இடுகைகள்

தகவல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கவில்லை! - அசுதோஷ் சர்மா

படம்
  அசுதோஷ் சர்மா, செயலர் - அறிவியல் தொழில்நுட்பம் வரைபடத்துறையை தாராளமயமாக்கியிருக்கிறீர்களே? பல்லாண்டுகளாக இத்துறை சீர்திருத்தங்கள் செய்யப்படாமல் இருந்தது. தற்போது பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் இத்துறையில் தாராளமயமாக்கும் திட்டம் செயலாக்கம் பெற்றுள்ளது. இதன்மூலம் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.  வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது ஏன்? நாங்கள் எந்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை. மிகவும் துல்லியமான படங்களை பெற கட்டுப்பாடுகள் இருந்தன. இந்திய நிறுவனங்கள் இப்படி படங்களைப் பெற்று பயன்படுத்த உரிமங்களைப் பெறவேண்டும். இப்போது பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதன்மூலம் புவியியல் சார்ந்த பல்வேறு தகவல்களை நிறுவனங்கள் பெற்று பயன்படுத்த முடியும்.  இதன்மூலம் இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களை அவுட்சோர்ஸ் முறையில் பயன்படுத்திக்கொள்ள முடியுமா? உறுதியாக. இதற்கு இந்திய நிறுவனங்கள் ஆப்களை தயாரிக்கவேண்டும். அதன் நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்ததாக இருப்பது அவசியம்.  மத்திய அரசு சட்டம் இயற்றினாலும் கூட நி

மூளையின் பணி - மினி அலசல்!

மூளை எப்படி வேலை செய்கிறது? அம்பானி பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாக இடம்பெறவும், பஞ்சர் கடையில் சுப்பிரமணி வேலை செய்யவும் ஒரு காரணம்தான் இருக்கமுடியும். ஆம். அது மூளை வேலை செய்வதுதான். இருவருக்கும் இருக்கும் நேரம் ஒன்றுதான். இருவரும் யோசிக்கிறார்கள். ஆனால் அதனை யோசித்து சரியாக நடைமுறைப்படுத்துவதில் தொழிலதிபர் – வியாபாரி முந்தி விடுகிறார். இதுதான் சுப்பிரமணிக்கும் அம்பானிக்கும் உள்ள வேறுபாடு. மனம் தன் ஆசை, லட்சியம் சார்ந்து மூளையை கட்டுப்படுத்துவதாக சிலர் கூறுகின்றனர். மற்றொரு சாரார், மூளைதான் உடல், மனம் என இரண்டையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என அதற்கும் அறிவியல் விளக்கங்களை தருகின்றனர். இருபதாம் நூற்றாண்டில் மூளை நரம்பியல் சார்ந்த உளவியல் பகுப்பாய்வு பெருமளவு முன்னேறிவிட்டது. ஆனாலும் மூளை, மனம், உடல் என மூன்று அம்சங்களில் எது எதைக் கட்டுப்படுத்துகிறது என்ற சர்ச்சை இன்றும் கூட ஓயவில்லை. கிரேக்கத்தில் இதைப்பற்றிய கருத்துகளை அரிஸ்டாட்டில், டெஸ்கார்டெஸ் ஆகியோர் கூறியுள்ளனர். மூளை, மனம் என இரண்டையும் அவர்கள் தனியாக பிரித்துதான் கூறியுள்ளனர். இவர்களின் கருத்துகள் தத்து

விபிஎன் பயன்படுத்தினால் குற்றமா?

படம்
விபிஎன் பயன்படுத்தினால் குற்றமா? அண்மையில் காஷ்மீரில் மக்கள் இணையம் வழியாக சமூக வலைத்தளங்களை அணுகுவது தேசதுரோகச் செயலாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபிஎன் மென்பொருட்களையும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. விபிஎன் என்பதை தவறான மென்பொருள் கிடையாது. இதனை இன்ஸ்டால் செய்து அரசு தடைசெய்த அஜூக்கு குமுக்கு வலைத்தளங்களை பார்வையிட முடியும்.  ரகசியமான தகவல்களை, கோப்புகளை அனுப்ப இந்த மென்பொருட்களை உலகம் முழுக்க பயன்படுத்துகின்றனர். இந்தியா இப்பட்டியலில் 43 சதவீதம் எனும் எண்ணிக்கையை எட்டிப்பிடித்து இரண்டாமிடத்தில் இருக்கிறது. குற்றம் என்றவுடன் பயந்துவிடாதீர்கள். இந்தியாவில் விபிஎன் பயன்படுத்துவதை தடுக்கும் எந்த சட்டமும் இயற்றப்படவில்லை. ஏனெனில் இந்த வசதியை பல்வேறு பன்னாட்டு, இந்திய நிறுவனங்களும் பயன்படுத்தி வருகின்றன. இதைப்பயன்படுத்தி தமிழ்ராக்கர்ஸை கூட அணுகி புதிய படங்களைப் பார்க்க முடியும்.  இங்கிலாந்தில் அல்லது பிற ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும்போது விபிஎன்னைப் பயன்படுத்தி அமெரிக்காவில் மட்டும் வெளியாகும் இணையத் தொடர்களைப் பார்க்கலாம். சீனாவில் கூட பல்வேறு பாதுக

டிரட்மில்லில் ஓடியிருக்கிறீர்களா- தெரிஞ்சுக்கோ தகவல்கள்!

படம்
giphy தெரிஞ்சுக்கோ! டிரட்மில் வெளியே ஓடிப்போய் உடற்பயிற்சி செய்ய ஆசைதான். ஆனால் அது அனைவருக்கும் சாத்தியமில்லை. அதற்காகத்தான் டிரட்மில் மெஷின் உருவானது. இதில் வேகம் அதிகம் வைத்து ஓடிக் களைத்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். கடந்த இரண்டு ஆண்டுகளாக டிரட்மில்லில் உடற்பயிற்சி செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேசமயம் சிறையில் இக்கருவியில் கீழே விழுந்து இறக்கும் ஆட்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதுபற்றிய தகவல் தொகுப்பை பார்ப்போம். 19ஆம் நூற்றாண்டில் 200க்கு 109 சிறைகளில் டிரட்மில்கள் சிறையில் உடற்பயிற்சி செய்ய ஆர்டர் செய்து வரவழைக்கப்பட்டன. துர்காம் எனும் சிறையில் டிரட்மில்லில் பயிற்சி செய்யும் கைதிகளில் வாரத்திற்கு ஒருவர் அடிபட்டு பலியாகி வந்தார். 1960களில் பேஸ்மாஸ்டர் எனும் நிறுவனம் 399 டாலர்கள் விலையில் வீட்டிலேயே டிரட்மில்லை அமைத்து கொடுத்தனர். இப்போது இதன் விலை 2,800 டாலர்கள். சிறையில் அல்லது வீட்டில் அமைக்கப்படும் டிரட்மில்லின் ஆயுட்காலம் 7 முதல் 12 ஆண்டுகள். இருப்பதிலேயே விலைகுறைவான டிரட்மில்லை அமைத்துக்கொடுத்த நிறுவனம்

தெரிஞ்சுக்கோ - மின் விளக்குகள்

படம்
pixabay தெரிஞ்சுக்கோ! மின்விளக்கு தாமஸ் ஆல்வா கண்டுபிடித்த விளக்கு என்றாலும், பின்னாளில் அவர் அதனைக் கண்டுபிடிக்கவில்லை என்று உறுதியானது. மேலும் தாமஸ் எடிசன், அனைத்தையும் கண்டுபிடித்தவரல்ல. ஆனால் தன் உதவியாளர்கள் கண்டுபிடித்ததைக்கூட மார்க்கெட்டிங் செய்து கொள்ளைப் பணம் ஈட்டினார். அப்படி உருவானதுதான் ஜி.இ எனும ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம். இப்போது மின்விளக்கு பற்றிய டேட்டா! கார்பன் இழைகளைக் கொண்ட மின்விளக்கு 1877ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இதனை ஜோசப் ஸ்வான் என்பவர் கண்டுபிடித்தவர். கடந்த ஆண்டில் 12,315 டாலர்கள் விலைக்கு ஏலம் போனது இந்த விளக்கு. எடிசன் உருவாக்கிய விளக்கைத் தயாரிக்க பதினான்கு மாதங்கள் தேவைப்பட்டன. இதற்கு செய்த ஆராய்ச்சிகளின் எண்ணிக்கை 1200. மொத்த செலவு 40 ஆயிரம் டாலர்கள். 1960ஆம் ஆண்டு ஒற்றை எல்இடியின் விலை, 260 டாலர்கள் ஆகும். கலிஃபோர்னியாவில் லிவர்மோரில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் ஒற்றை பல்பு எத்தனை ஆண்டுகளாக எரிகிறது தெரியுமா? 117 ஆண்டுகள். தரமாக தயாரித்திருக்கிறார்கள். அமெரிக்காவிலுள்ள வீடுகளில் தோராயமாக பயன்படுத்தப்படும் விளக்குகளின் எண்ணிக

தகவல் சுருக்கம் - டேட்டா கம்ப்ரஸ்ஸன் - தெரிஞ்சுக்கோ!

படம்
தெரிஞ்சுக்கோ! தகவல் சுருக்கம் என்பது இன்று பழைய வார்த்தை போல தோன்றும். ஒன்றுமில்லை. நாம் பயன்படுத்தும் சொற்களில் தேவையில்லாதவற்றை நீக்கினால் அதுதான் தகவல் சுருக்கம். இதுபற்றி தி நியூ கைண்ட் ஆஃப் சயின்ஸ் என்ற நூலில்,  மோர்ஸ் கோட்  எனும் தகவல் சுருக்க முறை 1838 ஆம் ஆண்டு தோன்றியது. இதில் e மற்றும் t  என்ற எழுத்துகளைத் தவிர்த்து எழுதும் முறையை அறிமுகப்படுத்த முயற்சிகள் நடந்தன. தகவல் தொழில்நுட்ப தியரின் தந்தையாக கிளாட் ஷனான் என்பவரைக் குறிப்பிடுகிறார்கள். தகவல் வேகமாக சென்று சேரவேண்டும். அதேசமயத்தில் அதன் தரமும் குறையக்கூடாது என்று அன்றிலிருந்து இன்றுவரை டெக் கம்பெனிகள் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன. இதில் யார் ஜெயிக்கிறார்களோ அவர்களே உலகை ஆளுவார்கள். அனைத்து மென்பொருட்களுக்கும் கருவிகளுக்கும் பொருந்தும் கோப்பு முறைகள் உருவாகுவது இன்று அவசியத் தேவையாக உள்ளது. அதுபற்றிய டேட்டாவைப் பார்ப்போம். 1867 இல், சிகாகோ ட்ரிப்யூன் பத்திரிகை பதிப்பாளர் ஜோசப் மெடில், முடிந்தளவு எழுத்துகளை சிக்கனமாக பயன்படுத்துவதை ஆதரிப்பவர். இப்படித்தான் ஃபேவரிட் என்ற எழுத்திலுள்ள இ எழுத்தை அகற்றல

உடல்நலத்திற்கு குடல் நலம் மிக முக்கியம் - மேகன் ரோசி

படம்
நேர்காணல் மேகன் ரோசி, ஊட்டச்சத்து வல்லுநர், கிங் கல்லூரி லண்டன் தம்பதிகள் நெருக்கமாக இருக்கும்போது முத்தமிட்டால் பாக்டீரியாக்கள் பரிமாறப்படும் என்கிறீர்களே? நம்முடைய எச்சிலில் நிறைய பாக்டீரியாக்கள் உள்ளன.அவை முத்தமிடும்போது இணையரின் வாயிற்குள் செல்கிறது. இது அவர்களின் உணவுப்பழக்கத்தை மாற்றுகிறது. உடல்பருமன் சார்ந்த பிரச்னைகளுக்கும் இதுவே காரணம். எனவே தம்பதிகள் தம் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம். நீங்கள் எப்படி வயிறு சார்ந்த உணவு வல்லுநர் ஆனீர்கள். என்னுடைய பாட்டி குடல் சார்ந்த புற்றுநோயால் காலமானார். தினசரி, சிகிச்சை பலனளிக்காமல் அவர் வயிற்றுவலியால் துடித்ததைக் கண்டேன். பலரும் சிறுநீரகம், குடல் பாதிப்பு என இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்வதில்லை. எனவே நான் குடலிலுள்ள நுண்ணுயிரிகளின் மீது கவனம் செலுத்த தொடங்கினேன். இதன் விளைவாகவே  உணவு மீது ஆர்வம் கொண்ட நான், குடல் சார்ந்த நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கத் தொடங்கினேன். ஆஸ்திரேலியாவில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற நீச்சல் குழு கூட பதற்றம் கொண்டு அவதிப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு செய்யப்பட்ட சோதனையில் குடல் சா

தெரிஞ்சுக்கோ! - குப்பைத்தொட்டி

குப்பைத்தொட்டி என்பது நகரங்களுக்கானவை. கிராமங்களில் ஏதோ ஒரு இடத்தில் கொட்டி அதனை விற்றுவிடுவார்கள். ஆனால் நகரங்களில் அது சாத்தியமில்லை. காரணம், டன் கணக்கில் குவியும் அதன் வேகம்தான்.மேலும் சென்னையில் நுகரப்படும் பல்வேறு பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள் பழவந்தாங்கல் சதுப்புநிலங்களின் மீது கொட்டப்படுகிறது. தற்போது அதனைப் பிரிப்பது தற்போது அரசுகளின் தோள்களின் மீது சுமத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை 1, 2019 அன்று ஷாங்காய்  நகரில் அரசு, பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்வதற்கான அளவீட்டை  வெளியிட்டுள்ளது. மறுசுழற்சி, சமையலறை கழிவு, ஆபத்தான கழிவு பிற கழிவுகள் என அனைத்திற்கும் தனி குப்பைத்தொட்டியைப் பயன்படுத்த சீன அரசு கோரியுள்ளது. இது எந்தளவு குப்பைகளை மறுசுழற்சி செய்ய உதவும் என்று தெரியவில்லை. ஷாங்காய் நகரில் ஆண்டுதோறும் உருவாகும் குப்பையின் அளவு 9 மில்லியன் மெட்ரிக் டன்கள். நியூயார்க் நகரில் சுகாதாரத்துறை தினசரி சேகரிக்கும் குப்பையின் அளவு 12 ஆயிரம் டன்கள். 2017-18 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் செயல்பாட்டிலுள்ள குப்பைத்தொட்டிகளின் எண்ணிக்கை 1,131. வயர்களிலான குப்பைத்தொட்டியின் விலை நூறு

போனில் அழைப்பை ஏற்பதை எப்படி அறிவது?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி ஒருவர் போனில் நம்பர் தட்டி அழைத்தால் எப்படி மிகச்சரியாக சிக்னல் இருக்கிறதா இல்லையா என்பதை அறிகிறோம்? காரணம், போனில் உள்ள அபாரமான நெட்வொர்க் இணைப்புத்திறன்தான். இதுவே போனிலுள்ள தகவல்களை எங்கு செல்கின்றன, தடம் பிசியாக இருக்கிறதா என்பதைக் கண்காணிக்கிறது.  ஐஎம்எஸ்ஐ எனும் கோட்டை கண்டுபிடித்து அழைப்பை அனுப்புகிறது. இதுவே போன் அழைக்கும்படி இருக்கிறதா இல்லையா என அழைப்பவருக்கு தகவல் அனுப்புகிறது.  நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்