இடுகைகள்

மரபணு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வெயிலை சமாளித்து வாழும் கிரிஸ்பிஆர் எடிட்டிங் செய்யப்பட்ட பசுக்கள்!

படம்
          சுற்றுச்சூழலை தாங்கும் மரபணு மாற்றப்பட்ட பசுக்கள்! கிரிஸ்பிஆர் தொழில்நுட்பம் மூலம் மரபணு மாற்றப்பட்டு பசு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மரபணு குறைவான வெயிலை ஈர்க்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. வெப்பமயமாதல் பாதிப்பு அதிகரித்து வருவதால், மரபணுக்களை கிரிஸ்பிஆர் மூலம் மாற்றுவது, அவற்றின் பாதிப்பை குறைக்க உதவும். இம்முறையில் கால்நடைகள் வெப்பத்தை எதிர்க்கமுடியும். அதன் நிறத்தை நீர்த்துப்போன முறையில் அமைப்பதன் மூலம் சுற்றுச்சூழலை தாக்குப்பிடிக்க முடியும் என்கிறார் நியூசிலாந்தைச் சேர்ந்த கோய்ட்ஸ் லைபிள். இவர் ஏஜி ரிசர்ச் என்ற ஆய்வுமையத்தைச் சேர்ந்தவர். இப்போது நியூசிலாந்தைச் சேர்ந்த பசுக்கள் 20 சதவீதம் வெப்பத்தால் பாதிக்கப்பட்டு கருவுறுதல் பாதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு கன்று ஈனுவதோடு அவற்றின் பால் உற்பத்தியும் பண்ணைக்கு தேவைப்படுகிறது. வெயில் நேரத்தில் கன்று ஈனுவது கடினமாகி வருகிறது. கருப்பு நிறத்திலுள்ள கால்நடைகள் வெப்பத்தினால் அதிகம் பாதிப்பு அடைகின்றன. எனவே நிறத்தின் அடர்த்தி குறைந்த கால்நடைகள் இருப்பது அவசியம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதினர். எனவே இதற்கு  காரணமான பிஎம்இஎல

சேவலை ஆராய்ந்து அதன் மரபணு தொடர்ச்சியை கண்டறிய விரும்புகிறேன்! - பெர்முடா ஆராய்ச்சியாளர் ஈபென்

படம்
          ஈபென் ஜெரிங் உயிரியல் பேராசிரியர் நோவா சவுத்ஈஸ்டரன் பல்கலைக்கழகம் தெற்கு புளோரிடா உலகில் எத்தனையோ விலங்குகள் இருக்க நீங்கள் பரிணாமவளர்ச்சி பற்றி அறிய சேவலை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் ? பிராக்டிகலாக பார்த்தால் , அதனை எளிதாக கவனிக்கமுடியும் என்பதால்தான் . அவை என்ன செய்தாலும் உங்கள் கண்முன்னேதான் செய்யும் . தனிப்பட்ட பராமரிப்பு விஷயங்கள் தேவையில்லை . தொலைதூரம் பறந்து சென்றுவிடாது . இணையத்தில் கூட சேவல் , கோழிகள் பற்றிய படங்களை எளிதாக பெற்று ஆய்வு செய்யமுடியும் என நடைமுறை எளிதாக இருந்ததால்தான் நான் சேவலைத் தேர்ந்தெடுத்தேன் . வேறு சிறப்புக்காரணங்களைக் கூறுங்கள் . பரிணாம வளர்ச்சி பற்றி ஆய்வகங்களில் பாக்டீரியாக்களை ஆராய்வதைப்போலசெய்வதை கைவிட்டு அமேசான் மழைக்காடுகள் , பப்புவா நியூகினியா என இரண்டு இடங்களிலும் ஆராய்வது சிறப்பான பயன்களைத் தரும் என நினைக்கிறேன் . சேவல்கள் சிக்கலான சூழலில் வாழ்ந்தாலும் ஏராளமான உயிரியல் அம்சங்களை சந்திக்கின்றன . அவை சந்திக்கும் எதிரிகள் , போட்டியாளர்கள் , இயற்கை இடர்களை நாம் ஆய்வகத்தில் உருவாக்க முடியாது . பெர்முடா கிழக்குப

பிரிவினைக்குள்ளாக்கி மக்களை ஆராய்ச்சி செய்யும் ஆபத்தான மனிதர்கள்! டைவர்ஜென்ட் - அலிஜீயன்ட்

படம்
          டைவர்ஜென்ட் - அலீஜியன்ட்                   டைவர்ஜென்ட் - அலீஜியன்ட்   டைவர்ஜென்ட் - அலீஜியன்ட் directed by Robert Schwentke   with a screenplay by Bill Collage, Adam Cooper, and Noah Oppenheim Based on Allegiant by Veronica Roth   Music by Joseph Trapanese Cinematography Florian Ballhaus   ஒரு நாட்டை பிரித்து அதனைக் கண்காணித்து அங்கு வாழும் மக்கள் மீது மரபணு ஆராய்ச்சி செய்கிறது ஒரு கூட்டம்.  அதனை ஒரு ஆட்சிக்குழுத் தலைவியின் மகன் தலைமையிலான இளைஞர்களின் குழு கண்டுபிடித்து தனித்தனியாக இருக்கும் நாடுகளை எப்படி ஒன்றாக இணைக்கிறார்  என்பதுதான் கதை. படத்தில் நாயகனுக்கு பெயரே 4தான். ட்ரிஸ் தான் நாயகியின் பெயர். அவரது மாசு மருவற்ற மேனியைப் போலவே அவரது டிஎன்ஏ மட்டும் பரிசுத்தமாக உள்ளது. இதைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிக்குழுவினர், அவளை அவர்களது நாட்டிற்கு வரவைத்து அழைத்துச்செல்கின்றனர். அவளது டிஎன்ஏ மாதிரியைப் பயன்படுத்தி தூய மனித இனத்தை உருவாக்குவதே அவர்களது லட்சியம். தொடக்கத்தில் அவர்களது அம்மா பற்றி ஆராய்ச்சிக்குழுத் தலைவர் டேவிட் பேசி ட்ரிஸ் மனதை சென்டிமென்டாக மடக்குகிறார். இதனால் அவ

கல்வித்திறனுக்கு மரபணுக்கள் உதவுமா?

படம்
pixabay  மரபணுக்களை ஆராய்வதன் மூலம் மாணவர்களின் திறன்களை மதிப்பிட முடியாது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.  இங்கிலாந்தில் நடைபெற்ற மரபணு மற்றும் கல்வி தொடர்பான ஆய்வு நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். இதில் செய்த ஆய்வுகளின்படி, மரபணுக்களுக்கும், அதனை அடிப்படையாக கொண்ட கல்வித்திறனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரியவந்துள்ளது. இந்த ஆய்வுகள் பெற்றோர்களுக்கு கணிசமான செலவை ஏற்படுத்துகின்றன. ஆனால் அவர்களின் கல்வி சார்ந்த முன்னேற்றத்திற்கு உதவுகிறது பள்ளி நிர்வாகம் அவர்களை பேசி ஒப்புக்கொள்ளச் செய்கிறது. இத்தகவல்களை கல்வி சார்ந்த விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு எந்த உறுதித்தன்மையும் கிடையாது. “மரபணுரீதியான தேர்வுகளில் குறைந்த புள்ளிகளைப் பெற்றவர்கள் பதினாறு வயதிலேயே சிறந்த மாணவர்களாக சாதித்து காட்டியவர்கள் உண்டு ” என்கிறார் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் டிம் மோரிஸ். மரபணுக்களில் கல்விக்கான எந்த மரபணு வளர்ச்சியை ஏற்படுத்துகின்றது என உறுதியாக ஆராய்ச்சியாளர்களால் கூற முடியவில்லை. ஆனால் இத்தகவல்களை கொண்டு கல்வி ம

ஆண்களில் சிலருக்கு மட்டும் அதிக முடிகள் இருப்பது ஏன்?

படம்
giphy மிஸ்டர் ரோனி சிலருக்கு உடலில் அதிக முடிகள் இருக்கிறதே... அதற்கு காரணம் என்ன? ஏறத்தாழ பனிமனிதன் போல சிலர் தோன்றுவதற்கு அவர்களின் உடலிலுள்ள முடி காரணம். இவை மரபணு மற்றும் டெஸ்டோஸ்டிரோன் அளவு கூடுவதால் ஏற்படும் விளைவுகள் ஆகும். இதற்கான சிகிச்சைகள் இன்று கிடைக்கின்றன. அவற்றை சரி செய்துகொள்ளலாம். ஒரு வகையில் சில பெண்களுக்கு உடலில் இதுபோன்ற முடிகொண்ட ஆட்களைப் பிடிக்கலாம். எல்லாம் ஆதிமனிதனின் மீதான பாசம்தான். முடிகள் இருந்தால் அதற்கு மரபணுரீதியான சிகிச்சை என்பதை விட அவற்றை ட்ரிம் செய்துகொள்வது நல்லது. முடிகள் இருந்தால் வியர்க்கும். அதன்மூலம் பாக்டீரியாக்கள் பிரச்னை ஏற்படலாம். கவனமாக இருங்கள். நன்றி - பிபிசி  

சுருள் சுருளான முடிக்கு காரணம் என்ன?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி முடி எப்படி சிலருக்கு மட்டும் சுருள் சுருளாக இருக்கிறது? உங்கள் கோரைப்புல் முடியைக்கூட நேச்சுரல் அல்லது க்ரீன் டிரெண்ட்ஸில் கொடுத்தால் கர்லிங் ஹேராக மாற்றிக்கொள்ள முடியும். இந்த நேரத்தில் இப்படியெல்லாம் கேள்வி கேட்கிறீர்கள். அறிவியல்பூர்வமாக பார்த்தால் பதில் சிம்பிள் - மரபணுக்களின் மேஜிக்தான் அனைத்தும். புரத மூலக்கூறுகள்  செய்யும் வேதி சமாச்சார விளைவுகள்தான் சுருள் சுருளான முடிக்கு காரணம். உங்களுக்கு இருந்தால் உங்கள் மனைவி, காதலி பிடித்து இழுத்து விளையாடுவார்கள். இதையெல்லாம் சந்தோஷமாக அனுபவிப்பதை விட்டுவிட்டு ஏராளமாக கேள்விகளை கேட்டு நின்றால் எப்படி? நன்றி - பிபிசி

குற்றங்களுக்கு மரபணுக்கள் காரணமா?

ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி ஒருவர் மோசமான குற்றவாளி ஆக மரபணுக்கள் காரணமா? இப்படி கேள்வி பிறக்க, தந்தி கட்டுரைகளை தொடர்ந்து படித்தால்போதும். ரத்தம் தெறிக்க ஒன்லைனை வைத்துக்கொண்டு கொலை செய்தவர்களே படித்து சிரிக்கும் கதைகள் அங்குள்ள உதவி ஆசிரியர்கள் எழுதும் திறன் பெற்றவர்கள். சரி அறிவியல் முறைக்கு வருவோம். வெளிப்படையாக சொல்வதென்றால், சமூகம் எப்படி நடந்துகொள்கிறதோ அதன் வெளிப்படை அவர்கள் குற்றச்செயல்களாக வெளிக்காட்டுகிறார்கள். தீவிர தொடர் கொலைகார ர்களை போலீசாரும், உளவியலாளர்களும் ஆராய்ந்தபோது, சிதைந்துபோன அவர்களது குடும்பமும்,  வன்முறையான பெற்றோரின் குணாதிசயங்களும் அவர்களின் மனதை இரும்பாக்கி உணர்ச்சிகளே இல்லாதவர்களாக மாற்றுகிறது. மேலும் சிறுவயதில் தீவிர அவமானங்களை சந்திப்பவர்கள், அதற்கு நிச்சயம் பின்னால் பழிவாங்குவது உறுதி. அது குறிப்பிட்ட சம்பவத்திற்கு காரணமானவர்களாக இருக்கவேண்டுமென்ற அவசியம் இல்லை. அதற்கு சமூகம் பதில் சொல்ல வேண்டும். தவறான நடத்தைகளை திருத்திக்கொள்ள வாய்ப்பு கொடுத்து, குற்றவாளிகளை சமூகத்தோடு இணைத்துக்கொள்வதே நல்லது. காரணம், அவர்கள் செவ்வாய் கிரகத்திலிருந்த

பசி தீர்க்குமா மரபணு செம்மையாக்கல் நுட்பம்?

படம்
உணவுத்தேவைக்கு உதவும் மரபணு செம்மையாக்கல் நுட்பம்!  மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தை விட மரபணு செம்மையாக்கல் தொழில்நுட்பம் எதிர்கால உணவுத்தேவையை தீர்க்கும் என உயிரியல் ஆய்வாளர்கள் நம்பத் தொடங்கியுள்ளனர். சீனா, இந்தியா மட்டுமல்ல உலகமெங்கும் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக, சுகாதாரமான குடிநீர், உணவு ஆகியவற்றுக்கான பிரச்னைகளும் பற்றாக்குறையும் தொடங்கிவிட்டது.  இதற்கான தீர்வாக விவசாய நிலத்தை அதிகரிப்பது சாத்தியம் அல்ல.  பல்வேறு நாடுகளும் அறிவியல் முறையில் மரபணு மாற்ற பயிர்களை விளைவித்து உணவுத்தேவையைத் தீர்க்க முயன்று வருகின்றனர். இம்முறையில் கத்தரிக்காய், சோளம், பருத்தி ஆகிய பயிர்கள் விளைவிக்கப்பட்டாலும் மகசூல்  குறைவு, செலவு  ஆகியவற்றை முன்னிறுத்தி பல்வேறு சர்ச்சைகள் எழும்பி வருகின்றன. இந்த தொழில்நுட்பத்திற்கு மாற்றாக, மரபணு செம்மையாக்கல் நுட்பம் உதவும் வாய்ப்பு உள்ளது. மரபணு மாற்ற பயிர்களை அறிவியல் துறையில் ட்ரான்ஸ்ஜெனிக் க்ராப்ஸ்(Transgenic Crops) என்று அழைக்கின்றனர். நோய்தடுப்புக்காக தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றிலிருந்து மரபணுக்களை எடுத்து பயிர்களின் மரபண

சுவையூட்டப்பட்ட தக்காளி ரெடி!

மரபணு மாற்றப்பட்ட தக்காளி! தக்காளி முக்கியமான காய்கறி என்பதில் சந்தேகமில்லை. நாட்டுத்தக்காளி என்பது பழுப்பதும் தெரியாது, கெட்டுப்போவதும் தெரியாது. எனவே ஷெல்ஃபில் வைத்தால் காலகாலத்துக்கும் கண்ணுக்கு இனிமையாக அப்படியே இருக்கவேண்டும். அப்போதுதானே லாபம் பார்க்க முடியும். இதற்காகவும் நோய்த்தாக்குதல்களைக் குறைக்கவும் மரபணு மாற்றப்பட்ட தக்காளிகளை உருவாக்கினர். பாய்ஸ் தாம்சன் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் நாட்டுத்தக்காளியின் மணம், சுவையைக் கொண்ட 725 என்ற மரபணுக்களைக் கொண்ட தக்காளி இது. 4873 மரபணுக்களைக் கண்டறிந்து அதிலிருந்து இதனை உருவாக்கி உள்ளனர். விவசாயிகள் இதன்மூலம் சுவையான தக்காளிகளை உருவாக்கலாம்.  நாங்கள் உருவாக்கிய தக்காளிகளின் வரிசை 2012 இல் வெளியானது. 35 ஆயிரம் மரபணுக்களை ஆராய்ந்துள்ளோம். இவற்றை வரிசைப்படி பட்டியலிட்டுள்ளோம். இவ்வகையில் 166 வரிசைகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம். புதிய மரபணுக்கள் மூலம் உருவாக்கியுள்ள தக்காளிகளை நீங்கள் பயிரிட்டு எலைட் தக்காளிகளை உருவாக்கலாம். மேலும் இதில் நோய்த்தாக்குதலும் குறைவாக இருக்கும் என்கிறார் அறிவியலாளர் ஜேம்ஸ் ஜியோவன்னோனி. நன்றி: பிசிக்ஸ்

2030 இல் உலகத்தை மாற்றுவது எது?

படம்
2030 இல் உலகம் என்னவாகும்? என்ன வேண்டுமானாலும் ஆகலாம். காரணம் தொழில்நுட்பம் அனைத்தும் எது உண்மை, பொய் என கணிக்கமுடியாதபடி மாறியிருக்கிறது. அரசின் கண்காணிப்பு, வணிகத்தின் உலகமயமாக்கம். இயற்கை வளங்கள் சுரண்டல், வன்முறை விளையாட்டுகள், இணையம் சார்ந்த நிதிபரிமாற்றம், கணினி பாதுகாப்பு, ஸ்மார்ட்போன் மேம்பாடு என பல்வேறு விஷயங்கள் மாற விருக்கின்றன. நிஜம் எது நிழல் எது? அண்மையில் அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிந்தடிக் ஒபாமா வீடியோவை உருவாக்கியுள்ளனர். இதற்கு செலவான நேரம் பதினான்கு மணி நேரம்தான். இன்னொருவர் பேசிய வார்த்தைகளை ஒபாமாவின் உதட்டசையில் பேசிவிட முடியும் என்பதுதான் இவர்கள் நிரூபணம். இதனை ஒபாமாவின் பழைய வீடியோக்களோடு ஒப்பிட்டாலும் உங்களால் எந்த வித்தியாசத்தையும் கண்டுபிடிக்க முடியாது. கீழேயுள்ள வீடியோவைப் பாருங்கள். https://www.youtube.com/watch?time_continue=86&v=AmUC4m6w1wo சாப்பிடுவதை இனி நீங்கள் தீர்மானிக்க முடியாது உங்களின் டிஎன்ஏ பற்றி தகவல்களை எடுத்து சேமித்து விடுவதால், அதற்கு பொருத்தமான வெஜ், நான்வெஜ், வீகன் உணவுவக