இடுகைகள்

கொரோனா பாதிப்பிலும் ஏழைகளுக்கு உதவும் நாயகிகள்!

படம்
pixabay கொரோனா நாயகிகள் தூலிகா குப்தா, ஜெய்ப்பூர் கோவிட் -19 நோய்த்தொற்று வேகமாக பரவிவருகிறது. அரசைப் பொறுத்தவரை விளக்கேற்றுவது, கைதட்டுவது இக்காலத்தை விழா போலவே கொண்டாடுகிறது. ஆனால் சாதாரண தினக்கூலி மனிதர்களுக்கு இதெல்லாம் உதவாது. பசியில் காதடைத்து போய் உட்கார்ந்திருப்பவர்களுக்கு கைதட்டி பாடுவது, நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றும் எண்ணம் இருக்குமா என்று தெரியவில்லை. இதற்கு எதிராக தன்னார்வலர்கள் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்குச் செய்து வருகிறார்கள். எந்த பேரழிவிலும் தன்னார்வமாக செயல்பட்டு மக்களுக்கு உதவும் நல்லுள்ளங்கள் உண்டு. அவர்களைப் பார்ப்போம். இந்திய கைவினைப் பொருட்கள் வடிவமைப்ப நிறுவனத்தைச் சேர்ந்த தூலிகா குப்தா, தனது துறை சார்ந்த தொழிலாளர்களுக்கு நெருக்கடியான இக்காலத்தில் உணவுப் பொருட்களை வழங்கி வருகிறார். ஊரடங்கு காலத்தில் இடம்பெயர்ந்த தொழிலாளர்களும, எங்களது துறைசார்ந்த கைவினைஞர்களும் உணவின்றி, பணமின்றி தடுமாறியதை டிவி செய்தி வழியாக பார்த்தேன். எனவே அவர்களுக்கு முடிந்தவரை உதவ முடிவெடுத்தேன் என்கிறார். இவர் தனது தொடர்புகளைப் பயன்படுத்தி, கைவினைக் கலைஞர்களுக்கு முக கவசம்

போலிச்செய்திகள் இந்தியர்கள் மீது தீவிர ஆதிக்கம் செலுத்தி வருகிறது! - ஜோயோஜீத் பால்

படம்
ஜோயோஜீத் பால் போலிச்செய்திகளை நம்பி பிறரை புகார் சொல்ல மக்கள் தயாராக இருக்கிறார்கள்! ஜோயோஜீத் பால், மிச்சிகன் பல்கலைக்கழக தகவல்தொடர்புத்துறை உதவிப் பேராசிரியர். சமூக வலைத்தளங்கள் போலிச்செய்திகளை கட்டுப்படுத்துவதில் தீவிரமாக செயல்படுகின்றன என்று நினைக்கிறீர்களா? மக்கள் தொடர்பு நிலை சார்ந்த கொள்கைளின் கோளாறு என்று நினைக்கிறேன். மேலும் ஏராளமான தன்னார்வக் குழுக்கள் சமூக வலைத்தளங்களில் நடைபெறும் போலிச்செய்தி, இவை சார்ந்த மனநிலை பற்றி ஆராய பல்லாயிரம் கோடி பணத்தை முதலீடு செய்து வருகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண நிறைய நிதி ஒதுக்கீடு தேவைப்படுகிறது. சிலர் அனுப்பும் போலிச்செய்திகளை மக்கள் பிறருக்கு அனுப்பிவிடுகிறார்கள். இதனை தடுப்பது எப்படி? சமூக வலைத்தளம் வழியாக வரும் செய்திகளை ஒருவர் பிறருக்கு பகிருவதற்கு முன்னர், அதனை சம்ப்ந்தப்பட்டவரிடம் கேட்டு தெளிவு பெறவேண்டும். அல்லது அவர்கள் இணையத்தில் வலைத்தளம் வழியாக சோதிக்கவேண்டும். இப்படி செய்வதால் போலிச்செய்திகள் பிறருக்கு பரவாது தடுக்கப்படும். இந்தியாவில் தற்போது பரவி வரும் போலிச்செய்திகள் ஏராளமான சிக்கல்களை உருவாக்கி வருகின்றன.

தொழில்நுட்பத்தைக் கண்டு நீதிபதிகளும் வழக்குரைஞர்களும் பயப்படுகிறார்கள்! - ஏ.பி.ஷா

படம்
A.p. Sha மொழிபெயர்ப்பு நேர்காணல் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா தற்போது கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக நீதிமன்றங்கள் இயங்க முடியாத நிலை நிலவுகிறது. இதற்கு மாற்றாக, நீதிமன்றங்களை டிஜிட்டல் முறையில் உருவாக்கும் ஆலோசனைகள் கூறப்பட்டு வருகின்றன. இதைப்பற்றி முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவிடம் பேசினோம். விர்ச்சுவல் முறையில் நீதிமன்றத்தை இயக்குவதில் தடை என்ன? இந்தியாவில் பெருந்தொற்று காரணமாக விர்ச்சுவல் முறையில் நீதிமன்றங்களை இயக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பெருந்தொற்று, வரி, போக்குவரத்து நெரிசல் ஆகிய காரணங்களால் இங்கிலாந்தில் விர்ச்சுவல் முறையில் நீதிமன்றங்கள் செயல்படத் தொடங்கிவிட்டன. அடுத்து, சிங்கப்பூரில் விசாரணை, உத்தரவுகள்   உட்பட அனைத்தும் விர்ச்சுவல் முறையில் இயங்கிவருகின்றன. இவர்கள் இதனை பல்வேறு மாவட்டங்களுக்கு அமலில் இருக்கும்படி அமைத்துள்ளனர். ஆன்லைன் நீதிமன்றங்கள் பற்றி ராபர்ட் சஸ்க்கைன்ட் என்ற எழுத்தாளர் 2019ஆம் ஆண்டு எழுதியுள்ளார். இந்தியாவில் விர்ச்சுவல் நீதிமன்றத்தை திட்டமிட்டு அமைக்கவேண்டும். மேலும் இவற்றை கட்டமைப்பதற்கு பெரிய அளவில் நிதி தேவைப்படுகிறது.

அனைத்து கொலைகளிலும் பங்கு வகிக்கும் கடிகாரங்கள்! - டிக்... டிக் ..டிக் - அகதா கிறிஸ்டி

படம்
நூல் உலகம் டிக் டிக் டிக் அகதா கிறிஸ்டி தமிழில் - கொரட்டூர் சீனிவாஸ் மிஸஸ் கூட்டின் வீட்டில் தங்கியிருக்கும் மிஸ்டர் வேட்டை அங்குள்ளவர்கள் தாமதமாக தூங்கி எழுந்திருக்கிறார் என வருத்தப்படுகிறார்கள். அவரை நேரமே எழ வைக்க அவர்கள் எட்டு அலாரக் கடிகாரங்களை வாங்கி செட் செய்கிறார்கள். ஆனால் அது அவரின் அறையில் மட்டும் ஒலிக்கவில்லை. காரணம் என்ன என்று பார்த்தால் அவர் படுக்கையில் இறந்துகிடக்கிறார். ஏழு கடிகாரங்கள் அலமாரியில் இருக்கின்றன. ஒன்று மட்டும் கீழே புல்வெளியில் வீசப்பட்டு  இருக்கிறது. தன் காதலிக்கு எழுதிய கடிதத்தில் செவன் டயல்ஸ் என்ற வார்த்தையைக் குறிப்பிட்டு இருக்கிறார். உண்மையில் யார் அந்த கொலையை செய்தது? செவன் டயல்ஸ் என்ற வார்த்தைக்கு உண்மையான பொருள் என்ன என்பதை ஜிம்மி தேசிகர், பண்டில் வேட்டின் சகோதரி லொரைன் ஆகியோர் கண்டுபிடிக்க முயல்கின்றனர். 300 பக்க நாவல் இதைத்தான் பேசுகிறது. கதையின் தொடக்கம் சுவாரசியமாக இருந்தாலும் ஏராளமான கதாபாத்திரங்களின் இடையறாத உரையாடல்கள் நிறைய இடங்களில் சலிப்பூட்டுகின்றன. பில், பண்டில் பேசும் உரையாடல்கள் இதற்கு மிகச்சிறந்த உதாரணம். நாவலில் ஒரே ஆறுதல் பண்டிலின்

துரோக நண்பன், உடலைக் கொடுத்து புகழ்பெற துடிக்கும் காதலி! - அவள் எழுதிய பெஸ்ட்செல்லர்

படம்
காமன்ஃபோல்க்ஸ் அவள் எழுதிய பெஸ்ட் செல்லர் ரவி சுப்ரமணியன் தமிழில் - மஹாரதி வெஸ்ட்லேண்ட் வங்கித்துறையில் பணியாற்றும் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆதித்யா கபூர், தன் வாசகி ஒருத்தியைக் காதலிக்கிறார். சூழ்ச்சியான அந்த காதலால் அவர் படும் பாடுகள்தான் கதை.  நூலில் தலைப்புதான் சரியில்லை. ஆனால் தமிழ் மொழிபெயர்ப்பு சரளமாக எளிதில் தடுமாற்றமின்றி படிக்கும் வகையில் மஹாரதி மொழிபெயர்த்திருக்கிறார். முக்கியமான அம்சம் இது. வங்கியாளர் ஒருவர் புகழ் வெளிச்சத்தில் இருக்கிறார். அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியொன்றில் அவர் பேசும் பேச்சை பேத்தல் என்று வாசகி ஒருவர் ஊதாசீனப்படுத்தி பேசுகிறார். இதனால் எழுத்தாளர் ஆதித்யா கோபம் கொள்கிறார். தன்னுடைய நூல்களை படிக்குமாறு கேட்டுக்கொண்டு அங்கிருந்து சமாளித்து பேசி வெளியேறுகிறார். பின்னர் அடுத்த நாள் காலையில் அவருக்கு மின்னஞ்சல் வருகிறது. அதில் தங்களுடைய நாவல் பிரமாதமாக இருக்கிறது. நான் தங்களை அவமதித்து பேசியது தவறு என கூறுகிறாள் ஸ்ரேயா என்ற அந்த பெண். அவள் நடந்துகொண்ட முறையால் கோபத்தில் இருக்கும் நிர்வாகத்தையும் இந்த மின்னஞ்சலையும் அதற்கு பதிலிட்ட ஆதித்யாவின் மின்னஞ்சலையும் வைத

கேங்ஸ்டர் உடலில் பள்ளிச்சிறுவன், பள்ளிச்சிறுவன் உடலில் கேங்ஸ்டர் - தி ட்யூட் இன் மீ

படம்
pinterest தி ட்யூட் இன் மீ - கொரியா இயக்கம் - கான் ஹியோ ஜின் எழுத்து - ஷின் ஹான் சொல், ஜோ ஜூங் பூன், காங் ஹியோ ஜின்    கேங்ஸ்டர் ஒருவரின் ஆன்மாவும், பள்ளியில் படிக்கும் சிறுவனின் ஆன்மாவும் இடம் மாறினால் என்னாகும் என்பதுதான் கதை. உணவகம் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு வெளியே வரும்போது சாலையில் நெருக்கடி ஆகிறது. அப்போது காரிலிருந்து வெளியே வந்து பேசிக்கொண்டிருக்கிறார் கேங்ஸ்டர். அப்போது அங்குள்ள கட்டடம் ஒன்றின் மேலிருந்து பள்ளிச்சிறுவன் கேங்ஸ்டர் மீது விழ கதை தொடங்குகிறது. எழும்போது பள்ளிச்சிறுவன் உடலில் கேங்ஸ்டர் ஆன்மா இருக்கிறது. கேங்ஸ்டர் விபத்தின் காரணத்தினால் கோமாவில் வீழ்கிறார். அந்த விபத்து தானாக நேரவில்லை என்பதை கேங்ஸ்டர் உணர்கிறார். அப்போதான் தன் காதலியை சாலையில் சந்திக்கிறார். அவரின் மகளுக்கு உதவி செய்யப்போய்தான். பள்ளிச்சிறுவன் கட்டட த்திலிருந்து  விழுந்திருப்பதை புரிந்துகொள்கிறார் கேங்ஸ்டர். அப்போது அவர் அறியாத உண்மை ஒன்று தெரிய வருகிறது. அது என்ன? பள்ளிச்சிறுவனுக்கு இருக்கும் பிரச்னைகளை எப்படி தீர்க்கிறார் கேங்ஸ்டர், அவரின் நிறுவனங்களை சூறையாட நினைக்கும் மனைவியின் செயல்பாடுகளை எப்ப

தந்தையின் கொள்கைக்கும் மகளின் காதலுக்குமான போராட்டம் - ஹலோ குரு பிரேமா கோசமே

படம்
pinterest ஹலோ குரு பிரேமா கோசமே - தெலுங்கு இயக்குநர் திரினாத ராவ் நாகினா கதை திரைக்கதை வசனம் - பிரசன்ன குமார் ஒளிப்பதிவு விஜய் சி சக்ரவர்த்தி இசை  தேவி ஸ்ரீ பிரசாத் அப்பாவின் கொள்கையும் மகளின் காதலும் முட்டிக்கொண்டால், அதுதான் குரு பிரேமா கோசமே படம். சஞ்சு கல்லூரி முடித்துவிட்டு ஜாலியாக ஊரைச்சுற்றிக்கொண்டிருக்கிறார். நண்பர்களுக்கு பிரச்னை என்றால் அடிதடி செய்வது. பிடித்த பெண்ணை கல்யாணம் செய்து வைப்பது என வாழ்ந்துகொண்டிருக்கிறார். அப்போது அவரின் மாமா, இப்படி சுற்றினால் கஷ்டம். ஏதாவது வேலை தேடிப்போய் செய். அதுதான் உங்க அப்பா அம்மாவுக்கும் பெருமை என்கிறார். இதனால் ஹைதராபாத்திலுள்ள அம்மாவின் கல்லூரி நண்பரான விஷ்வநாத் வீட்டுக்குச் செல்கிறார் சஞ்சு. அங்கு செல்வதற்கு முன்னர் ரயிலில் ஒரு பெண்ணை கிண்டல் செய்து பயமுறுத்திக்கொண்டே வருகிறார் அவர்தான் நண்பரின் மகள் அனு. இருவருக்குமான உறவு முட்டல் மோதலாவே இருக்கிறது. விஷ்வநாத்தின் கதாபாத்திரம்தான் படத்தை நடத்திச் செல்கிறது. ஐ.டி ஆபீசில் ரீத்து என்ற பெண்ணை காதலிக்கிறார். அவர் சாப்பிடும் உணவிற்கு இவர் பணம் கொடுக்கிறார். கேப் புக் செய்கிறார். இப்படி அடி