இடுகைகள்

காதலில் சுயநலம் வந்தால்? தொலி பிரேமா

படம்
தொலிபிரேமா தெலுங்கு 2018 வெங்கட்அட்லூரி கதை- இயக்குநரே ஒளிப்பதிவு - ஜார்ஜ் சி வில்லியம்ஸ் இசை : தமன் சாய் ஆஹா கதைதான். நாயகன் ஆதித்யா சேகருக்கு கோபம் அதிகமாக வருகிறது. அந்த விவகாரம் ஒருநாள் சீனியர் மாணவரை அடித்து துவைக்க வைக்கிறது.அதில் ஆதியின் காதலி வர்ஷா தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஆதியை பழி கொடுக்கிறார். காதல் புட்டுக்கொள்கிறது. இருவரம் லண்டனில் சந்திக்கிறார்கள. ஆதி வர்ஷா ஆகியோர் ஈகோ களைந்து ஒன்று சேர்ந்தார்களா, இல்லையா என்பதுதான் கதை. தமன் இசையில் பின்னியிருக்கிறார். வருண்தேஜ் கோபக்கார ராக நன்றகா நடித்திருக்கிறார். ஐயையோ நீளும் காதல் மோதல் அத்தியாயங்கள். ராஷி கண்ணாவின் காதல் அத்தியாயங்கள்.சவசவ என இழுக்கின்றன. ஜாலியாக பார்க்கவேண்டிய படம் இது. கோமாளிமேடை டீம்

விவசாயத்திற்கு உதவும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் - ஒரு பார்வை!

படம்
செல்வக்குமார் வரதராஜன்- இடதிலிருந்து இரண்டாவதாக.. விவசாயத்திற்கு உதவும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொன்மையான விதை, பூச்சிக்கொல்லி நிறுவனங்களிலிருந்து ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மாறுபடுவது, மக்களின் தேவைகளை எளிதாக தீர்த்து வைப்பதில்தான். இதனால் அவை வெற்றிகரமான நிறுவனங்களாக மாறுகின்றன.  பிரதமர் மோடி விவசாயிகளின் வருமானத்தை 2022க்குள் இரட்டிப்பாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். அவரின் நம்பிக்கைக்கு ஊக்கமூட்டும் விவசாய நிறுவனங்கள் இதோ... VilFresh 2016ஆம் ஆண்டு கோவையைச் சேர்ந்த செல்வக்குமார் வரதராஜன் தொடங்கிய ஸ்டார்ட்அப் நிறுவனம் இது. கிராம மக்களிடம் இருந்து பால் பொருட்களைப் பெற்று நகரங்களில் விற்று, அம்மக்களுக்கு உதவுகிறது. இம்முறையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் இரண்டாயிரம் பேர்களுக்கு மேல் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. தனது சிறப்பான செயற்பாடு காரணமாக, அண்மையில் 1.15 கோடி ரூபாய் முதலீட்டைப் பெற்றுள்ளது.  விவசாயிகளை மேம்படுத்துவதும், கிராமத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதும், நகரத்தினரை எங்களது பொருட்களின் மூலம் ஆச்சரியப்படுத்துவதும்தான் எங்கள் நோக்கம் என்றார் செல்வக்குமார்.

ஆண்களுக்கான சூப்பர் விட்டமின் மாத்திரை பிராண்டுகள்!

படம்
pixabay ஆண்களுக்கென்றே பல்வேறு விட்டமின் மாத்திரைகளை பல்வேறு நிறுவனங்கள் விற்று வருகின்றன. அவற்றில் சில நிறுவனங்களைப் பார்ப்போம். Rainbow Light Men’s One Multivitamin காய்கறிக்கலவை, புரோபயாட்டிக் உள்ளிட்டவற்றால் ஆனது. இதயம் மற்றும் புரோடஸ்டேட் சுரப்பி ஆகியவற்றைக் காக்கிறது. அலர்ஜி ஏற்படுத்தும் பால், பருப்பு, மீன் விஷயங்கள் இதில் கிடையாது.  Smarty Pants Men’s Complete சூயிங்கம் போல சுவைத்து சாப்பிடும் விட்டமின் மாத்திரை. 13 ஊட்டச்சத்துகள் இதில் உள்ளது. போரடிக்காமல் இதனை சாப்பிட ஆறு வகையான சுவையில் வெளியாகிறது. விட்டமின் பி12 சத்து கொண்டது.  இதுவும் மரபணு மாற்றம் தவிர்த்த பொருட்கள் ஆனது. அலர்ஜியை ஏற்படுத்தும் பால், கோதுமை, பருப்பு, மீன் ஆகிய பொருட்களை தவிர்த்து இந்த மாத்திரைகள் உருவாகியிருக்கிறது.  Smarty Pants Men’s Complete தினசரி சாப்பிட வேண்டிய விட்டமின் மாத்திரை. ஆற்றல் தரும், மன அழுத்தம் போக்கும் மாத்திரை இது. வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய மாத்திரை. வீகன், வெஜ் ஆட்களுக்கு ஏற்றாற் போல, விலங்குப் பொருட்களிலிருந்து எந்த பொருட்களையும் சேர்க்கவில்லை.  Garden of

மரபணு மாற்ற உயிர்களை பிறகோள்களில் உருவாக்க முடியுமா?

படம்
பிபிசி மிஸ்டர் ரோனி பூமியில் உருவாக்கிய மரபணு மாற்ற உயிர்களை நாம் பிறகோள்களில் காப்பாற்ற முடியுமா? இம்முறையில் யோசிப்பது நல்ல விஷயம்தான். ஆனால் டிஎன்ஏ முறையில் நாம் புதிய உயிரிகளை உருவாக்கினால் அவை வாழ்வதற்கு நீர் தேவை. வெள்ளியில்  நீரும் கிடையாது பனிக்கட்டியும் கிடையாது. வியாழனில் உள்ள யூரோபா நிலவில் நீர் உள்ளது. இதில் நாம் உயிர்களை உருவாக்க வாய்ப்புள்ளது. செவ்வாய் கோளில் பாக்டீரியா தாக்குப்பிடித்துவிட்டது. சாக்கடல், அன்டார்க் பகுதியிலும் கூட நுண்ணுயிரிகள் உள்ளன. நீர் இருந்தால் அக்கோளுக்கு ஏற்றபடி உயிர்களை நம்மால் உருவாக்க முடியும். நன்றி - பிபிசி

முதுமையிலிருந்து இளமைக்கு திரும்பினால் - தி க்யூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின்பட்டன்

படம்
தி க்யூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன் இயக்கம் - டேவிட் ஃபின்ச்சர் திரைக்கதை - எரிக் ரோத் ஒளிப்பதிவு - கிளாடியோ மிராண்டா இசை -  அலெக்சாண்டர் டெஸ்பிளாட் எஃப் ஸ்காட் ஃபிட்ஜெரால்டு எனும் சிறுகதை ஆசிரியரின் கதைப்பெயர்தான் படத்தின் தலைப்பு. பட்டன் எனும் பட்டன் தயாரிப்பாளருக்கு மகன் பிறக்கிறான். ஆனால் சிறுவயதில் எண்பது வயது முதிய தோற்றத்துடன்  அவன் இருக்கிறான். இதனால் விரக்தியுறும் அவனது தந்தை,  அக்குழந்தையை ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டு சென்று வைத்து விடுகிறான். அங்குள்ள கருப்பினத்தைச் சேர்ந்த பெண், அக்குழந்தையை எடுத்து வளர்க்கிறாள். அக்குழந்தையை தூக்கி எறியச்சொல்லி அவள் கணவன் உட்பட வற்புறுத்தியும் அதை மறுத்து வளர்க்கிறாள்.  அவளே அக்குழந்தைக்கு பெஞ்சமின் என பெயர் சூட்டுகிறாள். பெஞ்சமினின் ஆயுள் வரை இந்த இல்லம் கூடவே வருகிறது. ஒன்பது வயதில் எண்பது வயது முதுமை முகத்திலும் உடலிலும் தெரிகிறது பெஞ்சமினுக்கு. அங்கு டெய்சி என்ற பெண்ணைச் சந்திக்கிறான். சிலநாட்கள் சந்திப்பில் இருவருக்குள்ளும் நேசம் பூக்கிறது. பின்னர் அவரவர் வழியில் பயணிக்கிறார்கள். வயது கூட கூட மற

ஆட்டிசத்தைப் புரிந்துகொள்ள.....

படம்
ஆட்டிசம் சில புரிதல்கள் யெஸ்.பாலபாரதி பாரதி புத்தகாலயம் ரூ.50 ஆட்டிசம் என்றால் என்ன, அதனை எப்படி அணுகுவது, இக்குறைபாடு கொண்ட குழந்தைகளை எப்படி பயிற்சி அளிப்பது, சமூகத்தில் கலந்து உறவாட வைப்பது, ஆட்டிசக் குழந்தைகளின் உணவுப்பழக்கம் என பல்வேறு விஷயங்களை ஆசிரியர் விரிவாக விளக்கியிருக்கிறார். ஆட்டிசத்தை முதலில் கண்டறிந்து கூறிய லியோ கானர் என்ற மருத்துவர் தொடங்கி, பெற்றோருக்கான குறிப்புகள், பயிற்சிகள், இக்குறைபாட்டுடன் சாதித்த ஆல்பிரட் ஐன்ஸ்டீன் வரை விளக்கமாக எழுதப்பட்டுள்ளது. இது வெறும் ஆட்டிசம் பற்றிய நூலாக இல்லாமல் அனுபவ நூலாக இருப்பதன் காரணம், ஆசிரியரின் மகனும் ஆட்டிசக் குறைபாடு பாதிப்பு உள்ளவன் என்பதால்தான். சாதாரண பள்ளிகளில் ஆட்டிசக் குழந்தைகளை படிக்க வைப்பது சிரமம். எனினும் அதனை ஆசிரியர் முக்கியம் என்கிறார். சிறப்பு பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் ஆட்டிச குறைபாடு உள்ள மாணவர்கள் படிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் பாலபாரதி. சாதாரணமானவர்கள் சூழலைப் புரிந்துகொண்டு செயல்படுவார்கள் என்றால், ஆட்டிச குறைபாடு கொண்டவர்களுக்கு அனைத்தையும் சொல்லித் தருவது கட்டாயம்.  ஆட்டிச

அரசரைக் கொல்ல தற்கொலைப்படை திட்டம் - தி ஃபேட்டல் என்கவுண்டர்!

படம்
தி ஃபேட்டல் என்கவுன்டர் - தென்கொரியா 2014 இயக்கம் - லீ ஜே க்யூ ஒளிப்பதிவு - கோ நாக் சியோன் இசை மோவிக் தென்கொரிய மன்னர் ஜியாஞ்சோவை படுகொலை செய்ய நோரன் எனும் கொலைகாரப்படை திட்டமிடுகிறது. இதற்காக, அவர்கள் செய்யும் முயற்சியும், உள்ளுக்குள் அரசருக்கு நெருக்கமான உறவுகளின் அதிகாரப்போட்டியும்தான் படம். படத்தின் காட்சிகள் முன்பின்னாக நகர்கின்றன. ஒரு காட்சி முடிந்தபின், அதற்கு 45 நிமிடங்கள் முன்னதாக என மாறி மாறி நகர்வது ஒரு கட்டத்தில் இயக்குநர் நம்மை பரிசோதனை எலியாக மாற்றுகிறாரோ என்று தோன்றுகிறது. தொடக்க காட்சியில் அரசு படைவீரர்கள் விழுந்து கிடக்க, அறை உள்ளேயிருந்து தீனமான அலறல் கேட்க காட்சி மாறுகிறது. உண்மையில் தென்கொரிய மன்னர் ஜியாஞ்சோவின் வாழ்க்கையை தழுவியது. பதினேழாம் நூற்றாண்டிலிருந்து, பதினெட்டாம் நூற்றாண்டுவரை இவரது ஜோசியன் வம்சம் தென்கொரியாவை ஆண்டது. துரதிர்ஷ்டமான மன்னர் என்று வரலாற்றில் இவர் அழைக்கப்படுகிறார். காரணம், இவர் மன்னரான சமயம் இவரது குடும்பத்தில் நேர்ந்த அநீதியான மரணங்கள்தான். அதற்கு இவர்களின் ரத்த வழி உறவுகளை காரணமாக இருக்கின்றன. தற்கொலைப

கர்ப்பிணியை தாக்கி குழந்தையை வெளியே எடுத்த ஜப்பான் சைக்கோ!

படம்
அசுரகுலம் - இன்டர்நேஷனல் யோஷிரா கொடைரோ சுருக்கம் ஜப்பானைச் சேர்ந்த ராணுவ வீரர். சீனா - ஜப்பான் போர் நடைபெற்றபோது அதில் பங்கேற்று பல்வேறு கொடூர கொலைகளைச் செய்தார். பத்துக்கும் மேற்பட்ட பெண்களை கொடூரமாக கொன்றார். 1928ஆம் ஆண்டு சீனாவின் ஜினன் எனுமிடத்தை ஜப்பான் ராணுவம் கைப்பற்றியது. இப்போரில் பல்வேறு கொலைகள், வல்லுறவுகள் நடைபெற்றன. சீனாவில் நடைபெற்ற கொடுமைகளை உலகிற்கு சொன்ன வீர ர்களில் யோஷிராவும் ஒருவர். மே, 1945 முதல் ஆகஸ்ட் 1946 வரையில் பத்து பெண்களை கொடூரமாக கொன்றார். இறந்த பெண்ணுடன் பாலுறவு வைக்கு முயன்றபோது காவல்துறையில் பிடிபட்டார். 1946ஆம் ஆண்டில் ஆக. 20 அன்று கைதானவர், அடுத்த ஆண்டு ஜூனில் தன் கொலைகளை ஒப்புக்கொண்டார். 1949 ஆம் ஆண்டு அக்டோபர் ஐந்தாம் தேதி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. இறக்கும்போதும் பெரிதாக யோஷிரோ கவலைப்படவில்லை. அமைதியாக சிகரெட் ஒன்றைப் பிடித்துவிட்டு இறந்தார். இவரது வாழ்க்கையை மையமாக வைத்து டோக்கியோ இயர் ஜீரோ என்ற படம் 2007ஆம் ஆண்டு தயாரானது. 1905இல் ஜப்பானில் பிறந்த யோஷிரோ, பள்ளியில் சாகச வீரன். தினசரி வகுப்பில் கிடைக்கும் சோனிப்பயல்களை அடித்

இலவச விண்டோஸ் மென்பொருட்கள் உங்களுக்காக....

படம்
இலவச மென்பொருட்கள்! வின்அப்டேட்ஸ் வியூ- winupdatesview விண்டோஸில் கிடைக்கும் அனைத்து அப்டேட்களையும் இந்த மென்பொருள் மூலம் கணினியில் தரவிறக்கிக் கொள்ளலாம். இல்லையெனில் விண்டோசில் அப்டேட்ஸ் மெனுவில் சென்று செட்டிங்குகளை மாற்ற வேண்டும். இந்த மென்பொருள், உங்களுக்கு நிறைய அப்டேட்ஸ்களை வழங்கும். எம்ஐ டெக் இன்போபார் 3 -mitech infobar3 இந்த மென்பொருள் உங்களது கணினியில் சிப், ராம் செயல்பாடு பற்றிய செயல்பாடுகளை தெரிந்துகொள்ளலாம். இதில் கேப்ஸ்லாக், ஸ்கோரல் லாக், நம்ஸ் லாக் பற்றி தகவல்களையும் அறியலாம். கூடுதலாக ராய்டர்ஸ் நிறுவன செய்திகளும் கிடைக்கிறது. பிக்ஸெலிட்டர் Pixelitor 4.2 ஜிம்ப் அளவுக்கு சிறப்பான மென்பொருள் அல்ல. ஆனால் படங்களை ஏராளமான பிரஷ்களை கொண்டு அழகுபடுத்த முடியும். படங்களுக்கு நிறைய எஃபக்டுகளை கொடுத்து அதனை சிறப்பான படமாக மாற்றலாம். நன்றி - கம்யூட்டர்ஆக்டிவ்

மக்களை பிரிக்கும் அரசியலை நாங்கள் செய்ய மாட்டோம்! - ஹேமந்த் சோரன்

படம்
dh நேர்காணல் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதல்வர் நீங்கள் எதிர்கட்சியைச் சேர்ந்த ரகுபர்தாஸின் மீதான வழக்கை கைவிட்டிருக்கிறீர்களே? மாநிலத்தில் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளை இதன்மூலம் தொடங்கியுள்ளேன். சட்டசபைக்கு உள்ளேயும் வெளியேயும் நல்ல நடவடிக்கைகளை உருவாக்க முடியும் என நம்புகிறேன். இதேபோல ஊழல் வழக்குகளையும் தள்ளுபடி செய்வீர்களா? அதற்கு வாய்ப்பில்லை. ஊழல் வழக்குகளில் சட்டவிதிகளுக்கு ஏற்பவே நாங்கள் நடந்துகொள்வோம். இந்த வழக்குகளை நடத்துவதில் எனக்கு எந்தவித உள்நோக்கமும், பழிவாங்கும் எண்ணமும் கிடையாது. உங்களது அரசின் முன்னுரிமைகள் என்ன? மக்கள் எங்களை எளிதில் அணுக முடியும் என்பதுதான். விரைவில் நீங்கள் அதற்கான சான்றுகளை காண்பீர்கள். தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம் இவற்றைப் பற்றி உங்களது கருத்து? மக்கள் இங்கே வேலைவாய்ப்புகளின்றி அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில்அவர்களிடம் ஆவணங்கள் கேட்பது முறையாகாது. பணமதிப்பு நீக்கத்தின்போது லட்சக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று நொந்து போனார்கள். அந்த துயரம் எங்கள் மாநிலத்தில் மீண்டும் நடக்க நான் அனுமதி