இடுகைகள்

இதயத்தால் பணிபுரிந்தால் வெற்றி நிச்சயம் - கைனாஸ் கர்மாகர்

படம்
               இம்பேக்ட் 50, சாதனைப் பெண்கள் கைனாஸ் கர்மாகர் ஆகில்வி விளம்பர நிறுவனம், இயக்குநர் கைனால்ஸ் கர்மாகருக்கு கிடைத்த வேலைவாய்ப்பு அனைத்துமே பலரும் ஆசைப்படும் நிறுவனங்கள்தான் ஆனால் அதனை அவர் அதிர்ஷ்டவசமாக அடையவில்லை. அவர் அதற்கான வழிகளில் கடினமான உழைத்திருக்கிறார். அப்படி உழைத்து களைத்து தூங்கும்போதுதான் அவருக்கு பல்வேறு வேலை வாய்ப்புகள் கதவை தட்டியிருக்கின்றன. கைனாஸ் தனது தூக்கத்தை எப்போதும் இழக்க விரும்பாதவர்தான். ஆனால்  இரண்டாம் முறை அலைபேசி ஒலித்தபோது அவர் தூக்கம் கலைந்து அதனை எடுத்து பேசினார். அதனால்தான் நாம் அவரைப் பற்றி இங்கு எழுதிக்கொண்டிருக்கிறோம். 2010ஆம் ஆண்டு ஆகில்வி விளம்பர நிறுவனத்திற்குள் காலடி எடுத்து வைத்தார். 2017ஆம் ஆண்டு நிறுவனத்தின் முக்கியமான இயக்குநராக அறியப்பட்டார். 2020ஆம் ஆண்டு நிறுவனத்தின் மூன்று முக்கியமான கிரியேட்டிவ் இயக்குநர்களில் அவரும் ஒருவர். ப்ரூக் பாண்ட் நிறுவனத்திற்காக அவர் விளம்பர வாசகம் ஒன்றை உருவாக்கினார். ரெட்லேபிள் என்ற டீபிராண்டிற்காக டேஸ்ட் ஆப் டுகெதர்னெஸ் என்று இவரின் மூளை உருவாக்கிய ஐடியா சந்தையில் நிறுவனத்தை புகழ்பெற வைத்துவிட்டது

இம்பேக்ட் 50! - சாதனைப்பெண்கள்- மலையாள மனோரமா நிறுவனத்தை டிஜிட்டல்மயப்படுத்திய பெண்மணி! - மரியம் மேத்யூ

படம்
          மரியம் மேத்யூ       மரியம் மேத்யூ இயக்குநர், மனோரமா ஆன்லைன் 1997ஆம் ஆண்டு மலையாள மனோரமாவின் இணையபதிப்பு உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை 36 மில்லியன் மக்கள் அதன் வருகைதரும் பார்வையாளர்களாக உருவாகியுள்ளனர். இந்த வளர்ச்சிக்கு பின்னால் மரியம் மாமன் மேத்யூவின் அர்ப்பணிப்பான உழைப்பு உள்ளது. இவரது தலைமையின் கீழ் மனோரமா ஆன்லைன் நிறுவனம் பல்வேறு துறை சார்ந்து 30 சேனல்களை உருவாக்கியுள்ளது. மரியம் உருவாக்கிய சில தனித்துவமான சேவைகளை பார்ப்போம். எம்4மேரி என்ற வலைத்தளத்தை மலையாளிகள் தங்கள் ஊரில் வரன் பார்ப்பதற்காக உருவாக்கினார். இந்த வலைத்தளம் பெரும் வெற்றி பெற்றதற்கு காரணம், இதன் எளிமையான வடிவமைப்பு, சிறப்பாக ஆப்சன்கள் ஆகியவற்றை காரணமாக சொல்லுகிறார்கள். ஹலோ அட்ரஸ் என்ற நிலம் வாங்கி விற்கும் நிறுவனத்தை நடத்துகிறார்.க்விக்டாக் எனு்ம் சேவை, கேரளத்திலுள்ள மருத்துவர்களிடம் அப்பாய்ண்மெட் வாங்கித் தரும் சேவையை செ்ய்து வருகிறது. இவை தவிர க்விக் சர்ச் என்ற பெயரில் உள்ளூர் வணிக நிறுவனங்களை எளிதாக கண்டுபிடிக்கு உருவாக்கியுள்ளார். மரியம் மேத்யூவின் நிறுவனம் இன்மா மீடியா விருது 2020 வென்றுள்ள

இம்பேக்ட் 50! சாதனைப் பெண்கள் - மகாராஷ்டிரத்தில் முன்மாதிரி கிராமங்களை உருவாக்கிய பெண்மணி - பிரியா நாயர்

படம்
        பிரியா நாயர், யுனிலீவர்           இம்பேக்ட் 50 சாதனைப் பெண்கள் பிரியா நாயர் யுனிலீவர், அழகுசாதனப் பொருட்கள் துறை இயக்குநர் 47 வயதாகும் பிரியா நாயர், யுனிலீவர் நிறுவனத்தின் அழகு சாதனப் பொருட்களுக்கான இயக்குநர் ஆவார். 1995ஆம் ஆண்டு முதல் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்தியா பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளில் யுனிலீவர் செய்யும் வணிகத்தில் பிரியா நாயருக்கு முக்கியமான பங்களிப்பு உண்டு. இவர் உருவாக்கி வாஷ் என்ற விழிப்புணர்வு திட்டம் பலகோடி மக்களிடையே யுனிலீவரின் பொருட்களை கொண்டுபோய் சேர்த்தது. ஸ்வட்ச் ஆதத் ஸ்வட்ச் பாரத் திட்டத்தின் மூலம் கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவது, தூய்மையான குடிநீரை அருந்துவது, சுத்தமான கழிவறையைப் பயன்படுத்துவது ஆகியவற்றை பிரசாரம் செய்தார் நிதிஆயோக் அமைப்பின் மாற்றங்களை உருவாக்குபவர் என்ற தலைப்பின் கீழ் பேசுவதற்கு அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் பிரியா நாயர். பிஸினஸ் டுடே, பார்ச்சூன் ஆகிய இதழ்களில் இவரைப் பாராட்டி பல்வேறு கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. தற்போது வகிக்கும் பதவிக்கு முன்னதாக கன்ஸ்யூமர் இன்சைட்ஸ் எனும் குழுவில் பணியாற்றின

பதற்றம் போக்கும் மாத்திரை! - பிளாசிபோ செய்யும் உளவியல் தந்திரம்!

படம்
      cc பதற்றம் போக்கும் மாத்திரை ! மனநலன் சார்ந்த பல்வேறு பிரச்னைகளில் மனநல மருத்துவர்கள் நோயாளிகளுக்கு பிளாசிபோ எனும் போலி மாத்திரைகளை பரிந்துரைப்பார்கள் . இந்த மாத்திரைகளில் சர்க்கரை மட்டுமே சேர்க்கப்பட்டிருப்பதால் , இதனை சாப்பிடுபவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது . இதில் முக்கியமான அம்சம் , நீங்கள் சாப்பிடும் மாத்திரைகள் போலியானவை என்று மருத்துவர்கள் நோயாளிகளுக்கு கூறமாட்டார்கள் என்பதுதான் . அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் , பிளாசிபோ மாத்திரைகளால் நோயாளிகளின் மன அழுத்தம் குறைகிறது என்று கண்டறிந்துள்ளனர் . இது புதிய செய்தி அல்ல ஆனால் நீங்கள் சாப்பிடுவது பிளாசிபோ மாத்திரைகள் என்று சொல்லிக்கொடுத்தும் கூட நோயாளிகளுக்கு மன அழுத்தம் , பதற்றம் சார்ந்த சிக்கல்கள் குறைந்துள்ளன என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது . உளவியல் ஆராய்ச்சியாளர் டார்வின் குவாரா தலைமையிலான குழுவினர் , இப்பரிசோதனைகளை செய்தனர் . மனநிலையை பாதிக்கும் படங்களை முதலில் 62 பேருக்கும் , பின்னர் 198 பேருக்கும் காட்டி பிளாசிபோ மாத்திரைகளை சாப்பிடக் கூறினர் . பின்ன

சூழலுக்கு உகந்த காலணி!

படம்
    cc       சூழலுக்கு உகந்த காலணி ! பெட்ரோலியத்திலிருந்து பெறப்படும் பிளாஸ்டிக் கலந்து பெரும்பாலான காலணிகள் தயாரிக்கப்படுகின்றன . இவை பயன்பாடு குறைந்து குப்பையாக வீசப்பட்டாலும் கூட எளிதில் மட்குவதில்லை . இதன் காரணமாக கலிஃபோர்னியா சாண்டியாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாகள் ஒருவகை பாசியை பகுதிப்பொருட்களாக கொண்ட காலணிகளை தயாரித்துள்ளனர் . இக்காலணி , பயன்பாடு முடிந்தபிறகு பதினாறு வாரங்களில் மண்ணில் மட்கிவிடும் . பாசியிலிருந்து பெறப்படும் எண்ணெய் இதற்கு முக்கியப் பொருள் . இந்த எண்ணெய்யிலிருந்து பாலியூரத்தின் நுரை பெறப்பட்டு அதோடு பல்வேறு செயற்கைப் பொருட்கள் கலந்து காலணிகள் தயாரிக்கப்படுகின்றன . ‘’’ தற்போது நாங்கள் கண்டுபிடித்துள்ள இக்காலணியில் இயற்கையான பகுதிப்பொருட்கள் 52 சதவீதம் உள்ளன . இவற்றை நாங்கள் விரைவில் 100 சதவீதமாக்க முயன்று வருகிறோம்’’ என்கிறார் இந்த ஆய்வில் ஈடுபட்டு வரும் ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் மேஃபீல்டு . வணிக ரீதியில் பிற காலணிகளைப் போலவே அதிக காலம் உழைக்கும்படியான பகுதிப்பொருட்களை தற்போது சோதித்து வருகின்றனர் . விரைவில் சூழலைப் பாதிக்காத காலணிகள் நமக்கு கிட

பரவும் டிஜிட்டல் கரன்சி மோகம்! - இந்திய ரிசர்வ் வங்கி அனுமதிக்குமா?

படம்
        cc       பரவும் டிஜிட்டல் கரன்சி மோகம் ! இந்திய ரிசர்வ் வங்கியின் மே மாத இதழில் டிஜிட்டல் கரன்சி பற்றிய ஆய்வு வெளிவந்துள்ளது . ஒய் . வி . ரெட்டி போன்ற முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் இதழின் ஆலோசனைக் குழுவில் இருக்கும் நிலையில் , இந்த ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது . இந்தியா , டிஜிட்டல் கரன்சிகளை இன்றுவரை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை . பிப்ரவரியில் நடத்தப்பட்ட ஆய்வு , டிஜிட்டல் கரன்சிகளின் எதிர்காலம் , பிற நாடுகள் அதனை எப்படி உருவாக்கி வருகின்றன என்பதை விவரித்தது . கிரிப்டோகரன்சிகள் பெரும்பாலும் முறைப்படுத்தப்படாதவை . இவை கிரிப்டோகிராபி மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன . டிஎல்டி தொழில்நுட்பம் மூலம் கிரிப்டோகரன்சிகளின் செயல்பாடுகளை அறியமுடியும் . பல்வேறு நாடுகள் தொடங்கி ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தள நிறுவனம் ( லிப்ரா குளோபல் ) கூட இதில் ஆர்வம் காட்டுகிறது . ” ஜப்பான் , டிஜிட்டல் கரன்சி பற்றிய பணிகளைத் தொடங்கிவிட்டது . இந்தியா இன்று இல்லையென்றாலும் இன்னும் சில ஆண்டுகளில் டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்த தொடங்கும்” என்கிறார் ரிசர்வ் வங்கியின் முன்ன

ஏ.ஐ. விவசாயம்! - உணவு உற்பத்தியை மேம்படுத்த உதவும் பல்வேறு ஏ.ஐ செயலிகள்

படம்
                  cc   ஏ . ஐ . விவசாயம் !   செயற்கை நுண்ணறிவு மூலம் வேளாண் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த , நீர் பாய்ச்ச , விலைகளை அறிய முடிகிறது . முன்னர் விவசாயப் பயிர்களை பூச்சிகள் தாக்கினால் , அவற்றைக் காப்பாற்ற அனுபவம் வாய்ந்த விவசாயி அல்லது வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உதவிகளை விவசாயிகளை நாடி வந்தனர் . இன்று ஸ்மார்ட்போனில் நிறுவும் ஆப் மூலம் பாதிக்கப்பட்ட பயிர்களை படமெடுத்து அனுப்பினாலே போதும் . பயிர் , எதனால் பாதிக்கப்பட்டுள்ளது , அதற்கான தீர்வு என அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொள்ள முடியும் . “ நான் எனது போனில் பிளான்ட்ரிக்ஸ் (plantrix) என்ற ஆப்பை நிறுவினேன் . இரண்டே நிமிடங்கள் பயிர்களில் ஏற்பட்டுள்ள நோய்த்தாக்குதலையும் , அதற்கான தீர்வையும் தெரிந்துகொண்டேன் . இதனால் விவசாயத்தில் நல்ல லாபம் கிடைத்து வருகிறது” என்கிறார் திருவாரூர் மாவட்ட விவசாயியான ரவிச்சந்திரன் . மகாராஷ்டிரத்தில் 2017 ஆம்ஆண்டு பருத்தி விவசாயிகளுக்கு பயிர்களில் ஏற்பட்ட புழுத்தாக்குதலால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது . ஏறத்தாழ 50 சதவீத விவசாயிகள் இதனால் பாதிக்கப்பட்டனர் . மகாராஷ்டிர அரசு