இடுகைகள்

தற்கொலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாணவர்களின் தற்கொலை அதிகரித்து வருகிறது! - புதிய ஆய்வு சொல்லும் அதிர்ச்சி தகவல்கள்

படம்
    பிக்சாபே     2019ஆம் ஆண்டில் நான்கு நிமிடங்களுக்கு ஒரு தற்கொலை நடந்துள்ளதை ஆய்வுகள் கூறியுள்ளன. 2009ஆம் ஆண்டில் 109 முதல் 10.4 என்ற அளவில் இருந்த தற்கொலை அளவு நடப்பில் 9.4 என்ற அளவிற்கு குறைந்துள்ளது. இருக்கும் மாநிலங்களிலேயே சிக்கிமில் 33.1 சதவீத தற்கொலை நடைபெற்று வருவதால் முதலிடத்தைபை் பெற்றுள்ளது. குறைவான தற்கொலை நடக்கும் மாநிலமாக பீகார் உள்ளது. யூனியன் பிரதேசத்தில் அந்தமான் தீவு 45 சதவீத தற்கொலையுடன் முதலிடத்தில் உள்ளது. தற்கொலைகள் பட்டியலில் தமிழ்நாடு நான்காவது இடத்தில் உள்ளது. நடக்கும் தற்கொலைகளில் மூன்றில் ஒன்று குடும்ப பிரச்னைகள் காரணமாக நடைபெறுகிறது. அடுத்த முக்கியமான காரணமாக வங்கியில் வாங்கும் கடன், திவால் பிரச்னை உள்ளது. குடும்ப பிரச்னை, நோய், கடன், போதைப்பொருட்கள், மது பயன்பாடு ஆகியவை அடுத்தடுத்த முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. 2019ஆம் ஆண்டில் தற்கொலை செய்துகொள்பவர்களில் சுயதொழில் செய்பவர்கள், மாணவர்கள் அதிகளவு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மணமான பெண்கள் தற்கொலை செய்துகொள்வது 2009இல் 19.7 சதவீதமாக முன்னர் இருந்து இப்போது குறைந்துள்ளது. ஆனால் மாணவர்களின் தற்கொலை சதவீதம்

என் மீது அவதூறு கூறியவர்களை சட்டப்படி போராடி வெல்வேன்! - ரியா சக்ரபர்த்தி

படம்
      ரியா சக்ரபர்த்தி     ரியா சக்ரபர்த்தி, இந்தி நடிகை சுசாந்தின் அப்பா பற்றி சொல்லுங்கள். சுசாந்த சொன்ன விஷயங்களின் படி அவருக்கும் அவரது அப்பாவிற்கும் உறவு சரியாக இல்லை. சுசாந்த் அவருடைய இளம் வயதிலேயே அப்பா, அவரது அம்மாவிட்டு பிரிந்துசென்றதை பார்த்திருக்கிறார். சுசாந்த் அவரது அம்மாவுக்கு நெருங்கியவராக இருந்திருக்கிறார். நான் சுசாந்தை சந்தித்தது 2019இல். அப்போது அவர் அவரது தந்தையை ஐந்து ஆண்டுகளாக சந்திக்கவில்லை என்பதை அறிந்துகொண்டேன். சுசாந்த மனச்சோர்வில் இருந்ததுதான் நீங்கள் அவரை விட்டு பிரியக்காரணமா?   அவர் 24 மணிநேரமும் மனச்சோர்வில் இல்லை. சில நாட்கள் அப்படியிருந்தார் என்பது உண்மை. என்னிடம் அவர் தன்னுடைய உண்மையான உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டார். நானும் சுசாந்திடம் அப்படித்தான் பழகினேன். நீங்கள் ஒருவரைப் பற்றி அக்கறைப்படும்போது, அவர் சிரமமான சூழலில் இருந்தால் எப்படி அவரை விட்டு பிரிவீர்கள். இந்த முறையில் உருவாகும் உறவு மிக அழுத்தமானது. நோயாளிக்கும் உதவும் நர்ஸ், அல்லது அவரது அம்மா என்று வைத்துக்கொண்டால் கூட குறைகளை பொருட்படுத்தாமல் அவர்களுடன்தானே இருப்பார்கள். நீங்கள் சுசாந்தின் வாழ

இந்தியர்களுக்கு எப்போதுமே சாதி பிடிக்கும்! சேட்டன் பகத்

படம்
                                       சேட்டன் பகத்   சேட்டன் பகத் உங்களுடைய தி கேர்ள் இன் ரூம் நெ.105 என்ற நாவலில் கொலை செய்வதற்கான பகுதிகள் வருகின்றன. அதே போல அடுத்த நாவலான அரேஞ்சுடு மர்டரும் அப்படியே தொடர்கிறதே ஏன்? ஒரு இளைஞன் ஒரு பெண்ணை காதலிப்பதை விட அவளை கொல்ல திட்டமிடுவது இன்னும் சுவாரசியமாக இருக்கும் என நினைக்கிறேன். அதனால்தான் காதலை கடந்து க்ரைமுக்கு செல்கிறேன். சேட்டன் பகத்தின் நாவலில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் காமெடி, காதல், இந்திய சமாச்சாரங்கள் அனைத்துமே இருக்கும். நீங்கள் ஒருமுறை என்ஆர்சி மசோதாவை, பெற்றோர் பார்த்து நிச்சயிக்கும் திருமணங்களோடு ஒப்பிட்டிருந்தீர்கள். நீங்கள் இப்படி அரசியல் நிலை எடுத்து பேசுவது உங்கள் ரசிகர்களை பாதிக்குமா? நான் என்னை எழுத்தாளராக நிரூபித்துவிட்டேன். இப்போது எனக்கு சில விஷயங்களை ரசிகர்களோடு பகிர்ந்துகொள்ள தோன்றுகிறது. எனவே, நான் அதனை அவர்களுக்கு நூல் வழியாக சொல்லுகிறேன். அவர்கள் என் எழுத்தைப் புரிந்துகொண்டால் இதனை ரசிப்பார்கள் என்றே நினைக்கிறேன். இன்று பரபரப்பாக இந்தியாவில் பேசப்படும் நெபோடிசம் பற்றி முன்னமே நீங்கள் பேசியிருந்தீர்கள். அதைப்பற்றி

தற்கொலையில் சிறந்த அமெரிக்கா - சிதையும் இளைஞர்கள்!

படம்
giphy.com அமெரிக்காவை உள்ளிருந்து உடைக்கும் பிரச்னையாக தற்கொலை மாறி வருகிறது. ஆண்டுக்கு தோராயமாக 47 ஆயிரம் பேர் அங்கு தற்கொலை செய்து வருகின்றனர். அதற்கு முக்கியக் காரணம் அங்குள்ள குடும்ப அமைப்பாகவும் இருக்கலாம். ஆனால் தற்கொலைகள் நடந்து வருவது அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. இரண்டாம் உலகப்போர் சமயங்களில் நடந்த இறப்புகளை விட தற்கொலை மரணங்களின் எண்ணிக்கை அதிகம். அதுவும் குறிப்பாக 10 -24 வயது பிரிவில்தான் அதிகளவு தற்கொலை மரணங்கள் ஏற்படுகின்றன. ஏறத்தாழ 2007-2017 வரையில் 56 சதவீதம் தற்கொலைகள் இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது. தற்கொலை ஏன் செய்துகொள்கிறார்கள் என்று டக்கென கூறிவிடமுடியாது. ஏதாவது நிராகரிப்பு, தோல்வி, விரக்தி, ஹிக்கிகோமெரி போல சாதிக்க எதுவுமே இல்லையென்ற எண்ணம் கூட காரணமாக இருக்கலாம். உளவியல் பிரச்னை என்றாலும் அமெரிக்கர்கள் உடனே நரம்புகளை அறுத்துக்கொண்டு செத்து விடுவதில்லை. 83 சதவீதம் பேர் மருத்துவர்களைச் சென்று சந்திக்கிறார்கள். பின்னரே தற்கொலைகளை சந்திக்கிறார்கள். அல்லது அதிலிருந்து மீள்கிறார்கள். அமெரிக்காவின் டென்னிசியிலுள்ள சென்டர்ஸ்டோன் மனநல மருத்துவ

சீனாவிடம் கற்போம் - விவசாயத்தில் சிறக்கும் டிராகன் தேசம்!

படம்
giphy.com விவசாயத்தில் சீனாவிடம் இருந்து என்ன கற்கலாம்? இனி இந்தியாவுக்கு பாகிஸ்தான் பொருட்டில்லை. பாகிஸ்தான் பொருளாதார சிக்கலில் மூழ்கிவிட்டது. அதன் பட்ஜெட்டை விட இந்தியாவின் பட்ஜெட் அதிகம், வளர்ச்சிக்கான வேகமும் அதிகம். சீனாவைப் பார்ப்போம். சீனா, இந்தியர்களை விட குறைவான நிலத்தில அதிகளவு விவசாயம் செய்து உற்பத்தியை பெருக்கியிருக்கிறார்கள். நாம் 407 பில்லியன் உற்பத்தி என்றால் சீனர்கள் 1367 பில்லியன் டாலர்கள் மதிப்பில் உற்பத்தி செய்து வருகிறார்கள். சீனர்கள் 41 சதவீத நிலத்திலும், இந்தியர்கள் 48 சதவீத நிலத்திலும் விவசாயம் செய்து வருகிறார்கள். காரணம் சீனர்கள் ஆராய்ச்சிக்கு மட்டும் 7.8 பில்லியன் டாலர்களை செலவு செய்கின்றனர்.இந்தியாவில் இதன் அளவு 1.4 பில்லியன் டாலர்களாக உள்ளது. அப்புறம் எப்படி முன்னேற்றம் சாத்தியமாகும்? இந்தியாவில் இதுதொடர்பாக நடந்த ஆய்வில் விவசாயத்துறையில் செய்யும் 11.2 ரூபாய், முன்னூறுக்கும் மேற்பட்டவர்களை வறுமையிலிருந்து வெளியே கொண்டு வரும் என்று கூறுகிறது. 1990களில் நடந்த தாராயமயமாக்கள் அந்நிய முதலீடுகளை அதிகரித்தது. வியட்நாம் ரேஷரை நாம் பயன்படுத்த வைத்தத

மனநல பிரச்னையால் தவிக்கும் இந்தியா!

படம்
pinterest பொதுவாக உடல்நல பிரச்னைகளையே இந்தியர்கள் பெரிதாக எடுத்துகொள்வதில்லை. ஏதாவது ஒன்றிரண்டு மருந்துகளை வாங்கி சாப்பிட்டுவிட்டு வேலை பார்ப்பார்கள். ஆனால் இப்போது மன அழுத்தம் சார்ந்த தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. அதுபற்றிய கவனமும் தேவை என வல்லுநர்கள் எச்சரிக்கத் தொடங்கியுள்ளனர். மகாராஷ்டிரத்தால் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 1300 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். இறப்பதற்கான காரணம் எதுவாக இறந்தாலும் இப்படி அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்து கொண்டு இறந்துபோவது ஆபத்தான அறிகுறி. அங்குள்ள யவட்மால் மாவட்டத்தில் மட்டும் ஜூலை வரை 139 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தற்கொலைகளைத் தடுக்க பிரேர்னா பிரகல்ப் எனும் திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. இங்குள்ள பதினான்கு மாவட்டத்தில் ஆஷா பணியாளர்கள் இதற்கான பணியாற்றி வருகின்றனர். முழுமையான உளவியலாளர்கள் இத்திட்டத்திற்கு இன்னும் நியமிக்கப்படவில்லை. அறுபதாயிரம் ஆஷா பணியாளர்கள் எப்படி தங்களின் பணிச்சுமையோடு இப்பணியை செய்வார்கள் என்று தெரியவில்லை. இதில் பாதியளவிலான பணியாட்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

அரசின் அநீதியால் உயிர்துறந்த கணினி மேதை - ஆலன் டூரிங்!

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர் ஆலன் டூரிங் கணினி சாதனையாளர். இன்று அமேசான், கூகுள் எல்லாம் கோயில் கட்டி வழிப்படும் அளவுக்கு ஏ.ஐ விஷயங்களைச் செய்தவர். என்க்ரிப்ஷன் முறைகளைக் கண்டுபிடித்தவர். ஜெர்மனியைத் தோற்கடிக்க பிரிட்டிஷாருடன் இணைந்து உழைத்தார். ஆனால் அதற்கு பரிசாக பிரிட்டிஷ் அரசு, எதிரிக்கு உதவினார் என்ற பெயரில் ஆலனைக் கைது செய்து சிறையில் அடைத்தது. எழுத்தாளர் ஆஸ்கர் வைல்டும் இதேபோல் அப்போது கைது செய்யப்பட்டிருந்தார். அரசு அவரின் திறமையை விட தனிப்பட்ட வாழ்க்கையை தோண்டியெடுக்க முயன்று வெற்றியும் பெற்றது. இதன்விளைவாக ஆலன், இன்னொருவருடன் வைத்திருந்த ஓரினச்சேர்கை உறவு வெளிவர, மக்களால் இகழப்பட்டார். இதனால் இரண்டே ஆண்டுகளுக்குள் தற்கொலை செய்து இறந்தார். சயனைடு அவரின் படுக்கையறையில் இருந்து பெறப்பட்டது. அன்று ஓரினச்சேர்க்கையாளர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என்று கருத்து நிலவி வந்தது. இதனை நியாயப்படுத்த பிரிட்டிஷ் அரசு, அவரின் மனநிலை சரியில்லை என்று கூறியது. அவர் தற்கொலை செய்துகொண்டது உண்மை. அதற்கான காரணம் என்ன என்று உறுதியாக தெரியவில்லை என்று அரசு கூறிவிட்டது. ஆனால் அரசி

விவசாயிகள் தற்கொலை - மகராஷ்டிரா முந்துவது எப்படி?

படம்
விவசாயிகள் தற்கொலை விவசாயிகளுக்கு வருமானம் இரட்டிப்பாகும் என தந்தி தலைப்புச்செய்தி இன்று சொல்லுகிறது. ஆனால் அதே தினத்தில் மகாராஷ்டிரத்தில் 808 விவசாயிகள் தற்கொலை செய்துள்ள செய்தியும் வெளியாகியுள்ளது. அதாவது, தினசரி ஏழு விவசாயிகள் கடன்தொல்லை, சரியான விலை கிடைக்காத பிரச்னையில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மகாராஷ்டிராவின் 42 தாலூக்காக்களிலும் வறட்சி படமெடுத்து ஆடியதில் மக்களின் உயிர் பறிபோனதுதான் மிச்சம். ஆட்சியாளர்கள் எப்போதும்போல எண்களாக குறித்து வைத்துக்கொண்டனர். விதர்பா, மராத்வடா, மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளில் இறப்பு நேர்ந்துள்ளது. விதர்பாவில் 344, மராத்வடாவில் 161, வடக்கு மகாராஷ்டிராவில் 244 என தற்கொலைகள் பதிவாகியுள்ளன. விவசாயிகள் கடந்த ஆண்டு கடன் தள்ளுபடி கோரி போராட்டம் நடத்தினர். அதைக் கண்டுகொள்ளாதது போல இருந்த அரசு, தேர்தல் நெருங்கியவுடன் விவசாயிகளுக்கு 6 ஆயிரம் நிதி உதவி வழங்குவதாக அறிவித்தது. இத்திட்டத்திற்கு கிஷான் சம்மான் நிதி என்று பெயர் வைக்கப்பட்டது. நன்றி: எகனாமிக் டைம்ஸ் - பிரியங்கா ககோட்கர்.

தற்கொலைக்கு தூண்டிய சைக்கோ மனிதர்!

படம்
அசுரகுலம் ஹிரோஷி மெயுவெ 1968 ஆம் ஆண்டு ஆகஸ்ட் எட்டு அன்று பிறந்தவர் ஹிரோஷி. இவரைப்பற்றி ஏன் எழுதுகிறோம் என்றால் பணத்திற்காக கொலை செய்வது தாண்டி மனநிலையின் அழுத்தம் தாங்காதவர்கள்தான் சமூகத்திற்கு பெரும் சோதனையாக அமைகிறார்கள். இவர்கள், அந்தந்த காலகட்டத்தை நம் மனதுக்கு உணர்த்துகிற சாட்சிகள் கூடத்தான். ஹிரோஷி மூன்று பேர்களைக் கொன்றதற்காக தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார். மூன்றுபேரையும் நேரடியாக கொல்லவில்லை என்பதுதான் இவரைப் பற்றி நாம் எழுதக்காரணம். இவரது ஆளுமை மாற்றத்திற்கு மர்ம நாவல்கள்தான் காரணம் என்றால் நம்புவீர்களா? ஆம் கொலை, கொள்ளை நாவல்களை படித்தவர். அதனை பரீட்சித்து பார்க்க முயற்சித்துதான் பெரும் தீவினையில் அவரைக் கொண்டு வந்து சேர்த்தது. கான்சாவா இன்ஸ்டிடியூட் டெக்னாலஜியில் மாணவராக சேர்ந்து படித்தார். அங்கு ஒரு மாணவரை அடித்து கொலை செய்ய முயற்சித்து தோற்றுப்போனார்.  பின், 1988 ஆம் ஆண்டு படிப்பை விட்டு நின்றார். பின் ஏனோதானோவென்று வேலைக்கு சென்று வந்தார். மீண்டும் மனதில் அசுரன் தலைதூக்க, யோசிக்கவேயில்லை. கூட வேலை செய்தவரை தூக்கிப் போட்டு மிதித்தார். போலீசாருக்கு