இடுகைகள்

காமதேனுவின் சக்தியை சுயநலத்திற்கு பயன்படுத்திக்கொள்ளும் சுயநல குடும்பம்! - காமதேனுவின் முத்தம்

காமதேனுவின் முத்தம்  காலச்சக்கரம் நரசிம்மா வானதி பதிப்பகம்.  ப. 579 ரூ. 300 தெய்வீகத்தன்மை கொண்ட சாகச நாவல்.  கோவூர் என்ற ஊரிலுள்ள கோவிலில் பெரிய வீட்டுக்காரர்கள் ஊர் நன்மைக்காக யாகம் ஒன்றை ஆண்டுதோறும் நடத்துவது வழக்கம். இதில் பெரியவீட்டுக்கார  பெண்கள் யாரேனும் கர்ப்பிணியாக கலந்துகொண்டால்  அந்த ஊருக்கு சுபிட்சம் கிடைக்கும் என்ற நம்புகிறார்கள். காமதேனுவை கர்ப்பணிப் பெண் தன் கண்ணார பார்த்துவிட்டால் அவளுக்கு பிறக்கும் பெண் குழந்தைக்கு தெய்வீகத்தன்மை கிடைக்கிறது. அவள் சொல்வதெல்லாம் பலிக்கிறது. அவள் தொட்ட இடமெல்லாம் சந்தனம், பன்னீரின் மணம் வீசுகிறது. இப்படி தமயந்தி என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு தேனுகா என்ற பெண்குழந்தை பிறக்கிறது. அவள் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பாஞ்சாலியம்மா என்ற தமயந்தியின் மாமியார், புத்தி சுவாதீனம் இல்லாதவர் என கூறப்படுகிறாள். உண்மையில் அவளுடைய மகளுக்கு நேர்ந்த கொடூரமான முடிவால் அவள் புத்தி பிறழ்ந்து போனதுபோல ஆகிவிடுகிறாள்.  தமயந்தி கர்ப்பிணியாக இருக்கும்போது காமதேனுவைப் பார்க்கிறாள். அதை சொல்லவேண்டாமென அவள் வீட்டு வேலைக்காரி அங்காயி சொல்கிறாள். ஆனால் அதனை மீறி தமயந்தி

ஐஏஎஸ் பதவியில் சாதித்த சாதனைகளும், சிக்கல்களும் - ப.ஸ்ரீ. இராகவன்

படம்
நேரு முதல் நேற்று வரை  ராகவன்  கிழக்கு பதிப்பகம் சுதந்திரமடைந்த இந்தியாவில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய ராகவன், தனது பணி அனுபவங்களை நூலில் விவரித்துள்ளார். வெறும் விருப்பு வெறுப்பு மட்டுமன்றி, எதிர்கால குடிமைப்பணித் தேர்வு எழுதும் அதிகாரிகள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று இறுதிப்பகுதியிலும் வலியுறுத்தியுள்ளார். அதற்காக கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  தலைநகரான டில்லியில் பணியாற்றுவதற்காக ஆங்கிலத்தோடு இந்தியும் கற்றது தனக்கு எப்படி பயன்பட்டது என்பதை லால் பகதூர் சாஸ்திரியோடு பணியாற்றிய அனுபவத்தில் சொல்லியிருக்கிறார். இதை சொல்லும்போதும், பல்வேறு நிகழ்வுகளின்போதும் தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் காரணமின்றி அரசியலுக்காக இடம் மாற்றுதல் செய்யப்படுவதை கண்டமேனிக்கு திட்டித் தீர்த்துள்ளார்.  இதற்கு காரணம் அரசு பணியில் உள்ள அரசு தலையீடூ  என புரிந்துகொண்டு நாம் வாசித்து கடந்துவிடலாம். நேரு, லால் பகதூர் சாஸ்திரி, குல்சாரிலால் நந்தா, ஜோதிபாசு என பல்வேறு அரசியல் தலைவர்களோடு பழகிய அனுபவங்களை நேர்த்தியாக தொகுத்து எழுதியுள்ளார். கொல்கத்தாவில் செய்த வளர்ச்சிப் பணிகள், அதற்கு ந

கிரிக்கெட்டை விட மனித உயிர்களைக் காப்பதே முக்கியம்! - சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்

படம்
dna ஹர்பஜன்சிங் , விளையாட்டு வீரர் பந்து வீச்சாளர்கள் பந்துகளை எச்சில் , வியர்வையை பயன்படுத்தி துடைக்க கூடாது என ஐசிசி தடைகளைக் கொண்டுவந்தால் என்னாகும் ? ஐசிசி அமைப்பு அப்படி ஒரு தடையை பெருந்தொற்று காரணமாக கொண்டுவரக்கூடும் . ஆனால் இந்த விதி அகற்றப்படாதபோது கிரிக்கெட் முழுமையாக பேட்ஸ்மேன்களின் விளையாட்டாக மாறிவிடும் . அப்போது விளையாட்டில் பந்துவீச்சாளர்கள் சாதாரண மெஷினாகவே இருப்பார்கள் . எச்சில் , வியர்வை ஆகியவற்றை பந்து வீச்சாளர்கள் பயன்படுத்தாதபோது பந்து ஸ்விங் ஆகாது . ஐசிசியின் தடை விளையாட்டின் தன்மையை முழுமையாகவே மாற்றக்கூடியது . இந்த ஆண்டு ஐபிஎல் விளையாட்டில் வெளிநாட்டு வீரர்கள் விளையாட வாய்ப்பு உள்ளதா ? பெருந்தொற்று காலத்தில் ஐபிஎல் விளையாட்டை விட மனிதர்களின் உயிரே முக்கியம் . பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் இந்த ஆண்டு நடைபெறாமல் நின்றுபோயிருக்கிறது . இனியும் கூட வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவுக்கு விளையாட வருவது சந்தேகமாக உள்ளது . காரணம் , நோய்த்தொற்று பயம்தான் . இதில் இந்திய அரசும் , இந்திய கிரிக்கெட் வாரியமும் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்று த

உலக நாடுகளை தலைமையேற்று நடத்துவதை அமெரிக்கா சுமையாக கருதுகிறது! பேராசிரியர் யான் சுவா டாங்

படம்
pixabay உலகம் , வலிமையான தலைமையை இன்னும் அடையாளம் காணவில்லை ! யான் சுவாடாங் , வெளியுறத்துறை பேராசிரியர் , சிங்குவா பல்கலைக்கழகம் சீனா . பெருந்தொற்று சூழ்நிலை வலிமையான உலக நாடுகளிடையே எந்த விஷயத்தை தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது ? கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக உலகம் சரியான ஊக்கமும் உத்வேகமும் கொண்ட தலைமையின்றி தவித்து வருகிறது . பெருந்தொற்று காலம் இந்த கருத்தை மீண்டும் உறுதி செய்துள்ளது . அமெரிக்க அதிபர் டிரம்ப் , உலக நாடுகளுக்கு தலைமை தாங்கி வழிநடத்துவதை தேவையில்லாத சுமை என்று கருதுகிறார் . அது உண்மையாகவும் இருக்கலாம் . பிற நாடுகள் தலைமை தாங்குவதற்கான வளம் அல்லது மனம் என இரண்டுமே இல்லாமல் இருக்கின்றன . அதிகாரப்போட்டியில் சீனா , அமெரிக்கா தீவிரமாக போரிட்டு வருகின்றன . எதிர்காலத்தில் இந்த தலைமைப் பொறுப்பை பிற நாடுகள் ஏற்க முன்வருமா என்பதும் கூட சந்தேகமே . தனது நாட்டை ஓர் நாடு வலிமையாக வைத்திருப்பதும் , வழிநடத்துவதும் முக்கியம் என்று உங்கள் நூலில் கூறியிருக்கிறீர்கள் . உலக நாடுகளை பெருந்தொற்று எப்படி பாதித்துள்ளது ? ஓர் நாடு எப்படி தன் நாட்டு மக்களை பெருந்தொற்

இனி ஒன்றையும் மறைக்க முடியாது - பரவும் அரசின் கண்காணிப்பு பயங்கரவாதம்

படம்
கோவிட் -19 தொற்று மக்களுக்கு சிக்கலை ஏற்படுத்துவதாக அமைந்து பொருளாதாரத்தை உடைத்து நொறுக்கியுள்ளது. ஆனால் பல்வேறு நாட்டு அரசுகளுக்கு இதைப்போன்ற கண்காணிப்புகளை பலப்படுத்தும் சந்தர்ப்பம் வேறு எப்போதும் கிடைத்துவிடாது. எனவே பல்வேறு நாட்டு அரசுகளும் கண்காணிப்பு சார்ந்த செயலிகளை வேகமாக அமல்படுத்தி மக்களை கம்பி வேலிக்குள் அடைத்து வருகின்றன. ஃபேஸ்புக் நிறுவனர் இணையக் கட்டுப்பாடுகளை கொண்டுள்ள சீனாவில் தன் தொழிலை கொண்டு செல்லமுடியவில்லை என மனம் குமுறியுள்ளார். உண்மையில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் ஆகிய நிறுவனங்களுக்கு இணையான மென்பொருட்களை சீனர்கள் உருவாக்கி பயன்படுத்தி வருகின்றனர். சீனாவில் நிலவிவரும் நிலவரம் சரியா தவறா என்பதல்ல. மேற்கத்திய ஜனநாயக முறை என்பதை மார்க் பேசும் விதத்தில் புரிந்துகொள்ள வேண்டுமெனில், வணிகத்தை அமெரிக்கர்கள், இங்கிலாந்துக்காரர்கள் செய்யவேண்டும். அதற்கு பயனாளர்களாக ஆசிய கண்டம் இருக்கவேண்டும் என்பதைத்தான் அவரது பேச்சு மறைமுகமாக குறிப்பிடுகிறது. இனிவரும் பத்தாண்டுகளுக்குள் நாம் வைத்திருக்கும் ஆண்ட்ராய்டு போன், அதில் செயல்படும் பல்வேறு செயலிகள் மூலம் நம் தினசரி

வன விலங்குகளை அழியாமல் காத்தால்தான் நம்மை நாம் காத்துக்கொள்ள முடியும்! புகைப்படக்காரர் ஜோயல் சர்தோர்

படம்
வனவிலங்கு புகைப்படக்காரர் ஜோயல் சர்தோர் நேஷனல் ஜியோகிராபிக் போட்டோ ஆர்க் திட்டத்திற்காக 25 ஆண்டுகளாக அழிந்து வரும் வனவிலங்குகளைப் பற்றி புகைப்படங்களை எடுத்து தொகுத்து வருகிறார். வனவிலங்குகளை பாதுகாக்கவேண்டியதன் அவசியம், தனது முக்கியமான புகைப்படத் தருணங்கள், விலங்குகளிடம் மனிதர்கள் கற்கவேண்டிய விஷயங்கள் என பலவற்றையும் நம்மிடம் பேசினார். நன்றி: டைம் எவோக் ஆங்கிலத்தில்: ஸ்ரீஜனா மித்ரா தாஸ்   நீங்கள் புகைப்படம் பிடித்த விலங்குகளிடமிருந்து என்ன விஷயங்களைக் கற்றுக்கொண்டீர்கள்? மூளையை எப்படி தன்னுடைய வாழ்க்கைக்காக பயன்படுத்துவது என்பதை மிகவும் நுட்பமாக இந்த விலங்குகள் தெரிந்து வைத்துள்ளன. சத்தம் எழுப்பாமல் பறக்கும் ஆந்தை, நிறமாற்றம் கொள்ளும் பச்சோந்தி, அனைவரோடும் இணைந்து பணியாற்றும் எறும்புகள் என நாம் கற்றுக்கொள்வதற்கான விஷயங்கள் நிறைய உள்ளன. புகைப்படங்கள் எடுப்பது என்பது தினசரி பள்ளி சென்று பாடம் கற்பது போன்றுதான் இருந்தது.   25 ஆண்டுகளாக இத்துறையில் இயங்கி வருகிறீர்கள். அனுபவங்கள் எப்படி இருக்கின்றன? மக்கள் இன்று என் புகைப்படங்களைப் பார்த்து வனவிலங்குகளுக்கு என்ன நடக்கிறது எ

கோவிட் -19 போன்ற பெருந்தொற்றுக்கு சுற்றுப்புற சூழலும் முக்கியக் காரணம் - டிரேசி கோல்ட்ஸ்டீன்

படம்
pixabay டிரேசி கோல்ட்ஸ்டீன், துணை இயக்குநர் ஒன் ஹெல்த் இன்ஸ்டிடியூட்.   2009ஆம் ஆண்டு யுஎஸ்எய்ட் பிரடிக்ட் என்ற திட்டத்தை தொடங்கியது. முப்பது நாடுகளில் ஆய்வு செய்து 900 வைரஸ் இனங்களைக் கண்டுபிடிக்கும் திட்டம் இது. இதில்   1,45,000 மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டன. உங்களுடைய ஒன் ஹெல்த் அமைப்பை பற்றி விவரியுங்கள். எங்களுடைய அமைப்பு ஒருவருக்கு பெருந்தொற்று காரணமாக பாதிப்பு ஏற்படுகிறது என்றால் அவரின் சூழல் பாதிப்பையும் கணக்கில் கொள்கிறது. இப்போது எங்கள் அமைப்பில் நுண்ணுயிரியாளர்கள், சமூகவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொருளாதார வல்லுநர்கள் இப்பிரச்னையை பல்வேறு கோணங்களில் பார்த்து அதனை தீர்க்க முயல்கின்றனர். ஆசியாவில் நீங்கள் கண்டறிந்தது என்ன? மெர்ஸ் பரவியபோது அதன் பிறப்பிடம் எதுவென்று ஆராய்ந்து வந்தோம். மத்திய கிழக்கு நாடுகள் அல்லது ஆப்பிரிக்காவில் இருந்து கிருமிகள் பரவியிருக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் மாதிரிகளை சோதித்தபோது, அந்த நுண்ணுயிரிகள் ஆசியாவில் உருவாகி பரவியிருக்கின்றன என்பதை அறிந்தோம். பிற கண்டங்களை விட ஆசியாவில் வௌவால்களின் பிறப்பு சதவீதம் அதிகம். இதனால் நாங்கள் வைரஸ