இடுகைகள்

குழந்தையின் கையில் வானவில்! - த.சீனிவாசன் - அன்பரசு கடிதங்கள்

படம்
  இதனை நூல் என்று முழுமையாக சொல்ல முடியாது. அன்பரசு, அவரது நண்பரான அல்லது அப்படி நினைத்துக்கொண்ட திரு. த.சீனிவாசன் அவர்களுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு. இக்கோப்பை இன்டர்நெட் ஆர்ச்சீவ் வலைத்தளம் மூலம் அணுகி வாசிக்கலாம். இதனை தரவிறக்கம் செய்யக்கூட அவசியம் இல்லை என்பது வாசகர்களுக்கு சாதகமான அம்சம். கடிதங்களை ஸ்கேன் செய்து ஆவணப்படுத்தியவர் த.சீனிவாசன் என்பதை மறக்க முடியாது. இதனை அவர் ஆவணப்படுத்தியதால்தான் இப்போது வலைதளத்தில் சுலபமாக பதிவிட முடிகிறது. அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் பேரிறையின் அருள் உரித்தாகுக!  இதை கிளிக் செய்து வலைத்தளத்திற்கு செல்லலாம்... https://archive.org/details/kuzhathaiyin-kaiyil-vanvil-letters இந்த க்யூஆர் கோடை ஸ்கேன் செய்தும் நூலை வாசிக்கலாம்.. நன்றி https://www.qrcode-monkey.com/ www.canva.com

கிராமத்தின் மீது விண்கலம் விழுந்தால்....- ஸ்கைலேப் - தெலுங்கு 2022

படம்
  ஸ்கைலேப் தெலுங்கு ஆந்திரத்திலுள்ள பழமையான நம்பிக்கைகள் மாறாத ஊர். அங்கு தீண்டாமை இருக்கிறது. பள்ளிக்கூடத்தை கூட அதற்காக பூட்டி வைத்துள்ளனர். தலித்துகளை கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை. அந்த இனத்திற்குள் யாராவது உடல்நலக்குறைவு வந்தால் கூட அவர்களை வைத்தியர் தொட்டு பார்ப்பதில்லை. இந்த நேரத்தில் அங்கு ஸ்கைலேப் என்ற விண்கலம் விழுவதாக செய்தி வருகிறது. மரண பயத்தில் உள்ள மக்களின் மனதில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதுதான் மையக் கதை.  இதில் முக்கியமான கதை கௌரி என்ற ஜமீன்தாரின் மகள், மருத்துவ உரிமம் தடை செய்யப்பட அதனை திரும்ப பெற 5 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பெற தாத்தாவைத் தேடி வரும் ஆனந்த் ஆகிய இருவரைச் பற்றியது.  இந்த படத்தை நித்யாமேனன் தயாரித்து நடித்திருக்கிறார். தனது பரம்பரை, சொத்து காரணமாக தான் மேதாவி என நினைத்துக்கொண்டு சிபாரிசில் ஹைதராபாத்தில் உள்ள பத்திரிக்கையில் வேலை செய்கிறார். ஆனால் இவரது கட்டுரை பிரசுரமானாலும் கூட இலக்கணமும், அதில் எழுதும் விஷயங்களும் சரியாக இருப்பதில்லை. இதை கௌரி பெரிதாக கண்டுகொள்வதில்லை. இதனை மெல்ல அவர் உணர்ந்துகொண்டு சிறந்த பத்திரிக்கையாளராக எப்படி மாறினார் என

கோமாளித்தனமான சாம்பு, துப்பறியும் சாம்புவாக மாறும் கதை! - துப்பறியும் சாம்பு - தேவன்

படம்
  துப்பறியும் சாம்பு 1 தேவன் அல்லயன்ஸ் வெளியீடு துப்பறியும் சாம்பு நூல், வங்கியில் வேலை செய்யும் சாதாரண எழுத்தர் எப்படி புகழ்பெற்ற துப்பறிவாளர் ஆகிறார் என்பதை விவரிக்கிறது. சாம்பு, நீளமான பினாச்சியோ மூக்கு, விளாங்காய் மண்டை, கோட், வேஷ்டி கட்டிய பிராமணர். முகத்திலேயே அசடு வழிபவரை பார்த்தவுடனே யாரும் முட்டாள் என்று சொல்லிவிடுவார்கள். இப்படி இருக்கும் ஒருவர் அதிர்ஷ்டத்தால் தொட்டது அனைத்தும் துலங்கி புகழ்பெற்ற துப்பறிவாளர் எப்படி ஆகிறார் என்பதுதான்  முதல்பாக துப்பறியும் சாம்புவின் மையக்கதை.  பதினான்காவது பதிப்பு 2021இல் வெளியாகியிருக்கிறது. முதல் பாகத்தில் 27 அத்தியாயங்கள் உள்ளன. இதில்தான் வங்கியில் வேலை செய்யும் சாம்பு, அவமானப்படுத்தப்படுகிறார். அதற்காகவெல்லாம் அவர் ரொம்ப துடிக்கவில்லை. சோறு முக்கியமே என அதனை சகித்துக்கொண்டு இருக்கிறார். அப்போது வங்கி மேலாளர் அலுவலக காரை பயன்படுத்தி தகிடுதத்தம் செய்கிறார். அதை சாம்பு ஊழ்வினை காரணமாக மோப்பம் பிடிக்கிறார். அதை மேலாளரிடமே உளறி வைக்க அவர் பணத்துடன் தப்பியோடுகிறார். உடனே வங்கியின் தலைவர் அந்த கோபத்தில் சாம்புவை வெளியே போடா முட்டாள் என்கிறார்.

பத்திரிக்கை அரசியல், கற்றலைத் தடுக்கும் பரபரப்பு, கருத்து சுதந்திரம் - கணியம் சீனிவாசனுக்கு எழுதிய கடிதங்கள்

படம்
        த.சீனிவாசன், நிறுவனர், கணியம்     5 சுதந்திரமான செயல்பாடும் , தடையும் ! 27.1.2021 அன்பு நண்பர் சீனிவாசன் அவர்களுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? எங்கள் இதழ் குழுவினரை இன்னும் நிர்வாகம் ஆபீசுக்கு வரச் சொல்லவில்லை . இவர்களின் வேகமான செயல்பாடுகளால் மயிலாப்பூரிலுள்ள வாடகை அறையை யும் கூட காலி செய்யவில்லை . ஏதேனும் முடிவெடுத்தால்தான்தானே ? அறைக்கு தங்கினாலும் இல்லாவிட்டாலும் வாடகை தண்டச்செல்வு . உங்களது உதவியால் இப்போது மடிக்கணினி பிரச்னையின்றி இயங்குகிறது . இந்த அளவில் கணினி இயங்குவதே போதும் . இனிமேல் நூலை எழுதி எனது வலைத்தளத்தில் வெளியிடுவதோடு நிறுத்திக்கொள்ளவிருக்கிறேன் . பிறரது வலைத்தளங்களில் வெளியிடுவதற்கு இனி மின்னஞ்ச்ல்களை அனுப்ப போவதில்லை . சில வலைத்தளங்களில் நூல்களை எந்த அறிவிப்புமின்றி தகவல்களும் சொல்லாமல் வெளியிடுகிறார்கள் . பிறகு அதை நீக்கும்போது மட்டும் இப்படி செஞ்சிட்டீங்களே என பிலாக்கணம் பாடுகிறார்கள் . சுதந்திரமான கருத்துகளுக்கு நிறைய இடங்களில் ஏன் எங்கேயுமே தடைகள் உண்டு . ஸ்டார்ட்அப் பற்றிய நூலொன்றைப் படி

புதிய எழுத்தாளர்களுக்கு வழிகாட்டும் ஜெயமோகன்! - எழுதுக - ஜெயமோகன்

படம்
  எழுதுக - ஜெயமோகன் எழுதுக ஜெயமோகன் தன்னறம் நூல்வெளி கவிதை, கட்டுரை, புனைவு ஆகியவற்றை எழுதுபவர்களுக்கு நிறைய சந்தேகங்கள் தோன்றும். இதைப்பற்றி யாரிடம் கேட்பது என்றும் தெரியாது. இப்படி இருப்பவர்கள், பின்னாளில்  தொழில் சார்ந்து சென்றுவிடுவார்கள். ஆனால் அவர்களின் மனதில் உள்ள  இலக்கிய ஆசை மெல்ல மங்கி மறைந்துவிடும்.  ஜெயமோகன், தொலைத்தொடர்பு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டுதான் இலக்கிய வேலைகளையும் செய்தார். அவர் தனது வாழ்க்கையில் இலக்கியத்தை முக்கியமாக எடுத்துக்கொண்டு அதனை மேம்படுத்த அனைத்து முயற்சிகளையும் செய்தார். இதனால் தொழில்சார்ந்த வாழ்க்கையில் பதவி உயர்வு, அதிகாரம் ஆகியவற்றுக்கு முயற்சிக்கவில்லை. இதனால் அவர் இலக்கியத்தில் சமகாலத்தில் முக்கியமான எழுத்தாளராக உள்ளார்.  யாருக்குமே தொடக்க காலத்தில் எழுதும்போது நிறைய சந்தேகங்கள் வரும். அப்படி ஜெயமோகன் தளத்தில் கேள்வி கேட்டவர்களில் சிலரை தேர்வு செய்து, அதற்கு பதிலளித்து அதனை நூலாக தொகுத்துள்ளனர். இதைப் படிக்கும்போது ஒருவருக்கு எழுத்து தொடர்பான சந்தேகங்கள் ஓரளவுக்கு குறையும். தீரும்.  எழுத்து தொடர்பாக சில பழக்கங்களை ஜெ. பின்பற்றுகிறார். அதனைக் கூ

நெருப்பு பொறி பறக்கும் செஞ்சந்தனக்கட்டை கடத்தல் மோதல்! - புஷ்பா - தி ரைஸ் - தெலுங்கு

படம்
  புஷ்பா  சுகுமார் தெலுங்கு ஆந்திரத்தின் காட்டுப்பகுதியில் உள்ள செஞ்சந்தனக்கட்டைகளை கடத்தும் குழுவில் இணையும் புஷ்பராஜ் எப்படி அந்த வியாபாரத்திற்கே தலைவனாகிறான் என்பதே கதை.  படத்தின் இயக்குநர் சுகுமார் தனது பேட்டியில் தெளிவாக சொல்லிவிட்டார். இது பான் இந்தியா படம் கிடையாது. முழுக்க தெலுங்கு படமாகத்தான் எடுத்திருக்கிறேன் என்று. எனவே உலக சினிமா அளவுக்கு குறியீடுகளை ஆராயும் அவசியம் ஏதுமில்லை. ஜாலியாக கொண்டாட்டமாக பார்க்க வேண்டிய படம் இது.  புஷ்பராஜ் தொடக்கத்தில் இருந்தே அப்பாவின் பெயர் தெரியாமல் ஏராளமான அவமானங்களை சந்தித்து வளர்கிறான். அவனைக் கோபப்படுத்த எரிச்சல் படுத்த அவன் அப்பாவின் பெயரைக் கேட்பது ஒன்று போதும். அதாவது இன்டி பேரு.... முல்லெட்டி வெங்கட்ரமணா என்பதை அவன் எங்கும் சொல்லமுடியாதபடி சட்டரீதியான அவனது அண்ணன்கள் தடுக்க, அவனுக்குள் இழந்த அத்தனையும் வட்டியோடு பெறும் ஆசை, வெறி பிறக்கிறது. அப்புறம் என்ன அத்தனை சம்பவங்களும் வேட்டைதான்.  அல்லு அர்ஜூன் தான் படத்தினை முழுக்க தோளில் தாங்குகிறார். இடது தோளை உயர்த்தியபடி படம் முழுக்க மனதில் திட்டங்களோடு அனைத்தையும் செய்கிறார். படத்தில் தனக்க

சமையல் கலைஞனை இயக்கும் சிறுவயதுத் தோழி! தீனி

படம்
      தீனி             தீனி தமிழ் டப் அசோக் செல்வன், நித்யா, ரிது ஏ.எஸ் சசி லண்டனில் உள்ள அமரா என்ற ஹோட்டலுக்கு தேவ் என்ற இளைஞன் வேலைக்கு வருகிறான். அவனுக்கு உடல் எடை அதிகம். தசை தொடர்பான நோய் இருப்பதாக கூறுகிறான். நிறைய நேரங்களில் திடீரென வினோதமாக நடந்துகொள்கிறான். பாத்திரங்களை தட்டி விடுகிறான். பிறர் மீது மோதுகிறான். யாரோ இழுத்தது போல வேறு திசைக்கு செல்கிறான். ஆனால் இந்த குறைபாடுகளைத் தாண்டி அவனுக்கு நல்ல மனம் உள்ளது. பிறரின் பிரச்னைகளை அவனால் கவனிக்கமுடியும்.  அவன் வேலை செய்யும் ஹோட்டல் தலைமை சமையல்காரர் நாசர் மிக கண்டிப்பானவர். அவர்  பதினைந்து ஆண்டுகளாக சமைக்காமல் இருக்கிறார். அதற்கு அவர் தனது ஆசை மகளை பிரிந்ததுதான் காரணம். இதனால் தினசரி தற்கொலை செய்துகொள்ளலாமா என்ற அளவிற்கு மன அழுத்தத்திற்கு சென்று திரும்புகிறார். இந்த நேரத்தில் தேவின் வருகை அவரசது செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இறுக்கமாக இருக்கும் அந்த சமையல் அறையின் சூழலை கலகலப்பாக மாற்றுகிறான் தேவ். அவன் சமையல் காரன் என்றாலும் கூட அவனை உடனே சமைக்க விடவில்லை. பாத்திரங்களை கழுவ வைக்கிறார்கள். இதற்கெல்லாம் அவன் கவலைப்பட

ஆங்கிலம், கல்யாணம், ஆனந்தவிகடன் விருது- கணியம் சீனிவாசனுக்கு எழுதிய கடிதங்கள்

படம்
         த.சீனிவாசன்     ஆங்கிலத்தை வாசிக்கவே அரும்பாடு ! 13.12.2020 அன்பு நண்பர் சீனிவாசன் அவர்களுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? மனைவி , குழந்தைகள் நலமாக இருக்க பேரிறையைப் பிரார்த்திக்கிறேன் . நான் இந்த வாரம்தான் சென்னை வந்தேன் . தோலில் ஏற்பட்ட ஒவ்வாமை இங்கு குணமாகவில்லை . ஈரோடு சிகிச்சைக்காக சென்றேன் . அங்கு தீவிரமாக மருந்து சாப்பிட்டு சிகிச்சை எடுத்தபிறகு நிலைமை பரவாயில்லை . என்னைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறேன் . உங்களது வேலை எப்படியிருக்கிறது ? பழக்கமாகிவிட்டதா ? வீட்டிலேயே வேலை செய்யும் முறை எங்களுக்கு புதிது என்றாலும் உங்களுக்கு ஏற்கெனவே பழக்கமானதுதான் அல்லவா ? ஆங்கில நூல்களை வேகமாக வாசிக்க முயன்று வருகிறேன் . தமிழ்நூல்களை பழக்கம் காரணமாக வேகமாக படித்து விடுகிறேன் . அண்மையில் பரத்வாஜ் ரங்கன் எழுதிய நூலைப் படிதேன் . இப்போது பில்கேட்ஸ் பற்றி என் . சொக்கன் எழுதிய நூலை படித்து வருகிறேன் . நூல் சுவாரசியமாக இருந்தால்தான் அதனை பிடிஎப் வடிவில் படிக்க முடிகிறது . இந்த அம்சம் இருக்கும்போது , பக்கங்கள் கூடுதலாக இருந்தால் கூட ப