இடுகைகள்

சமூகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காதல் அகராதியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வார்த்தைகள் என்னென்ன?

படம்
            இன்று உலகில் புழங்கும் காதல் வார்த்தைகளை அறிவோமா ? 143 முதல் பிளேம்ஸ் வரை பல்வேறு காதல் வார்த்தைகளை காதல் உலகம் பார்த்து வந்துதது . இப்போது என்னென்ன வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள் என்பதை பார்ப்போமா ? ஃபிளியாபேக்கிங் டிவி ஒன்றில் ஒளிப்பரப்பாகும் ஃபிளியாபேக் சீரிஸின் பெயர் . மோசமான காதல் வாழ்க்கையைக் குறிக்க இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள் . கோட் கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் சிறந்த காதல் பார்ட்னரை குறிக்க இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள் . அபோகலிப்சிங் நமது வழியில் வரும் எந்த உறவையும் கைவிடாமல் அதனை கடைசி உறவாக நினைத்து நடந்துகொள்வது . கோவிட் காலத்தில் பலரும் கற்றுக்கொண்ட விஷயம் இது . பியூ / பூ / பே ஆண்டுதோறும் சிறியதாகிக்கொண்டு செல்லும் பார்ட்னரின் செல்லப்பெயர் . காதலிலிருந்து திருமண வாழ்க்கைக்கு சென்றாலும் அப்படியே பின்பற்றலாம் தப்பில்லை . எமோ சின்ன பிரச்னை என்றாலும் கரைந்தழுது மதிமுக வைகோ போல நடந்துகொள்பவர்களை இந்த வகையில் சேர்த்துக்கொள்ளலாம் . எல்லாவற்றிலும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக இருக்கும் நபர்களை ஹேண்ட

பிரேசில் நேரடி பணப்பரிமாற்ற திட்டத்தில் இந்தியா கற்கவேண்டியது என்ன?

படம்
                நேரடி பணப்பரிமாற்றத்தில் இந்தியா கற்கவேண்டியவை ! இந்திய அரசு கடந்த ஆகஸ்ட் முதல் 52 அமைச்சகங்களை ஒன்றாக இணைத்து , 384 நலத்திட்டங்களை மக்களுக்கு சென்றுசேர்வதற்கான முயற்சிகளை செய்து வந்த்து . நேரடி வங்கிக்கணக்கு பரிமாற்றம் மூலம் நலத்திட்டங்களை இந்திய அரசு செயல்படுத்திவருகிறது . பிரதான் மந்திரி காரிப் கல்யாண் யோஜனா என்ற திட்டம் மக்களுக்கு உணவுப்பொருட்களை வழங்குவதோடு வறுமை ஒழிப்பு மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை வளர்க்கவும் உதவுகிறது . நீண்டகால நோக்கில் இதனை விரிவுபடுத்தி , குறைகளைக் களைந்தால் மட்டுமே நலத்திட்ட உதவிகள் அனைத்து தரப்பு மக்களிடமும் சென்றுசேரும் . இந்திய அரசின் சிந்தனைகள் சரியாக இருந்தாலும் அனைத்து திட்டங்களிலும் ஒருங்கிணைப்பு முறையாக இல்லாததால் மகாத்மா காந்தி கிராம வேலைவாய்ப்பு திட்டம் , பிரதான் மந்திரி மாட்ரி வந்தனா யோஜனா ஆகிய திட்டங்களில் ஆயிரக்கணக்கான பயனர்கள் தங்களுக்கான பயன்களைப் பெற முடியவில்லை . 2015 ஆம் ஆண்டு டில்லியில் நிதி அமைச்சகம் ஒருங்கிணைத்த பொருளாதார மாநாட்டில் , ஜன்தன் ஆதார் திட்டம் விவாதிக்கப்பட்டது . இதில் பிரேசில்

மனிதநேயத்தை ஒட்டியதே கலை! - அனாதைப் பிணங்களை எரிக்கும் திண்ணைநிலாவாசிகள் நாடககுழு தலைவர் பக்ருதீன்

படம்
            அனாதைப் பிணங்களை எரிக்கும் தியேட்டர் குழு ! சென்னையைச் சேர்ந்த திண்ணை நிலாவாசிகள் எனும் நாடக குழு , தங்களது செயல்பாடு தாண்டி சமூகப்பணிக்காக பாராட்டப்பட்டு வருகிறது . இக்குழுவினர் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் அனாதைப் பிணங்களை பெற்று அவற்றை அடக்கம் செய்து வருகின்றனர் . இதனை செய்யும் குழுவின் தலைவர் எம் . பக்ருதீன் . சமூகத்தில் என்ன நடக்கிறது என்று கலைஞர்களுக்கு தெரிவது அவசியம் . அதோடு சமூகத்திற்கான பணிகளிலும் அவர்கள் பங்களிக்கவேண்டும் என்று கொள்கையுடையவர் பக்ருதீன் . இங்கு யாரும் அனாதைகள் இல்லை . நாங்கள் எந்த சடங்குகளையும் பின்பற்றவில்லை . உடல்களை முறையாக பெற்று அதனை முறைப்படி அடக்கம் செய்கிறோம் என்றார் பக்ருதீன் . பொதுமுடக்க காலத்திலும் கூட நாறு பிணங்களை அடக்கம் செய்திருக்கிறது இந்த நாடக குழு . கோவில்படியில் செயல்படும் முருகபூபதியின் மணல் மகுடி நாடக குழுவில் நடிப்பு பயிற்சி பெற்றவர் பக்ருதீன் . 2015 ஆம்ஆண்டு சமூக செயல்பாட்டாளர் ஆனந்தி அம்மாளின் காரணமாக சென்னைக்கு வந்திருக்கிறார் . ஆனந்தி அம்மாள் , அனாதைப் பிணங்களை பெற்று நல்லடக்கம் செய்து வந்தார் .

சிறந்த கதை நூல்கள் 2020! டைம் இதழில் பரிந்துரைக்கப்பட்ட நாவல், சிறுகதை நூல்களின் பட்டியல்!

படம்
                சிறந்த கதை நூல்கள் ஐ ஹோல்ட் எ வோல்ஃப் பை தி இயர்ஸ் லாரா வான் டென் பெர்க் அனைத்தும் பெண்களை மையமாக கொண்ட சிறுகதைகள் . நிஜ வாழ்க்கையிலிருந்து துண்டிக்கப்படும் பெண்களின் கதைகளை நகைச்சுவையும் , வலியும் கலந்து படைப்புகளாக்கியுள்ளார் . பர்னிங் மேகா மஜூம்தார் ஒரு முஸ்லீம் பெண் தவறுதலாக தீவிரவாதி என குற்றம் சாட்டப்படுகிறாள் . அவளுக்கு எதிராக அனைத்து சாட்சிகளும் உருவாக்கப்படுகிற நிலையில் எப்படி அவளின் வாழ்க்கை பயணிக்கிறது என்பதை இந்தியாவின் அரசியல் நிலையை அப்படியே கண்ணாடி போல காட்டும் படைப்பு இது . வேர் த வைல்ட் லேடீஸ் ஆர் அயோகா மட்சுதா ஜப்பானிய பேய்கதைகளை பெண்ணிய பார்வையில் சொல்லியிருக்கிறார் ஆசிரியர் . இங்கு பேசப்படும் சூழல்கள் அனைத்தும் தினசரி வாழ்க்கையில் நாம் அனைவரும் சந்திப்பதுதான் . பிரெஸ்ட் அண்ட் எக்ஸ் மீகோ காவகாமி   ஜப்பானிய நாட்டில் வாழும் அக்கா , தங்கை , அவர்களுடைய உறவுப்பெண் ஆகியோரின் வாழ்க்கையைச் சொல்லும் படைப்பு . ஹோம்லேண்ட் எலிஜீஸ் அயத் அக்தர் அக்தர் , தனது பாகிஸ்தானிய பரம்பரை வழி அவரது பெயர

குறுக்கெழுத்து புதிர்களும், சமூக பிரச்னைகளும் வேறுவிதமானவை! - வெய் ஹூவா ஹூவாங்

படம்
          வெய் ஹூவா ஹூவாங் முன்னாள் கூகுள் பொறியாளர், புகழ்பெற்ற குறுக்கெழுத்து திறனாளர், கணினி விளையாட்டு வடிவமைப்பாளர். புதிதாக கல்வி கற்க கல்லூரி செல்பவர்கள், தொழிலைத் தொடங்குபவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? நாம் எடுக்கும் சரியான முடிவு என்பது எப்போதும் சரியான விளைவை ஏற்படுத்தும் என்று கூறிவிட முடியாது. விளைவுகள் என்பது அதிர்ஷ்டம், சூழல், அப்போதைய வாய்ப்பு ஆகியவற்றைப் பொறுத்தது. நமக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் நாம் ஒரு முடிவை எடுப்போம். ஆனால் அதன் விளைவு என்பது நாம் யோசித்தாற்போல அமையாது. விளைவுகள் எப்படி இருந்தாலும் நாம் மனதில் நம்பிய விஷயங்களை பின்தொடர்ந்து செல்வதே சிறப்பானது. இன்று உலகம் நிறைய சவால்களை சந்தித்து வருகிறது. இதுபற்றி தங்களது கருத்து என்ன? புதிர்களையும், குறுக்கெழுத்துகளையும் உருவாக்குபவனான நான் இதைப்பற்றி என்ன சொல்லுவது?  புதிர்களை உருவாக்கி அதற்கான விடையை கண்டுபிடிப்பது வேறு. நிஜமான பிரச்னைகளுக்கான தீர்வுகளை தேடுவது வேறு. புதிர்கள், குறுக்கெழுத்துகள் என்பது மகிழ்ச்சிக்கானது. சமூக பிரச்னைகளுக்கான சரியான தீர்வு என்பது யாருக்குமே தெரியாது. க

நூறுவயது வரை வாழ என்ன செய்யலாம்?

படம்
          cc       நூறு வயது வாழ்வது எப்படி? சாப்பிடு குடி கொண்டாடு உதவியாக நண்பர்கள் ஆதரவாக குடும்பம் என்று இருப்பது நெருகடியாக சூழலில் மனிதர்களின் ஆயுளை நீட்டிப்பதாக பிரகாம் யங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிக நண்பர்கள் உறவின்றி, உறவுகளின் அண்மையின்றி இருப்பவர்களை விட 50 சதவீதம் அதிக ஆயுளுடன் ஒருவர் வாழ சமூகத்தோடு பழகி வருவது முக்கியம். ஆயுள் நீள மனச்சோர்வை போக்குவது முக்கியமான அம்சம். சிந்தனைகள் முக்கியம் நூறுவயது ஆனவர்களின் இளமைப் பருவத்தை ஆராய்ந்தபோது அவர்கள் அனைவரிடம் பேசி பழகிய தன்மை கொண்டவர்கள் என்று தெரியவந்துள்ளது. வாழ்க்கையில் குறிப்பிட்ட நோக்கம் என்று உழைப்பவர்களுக்கு எதிர்மறை சிந்தனைகள் மனதில் தோன்றாது. எனவே, பரபரவென உழையுங்கள். உழைத்து ஓய்ந்தபிறகு உறங்குங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும் என ஜாமா சைக்கியாட்ரி இதழ் ஆய்வு கூறுகிறது. ஓடினால் வாழலாம். ஒருமணிநேரம் டிவி பார்த்தால் உட்கார்ந்துதான் பார்க்கவேண்டும். இதனால் ஆயுளில் 22 நிமிடங்கள் குறைகிறது என்கிறார்கள். 25 வயதுக்குப் பிறகு முடிந்தளவு காலை அல்லது மாலையில் சாலையில் ஓடுங்கள். யோகா அல்லது உடற்பயிற்சி செ

சிஎஸ்ஆர்: தன்னார்வ பங்களிப்பும், லாபமும்!

படம்
7 நிறுவனங்களின் பங்களிப்பு தேர்தல் , தண்ணீர் தட்டுப்பாடு , உறுப்பு தானம் , சாலை விபத்து ஆகிய விஷயங்களுக்கு பெருநிறுவனங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பல தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து நடத்துகின்றன . இதற்கு பெரும்பாலான நிதியை குறிப்பிட்ட நிறுவனம்தான் செலவிடும் . இம்முறையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா , தி இந்து , இ்ந்துஸ்தான் டைம்ஸ் போன்ற தேசிய நாளிதழ்கள் தண்ணீர் தட்டுப்பாடு , வாக்குரிமை , பழமையான நகரங்கள் பற்றிய செய்திக்கட்டுரைகளை தொடர்ச்சியாக வெளியிடுகின்றன . மேற்சொன்ன துறைகளில் வல்லுநர்களை , ஆய்வாளர்களை கூட்டி வந்து பொதுநலனுக்கான பல்வேறு ஆய்வு கூட்டங்களையும் நடத்துகின்றன . நாளிதழ்களின் அடிப்படையான பணி , அறிவை மக்களுக்கு புகட்டுவதுதான் . அதோடு தன்னை மக்களில் ஒருவராக கருதும் பத்திரிகைகள்தான் மக்களுக்கான பங்கேற்பு பகுதிகளை தொடர்ச்சியாக உருவாக்கிக்கொண்டு வருகின்றன . இதில் தேசிய நாளிதழ்கள் குறிப்பிட்ட சமூக பிரச்னை சார்ந்து அத்துறையில் செயல்படும் முன்னணி தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது . தனியார் நிறுவனங்கள் இந்த பாணியை பின்பற்றுவதோடு தாங்கள் சார்ந

கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள்!

படம்
பிக்சாபே 4 கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்விகள் ! சமூக பொறுப்புணர்வு திட்டங்களை பொறுத்தவரை இந்தியாவில் நிறைய விஷயங்களை செய்ய முடியும் . அரசும் ஆதரவுக்கரம் நீட்டும் . ஆனால் இதற்காக திட்டம் அவசியம் .. ஒரு விஷயத்தை கையில் எடுத்துவிட்டு அதன் பிரச்னைக்கான தீர்வு கிடைத்துவிட்டது என்று கலைந்து போய்விடக்கூடாது . கல்வி , சுகாதாரம் , சூழல் போன்ற பிரச்னைகளை நீங்கள் கையில் எடுத்தால் செய்வதற்கு நிறைய விஷயங்கள் உண்டு . உதாரணமாக சென்னையில் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டபோது , டைம்ஸ் ஆப் இந்தியா வாட்டர் பாசிட்டிவ் என்ற பிரசாரத்தை கையில் எடுத்தது . மக்களின் நினைவில் நீர் பற்றிய கவனத்தை கொண்டு வந்தது . அதேநேரம் ஆனந்த விகடன் தன்னார்வலர்களை திரட்டி நீராதாரங்களை தூர்வாரும் முயற்சிகளை செய்தது . அதுதொடர்பான செய்திகளுக்கு வாரந்தோறும் பக்கங்களை ஒதுக்கியது . இதெல்லாம் சினிமாவை வைத்து வியாபாரம் செய்கிறார்கள் என்ற பெயரை கொஞ்சமேனும் மாற்றும் விஷயங்கள் . இந்த பிரசாரங்களை , திட்டங்களை செய்வதில் பல்வேறு தடைகளும் எழக்கூடும் . எனவே திட்டங்களை தயாரிக்கும்போது நீங்கள் என்ன கேள்விகளைக் கேட்கவேண்டும் என்