இடுகைகள்

சூப்பர்ஸ்டார் சமையல் கலைஞர் கரிமா அரோரா!

படம்
கிச்சன் ஸ்டார் கரிமா! ஹாங்காங்கில் வசிக்கும் கரிமா அரோரா தன்னுடைய Gaa உணவகத்திற்கு உணவுத்துறையின் உயர்ந்த அங்கீகாரமான மிச்செலின் ஸ்டார் பெற்றுள்ளார். 2017 ஆம் ஆண்டு ஏப்ரலில் அரோமா தொடங்கிய உணவகமான Gaa, தாய்லாந்திலுள்ள மிச்செலின் கைடு நிறுவனத்தின் ஸ்டார் அங்கீகாரத்தை வென்றுள்ளது. இந்தியா –- தாய்லாந்து வெரைட்டி உணவுகளை சீசன் காய்கறிகளை சமைத்து தந்து மக்களின் அன்பை வென்றுள்ளார் கரிமா அரோரா. மும்பையில் பத்திரிகையாளராக பணியாற்றியவர் கரிமா என்றால் நம்புவீர்களா? “ஆறுமாதம் பத்திரிகையாளராக வேலைபார்த்தேன். திடீரென ரெஸ்டாரண்ட் தொடங்கினால் என்ன என்று தோன்ற, பயிற்சிகளை பெற்று துணிந்து இறங்கிவிட்டேன்” என புன்னகைக்கிறார் கரிமா அரோரா. கார்டன் ராம்சே(2011), ரெனெ ரெட்ஸெபி(2013-15) ஆகியோரிடம் பணியாற்றி அரிச்சுவடிகளை கற்றவர், பாங்காக்குக்கு இடம்பெயர்ந்து ககன் ஆனந்துக்கு உதவியாளராகி வெரைட்டி உணவுகளை தயாரிக்க கற்றது முக்கியமான திருப்பம். கடையில் உணவுகளோடு எளிமையான உள் அலங்காரம்(Boose Studio-Jittapoo opas) வசீகரிக்கிறது.

ப்ரெய்லி போன்!

படம்
ப்ரெய்லி போன்! துபாய் கிராட் ஷோவில் அறிமுகமான ப்ரெய்லி போன் அனைவரையும் கவர்ந்துள்ளது. தனது தாத்தா பார்வையிழப்பால் பொருட்களை கையாள தடுமாற, அவரது பேரன் ஆயுஷ்மான் தல்வார் அதற்கென ப்ரெய்லி போனை உருவாக்கியுள்ளார். போனின் கேஸ் போல உள்ள இதில் பின்புறம் பிரெய்லி எழுத்துக்கள் இருக்கும். “இந்தியாவில் 40 பேர்களிடமும், நெதர்லாந்தில் நூறுபேரிடமும் சோதித்துள்ளோம்” என புன்னகை பூக்கிறார் தல்வார். இந்த டிசைன் திருவிழாவில் நாற்பது நாடுகளிலிருந்து பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வுகளை தரும் கருவிகளின் ஐடியாக்களை 200 க்கும் மேலான மாணவர்கள் காட்சிபடுத்தியிருந்தனர். சுமை பிரச்னையில்லை! அடுத்ததாக ரயிலில் சுமைகளை தூக்கும் போர்ட்டர்களின் முதுகெலும்பு பாதிக்கப்படுவதை தடுக்க ரிஷப் சிங் என்ற மாணவர் சகாயக் கருவியை உருவாக்கியிருந்தார். இக்கருவி சுமையை தலை, மூளைக்கு சமமாக பிரித்துதருகிறது.

பாலஸ்தீனத்தின் நம்பிக்கை இரட்டையர்கள்!

படம்
நம்பிக்கை தரும் இரட்டையர்! பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் 70% வேலையில்லா பட்டதாரிகளில்(1.9 மில்லியன் பேர்) ஒருவர் பாஸ்மா அலி. உணவுப்பொருள் கிடைக்காமல் தடுமாறி வரும் மக்களில் 49% பேர் சரியான வருமானம் இன்றி தடுமாறிவருகின்றனர். 2012 பாஸ்மா அலி, ராஸா என இரு பெண்களும் இணைந்து தொடங்கிய சிகேட்வே ஸ்டார்ட்அப், இன்று பல நூறு காஸாவாசிகளுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. உலகவங்கியிடம் 3 மில்லியன் நிதியை பெற்று இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சியளித்துவருகிறார்கள். “இளைஞர்களின் கனவுகள் நிறைவேறாமல் போவது அவர்களை தீவிரவாதத்திற்கு அழைத்துச்செல்லும் அபாயத்தை உருவாக்கும்” என்கிறார் பாஸ்மா அலி. தற்போது பாஸ்மா அலி மற்றும் ராஸா உள்ளிட்ட தோழிகளின் சமூக அக்கறையால் இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.  

மதங்களுக்கு விழிப்புணர்வு நோக்கம் கிடையாது!

படம்
முத்தாரம் Mini வாழ்கைக்கு அர்த்தம் தருவதே பல்வேறு மதங்களில் நாம் வாசிக்கும் கதைகள்தான் என்கிறீர்கள். ஆனால் இவை வரலாற்று உண்மைகளையே மறுக்குமளவு அதிகரித்துள்ளதே? நாம் வாழ்வதற்காக கதைகளை கூறுகிறோம் என்பார் ஜோன் டிடியன். உலகில் நமது இடத்தைப் பற்றி இக்கதைகளே உணர்த்துகின்றன. மதம், அரசியல் வேறுவேறு என பிரித்து வரலாற்று உண்மைகளை சொல்லும் கதைகளை நாம் புரிந்துகொண்டது 18 ஆம் நூற்றாண்டுக்கு பிறகுதான். தேவாலயங்கள் வரலாற்று புறக்கணித்து கூறிய கதைகள் அதிகாரத்திற்கு மக்கள் பணிந்திருக்கவேண்டும் என்ற லட்சியத்தை மையமாக கொண்டவை. மக்களுக்கு அறிவு புகட்டும் நோக்கம் அவற்றுக்கு கிடையாது. மதம் குறித்த பல்வேறு அடுக்குகளான கதைகளை எப்படி பார்க்கிறீர்கள். இந்தியாவின் பல்வேறு மதங்களை ஐரோப்பியர்கள் ஆச்சரியத்துடன் பார்ப்பது இதன் காரணமாகத்தான். அசோகர், அக்பர், அம்பேத்கர் என இந்திய மனிதர்களின் வாழ்வில் மதம் முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறுமதங்கள் இருந்தாலும் மக்கள் பிரிந்துசெல்லாமல் ஒன்றாக வாழும் ஜனநாயக நாடாக இந்தியா எனக்கு பெரும் ஆச்சரியம் தருகிறது. -நீ

Bleach (42-63) - ருக்கியா காப்பாற்றப்பட்டாளா?

படம்
ருக்கியா காப்பாற்றப்பட்டாளா? - போர் ஆரம்பம் மோடியின் தேர்தல் தோல்வி, யோகியின் கோத்திரம் குறித்த பேச்சு, கருணாநிதியின் சிலை திறப்பு இதையெல்லாம் கடந்து என் மனதுக்குள் கேட்டது ருக்கியாவை இச்சிகோ குரசாகி காப்பாற்றினானா இல்லையா என்பதுதான். யெஸ் ப்ளீச் அனிமேஷன்தான். போனமுறை தொங்கலில் விட்ட கதை 63 ஆவது எபிசோடோடு நிறைவு பெறுகிறது.  போன எபிசோடுகளில் உருவான கேள்வி, இச்சிகோ குரசாகி மனிதர்களைப் போல இருந்தாலும் மற்றவர்களை விட அவனது ஆன்மா சிறப்பானது. ருக்கியாவை விட சக்திசாலியாக எந்த பயிற்சியும் இல்லாமல் இருப்பது எப்படி? ருக்கியாவை அழைத்துசெல்லும் அவரது அண்ணன் ஹயாகுயா உண்மையில் யார்? ருக்கியாவின் மீது இச்சிகோவை காட்டிலும் கோபமும் பிரியமும் காட்டி அவளை கொல்லப்பார்க்கும் ரெஞ்சியின் கதை என்ன? தொப்பி அணிந்து கிளைமேக்ஸில் வந்து இச்சிகோவையும் ருக்கியாவையும் குறுஞ்சிரிப்புடன் காப்பாற்றும் கிசுகி உரஹரா, பூனையான யோருச்சி ஆகியோர் யார், உரயு இஷிதா ஆன்மா காவலர்களின் மீது வன்மம் கொண்டு அர்ஜூனனாய் அம்பு எய்துவது ஏன்? ஒரிஹிமேயின் சக்தி என்ன? என அத்தனை கேள்விகளுக்கும் நினைத்து பார்க்க

5 ஜியில் என்ன கிடைக்கும்?

படம்
5 ஜியில் என்ன கிடைக்கும்? க்வால்காம் நிறுவனம் ஹவாயில் நடத்திய டெக் மாநாட்டில் வெரிஸோன், மோட்டோரோலா, ஏடி&டி ஆகிய நிறுவனங்கள் 5ஜி இணைய இணைப்பை காட்சிபடுத்தியிருந்தன. சாம்சங் 5 ஜிக்கான போன் அடுத்தாண்டு ரிலீஸ் எனவும் அறிவித்துள்ளது. எம்பியில் தரவிறக்கம் செய்யும் நாம் இனி ஜிபியில் படங்களை தரவிறக்கமுடியும். நெட்ஃபிளிக்ஸ், அமேசான் ப்ரைன் உள்ளிட்ட ஆன்லைன்தள வீடியோக்களை உடனுக்குடன் வேகமாக இடைநிறுத்தமின்றி பார்க்கலாம். 5ஜியை உடனே அமுல்படுத்த முடியாத தொழில்நுட்ப சிக்கல் உள்ளது. புதிதாக க்வால்காம் மாநாட்டில் அறிமுகமான சாம்சங்கின் 5ஜி போன் டூயல் சென்சார் கேமரா, ஸ்நாப்டிராகன் 855 புரோசஸர், இன்ஃபினிட்டி – -ஓ திரை என அமர்க்கள அம்சங்களுடன் வெளியாகியுள்ளது. மாநாட்டில் அறிமுகமான சாம்சங் போனில் ஒரு ஜிபி ஃபைலை பத்தொன்பது நொடிகளில் தரவிறக்க முடிகிறது என்பது சாதனைதான். போனை ஸ்மார்ட் டிவியில் எளிதாக இணைத்து வீடியோக்களை பார்க்க முடியும் வசதிகளை அளித்துள்ளனர்.

மார்க்கெட்டில் புதுசு - பெஸ்ட் 2018!

படம்
கேட்ஜெட்ஸ் ஸ்பெஷல்! Nikon Coolpix W300   சாகச விரும்பிகளுக்கான கேமரா. ப்ளூடூத் மூலம் எளிதாக கேமராவை ஸ்மார்ட்போன்களுடன் இணைக்கலாம். வாட்டர் ப்ஃரூப் வசதியுடன் கச்சிதமான ஸ்லிம் கேமரா.  Roli Songmaker Kit எலக்ட்ரானிக் இசை பற்றிய அடிப்படையை கற்க உதவும் கருவி. ட்ரம்பேட், கீபோர்ட் கொடுக்கும் காசுக்கும் மதிப்பான இசைக்கருவி. Huawei Mate 20 Pro 35 மணிநேர பேட்டரி திறனுடன் 3டி ஸ்கேனிங், மூன்று லெய்கா லென்ஸ் கேமரா என அதிரடிக்கிறது ஹூவெய் போன். அதிரடி அம்சங்களால் இப்போதைக்கு ஆண்ட்ராய்டில் நெ.1 போன் இதுதான். Garmin vívosmart 4   உங்கள் ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவு, தூக்கம், மன அழுத்தம் என அனைத்தையும் மணிக்கட்டிலுள்ள பேண்ட் மூலம் அறியலாம். கச்சிதமான வடிவமைப்பில் ஒருவாரம் தாக்குப்பிடிக்கும் சார்ஜ் இதன் பெரும்பலம். Jabra 65t active நாடி நரம்பெல்லாம் இசைவேட்கை நிரம்பியவர்களுக்கு ஜப்ரா இயர்போன்களின் துல்லிய ஒலி திருப்தி அளிக்கும். போன் அழைப்பு உள்ளிட்டவற்றையும் எளிதாக செய்யமுடிவது சிறப்பு.