடியரசுத்தலைவர் தமிழில் : ச . அன்பரசு இந்திராகாந்தி காலத்திலிருந்து காங்கிரஸ் அமைச்சரவையில் பதவி வகித்து பின்னர் , குடியரசுத்தலைவராகி ஓய்வு பெற்றுவிட்டாலும் நாளிதழ்களில் பேசப்படும் தலைவர்களின் ஒருவர் பிரணாப் முகர்ஜி . 'Coalition Years'  என்று அண்மையில் எழுதியுள்ள நூலில் காங்கிரஸ் ஆட்சியின் அனுபவங்களை எழுதியுள்ளார் பிரனாப் . பதவிக்கால அனுபவங்களைப் பற்றி அவரிடம் உரையாடினோம் . நீண்டகால அரசியல் அனுபவங்களை கொண்டவர் நீங்கள் . அதில் முக்கிய நிகழ்வாக எதனைக் குறிப்பிடுவீர்கள் ? 1971 ஆம் ஆண்டு நான் பொதுவாழ்வுக்கு வந்த சமயத்தில் , வங்காளதேசம் 13 கோடி மக்களுடன் புதிதாக உருவானது . அன்றைய பிரதமரான இந்திராகாந்தி , " புதிய தேசமான வங்காளதேசத்தின் தலைநகரமாக டாக்கா செயல்படும் . பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்தியாவிடம் சரண்டைந்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியோடு உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் " என்று இந்திராகாந்தி பேசிய தருணத்தை மறக்கவே முடியாது . 1

நூல் அறிமுகம்! எனது போராட்டம் - ஹிட்லர்

படம்
எனது போராட்டம் ஹிட்லர் தமிழில்: கோலாலம்பூர் சுப்ரமணியம் சாந்தா பப்ளிஷர்ஸ் ரூ.200 மெயின் கெம்ப் என்ற நூலை இன்றும் புத்தக திருவிழாவில் தேடித்திரிபவர்கள் உண்டு. யூதர்களை கொன்றழித்தவர், சாத்தானின் நரவடிவம் என்றெல்லாம் கூறப்பட்டது இந்த கவர்ச்சிக்கு காரணமாக இருக்கலாம். மெயின் கெம்ப் நூல், ஜெர்மானியர்களுக்கு திருமண பரிசாக வழங்கப்பட்டது என்று கூறுவார்கள். அப்படியென்ன இந்த நூலில் இருக்கிறது. அடால்ஃப் ஹிட்லரின் சிறுவயது தொடங்கி 1926 ஆம் ஆண்டு அவரது அபேதவாத தொழிற்கட்சி கலைக்கப்படும்வரை தனது அனுபவங்களை இந்நூலில் பேசியுள்ளார் ஆசிரியர். ஹிட்லர் தனது கருத்துக்களை நூல் வழியே வாசித்து உருவாக்கிக் கொண்டது மகிழ்ச்சிக்குரியது. என்றாலும் அரசியலில் ஈடுபடும்போது அதை தூக்கி எறிந்து விடுங்கள் என வாசகர்களுக்கு அறிவுறுத்துகிறார். தேசத்தை வஞ்சனையற்று நேசித்த ஹிட்லரைப் பற்றி இந்நூலில் தெளிவாக உணர முடியும்படி மொழிபெயர்ப்பு மொழி உள்ளது. இளமையில் படிக்கும்போதே பல்வேறு அமைப்புகள், நிகழ்வுகளில் கலந்துகொண்டு மக்களிடம் பேசுவது குறித்த திறமையை வளர்த்துக்கொண்ட ஹிட்லரின் திறமை மூக்கில் விரலை வைக்க வைக்கிறது.

"இந்துத்துவாவின் அடுத்த குறி நான்தான்" நேர்காணல்: காஞ்சா அய்லய்யா!

படம்
" இந்துத்துவாவின் அடுத்த குறி நான்தான் " நேர்காணல் : எழுத்தாளர் காஞ்சா அய்லய்யா , எழுத்தாளர் . தமிழில் : ச . அன்பரசு கன்னடத்தின் முக்கிய எழுத்தாளரான காஞ்சா அய்லய்யா , ஹைதராபாத்திலுள்ள மௌலானா ஆசாத் உருது பல்கலைக்கழகத்தின் சமூககொள்கை ஆய்வு மையத்தின் இயக்குநர் . 2009 இல் இவர் எழுதிய 'Post Hindu India' என்ற நூலில் பிராமணர்கள் , பனியாக்களைப் பற்றி ' சமூக கடத்தல்வாதிகள் ' என்று கூறிய கருத்துகள் கொலைமிரட்டல்கள் வரை புகழ் சம்பாதித்து கொடுத்திருக்கின்றன . அவரின் படைப்பு , கொலைமிரட்டல்கள் , நூலின் சர்ச்சைக்குரிய பகுதி குறித்து அவரிடம் பேசினோம் . " போஸ்ட் இந்து இந்தியா " பற்றி ஏகப்பட்ட சர்சைகள் . இதுகுறித்து கூறுங்களேன் .   ஆர்ய வைசியர்களின் சங்கம் உருவாக்கிய புக்லெட்தான் சர்ச்சைக்கு காரணம் . ஆங்கிலத்தில் வெளியான நூலின் தெலுங்கு மொழிபெயர்ப்பின் (2011) குறிப்பிட்ட பகுதியை நூலாக்கி பிரச்னை செய்கிறார்கள் . இந்தி , மராத்தியில் வெளியாகியுள்ள இந்நூலின் மையம் , தனியார்துறையில் ரிசர்வேஷன் தோல்வி அடைந்ததற்கான காரணங்களை பேசுகிறத

அக்கம் பக்கம் அறிவியல் 2!

படம்
விண்வெளி குப்பைகள் ! பூமிக்கு வெளியே சில கி . மீ தூரத்திலேயே பல்வேறு நாடுகளால் அனுப்பப்பட்ட ஆயிரக்கணக்கிலான சாட்டிலைட் குப்பைகள் . இதில் வட்டப்பாதையில் சுற்றிவரும் சாட்டிலைட்டுகள் குறைவு . துப்பாக்கி தோட்டாவை விட பத்து மடங்கு வேகத்தில் சுற்றிவருவது செயலிழந்துபோன 95% செயற்கைக்கோள் குப்பைகள்தான் . 1 மி . மீ நீளத்திற்கும் குறைவான 170 மில்லியன் டன்கள் குப்பைகள் பூமியை சுற்றிவந்துகொண்டிருக்கின்றன என்கிறது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் . இதில் ரஷ்யா , 6,500 விண்கல குப்பைகளோடு முதலிடமும் , அடுத்து அமெரிக்கா 3,999 பொருட்களோடும் உள்ளன . இவற்றுக்கு அடுத்து விண்வெளி திட்டங்களோடு களமிறங்கியுள்ள சீனா 3,475 பொருட்களோடும் அடுத்த இடம் பிடித்துள்ளது . 2007 ஆம் ஆண்டு anti-satellite weapons test க்காக தன் சாட்டிலைட்டை உடைத்தபோது , 35 ஆயிரம் குறுந்துண்டு குப்பைகளாக மாறின . " விண்வெளி குப்பைகள் தங்களது செயற்கைக்கோளுக்கே ஆபத்து என்பதை நாடுகள் உணரத் தாமதமாகிவிட்டது " என்கிறார் விண்வெளி ஆராய்ச்சியாளரான பில் அய்லர் .  2 2017: டாப் கேட்ஜெட்ஸ் ! Fidget spinners கச்சே

அக்கம் பக்கம் அறிவியல்!

படம்
காற்று மாசுபாடு ! இந்தியாவில் நான்கில் ஒரு குழந்தை காற்று மாசுபாடால் 5 வயதுக்குள் இறந்துபோகிறது . உலகெங்கும் 2015 ஆம் ஆண்டு காற்று மாசுபாட்டால் இறந்தவர்களின் எண்ணிக்கை 4.2 மில்லியன் . இதில் 50% இறப்பு , சீனா மற்றும் இந்தியாவில் நிகழ்ந்தவை . இந்தியாவில் அதிக காற்றுமாசுபாடு பிரச்னை நகரம் , டெல்லி . காற்று மாசுபாட்டால் இறந்த மக்களின் எண்ணிக்கை 1.2 மில்லியன் . மாசுபாட்டால் ஏற்படும் நோய்கள் - இதயநோய்கள் , வாதம் , சிறுநீரக செயல்பாட்டு பிரச்னைகள் , நுரையீரல் புற்றுநோய் 2 காமெடி திருடர்கள் ! தண்ணீர் துப்பாக்கி திருடர்கள் ! 2013 ஆம் ஆண்டு ஞாயிறு இரவு , அமெரிக்காவின் ரோஜர்ஸ் பார்க் ரெஸ்டாரெண்டில் மரியோ கார்சியா , டோமிங்கோ கார்சியா என இருவர் நுழைந்து சாப்பிட உணவு கேட்டதோடு , துப்பாக்கியையும் காட்டி மிரட்டியிருக்கின்றனர் . ஓனர் எதற்கும் மசியவில்லை . " நான் ரொம்ப பிஸி . ஒருமணிநேரம் கழிச்சு மறக்காமல் வாங்க " என்று சொல்லிய கையோடு போலீசுக்கு போன் அடித்தார் . ஒரு மணிநேரம் கடந்தபின்னும் போலீஸ் வரவிலை . வந்தது மெமரிபிளஸ் திருடர்கள்தான் கையில் பேஸ்