இடுகைகள்

இடம்பெயரும் மக்களுக்காக ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்!

படம்
ஒரு நாடு ஒரு ரேஷன் கார்டு திட்டம் பற்றி.... நேர்காணல் ரவி காந்த், செயலர், பொது விநியோகத்துறை ஒரு நாடு ஒரே ரேஷன்கார்டு பற்றிச் சொல்லுங்கள்.  நாடு முழுக்க ஒரே ரேஷன் கார்டு என்பது உணவு பாதுகாப்புச்சட்டப்படி விரைவில் அமலாகவிருக்கிறது. இதன்படி, வேலைதேடி பிற மாநிலங்களுக்கு செல்பவர்கள், தங்களது விரல்ரேகையை வைத்தாலே குறைந்த விலையில் அரிசி, பருப்பை பெற்று பயன்பெற முடியும். இதற்காக புதிய கார்டுகளை பெற வேண்டியதில்லை. இக்கார்டுகளை போலியாக பயன்படுத்தினால் என்ன செய்வீர்கள்? அதற்கான பாதுகாப்பு அம்சங்களையும் உருவாக்கி வருகிறோம். அவர்களிடம் பெறும் கைரேகை  போன்றவற்றை பயன்படுத்தி அவர் பெறும் உணவுப்பொருட்களை அளவைக் கண்காணிக்க முடியும். மத்திய தகவல் தளத்தில் எப்படி பதிவு செய்து கண்காணிப்பீர்கள்? அதற்குத்தான் பிஓஎஸ் இயந்திரம் உள்ளதே. அதன்மூலம் செய்யப்படும் உணவு ஒதுக்கீடு அனைத்தும் மத்திய அரசின் தகவல் தளத்தில் பதிவு செய்யப்படும். இதன்மூலம் பயனர் இந்தியாவில் எங்கு என்னென்ன பொருட்களை வாங்கினார் என்று அறிய முடியும். எந்தெந்த மாநிலங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளீர்கள்? வட

தேசிய நெடுஞ்சாலையில் வரி வசூல்!

படம்
giphy.com இந்தியாவில் உள்ள சுங்க வரி வசூலிக்கும் இடங்களில் ஃபாஸ்டேக் முறையில் டிஜிட்டல் வரி வசூலிக்க அரசு திட்டமிட்டு வருகிறது. இதுபற்றிய டேட்டா இந்தியாவிலுள்ள நெடுஞ்சாலை சுங்கவரி சாலைகள் - 525 மாநிலத்திலுள்ள நெடுஞ்சாலை சுங்கவரி சாலைகள் - 500 தினசரி ஃபாஸ்டேக் முறையில் நடக்கும் வரி வசூல் - 1.1 மில்லியன் தினசரி இதன்மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானம் - 25- 30 கோடி ஃபாஸ்டேக் முறையை ஏற்ற வாகனங்களின் எண்ணிக்கை 6.2 மில்லியன். வாகனங்களின் கண்ணாடியில் பொருத்திக்கொள்ளும் பொருளான ஃபாஸ்டேக்கை வங்கியில் ரூ.25 கொடுத்து பெறலாம். இதனுடன் உங்கள் வங்கி கணக்கை இணைத்து சுங்கச்சாவடிகளில் பணத்தை டிஜிட்டல் முறையில் கட்டலாம். எனவே இனி சில்லறைக்கு அல்லாட வேண்டியதில்லை. மேலும் இதனுடன் வாகன எண்களும் இணைக்கப்படுவதால் உங்கள் வாகனம் காணாமல் போனால், சட்டவிரோத விவகாரங்களில் மாட்டிக்கொண்டால் காவல்துறை அதை எளிதாக அறிய முடியும். இதே ஃபாஸ்டேக்கை பயன்படுத்தி 2020 ஆம்ஆண்டு ஏப்ரல் மாத த்தில் எரிபொருட்களை வாங்கவும், வாகன நிறுத்தங்களுக்கு கட்டணங்களை செலுத்தவும் விரிவாக்கம் செய்யவிருக்கிறார்கள். நன

ஷேரிங் செய்வோம் மச்சான்ஸ்! - பகிர்தல் பொருளாதாரம்!

படம்
giphy.com பகிர்தல் என்பது எப்போதும் சிறந்த துதான். இன்று பொருளாதார மந்த நிலை உள்ளது. இதனால் சிறப்பங்காடி முதற்கொண்டு தேவைப்படும் பொருட்களைத் தவிர பிற பொருட்களை யாரும் வாங்க விரும்பவில்லை. புது பொருட்களை மக்கள் கண்கள் விரியப் பார்க்கிறராகளே தவிர பர்சை எடுத்து பொருட்களை வாங்க விரும்புவதில்லை. இந்த மனநிலை மாற்றம் அனைத்து விஷயங்களிலும் உள்ளது. உதாரணத்திற்கு ஆபீஸ் திறக்கிறார் என்றால், தனியாக வாடகைக்கு இடம்பிடிப்பதை விட கோ வொர்க்கிங் முறை எனும் முறையைத்தான் இன்று பலரும் விரும்புகின்றனர். ஆபீசுக்குத் தேவையான கணினிகள், நாற்காலிகள், ஏசி, ஏன் குடைகளைக் கூட வாடகைக்கு வாங்கலாம். இன்று கார் வாங்காமல் ஊபர், ஓலாவில் செல்கிறார்களே அதேபோல்தான். ஃபர்லென்கோ, சிட்டி ஃபர்னிஷ் ஆகிய நிறுவனங்கள் நாற்காலிகளை, மேசை ஆகிய பொருட்களை வாடகைக்கு அளிக்கின்றன. நெஸ்ட் அவே என்ற கம்பெனி, பல்வேறு வீடுகளை வாடகைக்கு அளிக்கிறது. இது அனைவருக்கும் விருப்பமான வழிமுறை என்று கூற முடியாது. முப்பது வயதுக்கு கீழுள்ளவர்கள்தான் இம்முறையை உலகெங்கும் பிரபலப்படுத்துகிறார்கள். இந்தியாவில் இவர்களின் சதவீதம் 51%. உலகெங்கு

தூக்கம் வரலையா? இந்த டெக் ஐட்டங்களைப் பயன்படுத்துங்க!

படம்
பொதுவாக எங்கள் பக்கத்து வீட்டில் மனைவி, அதிகாலையில் எழாவிட்டால் தண்ணீர் பிடித்து வரும் கணவர் அடியே மூதேவி என்று அலறி மனைவியை எழுப்புவார். ரெஸ்ட் எடுத்தா தப்பாங்க என்பார் அவரின் மனைவி. வேலைதான் முக்கியம். ரெஸ்ட் அப்புறம் என்பார் மனைவி. இது நம்ம ஊரூ அலாரம் என நினைத்துக்கொள்ளுங்கள். விஷயம் இதுதான். இதெல்லாம் விட ஸ்மார்ட்டான ஆப், பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றில் சில... காஸ்பர் லைட் 108 பௌண்டுகள் விலை கொண்ட லைட். வாங்கலாமா வேண்டாமா என்பது நிச்சயம் உங்கள் முடிவுதான். இதில் காலையில் எழும்போது உற்சாகமாக இருப்பதற்கான விஷயங்கள் கிடையாது. அதாவது, அதனை செட் செய்யும் மனதில்தான் உள்ளது. எனவே லைட்டை டிம்மாக வைப்பதாக, பிரைட்டாக வைப்பதா என முடிவு செய்து ஆப் மூலம் செட் செய்யலாம். அரோமா ஸ்லீப் ஷீப் தூக்கம் வர வைக்க இன்று செக்ஸ் மட்டும் உதவுவதில்லை. சிறிது நறுமணம் கொண்ட சுகந்தமான சூழலும் அவசியம். பல்வேறு வித எண்ணெய்களைக் கொண்ட இந்த பொருள், உங்கள் தூக்கத்திற்கு உத்தரவாதம் தருகிறது. டோடோவ் இந்த கருவியில் உள்ள நீலநிற ஒளி உங்கள் மூச்சின் வேகத்தை நிதானமாக

வளைவான கண்ணாடியை எப்படி உருவாக்குகிறார்கள்?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி கண்ணாடியை எப்படி வளைத்து அழகாக மாற்றுகிறார்கள்? அனைத்துக்கும் சிலிகா மூலக்கூறுகள்தான் காரணம். அதனை 700 டிகிரி செல்சியஸிற்கு வளைத்து கண்ணாடியை வளைவாக தயாரிக்கிறார்கள். மிகவும் கவனமாக வேலை செய்துதான் இந்த வகை கண்ணாடியை உருவாக்குகிறார்கள். கால்சியம் கார்பனேட், சோப்பு ஆகியவற்றைப் போட்டு இதனை துடைத்து மெருகேற்றுகிறார்கள். நன்றி - பிபிசி

எந்த மொழியைக் கற்பது ஈசி?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி எளிதாக ஓர் மொழியைக் கற்க நினைக்கிறேன். எந்த மொழியைத் தேர்ந்தெடுக்கலாம்? கணினி மொழியை கற்க விரும்பினால் ரூபி கற்கலாம். இம்மொழியை கற்பதும் எளிது, நிறைய சம்பாதிக்கவும் முடியும். அதேசமயம் மொழி கற்பது என்றால், தமிழ் என்று மொழிவெறியோடு சொல்ல மாட்டேன். ஆங்கிலத்தோடு இணைந்த அதன் சாயல்களைக் கொண்ட ஸ்பானிஷ், பிரெஞ்சு, இத்தாலி ஆகிய மொழிகளை கற்கலாம். இது எளிது. நன்றி - பிபிசி

வித்தியாசமான போபியாக்கள்! - பயம்தான் பிரதானம்

படம்
பாபாபோபியா இது கத்தோலிக்க மத தலைவரான போப்பை பார்த்தால் வரும் பயம். பெண்களுக்கு வருமா? ஆண்களுக்கு வருமா என்று தெரியவில்லை.  சோசெராபோபியா பெற்றோரைப் பெற்றவர்களைப் பார்த்து வரும் பயம். தாத்தா, பாட்டியைப் பார்த்து வரும் பயம் என்றால் ஈசியாக புரியும் என நினைக்கிறேன்.  சோம்னிபோபியா தூங்கிவிடுவோமோ என நினைத்து பயப்படுவது. அனிமேஷன் படிப்பவர்களுக்கு வரும் வியாதி இதுதான் என இப்போது தெரிகிறது.  சாந்தோபோபியோ நிறங்களைப் பார்த்து மனதில் ஏற்படும் குலை நடுக்கத்தை இப்படி சொல்கிறார்கள்.  ஆம்பலோபோபியா சென்டர் ஆப் தி அட்ராக்சனைப் பார்த்து வருவது. அதுதாங்க, தொப்புளைப் பார்த்து வருவது.  ஹீலியோபோபியா சூரியன், வெளிச்சம், எல்இடி பல்புகளை பார்த்து ஒருவர் ஜகாவாங்கினால் அவருக்கு இந்தப் பிரச்னை என புரிந்துகொள்ளலாம்.  அராய்ச்சி புட்டிரோ போபியா பீநட் பட்டர் சாப்பிடும்போது வாயின் மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்ளுமோ என பயப்படும் பழக்கம். நம்மூரில் இதனை பிரெட்டும் ஜாமும் என்று கூட மாட்டிக்கொள்ளலாம். இல்லையெனில் இருக்கவே இருக்கிறது அப்படியே அள்ளித் தின்னும