இடுகைகள்

மலிவுவிலை ட்ரெட்மில் சாதனை! - ஆனந்த் மகிந்திரா பகிர்ந்த காணொலி

படம்
  முக்கியமான கண்டுபிடிப்பு விருதை பல்வேறு தொழில் நிறுவனங்களும் வழங்கத் தொடங்கியுள்ளன. இதற்கு தமிழ்நாட்டில் முக்கியமான உதாரணம். கவின்கேர். இந்த நிறுவனம், சின்னி கிருஷ்ணா என்ற தங்களது குடும்ப தொழில் முன்னோடியின் பெயரில் சுயதொழிலில் சாதிப்பவர்கள், தொழிலுக்கான ஐடியாக்களைக் கொண்டிருப்பவர்களை ஊக்குவித்து விருதுகளை வழங்குகிறார்கள்.இப்படி செய்வதன் மூலம் இரண்டு நன்மைகள் உள்ளன.   ஒன்று, சுயதொழில் ஆர்வம் கொண்டவர்களுக்கு பண உதவியும், பெரு நிறுவனத்தின் வலைப்பின்னல் வழியாக பொருட்களை விற்பதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது. அடுத்து, பெரு நிறுவனம் பல்லாண்டுகளாக தான் செய்யும் தொழிலில் பணம் சம்பாதித்து இருக்கும். ஆனால் புதிய சிந்தனைகள், பொருட்கள் கிடைத்தால்தான் தொழில் நிறுவனங்களை காப்பாற்றிக்கொள்ள முடியும். இதற்கு சுயதொழில் முனைவோர்களின் சிந்தனையும், பொருட்களும் நிறுவனத்திற்கு பேருதவியாக அமையும்.   பெரு நிறுவனங்களுக்கு இப்படி வறுமையான நிலையில் உள்ள சுயதொழில் முனைவோர்களுக்கு உதவுவதன் வழியாக அவர்களுக்கு சமூக அளவில் நல்ல பெயர் கிடைக்கிறது. அதாவது, பெரு நிறுவனத்திற்கு சிறந்த நன்மதிப்பு. பிராண்டிங். அதேசமயம்

வெற்றிக்கான கொள்கைகள் என்னென்ன? எம்இ மாத இதழ் சொல்லும் ரகசியம்

படம்
  பெருநிறுவனங்கள் அனைத்துமே அங்கு வேலை செய்யும் பணியாளர்களுக்கான இதழ்களை நடத்துகின்றன. அதில் பல்வேறு தொழில் முன்னேற்றங்கள், பணியாளர்களின் சாதனை, நிறுவனரின் லட்சியம், தற்போதைய இயக்குநரின் தொழில்கொள்கை இடம்பெறும். இந்த வகையில் மகிந்திரா எம்இ என்ற இதழை நடத்துகிறது. அதில் வந்த தொழில் அறிவுறுத்தல் கொள்கைகளைப் பார்ப்போம். எப்போதோ ரெடி தொழிலில் வெல்வதற்கான வாய்ப்பு என்பது எப்போது வரும் என தெரியாது. எனவே, நிறுவனம் குறிப்பிட்ட சந்தையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இறங்கினால் திட்டங்களை அறிவிக்கும் வேகத்தில் பணியாளர்களை முடுக்கிவிட தலைவர் தயாராக இருக்கவேண்டும். இல்லையெனில் வெகு விரைவில் வாய்ப்பை இழந்து கையில் உள்ள சந்தையையும் இழந்துவிடுவோம். அத்தனையும் வேண்டாம் கையில் உள்ள அத்தனை பணத்தையும் தொழில் முதலீடாக பயன்படுத்த வேண்டியதில்லை. அதில் ஆபத்துகள் அதிகம். பெரிய முதலீடு மூலம் பெரிய வருமானம் கிடைக்கும் என்பது மூடநம்பிக்கை.   சமரசமற்ற வாழ்வு மேசையை விட்டு விலகி வர தைரியம் இல்லாதபோது அறைக்குள்   நுழையவே கூடாது. செய்யும் வேலையில் அழுத்தம் என காரணம் சொல்லி தரத்தையும், மதிப்பையும் சமரசம்

கடிதம் எழுதி நீண்டநாட்களாகின்றன - வே.பாபு- குமார் சண்முகம் - கடிதங்கள்

படம்
  கடிதம் எழுதி நீண்ட நாட்களாகின்றன… குமார்- எப்படி இருக்கிறாய்? வனாந்தரத்தில் காணாமல் போன குயில் குரல் போல இருக்கிறது உன் பதிலின்மை… என்னவாயிற்று? ஏதாவது படித்தாயா? வேலைபளு அதிகமா? நான்   எதுவும் படிக்கவோ, எழுதவோ இல்லை. தக்கை நண்பர்கள் அனைவரும் நலம். தக்கையில் குறிப்பிடும்படியாக எதுவுமில்லை. வீட்டில் அனைவரும் நலமா? சிவராஜ் அவ்வப்போது தொடர்புகொண்டு பேசுகிறார். தொகுப்பு கூடிய விரைவில் கொண்டு வரலாமென்று இருக்கிறேன். கடிதம் எழுதி நீண்ட நாட்களாகின்றன.                                                                                           வே.பாபு சேலம் 25.03.2006 படம் - பின்டிரெஸ்ட்

மறந்துவிட்டாயா நண்பா? - கடிதங்கள்- குமார் சண்முகம்

படம்
  மறந்துவிட்டாயா நண்பா? 786 வள்ளியம்பாளையம் 31.3.2001 அன்புள்ள என் உயிர் நண்பன் குமாருக்கு, அப்பாஸ் எழுதுவது., நான் இங்கு நலமாக இருக்கிறேன். அதுபோல அங்குள்ள நலத்தை அறிய ஆவலாக உள்ளேன். விடுமுறையில் நீ என்னை மறந்து இருக்கலாம். ஆனால், என்னால் உன்னை மறக்க முடியவில்லை. நீ எங்கு வேலை செய்கிறாய் என்று குறிப்பிடவும்.   அப்படியே எனக்கும் ஒரு வேலை இருந்தால் பார்க்கவும் என்று சொல்லி இருந்தேனே? நீ என்னை மறந்துவிட்டாயா? நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும். அதனால் இந்த வாரம் அல்லது அடுத்தவாரம் ஞாயிற்றுக்கிழமை   நீ என் வீட்டுக்கு வரவும். இடையில் மடல் வரையவும். மறந்திடாதே..நீ என்னை மறந்தாலும் நான் உன்னை மறவேன்.                                                                                            இப்படிக்கு.. எம் அப்பாஸ் படம் - பிக்சாபே

அசுரகுலம் 4 - மனமென்னும் இருட்குகை - புதிய மின்னூல் வெளியீடு

படம்
  அசுரகுலம் 4 - மனமென்னும் இருட்குகை அசுரகுலம் தொடர் வரிசை நூலில் இந்த நூல் மனம் பற்றி பேசும் நான்காவது நூல். ராபர்ட் ஹரே என்ற உளவியலாளரின் ஆய்வுகள் மற்றும் பல்வேறு கொலை வழக்குகளை உதாரணங்களாக மனமென்னும் இருட்குகை கொண்டுள்ளது. மனம் என்பது வெளியே தெரிவதில்லை என்பதால்தான் அதைப் பற்றி நம்மால் நிறைய ஆராய்ச்சிகள் செய்ய முடிகிறது. அப்படி செய்தாலும் கூட அதைப்பற்றி அறிந்திருப்பது மிகவும் குறைவுதான். உளவியல் ஆய்வுகளை ஒருவர் வாசித்தால் மட்டுமே குற்றங்களின் பின்னணி பற்றி எளிதாக அறிய முடியும். அதைக் குறைக்கவும், தடுக்கவும் முடியும். அசுரகுலம் தொடர்வரிசை நூல்கள் குற்ற இலக்கிய நூல் வகையில் வரும். எளிமையான வகையில் ஒருவரின் குற்ற உலகம், குற்றத்தின் காரணம், பாதிப்புகள், அதற்கான அவரின் எதிர்வினை ஆகியவற்றை நீங்கள் நூலில் வாசித்து அறியலாம். நூலை அமேஸானில் வாங்க....வாசிக்க.... https://www.amazon.in/dp/B0BRZH6PQ4 ஸ்கேன் செய்து வாங்க....

பெற்றோரிடமிருந்து குழந்தைகளை பிரிக்க நினைக்கும் எதிரியைத் தடுக்கும் சகோதரர்கள்! பாஸ் பேபி - ஃபேமிலி பிஸினஸ்

படம்
  பாஸ் பேபி ஃபேமிலி பிஸினஸ் ட்ரீம் வொர்க்ஸ் நிறுவனத்தின் அனிமேஷன் படைப்பு. இந்த படத்தின் கதையை சரியாக உள்வாங்க பாஸ் பேபி பார்ப்பது அவசியம். அந்த படத்தின் தொடர்ச்சியாக வரும் கதைதான் ஃபேமிலி பிஸினஸ். இந்த அனிமேஷன் படத்தில் சகோதர ர்கள் இருவர் இருக்கிறார்கள். இதில் ஒருவர் தொழிலதிபர். பணத்தாலேயே கொழிக்கிறார். அவருக்கு குடும்பம் என்றால் பெற்றோர், மூத்த சகோதரர் இருக்கிறார். ஆனால் அவர்களை விட்டு தொழில் பரபரப்பு என தள்ளியே இருக்கிறார். இதற்கு மூத்தசகோதரர், அவரது தொழிலதிபர் தம்பி என இருவர் வாழ்க்கையிலும் நிறைய சங்கடங்கள் காரணங்களாக உள்ளன. அதை தீர்த்து இருவரும் எப்படி ஒன்றாக சேர்கிறார்கள் என்பதே கதை.   குழந்தையாக இருப்பவர்கள் சேர்ந்து பேபி கார்ப் என்ற நிறுவனத்தை நடத்துகிறார்கள். இதை ரகசியமாக செய்து வருகிறார்கள். இதில் சாதனை குழந்தையாக ஒரு காலத்தில் இருந்தவர்தான், இப்போது தொழிலதிபராக இருக்கும் தம்பி. மூத்த சகோதரர் தொழிலில் சிறக்கவில்லை. ஆனால் அவர் மணம் செய்துகொண்டு இரு பெண் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களைக் கற்றுத் தந்து வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொள்கிறார். அவரது மனைவிதான் வெளியில் சென்று

போலி கொலையாளியைக் கண்டுபிடிக்கும் மர்ம கொலைகாரன்! தி மேன் ஃபிரம் டொர்னாடோ

படம்
  மேன் ஃபிரம் டொர்னாடோ இயக்கம் பேட்ரிக் ஹியூகெஸ் கெவின் ஹார்ட், வூடி ஹெரால்சன் நெட் பிளிக்ஸ் காமெடியை மையமாக கொண்ட சண்டைப்படம். குறிப்பிட்ட அழிவு ஆயுதத்தை தூண்டிவிட்டு அழிவு வேலையை செய்து காசு பார்க்க ஒரு கூட்டம் ஆசைப்படுகிறது. அதற்கு உதவும் கூலிப்படையைச் சேர்ந்த ஆள், மேன் ஃபிரம் டொர்னாடோ. இவர் நிறைய ஆட்களை சித்திரவதை செய்து விஷயங்களை கறப்பதில் வல்லவர் என இன்ட்ரோ கொடுக்கிறார்கள். ஆனால் அவர் சொல்லும் கதையும், நடந்துகொள்ளும் முறையுமே பலருக்கும் மூத்திரத்தை முட்டிக்கொண்டு வரச்செய்துவிடும் ரகத்தில் உள்ளது. இவரின் அடையாளத்தை இன்னொருவர் பயன்படுத்தி சிக்கலை ஏற்படுத்திவிட, மேன் ஃபிரம டொர்னாடோ கோபம் கொண்டு எவட்ரா நுவ்வு என துப்பாக்கியை கையில் எடுத்துக்கொண்டு தனது ரெமுனரேஷனைத் தடுத்து ரெபுடேஷனைக் கெடுத்தவனை அழிக்க கிளம்புகிறார். படிக்க கதை சீரியசாக இருந்தாலும் படம் முழுக்க காமெடிதான். மேன் ஃபிரம் டொர்னாடோ , சீரியசான ஆள். பணம் சேர்க்கத்தான் கூலிப்படை வேலையை செய்கிறார். அதில் இடையில் புகுந்து கலாய்த்து காரியத்தை கெடுக்கும் ஆள். டெடி. இவர் ஜிம்மில் வேலை செய்யும் மார்க்கெட்டிங் ஆள். ஆனால்