இடுகைகள்

பிரியாணி மவுசு பெற்றது எப்படி?

படம்
              அனைத்து காலங்களிலும் கலக்கும் பிரியாணி ! தமிழகத்தின் தவிர்க்க முடியாத உணவு என்றால் எதனைக் குறிப்பிடுவீர்கள் ? வேறு சாய்ஸே கிடையாது பிரியாணிதான் . அனைத்து தடைகளையும் தாண்டி தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளது . பிரியாணி . எண்ணெய்யில் வறுக்கப்படும் உணவு என்பதுதான் இதற்கான அர்த்தம் . இறைச்சி , முட்டை கலந்த பிரியாணி அனைத்து இடங்களிலும் கிடைப்பதோடு , ஒருவருக்கு அல்லது ஒரு கூட்டத்திற்கே என்றால் கூட தாக்குப்பிடிக்கும் திருப்தி படுத்தும் உணவாக மாறியுள்ளது . அடிப்படையில் பிரியாணி என்பது பெர்சியா நாட்டு உணவு . மொகலாயர்களின் இந்திய வருகையின்போது இங்குள்ள மக்களுக்கு இந்த உணவு அறிமுகமாகிறது . பெரு நகரங்களில் சமைக்கப்படும் பிரியாணி , இடத்தைப் பொறுத்து மாறுபடும் . மதுரையில் சீரக சம்பா அரிசியில் அதிக கறியுடன் சமைக்கப்படும் பிரியாணி சென்னையில் பாஸ்மதி அரிசியில் பெரும்பாலும் சமைக்கப்படுகிறது . எப்படி அனைத்து மக்களிடமும் பிரியாணி வெற்றி பெற்றது என்றால் , கறி , முட்டையுடன் கூடிய சத்தான உணவு . முழு சைவ சாப்பாட்டை விட குறைந்த விலையில் வாங்கி சாப்பிட முடியும் . இத்

காலப்பயணம் செய்து தன் தாயின் உயிரைக் காப்பாற்றும் மகனின் பாசம் வென்றதா? - ஆலிஸ் - கொரியத் தொடர் - 16 எபிசோடுகள்

படம்
                  ஆலிஸ் கொரிய தொடர் 16 எபிசோடுகள்     Genre: Science fiction, Romance Developed by: SBS TV Written by: Kim Kyu-won, Kang Cheol-gyu, Kim Ga-yeong August 28 – October 24, 2020   டிவியில் காலப்பயணம் மாதிரி மையப்பொ ருளை எடுத்து ரசிக்க வைக்கமுடியுமா ? ஏன் முடியாது என்று சொல்லி சாத்தியமாக்கியிருக்கிறார் ஆலிஸ் தொடர் இயக்குநர் . காலப்பயணம் என்றால் ஏராளமான சிஜி காட்சிகள் தேவை , தேடுதல் , கொலை , குற்றங்கள் தேவை என்று பலர் நினைப்போம் . ஆனால் இந்த தொடர் முழுக்க உணர்ச்சிகரமான உறவுகளை மட்டுமே மையமாக வைத்து எடுத்திருக்கிறார்கள் . இதனால் பெரிய ஜிம்மிக்ஸ் வேலைகள் , எதிர்கால மனிதர்களின் தொழில்நுட்பம் என்று கவலைப்படவேண்டியதில்லை . பார்க் ஜின் , காவல்துறையில் வேலை செய்யும் கேப்டனுக்கு அடுத்த இரண்டாம் நிலை அதிகாரி . இவரது மேலதிகாரி கோ . இவர்தான் அம்மா இறந்தபிறகு , பார்க் ஜின்னை தனது பிள்ளை போல வீட்டில் தங்க வைத்து வளர்க்கிறார் . இதற்கு என்ன காரணம் என்று தேடினால் , 2010 க்கு கதை செல்கிறது . அங்கு ஜின்னின் அம்மா , அப்பா இல்லாமல் பையனை 19 ஆண்டுகளாக வளர்க்க

முன்னாள் காதலியின் காதலை சேர்த்துவைத்து தன்னுடைய காதலைக் காப்பாற்றும் நாயகனின் கலாட்டா கதை! - அல்லுடு அதுர்ஸ் - சாய் சீனிவாஸ்

படம்
                அல்லுடு அதுர்ஸ்    Director: Santosh Srinivas Produced by: Gorrela Subrahmanyam Writer(s): Santosh Srinivas, Srikanth Vissa (Dialogues) படத்தின் கதை என்று பார்த்தால் , காதலே செட் ஆகாது என்று நினைத்து விரக்தி அடைந்தவனுக்கு ஏற்படும் காதலும் , அதில் ஏற்படும் பிரச்னைகளும்தான் . எளிமையான லைன்தான் . ஆனால் படத்தை எடுக்கும் இயக்குநருக்கு என்ன குழப்பமோ , சோறு வைக்க நினைத்து அதற்குள் நூடுல்ஸை வேக வைத்து பருப்பு குழப்பில் சாஸ் ஊற்றி படத்தை எடுத்திருக்கிறார் . இதனால் படத்தில் எந்த காட்சியும் நிறைவு தரவில்லை . சாய் சீனிவாஸ் நடித்த சீதா என்ற தெலுங்குப்படம் பலரும் தெலுங்குப்படம் என்றால் இப்படித்தானா எனும்படி மீம்ஸ் போட்டு கிண்டல் செய்துகொண்டிருக்கிறார்கள் . அந்த நேரத்தில் இப்படியொரு படமா ? பெரிய சறுக்கல் . சீனு , பள்ளி செல்லும்போது வசுந்தரா என்ற சக மாணவியை ப் பார்க்கிறான் . அவள் செய்யும் உதவிகளால் மெல்ல ஈர்க்கப்படுகிறான் . ஆனால் அது காதலாக மெல்ல மாறும்போது அவள் அவனிடம் ஏதும் சொல்லாமல் வேறு ஊருக்கு சென்றுவிடுகிறாள் . இந்த நேரத்தில் இனி பெண்களே வேண்டாம் என வே

வளர்ச்சியை மட்டும் பேசினால் அசாமில் வெற்றி பெற முடியாது. இன அடையாளத்தை பேச வேண்டியது அவசியம்! - ஹிமான்சு பிஸ்வா சர்மா

படம்
          ஹிமான்சு பிஸ்வா சர்மா அசாம் மாநில அமைச்சர் , பாஜக அசாமின் கல்வி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் நீங்கள் . ஆனால் துறை சார்ந்த சாதனைகளை கைவிட்டு இடம்பெயர்ந்து வந்தவர்கள் பற்றிய பிரச்னைகளை மட்டுமே பிரசாரத்தில் பேசுகிறீர்களே அது ஏன் ? பிரிவினை காலத்திலிருந்து அசாம் மாநிலத்தில் இடம்பெயர்ந்து வந்து வாழ்பவர்களின் பிரச்னை உள்ளது . லோக்பிரியா கோபிநாத் போர்டோலாய் , பிமலா பிரசாத் சலிகா ஆகியோர் இப்பிரச்னையைத் தீர்க்க போராடினர் . ஆனாலும் கூட இதற்கு முடிவு கிடைக்ககவில்லை . மேலும் இங்கு முஸலீம்கள் வாழும் பகுதிக்கு சென்றீர்கள் என்றால் அனைத்து அரசு திட்டங்களும் சென்று சேர்ந்திருக்கின்றன என்று அங்கு வாழும் முஸ்லீம்கள் சொல்லுவார்கள் . ஆனால் பாஜகவிற்கு வாக்களிக்க மாட்டோம் என்று உறுதியாக நிற்பார்கள் . நாங்கள் இதனை மாற்ற நினைக்கிறோம் . அனைவரையும் ஒன்றாகவே பார்க்கிறோம் . அசாமிலுள்ள இந்து , முஸ்லீம்கள் , இடம்பெயர்ந்து வந்த முலலீம்கள் என அனைவரையும் ஒன்றாகவே பார்க்கிறோம் . அசாம் மாநிலத்தில் வெறும்மே வளர்ச்சியை மட்டும் பேசினால் தேர்தலில் வெற்றி பெறமுடியாது . இங்கு மக்களின் அடையாளம்

அரசியல் கட்சிகள் வழங்கும் இலவசப் பொருட்களுக்கும், சமூகநலத்திட்டங்களுக்கும் வேறுபாடு உள்ளதா?

படம்
            இலவசங்களும் மாநிலத்தின் பொருளாதாரமும் ! பஞ்சாயத்து தலைவர் பதவியை ஏலத்தில் எடுப்பது தமிழகத்திலுள்ள சில கிராமங்களில் நடைமுறையாக நடக்கிறது . யார் பதவிக்கு அதிக விலை கொடுக்கிறார்களோ அவர்களே தலைவர்களாகிவிடுவார்கள் . இந்த வகையில் அவர்களைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை பகிரங்கமாக விற்கப்படுகிறது என்பதை நான் தனியாக சொல்லித் தெரியவேண்டியதில்லை . தமிழகத்தில் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற தவிப்பு சூரியக்கட்சிக்கும் , அதைவிட அதிகமாக இலைக்கட்சிக்கும் உள்ளது . இதன் விளைவாகவே தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது . இதில் கூறப்பட்டுள்ள பல்வேறு நிதியுதவி திட்டங்கள் நலத்திட்டங்கள் என்ற எல்லையைத் தாண்டி அன்பளிப்புகளாகவே மாறிவிட்டன . பெண்களையும் மாணவிகளையும் குறிவைத்து வழங்கும் பல்வேறு இலவச பொருட்களை இப்படி கூறலாம் . நடப்பு ஆண்டின் மார்ச் மாத கணக்குப்படி தமிழ்நாட்டின் கடன்தொகை 4.85 லட்சம் கோடியாக உள்ளது . அடிப்படைத் திட்டங்களுக்கும் , சுகாதாரங்களுக்கும் நிதியுதவி ஒதுக்ககி செலவிடவேண்டிய நேரத்தில் வீட்டு பயன்பாட்டு பொருட்களை தருகிறோம் . கேஸ் சிலிண்டர்களை கூடுதலாக விலையின்றி

நாங்கள் சட்டத்திற்கு உட்பட்டு பயனர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்ய அறிவுறுத்துகிறோம்! - கூ ஆப் துணை நிறுவனர் மயங்க்

படம்
          மயங்க் பைடாவட்கா கூ , சமூக வலைத்தளம் , துணை நிறுவனர் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளை விதிகளை எப்படி பார்க்கிறீர்கள் ? இன்று சமூக வலைத்தளங்களில் செய்திகளை பதிவிடுபவர்கள் முக்மூடிகளை அணிந்துகொண்டுதான் செயல்படுகிறார்கள் . இவர்கள் நேரடியாக தங்கள் கருத்துகளை வெளியிட முன்வருவதில்லை . இதனால் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படுகின்றன . போலிசெய்திகள் , வதந்திகள் அதிகம் வருகின்றன . இதனை தீர்க்க அரசு புதிய விதிகளை உருவாக்கியுள்ளது . இதன்மூலம் யார் செய்தியை உருவாக்குகிறார்கள் என்பதை எளிதாக கண்டுபிடிக்கமுடியும் .. அரசு இந்த வகையில் வெறுப்பு பேச்சு , போலிச்செய்திகளை கட்டுப்படுத்த முடியும் என்ற வகையில் அரசின் கட்டுப்பாடுகளை நான் ஆதரிக்கிறேன் . உள்நாட்டு ஆப்கள் மூலம் வெளிநாட்டு சமூகவலைத்தள ஆப்களை சமாளிக்க முடியும் என நினைக்கிறீர்களா ? இந்தியாவில் இதுபோன்ற ஆப்களுக்கான சந்தை உள்ளது . அதனைப் பயன்படுத்திக்கொள்ள இந்திய நிறுவனங்கள் சிறிதே முயன்றால் போதுமானது . ரெட்பஸ் என்ற நிறுவனம் இந்திய நிறுவனம்தான் , இணைய வழியில் பஸ்களை புக் செய்யும் பெரும் நிறுவ

பயனரின் தகவல்களை உளவறியும் ஃபெவிகான்ஸ்! - யார் தடுப்பது?

படம்
  உளவு பார்க்கும் ஃபெவிகான்ஸ்!  இணையதளங்களில் பயன்படும் ஃபெவிகான்ஸ் (Favicons) மூலம் பயனர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும்  என்று கண்டறியப்பட்டுள்ளது.  இணைய உலாவியில் பல்வேறு வலைத்தள டேப்களை திறந்து வைத்திருப்பீர்கள். அதில் விக்கிப்பீடியாவை மட்டும் எப்படி அடையாளம் கண்டுபிடிப்பது? கிளிக் செய்யாமலேயே அறிந்துகொள்ளலாம். காரணம், அந்த டேப்பில் விக்கிப்பீடியா லோகோ இருக்கும். இப்படி வலைத்தளங்களை அடையாளம் காட்டும் சிறிய ஐகான்களுக்குத்தான் ஃபெவிகான் என்று பெயர்.  இப்படி திறந்து வைக்கும் வலைத்தளங்களில் உள்ள ஃபெவிகான்ஸ்கள், பயனரின் இணைய நடவடிக்கையைக் கண்காணிக்கிறது என இலினாய்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சிக்கட்டுரை குற்றம்சாட்டியுள்ளது. ஒருவர் விபிஎன் அல்லது இன்காக்னிட்டோ வசதியை பயன்படுத்தினாலும் கூட இதனை தடுக்க முடியாது. இம்முறைக்கு சூப்பர் குக்கி என்று பெயர் சூட்டியுள்ளார் ஜெர்மனியைச் சேர்ந்த கணினி வல்லுநர் ஜோனாஸ் ஸ்ட்ரெகில். ”இம்முறையில் ஒருவரின் வலைத்தள வருகை கண்காணிக்கப்படுவதோடு, இதனை பிற குக்கிகளைப் போல அழிக்க முடியாது” என்றார்.  தற்காலிக நினைவகத்தை அழித்தாலோ, ஆட்பிளாக்கர்களைப் பயன்படுத்தினால