இடுகைகள்

நிலச்சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்குத் தேவை!

  நிலச்சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்குத் தேவை ! பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் பயன்பெற்றோரின் எண்ணிக்கை 11.17 கோடியாக உள்ளது . இந்த திட்டத்தில் பயன்பெற ஒருவருக்கு விவசாயம் செய்வதற்கான சொந்த நிலம் இருப்பது அவசியம் . விவசாயிக்கான தகுதி இருந்தாலும் சில விதிகளால் அவர்கள் இத்திட்டத்தில் பங்கு பெறாமல் போவதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளன . ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் ஒருமுறை விவசாய கணக்கெடுப்பு அறிக்கையை மத்திய அரசு வெளியிடுகிறது . 2015-16 ஆம்ஆண்டு அறிக்கையில் நிலங்களை உரிமையாக வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 14.6 கோடியாக அதிகரித்துள்ளது . 2010-11 காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 13.8 கோடியாக இருந்தது . இவர்கள் அனைவருமே நிலங்களை உரிமையாக கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என தேசிய விவசாயக்கொள்கை (2006) தகவல் தெரிவிக்கிறது . எனவே , இவர்கள் ஒருவரின் நிலத்தில் விவசாயக் கூலியாக பணியாற்றி வந்தாலும் கூட அவர்களையும் விவசாயிகள் பிரிவில்தான் சேர்ப்பார்கள் . நிலங்களுக்கு சொந்தக்காரர்கள் , அதில் பணியாற்றுபவர்கள் என பலரையும் ஆய்வு செய்யும் பணிக்கு முதலில் அரசு பெரிய முக்கிய

உடலின் ஆரோக்கியத்தைக் கணிக்கும் நடைபாணி!

  உடலின் ஆரோக்கியத்தைக் கணிக்கும் நடைபாணி ! ஒருவரின் உடல் ஆரோக்கியத்தை அவர் நடக்கும் நடையை வைத்து கணிக்க முடியுமா என உலக நாடுகளில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள் . நடந்துசெல்வது ஆரோக்கியத்தைக் காக்கும் என்று முன்பிருந்தே மக்களுக்கு கூறப்படுகிறது . ஆனால் மனிதர்களின் கையிலுள்ள கைரேகை எப்படி தனித்துவமானதோ அதேபோல ஒருவரின் நடந்துசெல்லும் பாணியும் வேறுபட்டது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் . நடக்கும்போது உடலிலுள்ள பலநூறு தசைகள் இயங்குகி்ன்றன . பிரெஞ்சு நாவலாசிரியர் ஹானர் டி பால்சாக் , 1832 ஆம்ஆண்டு எழுதிய தி விகார் ஆப் டூர்ஸ் நாவலில் , பெண்ணுடைய நடைக்கும் அவளது ஆளுமைக்கும் இடையில் உள்ள தொடர்பை எழுதியிருப்பார் . இவரின் தியரி ஆஃப் வாக்கிங் என்ற நூலும் இந்த வகையில் முக்கியமானது . ’’ ஒவ்வொரு மனிதரின் நடைபாணியும் பிறரிடமிருந்து மாறுபட்டது . அவர்களின் கை அசைவு , மூட்டுகளின் நகர்வு ஆகியவற்றை ஆராய்ந்து வருகிறோம்’’ என்கிறார் ஜெர்மனியின் கீல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த செபாஸ்டியன் ஹெய்ன்செல் . சிசிடிவி கேமரா மூலம் ஒருவரின் நடைபாணியை பார்த்து குற்றவாளியைக்

கலாசார பிரதிநிதித்துவம் தேவை!

  கலாசார பிரதிநிதித்துவம் தேவை ! அசாமில் இடம்பெயர்ந்து வாழும் மியா முஸ்லீம்களுக்கான கலாசார அருங்காட்சியம் அமைப்பது தொடர்பாக பல்வேறுபட்டன கருத்துகள் உருவாகிவருகின்றன . அசாமைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஷெர்மன் அலி , குவகாத்தியில் உள்ள ஶ்ரீமந்தா சங்கரதேவா கலாஷேத்ரா மையத்தில் சார் சப்போரிஸ் பகுதியில் வாழும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தவேண்டும் என்று குரல் எழுப்பினார் . இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக கட்சி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா , அசாமின் கலாசாரத்தில் இப்படி தனி அடையாளங்களை உருவாக்க வேண்டியதில்லை . இங்கு வாழும் பெரும்பாலான மக்கள் வங்கதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள் என்று கூறினார் . இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள் அசாமை பாஜக பிளவுக்குட்படுத்துவதாக புகார் எழுப்பின . பிரம்மபுத்திரா நதிக்கரையோரமாக வசிக்கும் மக்களின் கலாசாரத்தை பிரதிநிதிப்படுத்துவதா வேண்டாமா என்றுதான் பிரச்னை உருவாகியுள்ளது . இப்பகுதியை சார் சாப்போரிஸ் என்று அழைக்கின்றன . 2002-03 படி இங்கு 24.80 லட்சம் மக்கள் வசிக்கின்றனர் . இவர்களில் 80 சதவீத மக்கள் வறுமைக்கோட்டிற்க

2021ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் -இதில் நிறைவேறியவை எவை என யோசியுங்கள்

          2021 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் சூழல் மாற்றங்கள் சூழல் கட்டிடங்கள் பயன்பாட்டிலுள்ள கட்டிடங்கள் பயன்படுத்தும் ஆற்றல் காரணமாக 30 சதவீத பசுமை இல்ல வாயுக்கள் அதிகரிக்கின்றன . அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரம் உணவகங்கள் தவிர பிற நிறுவனங்கள் வீடுகளில் பயன்படுத்தக்கூடாது என சட்டம் பிறப்பித்துள்ளன . இதனால் ஜூன் 2021 முதல் அனைத்து வீடுகளிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களையே பயன்படுத்த முடியும் . பிளாக்பவர் என்ற கட்டுமான நிறுவனம் , குறைவாக ஆற்றலைப் பயன்படுத்தும் வீடுகளை கட்டித்தருகிறது . இம்முறை பிற நாடுகளிலும் பிரபலமாக வாய்ப்புள்ளது . உள்ளூர் சந்தை உள்நாட்டில் விளையும் காய்கறிகளை , உள்நாட்டிலேயே சந்தைப்படுத்துவது தொடங்கப்படலாம் . பல நாடுகளில் பொதுமுடக்கம் தொடர்வதால் அங்கு சரக்குப் போக்குவரத்து தடுக்கப்பட்டுள்ளது . உள்நாட்டு விற்பனை மூலம் மக்களின் உணவுப் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்தலாம் . நோய்த்தொற்று காரணமாக நகரங்களிலிருந்து கிராமத்திற்கு திரும்பியுள்ள தொழிலாளர்களால் விவசாயத்துறை வருவாய் கூடலாம் . பசுமை முதலீடு அமெர

கொரோனாவால் செயலிழந்த உலகப் பொருளாதாரம்

  கொரோனாவால் செயலிழந்த உலகப் பொருளாதாரம் சீனாவில் 2019 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா நோய்த்தொற்று தற்போதுவரை 188 நாடுகளைத் தாக்கியுள்ளது . முன்னதாக பொதுமுடக்க அறிவிப்புகளை அறிவிக்காத நாடுகள் கூட இப்போது இரண்டாவது அலை கொரோனா தொற்றைத் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன . உலக நாடுகளில் உள்ள பங்குச்சந்தைகளும் , ஓய்வூதியம் , தனிநபர் சேமிப்பு கணக்குகள் உட்பட அனைத்தும் பெருந்தொற்று சூழலால் பாதிக்கப்பட்டன . நாடுகளிலுள்ள மத்திய வங்கிகள் மக்களுக்காக வட்டி சதவீதத்தைக் குறைத்தன . மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக்கப்பட்டன . உலக நாடுகளின் அரசுகள் மானிய உதவிகளையும் , கடன் தவணைகளை நீட்டித்து தொழிற்துறைக்கு உதவின . கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெருநிறுவனங்கள் பணியாளர்களுக்கு சம்பள வெட்டை அமல்படுத்தின . இன்னும் சில நிறுவனங்கள் பணியாளர்களை பணிநீக்கம் செய்தன . வீட்டிலேயே வேலை செய்யும் முறை அறிமுகமானது . உலகின் பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவில் வேலையிழப்பு 10.4 சதவீதம் என உலக நிதி கண்காணிப்பகம் கூறியுள்ளது . வல்லரசு நாடுகளின் பொருளாதாரம் இய

டெக் நிறுவனங்கள் எப்படி தனி மனிதர்களை உளவு பார்க்கின்றன தெரியுமா?

படம்
  உளவு பார்க்கும் ஆயிரம் கண்கள்! உலகம் முழுக்க செயல்படும் பன்னாட்டு டெக் நிறுவனங்கள், தகவல் சுதந்திரத்திற்கு ஆதரவாக நின்றாலும் பல்வேறு வழிகளில் அவர்களை கண்காணிக்கத் தொடங்கியுள்ளன.  ஆ ப்பிள், கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் அனைத்துமே குறிப்பிட்ட நாடுகளிலுள்ள தகவல் பாதுகாப்பு சட்டப்படி தங்களை வடிவமைத்து வருகின்றன. இதில் வாடிக்கையாளர்களின் தகவல் பாதுகாப்புக்கு கொஞ்சம் உத்தரவாதமான நிறுவனம் என  மக்கள் நினைப்பது ஆப்பிளைத்தான். ஆப்பிள் இயக்குநர் டிம் குக், பாட்காஸ்ட் ஒன்றில் பேசியபோது, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தள மாடலில் விளம்பரங்கள் மூலமாக வருமானம் அதிகம் கிடைக்கிறது. எனவே அவர்களால் மக்களின் தகவல்களைப் பாதுகாக்க முடியாது என்று கூறினார். இப்படி நேரடியாகவே விமர்சிப்பதை ஜனநாயகம் என ஏற்கலாம். ஆனால், ஆப்பிள் தகவல் பாதுகாப்பு கொள்கைகளை உலகம் முழுக்க மாற்றியமைத்துள்ளது. மக்களை கண்காணிப்பதை ஆப்பிள் இன்னும் மறைமுகமாகவே செய்யத் தொடங்கியுள்ளது. ஆப்பிள் ஐஓஎஸ் 15இல் புகைப்படத்தில் உள்ள எழுத்துகளை நகல் எடுத்து இன்னொரு இடத்தில் பதியமுடியும். படத்திலுள்ள எண்ணைத் தொடர்பு கொள்ள முட

தொழில்நுட்பத்தில் மேற்கு நாடுகளை மிஞ்சும் சீனா! - எப்படி சாத்தியமாகிறது?

படம்
  தொழில்நுட்பத்தில் சிறந்த சீனா! சீன அரசு, தானியங்கி தொழில்நுட்பங்களை உருவாக்கி தனது நாட்டில் உற்பத்தி திறனை அதிகரித்து வருகிறது.   2010ஆம் ஆண்டு சீனாவில் தொழில்துறை சார்ந்த ரோபோக்களின் எண்ணிக்கை ஐம்பதாயிரமாக இருந்தது. ஆனால் இன்று அதன் எண்ணிக்கை எட்டு லட்சத்திற்கும் அதிகம். உலகில் மூன்றில் ஒரு ரோபோ என்ற கணக்கில் சீனா, உற்பத்திதிறனில் முன்னிலையில் உள்ளது. உற்பத்திதிறனை தொடர்ச்சியாக அதிகரிப்பதன் வழியாக சீனா, செல்வச்செழிப்பான நாடாக வளர்ந்து வருவதோடு பணியாளர்களின் ஊதியமும் கூடி வருகிறது.  முன்பு ஆண்டிற்கு ஆயிரம் டாலர்கள் என்றிருந்த பணியாளர்களின் ஊதியம், இன்று பத்து மடங்காக அதிகரித்துள்ளது. தானியங்கி தொழில்நுட்பங்களின் வரவால், பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்து ரோபோக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சீன அதிபர் ஜின் பிங், இந்த முறையில் உற்பத்தி திறனை அதிகரிக்கலாம் என்பதை அடையாளம் கொண்டு கொள்கைகளை  உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்.  பொருளாதார வளர்ச்சியில் மூன்று அடிப்படைகள் உள்ளன. ஒன்று, எத்தனை பணியாளர்கள் வேலை செய்கின்றனர், முதலீடு செய்யப்பட்டுள்ள தொகை, பணியாளர்களின் உற்பத்திதிறன் எவ்வளவு