இடுகைகள்

பழிக்குப்பழி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாலியல் வல்லுறவுக்குள்ளான தங்கைக்கு நியாயம் தேடி நகரம் வரும் கிராமத்து மனிதனின் வாழ்க்கை! - நரசிம்முடு

படம்
                  நரசிம்முடு    Director: B. Gopal Produced by: Chengala Venkat Rao Writer(s): P. Ravi Shankar பஸ்ஸில் ஜெயசித்ராவின் பெண்ணை கல்லூரி மாணவர்கள் மானபங்கம் படுத்த முயல்கிறார்கள் . அவர்களை அடித்து உதைத்து மூஞ்சி முகரையை பெயர்க்கிறார் என்டிஆர் ஜூர் . ஆனால் ஒரு வார்த்தை பேசுவதில்லை . முழுக்க அடிதான் . பதினைந்து பேர்களை அடித்து நொறுக்கி புத்தூர் கட்டு போட வைத்ததிற்காக அவரை போலீசார் கைது செய்கிறார்கள் . அங்கு வரும் ஆசிஷ் வித்யார்த்தி ( கமிஷனர் ) என்டிஆரைப் பார்த்து எரிச்சலாகி விசாரணை செய்ய முயல்கிறார் . ஆனால் என்டிஆருக்கு பேச்சு வராது ஊமை என்று சொல்ல ஆசிஷ் அமைதியாகிறார் . என்டிஆரின் கண்களை மட்டும் அவரால் மறக்கவே முடியவில்லை . என்டிஆரை , ஜெயசித்ரா தான் வாழும் காலனிக்கே கூட்டி வருகிறார் . கொண்டுவீடு எனும் கிராமத்திலிருந்து ஹைதராபாத்திற்கு என்டிஆர் எதற்கு வந்திருக்கிறார் என்பதுதான் பிளாஷ்பேக் கதை .    இந்த படத்தில் வரும் ரேஷன் கார்டில் என்டிஆர் பெயரை அவரது மொத்த கிராமமுமே சேர்த்திருக்கிறார்கள் . இக்காட்சியை அப்படியே சுட்டு எங்கள் ஆசான் படத்தில் வைத்திரு

காணாமல் போன மகளைத் தேடும் தந்தையின் போராட்டம்! - கதம் - கிரண்

படம்
              கதம் தெலுங்கு   Director: Kiran Kondamadugula Produced by: Harsha Pratap, Srujan Yarabolu Starring: Bhargava Poludasu, Rakesh Galebhe, Poojitha Kuraparthi Music by Sricharan Pakala Cinematography Manojh Reddy   முழுக்க வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட தெலுங்கு படம் . படத்தின் கதை பழிக்குப்பழி வகைதான் . ஆனால் அதனை எப்படி சொல்லியிருக்கிறார்கள் என்பதில்தான் படம் நிறைய மாறுபடுகிறது .    ரிஷி என்ற இளைஞர் மருத்துவமனையில் இருக்கிறார் . அவருக்கு நினைவுகள் அழிந்துவிட்டது என மருத்துவர் கூறுகிறார் . விபத்தில் அப்படி ஆகிவிட்டது என அவரது பெண்தோழி ஆறுதல் சொல்லுகிறார் . அவரை அழைத்துக்கொண்டு காரில் செல்லும்போது திடீரென வழியில் கார் நின்றுபோகிறது . அந்த வழியில் அவர்களை பெட்ரோல் பங்கில் கவனித்து வந்த மர்ம மனிதர்( Bhargava Poludasu ) அவர்களுக்கு உதவி செய்ய நினைக்கிறார் . ஆனால் அங்கு சென்றதும் ரிஷிக்கு ஏதோ தவறான இடத்திற்கு வந்துவிட்டோம் என உள்ளுணர்வு எச்சரிக்கிறது . அதுபோலவே பல்வேறு சம்பவங்கள் நடக்கிறது . ரிஷியின் பெண்தோழியை கற்பழிக்க மர்ம மனிதரின் நண்பர் முயல்

பிறருக்கு சாரி சொல்லிப் பழகுங்கள்! - அன்ஹிங்க்டு படம் சொல்லும் செய்தி!

படம்
              அன்ஹிங்க்டு சாரி என்ற சொல்லை சொல்லாத காரணத்தால் இளம்பெண் தனது உறவினர்களை பலிகொடுக்க நேரிடும் சூழல் உருவாகிறது . எப்படி அச்சூழ்நிலையை அவள் சமாளிக்கிறாள் என்பதுதான் கதை . படத்தின் ஒரே படம் ரஸ்ஸல் க்ரோவ்தான் . ஹல்க் போல சதை போட்டு மக்கள் மீது பெரும்கோபமாக அலைகிறார் . அவர் டிராஃபிக்கில் நிற்க தனது மகனை பள்ளியில் விடச்செல்லும் ரேச்சல் ஹண்டர் என்ற பெண் சலூனுக்கு செல்ல தாமதம் ஆவதால் அவரை வேலையை விட்டு நீக்கிவிடுகிறார் அவரது முதலாளி டெபோரா . இதனால் கடுப்பில் இருந்த ரேச்சல் , காரை சாலையில் வேகமாக ஓட்டாமல் நிறுத்தியிருந்த டாமை கண்டபடி திட்டிவிடுகிறாள் . இதனால் எரிச்சலுக்கு உள்ளாகும் டாம் ரேச்சலை துரத்தி பழிவாங்குவதுதான் கதை . ஒரே லைனில் கதை செல்கிறது . சைக்கோ கொலைகாரனிடம் ரேச்சலின் போன் சிக்கிவிட அதை வைத்து எப்படி அவளின் உறவினர்கள் , தெரிந்தவர்கள் என பழிவாங்க நினைக்கிறான் . அதனை ரேச்சல் எப்படி தடுக்கிறாள் என்பதுதான் கதை . படத்தில் நியூசிலாந்து நடிகை ரேச்சல் ஹண்டராக சிறப்பாக நடித்துள்ளார் . மற்றபடி படத்தில் சொல்ல ஏதுமில்லை . முடிந்தவரை உணர்ச்

வொயிட் காலர் டிரெஸ்ஸில் ரத்தவெறியாட்டம்! எ கம்பெனி மேன் 2012

படம்
        Movie: A Company Man Country: South Korea Release Date: Oct 18, 2012 Director: Im Sang Yoon    ஹியூங் டூ என்பவர் இரும்பு தொழிற்சாலை ஒன்றில் விற்பனை பிரிவில் வேலை பார்க்கிறார். அவரின் உடைகள், ஆபீஸ் அப்படி தோற்றம் காட்டும். ஆனால் ஆபீசிற்கு கீழே  உள்ள பாதாள அறைகளில் முழுக்க யாரை போட்டுத்தள்ளவேண்டும் என அசைன்மெண்டை நிறைவேற்றும் ஆபீஸ், துப்பாக்கிகள், பிளான் என அனைத்தும் தயாரிக்கப்படுகிறது. என்சிஎம் என்ற அந்த நிறுவனத்தில் வேலை செய்கிறார் ஹியூங் டூ. ஒருமுறை போலீஸ் அலுவலகத்தில் நடக்கும் அசைன்மெண்டில், ஒருவனைக் கொல்ல பள்ளியை விட்டு இடைநின்ற ஆளை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் அவனைக் கொன்றுவிடுவதுதான் திட்டம். ஆனால் அவனது இளம் வயது ஹியூங்கை யோசிக்க வைக்கிறது. அதனால் அவனை உயிர்பிழைக்க வைத்து, பராமரிக்கிறார். அவனது குடும்பத்திற்கு பண உதவிகளை செய்கிறார். ஒருகட்டத்தில் பிறரை கொலை செய்யும் நிறுவனத்தின் வேலை கூட ஹியூங்கிற்கு எதற்கு இந்த வேலை என்று தோன்றுகிறது. அப்போதுதான் அவருக்கு ஆபீசில் கொலைகளை பிறருக்கு செய்யச்சொல்லி வழங்கும் இயக்குநராக பணி உயர்வு கிடைக்கிறது.  அதேசமயம் அவர் காப்பாற்றி

ஆசையை துறக்கும் உலகின் சிறந்த வாள் வீரன்! - தி வாரியர்ஸ் வே

படம்
வாரியர்ஸ் வே -கொரியா(2010) இயக்கம் –லீ சியூங்மூ ஒளிப்பதிவு - வூ ஹியூங் கிம் இசை ஜேவியர் நவரெட்டே உலகில் மிகச்சிறந்த வாள் வீரனாக ஆசைப்படும் வீரன் ஒருவனின் கதை. அவனுக்குள் இருக்கும் கருணை உணர்வு அவனை வீழ்த்திவிடும் என அவனது குரு எச்சரிக்கிறார். அதையும் மீறி எதிரிப்படையினரைச் சேர்ந்த குழந்தை ஒன்றை எடுத்து வளர்க்கிறான்.  அது அவரது குருவுக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்துகிறது. அவர் தன் சீடன் கொன்ற ஆட்களைத் தவிர்த்த மீதி ஆட்களைத் திரட்டிக்கொண்டு அவனை பின்தொடர்கிறார். நாயகன் குழந்தையை எடுத்துக்கொண்டு தனது நண்பன் வாழ்ந்த ஊரை நோக்கிப் போகிறான். அங்கு நண்பன் இல்லை. ஆனால் அவன் நடத்திவந்த விடுதி இருக்கிறது. அங்கேயே தங்கும்போதுதான் அங்கு அடிக்கடி வந்து பொருட்களையும் பெண்களையும் கொள்ளையடித்துப்போகும் படைவீரன் ஒருவனைப் பற்றி தெரிய வருகிறது. அவனைப் பழிவாங்க துடிக்கும் இளம்பெண்ணுக்கு நாயகன் உதவுகிறான். அந்த ஊரின் பிரச்னையில் தலையிட வேண்டாம் என்றாலும் சூழல் அவனை விடுவதாக இல்லை. இந்த நிலையில் அவன் அந்த ஊர் மக்களைக் காப்பாற்றினானா? இளம்பெண் தன் அப்பாவைக் கொன்றவனை பழிவாங்

நீதித்துறைக்கு நேர்மையை சொல்லித்தரும் தனியொருவன்!

படம்
லா அபைடிங் சிட்டிசன் ஆங்கிலம் -2009 இயக்கம் - எஃப் கேரி கிரே திரைக்கதை - கர்ட் விம்மர் ஒளிப்பதிவு - ஜொனாதன் சேலா இசை - பிரையன் டைலர் ஜெரார்ட் பட்லரின் தயாரிப்பில் அவரே நடித்து வெளியிட்டுள்ள படம். கதை எளிமையான பழிவாங்கும் கதைதான். படத்தில் தொடக்கத்தில் ஜெரார்டின் மனைவி கற்பழித்துக் கொல்லப்படுகிறார். குழந்தையும் சுடப்பட்டு சாகிறாள். இவர்களை காப்பாற்ற முடியாதபடி ஜெரார்டு காயம்பட்டு வீழ்கிறார்.  பிறகு, காவல்துறை ஜெரார்டின் உதவிக்கு வருகிறது. ஆனால் அரசு துறை வழக்குரைஞரான ஜேமி ஃபாக்ஸ் ஜெயிக்கும் வழக்குகளில்தான் தான் வாதாட வேண்டும் என்ற உறுதியாக இருக்கிறார். எனவே ஜெரார்டின் குடும்பத்தை கொன்றவர்களோடு சமரசமாகி அவர்களுக்கு குறைவான தண்டனை வாங்கிக் கொடுக்கிறார். இதனை அகங்காரமாக ஜெரார்டின் முன்னால் சாட்சியங்களே கிடையாது எப்படி ஜெயிப்பது என்று கூறுகிறார். அவர் குற்றவாளிக்கு கை கொடுப்பதை ஜெரார்டு நேரடியாக பார்த்துவிட்டு அமைதியாக செல்கிறார். அவர் எப்படி அரசு வழக்குரைஞரை பழிவாங்கினார், தனது குடும்பத்தைக் கொன்றவர்களை எப்படி கொன்றார் என்பதுதான் கதை.  படம் ம

நிதானமான ஆவி! - பழிக்குப்பழியில் வருகிறது கொட்டாவி

படம்
சௌபர்ணிகா - கோட்டயம் புஷ்பநாத் தமிழில் - சிவன் விலை - 65 சின்னத் திருமேனி ஸ்ரீகுமார், எலும்புக்கூடு ஒன்றை கல்லூரி லேபில் ஒன்று சேர்க்கிறார். இதன் விளைவாக சக்தி பெறும் ஆத்மா அவரை எதிரிகளை பழிவாங்க உதவக்கோருகிறது. அதற்கு அவர் இசைய, நேரும் பல்வேறு பிரச்னைகள், ஹோமங்கள், ஏவல்கள், பில்லி சூனியங்கள்தான் கதை. முழுக்க யூ சர்டிபிகேட் கதை. ஸ்ரீதேவி எனும் பெண் சொத்துக்காக்க சந்து நாயரால் கொல்லப்படுகிறார். அதற்கு பழிவாங்க ஸ்ரீகுமாரைப் பயன்படுத்துகிறார். ஸ்ரீகுமார், நம்பூதிரி குடும்பம் என்றாலும் அவருக்கு மாந்த்ரீகத்தில் அனுபவமில்லை. எனவே, அவரின் குலதெய்வமான பகவதி தன் சக்தியை அவருக்கு கொடுத்து உதவுகிறாள். அது என்ன? அவரின் எதிரிகள் யார்? என்பதுதான் கதை. காதல், செக்ஸ் இல்லாத கதை என்பதால் கதையில் பெரிய வேகம் இல்லை. எதிரிகளின் நோக்கம் சொத்து என்பது ஓகே. அதனைக் காப்பாற்றுபவருக்கு அதன் மீதான தீவிர மோகம் இல்லை என்பதால், கதை பாதியில் நொண்டியடிக்கிறது. ஸ்ரீதேவியின் ஆவி கூட நாளைக்கு பழிவாங்கிக்கொள்ளலாம் என்று நிதானமாக இருப்பது கதையினை நீட்டிக்க என்றே புரிந்துகொள்ள முடிகிறது. சன்டிவியில் திகில்

நீலி பழிக்குப்பழி வாங்கினானா? - கடவுள் மற்றும் சாத்தானின் கதை!

படம்
தி டேல்ஸ் ஆப் டிமோன்ஸ் அண்ட் காட்ஸ் ஜப்பான் அனிமே மேட் ஸ்னெய்ல் 224 அத்தியாயங்கள் முந்தைய பிறவியில் மன்னர் ஒருவரால் கொல்லப்படும் நீலி, எப்படி மீண்டும் குளோரி சிட்டியில் பிறந்து எதிரிகளின் வாலை ஒட்ட நறுக்கி, தன்னைக் கொன்ற மன்னரை போட்டுத்தள்ளுகிறார் என்பதே இந்த மாங்கா காமிக்ஸின் கதை. கதை இன்னும் முடியவில்லை என்பதை மனதில் கொள்ளுங்கள். பதிமூன்று வயது சிறுவன் நீலி, வகுப்பறையில் தனது முந்தைய காலத்தை நினைவுகூர்கிறான். மெல்ல நிகழ்காலத்திற்கு வந்தால் ஆசிரியர் வருணபேத த்தைக் கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறார். அதாவது, இவர்களுக்கு இது இதுதான் வரும் என. கோபத்தில் கொந்தளிக்கும் நீலி, இரண்டு மாதங்களில் சில்வர் ரேங்க் வரை வந்துகாட்டுகிறேன் என சவால் விடுகிறான். முதலில் அனைவரும் சிரித்தாலும்,. அவனையொத்த பொருளாதார ரீதியாக தாழ்ந்த குடும்ப வாரிசுகள் ஐவர் அவனை தங்களது முன்னோடியாக பார்க்க நாயகன் உருவாகிறான் மொமண்ட். உண்மையில் நீலி யார் என்ற உண்மை 224 அத்தியாயங்களிலம் சொல்லப்படவில்லை என்பதுதான் ட்விஸ்ட். அவன் முன்னதாகவே பல்வேறு மந்திரங்கள் ஆயுதங்களைக் கற்றிருக்கிறான். எனவே மேல்சாத