இடுகைகள்

கலிஃபோர்னியா காட்டுத்தீ - போபால் விஷவாயு, சீனாவில் நச்சு நீர்,

படம்
  ஆஸ்பெடாஸ் உடலுக்குள் செல்வதால் ஏற்படுத்தும் தீமைகள்   ஆஸ்பெடாசிலுள்ள நார்கள், மனிதர்களின் உடலுக்குள் செல்லும்போது நுரையீரலின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் ஒருவர் நன்றாக மூச்சை உள்ளிழுத்து வெளியே விட முடியாது. மூச்சு விடவே திணறுவார். நுரையீரலின் மேலுள்ள மெல்லிய அடுக்கின் பெயர், பிலுரா. இதை ஆஸ்பெடாஸ் வேதிப்பொருள் தடிமனாக்குகிறது. எனவே மூச்சுவிடுவது கடினமாகிறது. ஆஸ்பெடாஸ் காரணமாக ஏற்படும் புற்றுநோய்க்கு மெசோதெலியோமா என்று பெயர். இந்த நோய் ஒருவருக்கு ஆஸ்பெடாஸ் உடலுக்குள் செல்வதால் ஏற்படுகிறது. அதாவது, மெல்ல கொல்லும் விஷம் போல. முதலில் நுரையீரலில் பரவும் புற்று பிற உறுப்புகளுக்கும் வேகமாக பரவுகிறது. நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சுவிடுவது கடினமாகிறது என்றால் இதயம் கடினமாக வேலை செய்யும்படி ஆகிவிடும். இதனால் இதயத் தசைகள் மெல்ல கடினமான இயல்பை பெறும். இது மார்பு வலியை உருவாக்கும்.   அமெரிக்காவின் மாண்டனாவில் உள்ளது லிபி. இங்கு ஆஸ்பெடாஸ் பல்வேறு பொருட்களில் கலந்து, மக்கள் பாதிக்கப்பட்டனர். இதை அகற்ற மட்டுமே அமெரிக்க அரசுக்கு அரை பில்லியன் டாலர்கள் தேவைப்பட்டன. அரசின் சூழல் பாத

ஜெயன்ட் காஸ்வே - அரக்கர்களின் மோதலால் உருவான பாறைவடிவம்

படம்
  தி ஜெயன்ட் காஸ்வே இடம் – வடக்கு அயர்லாந்து கலாசார தொன்மை இடமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு 1986 சற்று வெயில் இருக்கும் நாளாக சென்றால் நன்றாக சுற்றிப் பார்க்கலாம். கற்களில் ஈரம் இருந்தால் கால் பிடிமானமின்றி வழுக்கும். இதைப்பற்றி முன்னமே எழுதியிருக்கிறோம். ஆனாலும் என்ன ரைமிங்காக, டைமிங்காக இப்போதும் எழுதலாம். கலாசார தொன்மை என்ற கோணத்தில் எழுதப்படும் கட்டுரை இது. அயர்லாந்தில் இருக்கும்போது முடிந்தால் ஜெயன்ட் காஸ்வே சென்று பாருங்கள். சூரிய உதயம் அட்லான்டிக் கடலில் வரும்போது, அருங்கோண கற்களில் சூரிய ஒளி மெல்ல படியும் காட்சி அற்புதமானது. பழுத்த இலை மரத்திலிருந்து காற்றின் வழியே இறங்கி நிலம் தொடுவது போன்ற காட்சி. கடல் அலைகள் வந்து கற்களில் மீது மோதும் ஒலியும் நீங்கள் கேட்க முடிந்தால் கவனம் அங்கு குவிந்தால் அதை நீங்கள் நினைவில் ஏதோ ஓரிடத்தில் பின்னாளிலும் வைத்திருக்கலாம்.   இரு அரக்கர்களுக்கு நடைபெற்ற போர் காரணமாக காஸ்வே உருவானதாக கூறுகிறார்கள். இதை உருவாக்கியவர் ஃபின் மெக்கூல். அயர்லாந்தை கடந்து செல்ல கற்பாலத்தை உருவாக்க நினைத்துள்ளார். ஆனால் அது சாத்தியமாகவில்லை. பிறகு தன்னை எதிரி பெனான

அழகிய ரோம் நகரமே....

படம்
  ரோம் அமைந்துள்ள இடம் இத்தாலி கலாசார இடம் பிக்பாக்கெட்டுகள் ஜாக்கிரதை   இத்தாலியின் தலைநகரம். இங்கு நீங்கள் சென்றாலே கடந்தகாலத்திற்கு உங்கள் நினைவு சென்றுவிடும். 753 -476 காலகட்ட கட்டுமானங்கள் இங்கு உள்ளன. இதனை ரோமுலஸ், ரெமுஸ் ஆகியோர் உருவாக்கியுள்ளனர். 1980ஆம் ஆண்டு இதனை கலாசார தொன்மை கொண்ட இடமாக அறிவித்தனர். ரோமை சுற்றிப் பார்க்க வேண்டுமென்றால் நீங்கள் முதலில் கொலோசியத்திலிருந்து பயணத்தை தொடங்கவேண்டும். வெஸ்பியன் மன்னர் கால ரோம் நகரில் 80 ஆயிரம் பேர் உட்காரும் ஆம்பிதியேட்டர் உருவாக்கப்பட்டது. இது பிரம்மாண்டமானது. மன்னர் வெஸ்பியன் உருவாக்கி எட்டு ஆண்டுகளுக்கு பிறகு இது பயன்பாட்டிற்கு வந்தது.கிளாடியேட்டர்கள் இதில் சண்டை போடுவார்கள். சில காலம் இதில் நீர் நிரப்பி கடல் சண்டைகளுக்கான மாதிரி பயிற்சிகளும் செய்யப்பட்டன. இதற்கு அருகில் ரோமன் ஃபாரம் உண்டு. இதில் அரசு அலுவலகங்கள், கோவில், சதுக்கங்கள் உள்ளன. மிகவும் தொன்மையான இடம். இங்கு கட்டப்பட்டுள்ள கோவிலுக்கு வயது 2000. ரோமின் மையமான இடம் என வாட்டிகன் நகரைக் கூறலாம். கிறிஸ்துவர்களுக்கு முக்கியமான இடம்.. கத்தோலிக்க கிறிஸ்தவம் பல்வ

இங்கிலாந்தில் அமைந்துள்ள புதிரான கல்தூண்கள் - ஸ்டோன்ஹென்ச்

படம்
  ஸ்டோன்ஹென்ச் அமைந்துள்ள இடம் வில்ட்ஷையர், இங்கிலாந்து சிறப்பு கலாசார இடம் நிலவுக்கே சென்றாலும் தேயாத செருப்பெல்லாம் வேண்டாம். கொஞ்சம் நல்ல பிராண்ட் செருப்பை வாங்கிப் போட்டுக்கொண்டு செல்லுங்கள். மழை பெய்தால் வழுக்கிவிடும் ஜாக்கிரதை. பார்க்க தமிழ்நாட்டின் கிராமங்களில் அமைந்துள்ள சுமைதாங்கிக் கற்கள் போலவே இருக்கும். சுமைதாங்கி கற்களை யார் அமைத்தார்கள் என்பது ஊர்காரர்களுக்குத் தெரியும். ஏனெனில் கர்ப்பிணியாக இருந்து குழந்தை பெறும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக இறக்கும் பெண்ணின் நினைவுக்காக சுமைதாங்கிக் கற்கள் அமைக்கப்பட்டன. இங்கிலாந்தில் உள்ள ஸ்டோன்ஹென்ச் என்னும் இவ்வகை கற்கள் யாரால், எதற்காக அமைக்கப்பட்டன என்று தெரியாது. கேள்விகளுக்கு பதில் தெரியாது என்று நிறைய இருந்தாலும் கூட இந்த கல் தூண்களுக்கு பெருமைக்கு குறைவில்லை. புதிரான கல் தூண்கள் அமைக்கப்பட்ட காலம் 3,500 ஆக இருக்கலாம். ஆண்டுதோறும் இதை பார்க்கவரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. இதில் உள்ள சில கற்களுக்கு பெயர்கள் கூட வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து கற்களின் பெயர்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆல்டர், சினிஸ்டர

பிரிட்டன், அமெரிக்கா, சோவியத் ரஷ்யாவில் நடைபெற்ற மோசமான விபத்துகள்

படம்
  பிரிட்டனில் நடைபெற்ற சுரங்க விபத்து   மோசமான சுரங்க விபத்து என்பது பிரிட்டனில் நடந்த ஆண்டு 1966. இங்கு அபெர்ஃபான் என்ற கிராமப் பகுதியில் சுரங்கம் ஒன்று தோண்டப்பட்டு செயல்பட்டு வந்தது. சுரங்க வேலைக்காக வந்த மக்கள் அங்கேயே தங்கத் தொடங்கினர். இதனால் அங்கு மக்கள்தொகையும் அதிகரித்து வந்தது. சுரங்கம் தோண்டுபவர்கள் அதில் உருவாகும் கழிவை முறையாக அப்புறப்படுத்தவேண்டும். ஆனால் பெரும்பாலும் அதற்கு தனியாக வேறு செலவழிக்க வேண்டுமாக என அங்கேயே அருகில் உள்ள இடங்களிலேயே கழித்துக் கட்டுவது வழக்கம். அப்படித்தான். இந்த சுரங்கத்தில் உருவான கழிவுகளையும் கிராமத்தில் குவித்து வைத்தனர். அது பெரிய பிரச்னையாகவெல்லாம் இல்லை. அதுவும் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி 1966 வரைதான். அப்போதுதான் அங்கு 17 மி.மீ மழை பெய்திருந்தது. இதனால் நிலம் மென்மையாக குழைந்துபோய் கிடந்தது. கழிவுகள் உயரமாக குவித்து வைக்கப்பட்டிருந்ததால் அவை அப்படியே கீழே பள்ளமாக இருந்த கிராமத்தை நோக்கி வரத் தொடங்கின. இப்படி வந்த சுரங்க கழிவுகளின் மேகம் மணிக்கு 21 மைல். பள்ளி, மருத்துவமனை, 18 வீடுகள் என அனைத்தையும் சுரங்க கழிவுகள் மேலே விழுந்து உடைத்த

தனது உதவியாளரின் உடலுக்குள் புகுந்து நோயாளிகளுக்கு ஆபரேஷன் செய்யும் டாக்டர்! - கோஸ்ட் டாக்டர் -

படம்
  கோஸ்ட் டாக்டர் தென்கொரிய டிவி தொடர் 16 எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப் இயக்குநர் பூ சியாங் சியோல் ( Boo Seong-cheol  ) டாக்டர் சா இயான் மிங் (Rain), ஆணவம் கொண்ட இதய அறுவை சிகிச்சை நிபுணர். தான் கைவைத்து அறுவை சிகிச்சை செய்தால் அந்த நோயாளி பிழைக்கவேண்டும் என போராடும் மருத்துவர். அவரது துறையின் தலைமை மருத்துவர் பான் கூட சாவின் அர்ப்பணிப்பு உணர்வையும் அறுவை சிகிச்சை திறனையும் பார்த்து பொறாமைப்படுபவர். சா திறமையானவர் என்றாலும், தான் மட்டுமே அறுவை சிகிச்சைக்கான நோயாளியைத் தேர்ந்தெடுப்பேன் என பிடிவாதமாக இருப்பவர். இதனால் எமர்ஜென்சி பிரிவில் அவரது தேவை இருந்தாலும் அதை நான் செய்யமாட்டேன் என   பிடிவாதமாக இருக்கிறார். இந்த நேரத்தில் அந்த மருத்துவமனையின் தலைவராக உள்ளவரின் பேரன் கோ தக் (kim bum), அங்கு வேலைக்கு வருகிறான். இதயநோய் துறைக்குத் தான் பயிற்சி பெற வருகிறான். சிபாரிசில் வந்தவன், மருத்துவமனை அவனுடையது என்பதால் எளிதாக வந்துவிட்டான் என மருத்துவர் சா அவனை அவமானப்படுத்தி பேசுகிறார். இழிவாக நடத்துகிறார். நிறைய நோயாளிகளை பார்த்துக்கொள்ள சொல்லி தள்ளிவிடுகிறார். இத்தனைக்கும் மருத்துவ கல்

கிராமத்து நினைவுகளை உயிர்ப்புடன் நினைவுகூர உதவும் கதைகள் - தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - கி.ரா

படம்
  கி. ராஜநாராயணன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் நூல் தொகுப்பு மா ஞானபாரதி ( பாரதி மார்க்ஸ்) கி ரா அவர்களின் 98 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பு. டிஸ்கவரி ப ப்ளிகேஷன்ஸ்   கரிசல் எழுத்தாளர் என அன்புடன் அழைக்கப்படும் கி ராவின் நூல்தொகுப்பு. மொத்தம் 23 கதைகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கதைகள் எவையும் வாசிப்பதற்கு சலிப்போ, அயர்வோ ஊட்டுவன அல்ல. அனைத்து கதைகளும் அதற்கேயான இயல்பில் ஆற்றொழுக்கு போன்ற போக்கில் செல்கின்றன. சொந்த சீப்பு, ஜடாயு, சுப்பன்னா, கோடாங்கிப் பேய், அங்கணம், சாவஞ்செத்த சாதிகள் ஆகிய கதைகள் எனக்கு பிடித்தமானவையாக தோன்றின. சொந்த சீப்பு என்பது, ஒரு பொருளை வாங்கி அதன் மீது வளர்த்துக் கொள்ளும் பற்று பற்றியது. ஒரே அறையில் தங்கும் நண்பர்கள் இருந்தால், அங்குள்ள அனைத்து பொருட்களுமே எந்த கேள்வி பதிலுமின்றி பகிரப்படும். அப்படி பகீரப்படும் சீப்பு காரணமாக அதை வாங்கியவர் மனதில் ஏற்படும் கோபமும், அலுப்பும்தான் கதை. நகர வாழ்க்கையில் முதலில் நாம் வாங்கும் பொருள் பெரிய ஈர்ப்பு கொண்டிருக்கும். அதாவது, அதற்கு மனதில் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கூறலாம். பிறகு, நிறை