இடுகைகள்

இசை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வரலாற்றைத் திருத்தும் நேரம் இதுதான்! - க்வெஸ்ட்லவ், இசைக்கலைஞர்

படம்
                  நேர்காணல் க்வெஸ்ட்லவ் அமெரிக்க இசைக்கலைஞர் 1969 ஆம் ஆண்டு நடைபெற்ற ஹார்லெம் கலாசார திருவிழாவை சம்மர் ஆப் சோல் என்ற ஆவணப்படமாக உருவாக்கியுள்ளார் . அவரிடம் பேசினோம் 40 மணிநேரம் நீளும் இசைவிழாவை எப்படி படமாக உருவாக்கினீர்கள் ? இசைவிழாவை ஹார்ட் டிரைவில் போட்டுக்கொண்டு நான் சமைய லறை , ஸ்டூடியோ , அலுவலகம் , வீடு , குளியலறை என அனைத்து இடங்களிலும் பார்த்துக்கொண்டே இருந்தேன் . இப்படியே ஐந்து மாதங்கள் வேலை செய்தேன் . தூங்கும்போது கூட இதனை எப்படி எடிட் செய்வது என்றே யோசித்து வந்தேன் . இந்த இசைவிழா , நமது நினைவிலிருந்து அகற்றப்பட்டுவிட்டதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள் ? இன்று டிக்டாக்கில் தங்களது படைப்புகளை உருவாக்குபவர்கள் கூட அதில் உண்மையாக உழைத்தவர்களுக்கு எந்த அங்கீகாரமும் கொடுக்கவில்லை . நான் இயக்கியுள்ள இந்த ஆவணப்படம் இயக்குநராக எனது முதல் படம் என்பதோடு வரலாற்றையும் சரி செய்யும் என நினைக்கிறேன் . நீங்கள் இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விழாவிற்கான இசையமைப்பாளராக உள்ளீர்கள் . இதில் கிளென் குளோசின் டா பட் நி

நடிப்பு, ஓவியம், பாடல், இசைப்பாடல்கள், நடனம் ஆகியவற்றில் சாதித்த கிளாசிக் பெண்கள்

படம்
                திரைப்பட நடிகை மர்லின் டயட்ரிச்   ஜெர்மனி அமெரிக்காவைச் சேர்ந்த பாடகர் , நடிகராக புகழ்பெற்றவர் மர்லின் டயட்ரிச் . இவர் 1930 ஆம் ஆண்டு தி ப்ளூ ஏஞ்சல் என்ற படத்தில் தனது வெற்றிக்கணக்கைத் தொடங்கினார் . இதன்பிறகு ஆங்கிலத் திரைபடங்களில் நடித்தவர் , பாடல் , நடிப்புக்கென உலகமெங்கும் உள்ள தியேட்டர்களுக்கு பயணித்து வெற்றி கண்டார் . உலகப் போரின்போது ஜெர்மனியிலிருந்து வெளியேறிய மக்கள் அமெரிக்காவிற்கு வந்து குடியேற பல்வேறு உதவிகளைச் செய்தார் . மர்லின் மன்றோ திரைப்பட நடிகை   1926 ஆம் ஆண்டு பிறந்தவரின் இயற்பெயர் நார்மா ஜீன் மார்டென்சன் . இவர் காப்பகத்தில் வளர்ந்தவர் . 1950 களுக்குப் பிறகு படங்களில் நடித்து புகழ்பெற்றார் . தனது நடிப்பிற்காக கோல்டன் குளோப் விருது வென்றார் . தனது 36 வயதில் திடீரென இறந்துபோனாலும் சினிமா வரலாற்றில் இவரளவுக்கு கவர்ச்சியான பெண் என்று யாரையும் குறிப்பிட முடியாது . 1944 ஆம் ஆண்டு சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் மன்றோ ஆயுத தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்தார் . ஜோசபின் பேக்கர் பாடகர் , நடிகர்   

மனதிலுள்ள விரக்தியை இசையாக மாற்றுவதுதான் பலம்! இசையமைப்பாளர் அங்கூர் திவாரி

படம்
              அங்கூர் திவாரி இசையமைப்பாளர் இசைக்கலைஞராக இருப்பதன் நல்ல அம்சம் என்ன ? உங்கள் மனதிலுள்ள அனைத்து விரக்திகளையும் இசையாக மாற்றிவிட முடியும் . தனியிசை பாடல்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? பயமின்மை . உங்களை நீங்களே கிண்டல் செய்துகொள்வதாக ஏதாவது சம்பவத்தை கூறுங்கள் . கோல்கத்தாவில் ஹலோ சென்னை என்ற இசைப்பயணத்தை தொடங்கினோம் . பின்னாளில் இந்த திட்டம் தனது கான்செப்டை இழந்துவிட்டதாக உணர்ந்த அந்த நேரத்தை இப்படி சொல்லலாம் . தூங்கப்போகும் முன்பு என்ன புத்தகத்தை படிப்பீர்கள் ? புத்தகத்தின் இடத்தை இப்போது பாட்காஸ்ட் பிடித்துக்கொண்டுவிட்டது . அரியா கோட் என்ற பாட்காஸ்டை இரவுகளில் கேட்டு வருகிறேன் . முதல் டேட்டில் கடைப்பிடி ஏதாவது யோசனை சொல்லுங்கள் . சிறப்பான உரையாடல் நேரத்தை மறக்க வைக்கும் . உறவுகளை கையாள்வதற்காக எந்த விதியை பின்பற்றுகிறார்கள் ? அவரவருக்கான இடத்தை இருவரும் புரிந்துகொள்ளவேண்டு்ம் . ஆரோக்கியத்திற்காக எந்த விஷயத்தை கடைப்பிடிக்கிறீர்கள் ? நீரையும் தூக்கத்தையும் எப்போதும் விடாமல் கடைப்பிடி

முதலில் வாங்கிய காரை என்னால் மறக்கவே முடியாது! - அனு மாலிக், இசையமைப்பாளர்

படம்
              இசையமைப்பாளர் அனுமாலிக் இந்துஸ்தான் டைம்ஸ் தினேஷ் ரஹேஜா இருபத்திரெண்டு வயதில் உங்கள் தொழில் எப்படி இருந்தது ? டீனேஜ் வயது அல்லவா ? எனது முதல் பாடலை அன்றைய சூப்பர்ஸ்டார் ஆஷா போன்ஸ்லேவுடன் தொ்டங்கினேன் . ஹண்டர்வாலி 77 என்ற படத்தை நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான மோகன் சோடி தொடங்கினார் . அதற்கு இசையமைக்க எனது தந்தை சர்தார் அலி ஒப்பந்தமானார் . அப்போது ஏதோ ஒரு பாடலை நான் ஹம்மிங் செய்துகொண்டிருக்க இயக்குநர் உடனே என்னைப் பிடித்து பாடல் ஒன்றைப் பாட வைத்துவிட்டார் . அப்போது நான் வாய்ப்புக்காக பல்வேறு ஸ்டூடியோக்களுக்கு அலைந்து கொண்டிருந்தேன் . காற்றில் காதல் இருப்பதாக தெரிகிறதே ? நான் எனது மனைவி அஞ்சுவை அவளுடைய இருபத்தியொரு வயதில் திருமணம் செய்துகொண்டேன் . அப்போது எனக்கு வயது இருபத்திரெண்டு . மிதிபாய் கல்லூரியில் நாங்கள் படித்தபோது காதல் மலர்ந்து உறவு உருவானது . முதல் பாடலை எப்போது எழுதினீர்கள் ? நான் அஞ்சுவை காதலித்துக்கொண்டிருந்தேன் . அவளை பின்தொடர்ந்து சென்றுகொண்டிருந்தேன் . அவள் திடீரென என்னைப் பற்றி கல்லூரி முதல்வரிடம் புகார் கொடு

கவனிக்கப்படாத ஆளுமைகள்

படம்
  கவனிக்கப்படாத ஆளுமைகள் அறிவியல், கணிதம் ஆகிய துறைகளில் சாதித்த ஆளுமைகளை கணக்கில் எடுத்தால் நூறு ஆளுமைகள் என்ற தலைப்பில் பட்டம் பதிப்பகத்தில் நூலே கொண்டு வரலாம். ஆனால் இதில் இடம்பெறுபவர்கள் யார்? ஐன்ஸ்டீன், காஸ், ஆர்க்கிமிடிஸ், கலீலியோ ஆகியோர்தான் இப்பட்டியலில் இடம்பெறுவார்கள். ஆனால் இவர்களைக் கடந்து புகழ்பெற முடியாத புத்திசாலிகள் உண்டுதானே? அவர்களின் வரிசைதான் இது.  அமேலியா எம்மி நோதர் (Amalie Emmy Noether 1882–1935) பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஜெர்மனியில் பிறந்து ஆற்றல் சேமிப்பு குறித்த வரையறையைக் கூறிய அறிவியலாளர். சார்பியல் தியரி சார்ந்த கணிதத்திலும், இயற்கணிதத்திலும் பங்களித்துள்ளார். பல்லாண்டுகள் புறக்கணிப்புக்குப் பிறகு கோட்டிங்கன் அறிவியலாளர்கள் மையத்தில் அனுமதிக்கப்பட்டார். பாலின பாகுபாட்டினால் அமேலியாவின் திறமை மறைக்கப்பட்டது வேதனை.  எமிலி போரல் ((Emile Borel ( 1871–1956)) பிரான்சில் பிறந்த அறிவியலாளரான இவர், பதினொரு வயதிலேயே அறிவுதாகத்தில் பாரிஸ் சென்றார். நிகழ்தகவு தியரியில் பல்வேறு சாதனைகளை  நிகழ்த்தியவர் போரல். 1920 ஆம்ஆண்டு கேம் தியரியில் பல்வேறு அடிப்படை அம்சங்கள் உருவாக

12 வயதில் இசைத்த பீத்தோவன்!

படம்
  1.இசைமேதை பீத்தோவன் பிறந்த ஆண்டை பலரும் 1772 என்று குறிப்பிடுவார்கள். ஆனால் அவர் பிறந்த ஆண்டு 1770, டிசம்பர் 17 ஆம் தேதி.  2.1783 ஆம் ஆண்டு பீத்தோவன் தன் இசைக்குறிப்புகளை இசைத்தார். அப்போது அவரின் வயது 12.  3.பீத்தோவனின் காது கேட்கும் திறன் 25 வயதில் குன்றத் தொடங்கியது. 46 வயதில் காது கேட்கும் திறனை முழுமையாக இழந்துவிட்டார் . அந்நிலையிலும் இசைக்குறிப்புகளை எழுதி வந்தார்.  4. பதினொரு வயதிலிருந்து குடும்பத்திற்காக உழைக்கத் தொடங்கினார். இசைக்கலைஞர்   கிறிஸ்டியன் காட்லப் நீஃபே (Christian Gottlob Neefe) என்பவரின் உதவியாளராகச் சேர்ந்து உழைத்தார்.  

ஆத்மா உலகில் மாட்டிக்கொள்ளும் பியானோ ஆசிரியர்! சோல் -2020

படம்
              சோல் சிறந்த முறையில் ஜாஸ் இசையைக் கற்றுக்கொண்ட பியானோ ஆசிரியர் . ஆர்வமே இல்லாத மாணவர்களுக்கு இசையில் ஆர்வம் பிறக்க போராடிக்கொண்டிருக்கிறார் . பள்ளியில் பகுதிநேரமாக ஆசிரியராக உள்ளவருக்கு முழுநேர ஆசிரியர் என்ற பதவி உயர்வும் கிடைக்கிறது . அதேநேரத்தில் அவரது நண்பர் மூலமாக புகழ்பெற்ற டோரத்தி வில்லியம்சின் குழுவில் சேர்ந்து பியானோ வாசிக்கவும் வாய்ப்பு வருகிறது .    அந்த சந்தோஷத்தில் சாலையில் நடந்து செல்லும்போது பாதாளச்சாக்கடையில் விழுகிறார் . அவரது ஆயுள் முடிந்துவிடுகிறது . அவரது ஆத்மா , கிரேட் பியாண்ட் , கிரேட் பிஃபோர் என பல்வேறு உலகங்களுக்கிடையில் மாட்டிக்கொள்கிறது . சொர்க்கம் , நரகம் , அடுத்த பிறப்பு என பல்வேறு விஷயங்களை அவரது ஆன்மா எப்படி கற்றுக்கொள்கிறது , பியானோ வாசிப்பது என்பதில் ஆசிரியருக்கு ஆர்வம் இருந்தாலும் அவரது அம்மாவைப் பொறுத்தவரை அது பைசாவுக்கு பிரயோஜனமில்லாத வேலை . அவரது கனவு நிறைவேறும் நேரத்தில் அவரது உயிர் சொர்கத்திற்கு வந்துவிடுகிறது . பிறகு எப்படி மீண்டும் உலகிற்கு சென்றார் , அவரது கனவை நிறைவேற்றிக்கொண்டாரா என்பதை நகைச்சுவை நெகிழ்

பியோனா மூலம் கடந்த கால வாழ்க்கையை கண்டுபிடிக்கும் அடியாள்! - அன்லீஸ்டு

படம்
                அன்லீஸ்டு நடிப்பு , தயாரிப்பு ஜெட்லீ கந்துவட்டி தலைவனின் நாய் போல வளர்க்கப்படும் இளைஞனின் முன்கதையை அவன் அறிந்துகொள்ளும்போது என்னாகிறது என்பதுதான் படத்தின் மையக்கதை . டேனியாக ஜெட்லீ அப்பாவித்தனமும் , கழுத்திலுள்ள பெல்ட்டை அவிழ்த்தால் வெறிநாயாக மாறி எதிரிகளை அடித்து பிளந்து நடித்திருக்கிறார் . வெறும் அடிதடி மட்டுமன்றி , தனது தாய் யார் என்று தெரிந்துகொள்ளும் தவிப்பிலும் , தனது ஆதரவளிக்கும் பியானோ மெக்கானிக்கின் வளர்ப்பு மகள் மீதான பிரிய முத்தத்தை சிரித்தபடியே ஏற்பது , தாயின் இறப்பிற்கு காரணமான கந்து வட்டி தலைவனை அடித்து பிளப்பது என நடிப்பிலும் வேறுபாடு காட்டியிருக்கிறார் . உளவியல் ரீதியான கடுமையாக பாதிக்கப்பட்ட மனிதராக டேனி உள்ளார் . அவரை மெல்ல இசைமூலம் நடப்பு உலகிற்கு விக்டோரியா என்ற பெண் இழுத்து வருகிறார் . அதற்கு தடையாக இருப்பது கந்துவட்டித் தலைவன் . அவனை எப்படி டேனி தன்னுடைய வாழ்க்கையிலிருந்து அகற்றுகிறான் என்பதுதான் இறுதிப்பகுதி . விக்டோரியா டேனியை எப்படி காதலனாக ஏற்கிறாள் என்பது நிறைய இடங்களில் பொருந்தாதது போலவே உள்ளது . மனத்தளவி

விமானத்தில் செல்லும்போது அழுகை வருவது ஏன்? பதில் சொல்லுங்க ப்ரோ? - வின்சென்ட் காபோ

படம்
    pixabay       பதில் சொல்லுங்க ப்ரோ ? வின்சென்ட் காபோ காய்ச்சலில் இருக்கும்போது சாப்பிடாமல் இருப்பதும் , சளிப்பிடித்திருக்கும்போது சாப்பிடுவதும் சரியா ? சளி பிடித்திருக்கும்போது சாப்பிடுவது பொதுவானதுதான் . நோய்த்தொற்றை எதிர்கொள்ள உடலில் பலம் தேவை . எனவே நோயுற்றிருக்கும்போது ஏதாவது உணவை சாப்பிடுவது அவசியம் . உடலில் நீர்ச்சத்து குறைந்திருக்கும்போது , சூப் தயாரித்து குடிப்பதை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர் . 2002 இல் செய்த ஆராய்ச்சிப்படி ஆராய்சியாளர்கள் சளிப்பிடித்திருக்கும்போது உணவை முறையாக எடுத்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கிறது என்று கூறினர் . இதில் கலந்துகொண்டவர்கள் குறைவானர்கள்தான் . மேலும் பசித்தால் சாப்பிடாமல் கட்டாயப்படுத்தி சாப்பிடுவது சரியானதல்ல . கிரேக்கத்தில் காய்ச்சல் அடிக்கும்போது எதையும் சாப்பிடாமல் பட்டினி கிடப்பது புழக்கத்தில் இருந்து வந்த து . இது காய்ச்சலை குணப்படுத்தும் என்று கூறமுடியாது . உணவு எடுத்துக்கொள்வதை விட முழுமையாக ஒய்வெடுப்பது முக்கியமானது . விமானத்தில் படங்களை பார்க்கும்போது கண்ணீர் வருவது ஏன் ? தனி