இடுகைகள்

டைம் 2019 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எதிர்காலத்திற்கு ஊக்கமூட்டும் இசைக்கலைஞன்!

படம்
ஒசுனா எதிர்கால நட்சத்திரம்! தன்னுடைய பாடல் ஒன்றை ரீமிக்ஸ் செய்வதற்கான ஒசுனா என்னை வந்து சந்தித்தார். அவர் தனக்கு என்ன வேண்டும் என்று கேட்பதற்கு தயக்கமே காட்டவில்லை. அவர் எதிர்காலத்தில் இசைத்துறையில் சூப்பர்ஸ்டார் ஆவதற்கான அனைத்து அம்சங்களும் நிறைந்தவர் என்று அஎனக்கு தெரிந்தது. அப்போது ஆரா, பைலா ஆகிய பாடல்கள் மாபெரும் வெற்றியைப் பெற்றிருந்தன. குழந்தைகள் கூட கடுமையாக உழைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு ஒசுனா சிறந்த உதாரணம். அவரின் கனவும், அதை நோக்கிய பயணமும் நெடியது. அதை அவர் தெரிந்துகொண்டிருக்கிறார் என்பதே இங்கு முக்கியமானது. டாடி யாங்கி டைம்

பாத்திரத்தின் குணங்களை வெளிப்படுத்தும் கலைஞர்! - கிலேட் குளோஸ்

படம்
கிலென் குளோஸ் 1980ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். அப்போது தி நேச்சுரல் படப்பிடிப்பில் குளோஸை சந்தித்தேன். அன்றிலிருந்து இன்றுவரை அவரின் நட்பு தொடர்கிறது. சக தோழியாக, நண்பராக என்று பெருமையாக சொல்லுமளவு எங்கள் உறவு உள்ளது. குளோஸ் தான் ஏற்கும் கதாபாத்திரத்தில் எங்குமே தன்னுடைய ஆளுமையை வெளிப்பட அனுமதிப்பதில்லை. அதுதான் இவரின் சிறப்பம்சம். இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும், அவர் திரையில் தோன்றும்போது சிறப்பான நடிப்பைக் கொடுப்பார் என்று நம்புகிறேன். ரசிகர்களை அவர் என்றுமே ஏமாற்றியதில்லை. ராபர்ட் ரெட்ஃபோர்டு டைம்

அனைவரின் கவனத்தை ஈர்க்கும் கவனத்தின் அழகு! - கிளாரே கெல்லர்

படம்
கிளாரே வெய்ட் கெல்லர் எளிமையின் அழகு! கிளாரே தனது தாய் தனக்கு உடை தைத்ததை சிறுவயது ஞாபகங்களாக கூறியிருந்தார். அதனாலோ என்னவோ தெரியவில்லை. அவரின் பின்னாள் ஆர்வம் ஃபேஷன் துறை மீது திரும்பியது. இவர் தைக்கும் உடைகள் வெறும் அலங்காரம், தையல் சார்ந விஷயங்களாக இல்லாமல் அதை உடுத்தும் மனிதரின் எண்ணங்களாக மாறும் மாயத்தை நிகழ்த்துகின்றன. இதற்கு உதாரணம் சொல்லவா? இங்கிலாந்து இளவரசர் ஹாரியை மணம் செய்த மேர்கலுக்கு இவர் உடை வடிவமைத்தார். எளிமையும் கண்ணியமும் பொருந்திய அந்த ஆடையைப் பார்த்தவர்கள் கேட்ட கேள்வி, இந்தளவு அழகாக யார் இந்த உடையை வடிவமைத்தவர் என்பதுதான். ஜூலியனே மூர்

தனித்துவமான நடிகர் - மெஹர்ஸாலா அலி

படம்
டைம் 2019 செல்வாக்கு பெற்ற ஆளுமைகள் மெஹர்ஸாலா அலி அலி, திரைத்துறையில் முன்னர் இருந்தே பணியாற்றினாலும் அவரின் நடிப்புக்கான அங்கீகாரமும் புகழும் இப்போதுதான் கிடைத்து வருகிறது. அவருடன் நான் ஹைடன் ஃபிகர்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளேன். இப்படத்தில் அவருக்கும் எனக்குமான காட்சிகள் கிடையாது. அவர் நடிப்பை நான் படப்பிடிப்பில் பார்த்துள்ளேன். ரசிகர்களை மட்டுமல்ல என்னையும் அவர் ஏமாற்றவில்லை. அவருடன் நடிகராகவும் மற்றொருமுறை தயாரிப்பாளராகவும் பழகும் வாய்ப்பு கிடைத்தது. க்ரீன் புக் படத்தில் மருத்துவரின் கதாபாத்திரத்தை மிகச்சிறப்பாக செய்திருந்தார். உண்மையில் அவர் அந்தளவு அர்ப்பணிப்புடன் குழப்பங்கள் நிறைந்த கதாபாத்திரத்தை நடிப்பார் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை. ஆக்டேவியா ஸ்பென்சர் டைம்

மக்களின் வாழ்க்கையை மாற்றும் மனிதநேய தம்பதிகள்! - ஜோன்னா, சிப் கெய்ன்ஸ்

படம்
page six ஜோன்னா, சிப் கெய்ன்ஸ் கட்டுமான நிறுவனர்கள் ஜோன்னா, சிப் ஆகிய இருவரும் மகத்தான இதயம் கொண்டவர்கள். கடினமான உழைப்பு, சிறந்த எண்ணங்களால் அவர்கள் ஹெச்ஜி டிவியில் உருவாக்கிய ஃபிக்ஸர் அப்பர் என்ற டிவி நிகழ்ச்சி அவர்களை உயரத்திற்கு கொண்டு சென்றது. இந்நிகழ்ச்சியை பின்னர் அவர்கள் தங்களுக்கான டிவி சேனலை உருவாக்கி தொடர்ந்தனர். நான் அவர்களோடு இணைந்து சக்கர நாற்காலியில் வாழ்ந்த வந்த சிறுவர்களுக்கான வீடுகளை உருவாக்கினேன். எளியவர்களின் வாழ்க்கையில் மாற்றங்களை உருவாக்க உழைத்து வருகிற மனிதர்கள் இவர்கள் என்று அப்போதுதான் தெரிந்துகொண்டேன். மக்களை அபரிமிதமாக நேசிக்க கற்றவர்கள், வாழ்க்கையில் முக்கியம் எதுவென உணர்ந்தவர்கள். உண்மையை லட்சியமாக கொண்டு வாழும் நேர்மையான லட்சிய தம்பதிகள் இவர்கள். டிம் டெபோ டைம்

நம்பிக்கையை வலியுறுத்தும் மில்லினிய தலைமுறையின் இசை போதை! - பிடிஎஸ் குழு

படம்
100korea  பாப் இளவரசர்கள் பிடிஎஸ் இது என்ன வகையான இசை என்று எனக்கு புரியவில்லை என ஏ.ஆர்.ரஹ்மான் கூறினார். ஒவ்வொரு தலைமுறைக்குமான இசையமைப்பாளர்கள் உண்டு. மில்லினிய இளைஞர்களுக்கு பிடிஎஸ் பாடகர்கள்தான் இசை ரட்சகர்கள். உற்சாகம், கொண்டாட்டம், நேர்மறையான உணர்ச்சிகள், தன்னம்பிக்கை பீறிடும் பாடல்களை பாடி விற்பனையில் சாதனை படைத்த பாடல்களைக் கொண்ட இளைஞர் கூட்டம்தான் பிடிஎஸ். கே பாப் என இவர்களது பாடல்களை அழைக்கிறார்கள். இளைஞர்கள் இவர்களைத்தான் தங்களது முன்மாதிரிகளாக கொண்டு வாழ்கிறார்கள். கொரியமொழியில் பாடல்களை பாடுகிறார்கள். ஆனால் மொத்த இளைஞர்கள் கூட்டமும் மகுடி முன்னே ஆடும் பாம்பாகிறார்கள். நான் இவர்களோடு சிலமுறை சந்தித்து உரையாடி இருக்கிறேன். அவர்கள் பாடல்களை உருவாக்குவது உற்சாகம் பீறிடும் சூழல்களில்தான். அவர்களில் சிலர் பிறர் பாடுவதற்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். ஏதோ இளைஞர்கள் பாடுகிறார்கள் என்று நீங்கள் நினைத்தால் அவர்கள் பாடல்கள் வழியாக உருவாக்கும் அன்பு, சகோதரத்துவம் ஆகியவற்றை கண்டுகொள்ளாமல் போகிறீர்கள் என்று பொருள். ஹால்சி டைம்

இந்த உலகம், பூமி என்னுடையது! - ஓவியர் லூசிடா ஹராடோ

படம்
ஓவியத்தின் நீண்ட வரலாறு! லூசிடா ஹராடோ 1920ஆம் ஆண்டு பிறந்த மகத்தான ஓவிய ஆளுமையை நான் 2017இல் அடையாளம் கண்டு பிரமித்தேன். சர்ரியலியசம், டைனடன் இயக்கம், மேஜிகல் ரியலிசம் ஆகிய தன்மையை உள்ளடக்கமாக கொண்டவை லூசிடாவின் ஓவியங்கள். இவருக்கு தற்போது 98 வயதாகிறது. இவரது ஓவியங்களை செர்பனைட் கேலரியில் பார்த்தபோது, அதனுடன் தனித்துவதமான உணர்வு ஏற்பட்டது போல இருந்தது. தனித்துவமாக வரையப்பட்ட பல்வேறு ஓவியங்களை கொண்டாலும், பெரும்பாலும் மக்களால் அடையாளம் காணப்படாதவராகவே இதுவரை இருந்தார். தன்னுடைய 98 வயதில், இத்தனை ஆண்டுகளுக்கும் சேர்த்து புகழைப் பெறத் தொடங்கியுள்ளார். இவர் மனித உடல்களை இயற்கையிலிருந்து பிரிக்கப்படாத பகுதியாக பார்க்கிறார். மனிதர்கள் எப்படி மொழி மூலம் பிறருடன் பாலம் அமைத்து தொடர்பு கொள்கிறார்களோ அதுபோல இவரது ஓவியங்கள் வானத்தின் மீதும், பூமியின் மீதும் தீராத வேட்கையை வெளிப்படுத்துகின்றன. லூசிடா, வெறும் ஓவியர் மட்டுமல்ல. சூழலியலாளர், செயல்பாட்டாளரும் கூட. தனக்கான உடைகளை இவரே வடிவமைத்துக்கொள்கிறார். நான் வாழ்க்கைக்கு என்றுமே இல்லை என்று கூறியதில்லை. உலகம் மற்றும் இந்த பூமி பற்றிய பொறுப

மனிதநேயமிக்க திரைப்படக் கலைஞர், உரிமைக்கான போராளி - பிரை லாரிசன்

படம்
சகலகலா மனுஷி! பிரை லார்சன் மார்வெல் படத்தின் சூப்பர் ஹீரோவாக நடித்தவர். திரையிலும் சரி, திரைக்கு வெளியிலும் சரி நாயகியாகத்தான் ஜொலிக்கிறார். காரணம், அவரது பாலின பாகுபாடு, பாலியல் சுரண்டல் ஆகியவற்றுக்கு எதிராக போராடி வருகிறார். அவரது படம் பல கோடி ரூபாய் வசூலித்தது என்பதைத் தாண்டி கவனம் ஈர்க்கும் மனுஷியாக இருக்கிறார். இளைஞர்களுக்கான நிகழ்வுகளிலும் நாற்காலியில் அமர்ந்து இருப்பதை நாம் பார்க்கலாம். சினிமாக்களில் நாம் என்ன விஷயங்களை தவறவிடுகிறோம் என்பதை பவர் பாய்ண்ட் விஷயங்களோடு பிறருக்கு விளக்கி கொண்டிருக்கும் ஆச்சரியங்களையும் பிரை லார்சன் ஏற்படுத்துகிறார். இது பல்வேறு துறைகளிலும் பெண்கள் மாற்றங்களை ஏற்படுத்தி வரும் காலம். மார்வெல் படங்களில் முக்கியமான நடிகையாக அவர உருவாகி வரும் வாய்ப்பு உள்ளது. லார்சன் ஒரே நேரத்தில் ஜாலியான, கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயங்களிலும் பங்குகொண்டு நம்மையும் அவர்பால் கவனிக்க வைக்கிறார். டெஸா தாம்சன் டைம்

ஆபத்தான வசீகரமான கலைஞன்! ரிச்சர்ட் மேடன்

படம்
magzter ஆபத்தான கலைஞன் ரிச்சர்ட் மேடன் நாடக நடிகரான ரிச்சர்ட் தனது கலை சார்ந்த பணிகளில் தீவிரமாக இருப்பவர். தனது நடிப்பதை அவரே கடுமையாக விமர்சித்து சீர்திருத்திக்கொள்ளும் தன்மையை பிரமிப்போடு பார்க்கிறேன். சிண்ட்ரெல்லாவில், அவர் ஸ்காட்லாந்துகாரராக இருந்தாலும் ஆங்கில உச்சரிப்பில் பேசி இளவரசனாக நடித்திருந்தார். படப்பிடிப்பு முழுவதும் அனைவரிடமும் அவர் அந்த பாணியில் பேசிக்கொண்டிருந்தார். அந்த மெனக்கெடல் அசாத்தியமான ஒன்று. குறிப்பிட்ட கதாபாத்திரங்களுக்கான குணங்களை அவர் இயல்பாக வரித்துக்கொள்வது என்னை ஆச்சரியப்படுத்துகிறது. நான் இயக்கிய ரோமியோ ஜூலியட் படத்தில் அவர் ரோமியோவாக விதிகளை கடைபிடிக்காத இளைஞனாக, பிறரை காதலிக்க வைக்கும் தன்மை கொண்ட கண்களுடன் வசீகரமாக நடித்திருந்தார். சினிமா துறையில் ரிச்சர்ட் அபாயகரமான கலைஞனாக   உருவெடுத்து வருகிறார் என்பதை நான் உறுதியோடு சொல்கிறேன். கென்னத் பிரானாக் டைம்

ஆப்ரோ அமெரிக்கர்களில் ஒருத்தி! - ரெஜினா கிங் - டைம் 2019

படம்
என்னை உணரவைத்த பெண்! ரெஜினா கிங் நான் சிறுமியாக இருந்து வளரும்போது ஆப்ரோ அமெரிக்கர்கள் நடித்த பல்வேறு தொடர்களைப் பார்த்துள்ளேன். ஆமென், 227, குட் டைம்ஸ் ஆகியவை முக்கியமானவை. அதில் 227 தொடரில் நடித்த ரெஜினா கிங், பிரெண்டா ஜென்கின்ஸ் என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் அமெரிக்காவில் உள்ள ஆப்ரோ அமெரிக்க இளம்பெண்ணின் தன்மைகளை அப்படியே உள்வாங்கி உருவாக்கப்பட்டிருந்தது. அவரும் பிரமாதமாக நடித்திருந்தார். அதில் என்னை நானே பார்ப்பது போல இருந்தது. அவரை குறிப்பிட்ட சில நிகழ்வுகளில் சந்தித்தபோது எனது குடும்பத்தில் உள்ள உறுப்பினரை சந்தித்து பேசியது போலவே இருந்தது. என்னை அப்படி உணரவைத்தார். அவர் தனது நடிப்பைக் கடந்து பிறரின் நடிப்பையும் பாராட்டி ஊக்குவிப்பவராக இருந்தார். மேலும் அவர் நடிகை என்பதைத் தாண்டி படத்தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கியிருந்தார். அவர் இயக்குநரும் கூட. வணிக உலகில் ஆப்ரோ அமெரிக்கர்களை, பெண்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதையும் மாற்றுவதற்கான முயற்சியில் அவர் இறங்கியிருந்தார். கூட்டுப்புழுவாக இருந்து உலகை பார்ப்பதிலிருந்து அவர் மாறி, வளர்ந்த பட்டாம்பூச்சியாக ம

இசைத்துறையில் சாதனை செய்த பாடகி! - அரியன்னா கிராண்டே - டைம் 2019

படம்
ஃபோர்ப்ஸ் குயில்பாட்டு அரியன்னா கிராண்டே நான் புயல், சூறாவளி போன்ற நிகழ்வுகளை எல்லாம் கற்பனை செய்து பார்த்திருக்கிறேன். ஆனால் அத்தனையிலும் நிஜமான பாடகியாக, மனுஷியாக அரியன்னா இருந்திருக்கிறார். மனிதர்களுக்கு ஏற்படும் சோகம், விரக்தி, மகிழ்ச்சி, கோபம் என அத்தனை உணர்ச்சி வெளிப்பாடுகளுடன் அரியன்னாவின் பாடல்களை மக்கள் கேட்கிறார்கள். ரசிக்கிறார்கள். கொண்டாடுகிறார்கள். மக்களை மனப்பூர்வமாக நேசிக்கும் இதயம் கொண்டுள்ளதால், அவர் பாடல்களை அனைவரும் இதயம் உருக கேட்டு வருகின்றனர். அவர் இசைத்துறையில் சாதனைகள் செய்துள்ளார். ஏறத்தாழ சில வாரங்கள் இடைவெளியில் தேங்க்யூ, நெக்ஸ்ட் என்ற இரு பாடல்களை எழுதி பாடி வென்றிருக்கிறார். அவர் அடுத்து என்ன பாடலை உருவாக்குவார் என்று ஆவலோடு நான் காத்திருக்கிறேன். ட்ரோய் சிவன் டைம்

சிறந்த கட்டுரை நூல்கள் 2019!

படம்
அயர்லாந்தில் செய்யப்பட்ட கொலை, அதன்பின்னர் அந்த நாட்டை எப்படி இங்கிலாந்துக்காரர்கள் ஆக்கிரமித்தனர், அங்கு வாழ்ந்த மக்களின் நிலை என நேர்த்தியாக விளக்கி எழுதியுள்ள நூல் இது. அமெரிக்காவைத் தாக்கிய கத்ரீனா புயலை எத்தனை பேருக்குத் தெரியும்? கத்ரீனா கைஃபை தெரிந்தவர்களை விட குறைவுதான் அல்லவா. அந்த புயலில் வீட்டை இழந்தவர் எழுதிய நினைவுக்குறிப்புதான் இந்த நூல். பாசமும், பாதுகாப்பும் தந்த வீட்டை இழந்தபோது அவர் அடையும் துயரம் நமக்கே நேர்வது போல இருக்கிறது. தன் கதையின் வழியாக நியூ ஓர்லியன்ஸ் நகரின் வரலாற்றையும் சொல்லியிருக்கிறார். பூமியில் மனிதர்கள் உருவாக்கி விண்ணுயரும் கட்டிடங்களுக்கு சளைக்காத கட்டுமானங்களை பூமிக்கு அடியிலும் உருவாக்கியுள்ளனர். எழுத்தாளர் ராபர்ட் அதைத்தான் தேடிப்போய் அந்த அனுபவங்களை நூலாக செதுக்கியிருக்கிறார். தன் சொந்த அனுபவங்களை இழைத்து அதில் ஓரினச்சேர்க்கையின் மோசமான பிரச்னைகளை குழைத்து வித்தியாசமான மொழியில் நூலை எழுதியுள்ளார்.அதற்காகவே நீங்கள் நூலை வாங்கிப்படிக்கலாம். எழுத்தாளர் ஹார்ப்பர் லீ, திடீரென ஒரு கதையை எழுதுவதாக சொல்லி பின்னர

டைம் - இளம் தலைவர்கள் 2019

படம்
இளம் தலைவர்கள் - டைம் பத்திரிகை ஆண்டுதோறும் டைம் பத்திரிகை அடுத்த தலைமுறைக்கான இளம் தலைவர்களை வரிசைப்படுத்தி வருகிறது. அதில் இடம்பெற்ற சிலர். பஸிமா அப்துல்ரஹ்மான் கட்ட டக்கலைஞர், இராக் அலபாமாவில் ஆபர்ன் பல்கலைக்கழகத்தில் படித்தவர். 2014 ஆம் ஆண்டு ஐஎஸ்  தாக்குதல் இராக்கில் தொடங்கியது. அமெரிக்க படைகள் உள்ளே வந்து தாக்க இராக்கின் பெரிய நகரான மொசூல் தரைமட்டமானது. 32 வயதில் பஸிமா இராக் திரும்பினார். இதற்குள் கட்டுமானத்துறையில் அவர் பட்டம் பெற்றிருந்தார். நாங்கள் இங்கு கட்டுமானங்களைத் தொடங்கியபோது ஆற்றலும் நீரும் குறைவாக செலவாகும்படி முயற்சித்தோம்.  கட்டுமானங்களை கட்டி அதனை சோதிக்க எங்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருந்தன.  2017 ஆம் ஆண்டு கேஸ்க் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இராக்கின் பசுமை கட்டட நிறுவனம் இது. செங்கற்களை விட களிமண்ணைப் பயன்படுத்தி இராக்கின் மரபான கலாச்சார முறையலில் கட்ட டம் கட்டுவதுதான் இவரின் ரகசியம்.  இராக்கில் மின்வெட்டு, நீர் பற்றாக்குறை ஆகியவற்றோடு மக்கள் வீட்டிற்கு செலவழிக்கவும் தயங்குகிறார்கள். காரணம், உள்நாட்டுப் பிரச்னைதான். எனவே, நாங்கள் வீட்டை மி