இடுகைகள்

சீரியல் கொலைகாரரின் உடலில் வெனோம் புகுந்தால்.... - வெனோம் 2 - டாம் ஹார்டி

படம்
  வெனோம் - லெட் தேர் பி கார்னேஜ் வெனோம் 2 Director: Andy Serkis Produced by: Avi Arad, Matt Tolmach, Amy Pascal, Kelly Marcel, Tom Hardy, Hutch Parker Screenplay by: Kelly Marcel     எடி பிராக் இந்த முறை ஆக்ரோஷமாக அடி உதையோடு உணர்கலக்குகிறார். சீரியல் கொலைகாரர் ஒருவர் சிறையிலிருந்து தப்பிவிடுகிறார். கூடுதலாக எடியின் உடலிலுள்ள வெனோமின் சக்தி கொண்ட ரத்தத்தை சுவைத்துவிடுகிறார். இதனால் அவரது உடலில் இன்னொரு வெனோம் உருவாகிறது. இதனை எதிர்த்து போராடி வெனோம் எப்படி வெல்கிறது என்பதுதான் கதை.    வெனோம் முதல் பாகத்தில் எடிக்கும் அவரது காதலிக்கும் காதல் செட்டாக  வாய்ப்பு இருக்குமா இல்லையா என்று சந்தேகம் அனைவருக்குள்ளும் இருந்தது. ஆனால் இந்த பாகத்தில் அதற்கு சுப மங்கலத்தை பாடிவிட்டார்கள். எனவே அடுத்தடுத்த பாகங்களில் ஆக்சன் காட்சிகள் இன்னும் பீதியூட்டும்படி இருக்கும் என நம்பலாம்.    முதல் பாகத்தை விட இந்த இரண்டாவது பாகத்தில் உணர்ச்சிகரமான காட்சிகள் அதிகம். சீரியல் கொலைகாரர் தனது மனநிலையைப் பற்றி பேசுவது, எடித்துடன் நட்பாக நினைப்பது, வெனோமுடன் எடித் ஈகோ பார்த்து சண்டை போடுவது என நிறைய பிரச்னைகள் படத்த

சீக்கியர்களை கொன்ற சம்பவங்களை நானே நேரடியாகப் பார்த்தேன்! - எழுத்தாளர் எம் முகுந்தன்

படம்
        எழுத்தாளர் எம் . முகுந்தன்   நேர்காணல் எம் . முகுந்தன் டைம்ஸ் ஆப் இந்தியா கே பி சாய் கிரண்   பிரெஞ்சு தூதரகத்தில் பணியாற்ற டெல்லி வந்தவர் , அந்த நகரைப் பற்றிய நூல்களை எழுதியுள்ளார் . டெல்லி எ சாலோக்யூ என்ற நூலை எழுதி நடப்பு ஆண்டிற்கான ஜேசிபி இலக்கிய விருதை வென்றுள்ளார் . நீங்கள் டெல்லி பற்றி டெல்லி , டெல்லி 1981, டெல்லி என சாலிக்யூ என்ற நூல்களை எழுதியுள்ளீர்கள் . நீங்கள் வெளியிலிருந்து வந்து டெல்லியில் குடியேறி வெகு ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வருகிறீர்கள் . உங்கள் பார்வையில் டெல்லியைப் பற்றிய கருத்து என்ன ? அறுபதுகளில் நான் டெல்லிக்கு வந்துவிட்டேன் . அடுத்த நாற்பது ஆண்டுகளில் நகரம் ஏராளமான மாற்றங்களை சந்தித்துள்ளது . இதனை நான் வெளிப்புற தன்மையில் மட்டும் கூறவில்லை . கலாசாரம் சார்ந்தும் பேசுகிறேன் . அன்றைய காலத்தில் நகரமாக இருப்பதை விட பல்வேறு கிராமங்களின் இணைப்பு புள்ளியாகவே நகரம் இருந்தது . முபாரக்பூரில் கோதுமையும் காலிப்ளவரும் ஏராளமாக விளைந்து வந்த்து . எருமைகளும் இங்கே சாலைகளில் ஏராளமாக உலவி வரும் . இப்போது டெல்லியில் வன்முறையும் குற்றங்களும் அ

ஒருவர் இந்து என்பதை வன்முறைக்கும்பல்கள் முடிவு செய்கின்றன! - ஷோபா டே, எழுத்தாளர்

படம்
              நான் எப்படிப்பட்ட இந்து என்பதை யார் முடிவு செய்வது ? ஷோபா டே(TOI) இந்தியா சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் நான் என்னை மோசமான நபராக உணர்கிறேன் . அடையாளம் கண்டுள்ளேன் . இந்து என்ற அடையாளம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது . இந்து பெற்றோருக்கு பிறந்தேன் . இந்து வழியில் வாழ்கிறேன் . இதில் வெற்றி , தோல்வி , தேர்ச்சி , தேர்ச்சி பெறவில்லை என்றெல்லாம் சொல்ல ஏதுமில்லை . கூடுதலான எந்த பலன்களையும் நாம் இந்து என்பதற்காக பெற்றதில்லை . எனக்கு இருக்கும் தகுதிகளின்படி பார்த்தால் இன்றைய இந்தியாவில் நான் மோசமான இந்துவாக தோன்றுகிறது . இன்னும் கூடுதலான திறமைகளை வளர்த்துக்கொண்டால்தான் இந்துவாக இந்தியாவில் வாழமுடியும் போல தோன்றுகிறது . நான் இந்து என்பதைக் காட்ட தனி அடையாளமாக பேட்ஜ் ஏதாவது அணிய வேண்டுமா என்ன ? இப்படி செய்தால் அது பொது இடத்தில் உள்ளாடைகளை எடுத்து வெளியே காட்டுவது போலத்தானே இருக்கும் . இந்து என்பதை வெளிக்காட்டி பிறரை விட அதிக சலுகைகளை பெறுவது தவறானதாக கருதுகிறேன் . இதைக்கூட பலரும் விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பேசுவார்கள் . இதைப்பற்றியெல்லாம்

சைவ உணவால் குழந்தைகளை மெல்ல கொல்லும் அரசியல்வாதிகள்!

படம்
  மாட்டிறைச்சி அரசியல் குஜராத் மாநிலம் உலகிலேயே அதிகம் வளர்ச்சியடைந்துள்ளது என பலரும் நமக்கு விபூதி அடித்துள்ளனர். ஆனாலும் உண்மையான செல்வம் என்பது மனிதவளத்தை ஆரோக்கியமாக பாதுகாப்பதுதான். அதனை இங்குள்ள சைவ அரசியல்வாதிகள் கணநேரம் மறந்துவிட்டனர் போல.  மாநிலத்தில்  80 சதவீத குழந்தைகள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரும் ஆறு மாதம் முதல் ஐம்பத்தொன்பது மாதம் வரையிலான வயதைக் கொண்டவர்கள் இதனை சொன்னது வெளிநாட்டு தன்னார்வ அமைப்பு அல்ல. ஆத்மநிர்பாராக செயல்படும் குடும்ப சுகாதார துறையின் ஆய்வுதான். ஏறத்தாழ ஒட்டுமொத்த நாடுமே மன்னர் ஆட்சிகாலத்தைப் போல மாறிக்கொண்டிருக்கிறது. அந்தக் காலத்தில்தான் மன்னர் எந்த மதமோ, அதே மத த்தை மக்களும் பின்பற்றவேண்டும். மறுப்பவர்களை கொன்றுவிடுவார்கள். அல்லது மிரட்டி மதம் மாற்றுவார்கள். இப்போதும் குறிப்பிட்ட நம்பிக்கை கொண்டவர்கள் ஆட்சியில் இருக்கும்போது அவர்களுக்கு பிடித்த விஷயங்களை மக்கள் மேல் திணித்து வருகிறார்கள்.  இதன்படி குஜராத்தில் சைவ உணவு வாசிகள், நான் - வெஜ் சாப்பிடும் பழக்கத்தை ஒழிப்பதை இப்போது தங்களது கடமையாக கொண்டுள்ளார்கள். ஏன் இப்படி என்று கே

கருத்துகளால் வேறுபட்டாலும் இந்தியாவுக்கான முன்நின்ற நேரு, காந்தி! - ஜவகரும் காந்தியும் - வெ.சாமிநாதசர்மா

படம்
  நேரு, காந்தி ஜவகரும் காந்தியும் வெ.சாமிநாதசர்மா இந்த நூல் கொஞ்சம் பழமையானதுதான். இதை இப்போது படிப்பதற்கு முக்கியமான காரணம், பல்வேறு விடுதலைப் போராட்ட வீரர்களையும் அவர்கள் கருத்தியல் ரீதியாக வேறுபட்டவர்கள். அவர்கள் ஒற்றுமையாக இல்லை என்று சில மதவாத கூட்டங்கள் பிரசாரம் செய்து வருகின்றன.  இதில் பாதி மட்டுமே உண்மை. ஒருவரின் சிந்தனை இன்னொருவருடன் ஒத்து வரலாம். ஆனால் அப்படியே பிரதி எடுத்தது போலவா இருக்கும்?சாமிநாத சர்மா இந்த நூலில் காந்தி, நேரு ஆகிய இருவரின் ஒற்றுமை, வேற்றுமைகளை அழகாக பிரித்து எழுதி இருவரின் லட்சியம் எதை நோக்கியது என்பதையும் எழுதியுள்ளார்.  சுதந்திர இந்தியா என்பதுதான் காந்தி, நேரு ஆகிய இருவரின் லட்சியம். ஆனால் அதை நோக்கிய பயணத்தில் இருவரின் கருத்துகளும் எப்படி இருந்தன என்பதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. மதம், அரசியல், வளர்ச்சி, விவசாயிகளின் வாழ்க்கை ஆகியவற்றைப் பொறுத்தவரை காந்தி, நேரு ஆகியோரின் வாழ்க்கைப் பார்வை வேறுபட்டது. இதனை நேரு காந்தியின் காலத்திலேயே அவரிடமே கூறியுள்ளார்.  ஒருவகையில் காந்தி, தனது கருத்துகளை அனுபவங்கள் வழியாக மேம்படுத்திக்கொண்டே இருந்தார். ந

தமிழ் பிராமணர்களுக்கு வட இந்தியாவின் மணப்பெண்! - என்ன பிரச்னை?

படம்
  தமிழ்நாட்டிலுள்ள பிராமணர்கள் சங்கத்தினர், தமிழ்நாட்டில்  பெண்கள் கிடைக்காததால், பீகார். உ.பியில் பெண்களை தேடிவருகின்றனர். இந்த வகையில் 40 ஆயிரம் ஆண்களுக்கு பெண்களை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த தகவல்கள் சங்கம் வெளியிடும் இதழ் கூறியுள்ளது. இந்த நிலை இப்போது செய்தியானாலும் கூட பத்தாண்டுகளாக நிலை இப்படித்தான் போகிறதாம்.  முப்பது முதல் நாற்பது வரையிலான மாப்பிள்ளைகள் தங்களுக்கு ஏற்ற பிராமண பெண் கிடைக்காமல் திருமணம் நடக்காமல் உள்ளனர் என்று பிராமணர் சங்க தலைவர் நாராயணன் கூறியுள்ளார்.  இதற்கு என்ன காரணம் , பெண், ஆண்களின் பாலின விகிதம்தான் காரணம் என அறியவந்துள்ளது. பத்து பிராமண ஆண்களுக்கு, ஆறு பெண்கள்தான் உள்ளனர்.  குடும்பக்கட்டுப்பாட்டை பிராமணர்கள் தீவிரமாக எடுத்துக்கொண்டு கடைபிடித்துள்ளனர். இதனை அவர்களின் ஆச்சாரியர்கள் எதிர்த்தாலும் கூட அவர்கள் கேட்கவில்லை. இதனால்தான் பெண்கள், ஆண்களின் விகிதம் மாற்றம் பெற்றுள்ளது.வட இந்திய மாநிலங்களில் இந்தி பேச தெரிந்த ஒருங்கிணைப்பாளர்களை பிராமண சங்கங்கள் உருவாக்கியுள்ளன. இப்படி நிலைமை மாறுவதற்கு ஆண்மைய கருத்தாக்கம் பிராமணர்களின் ஜாதியில் இருப்பதுதான் கார

உலக கோப்பை போட்டியை வெல்வது மட்டுமே எனது கனவு! - மிதாலி ராஜ், கிரிக்கெட் வீரர்

படம்
  மிதாலி ராஜ்  மிதாலி ராஜ் கிரிக்கெட் வீரர் அண்மையில்தான் கேல் ரத்னா விருதை மிதாலி ராஜ் பெற்றார். இந்திய கிரிக்கெட் அணிக்காக இருபத்திரெண்டு ஆண்டுகள் விளையாடிய அர்ப்பணிப்பு உணர்வு மிக்கவர். அவரிடம் பேசினோம்.  இருபத்தி இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் விளையாடி வருகிறீர்கள். இப்படி ஊக்கமாக விளையாட என்ன காரணம்? இதற்கு ஒழுக்கமான விளையாட்டு பழக்கம்தான் காரணம். நான் வளர்ந்து வந்த இடத்தில் என் வாழ்க்கை குறிப்பிட்ட திட்டப்படி நடந்து வந்தது. இதனால்தான் என்னால் எளிதாக தோல்விகளிலிருந்து விடுபட்டு சவால்களை சந்திக்க முடிந்தது. நான் என்னை எப்போதும் பெட்டராக மாற்றிக்கொள்ள முயன்றுகொண்டே இருந்தேன். நான் எனது விளையாட்டை வேறு பரிணாமத்தில் மாற்ற நினைத்துக்கொண்டிருந்தேன்.  கேல்ரத்னா, ஒருநாள் கிரிக்கெட் கேப்டனாக அதிக வெற்றி, பெண்கள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள், உங்களது சுயசரிதை படமாக்கப்படுவது என பல்வேறு விஷயங்கள் நிறைவேறி வருகிறது. இதில் நிறைவேறாமல் இருப்பது என ஏதேனும் இருக்கிறதா?  உலக கோப்பையை வெல்வது எனது லட்சியம். 2022ஆம் ஆண்டு இதற்கான வாய்ப்பு உள்ளது. இதுதான் கேக்கின் மீதுள்ள செர்ரி போன்ற பெருமை. நாங்கள் வெற்ற