இடுகைகள்

மழை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஓசோன் படலம் அழிந்தால் என்னாகும்? - சிஎஃப்சி விபரீதம்

படம்
giphy.com மிஸ்டர் ரோனி குளோரோஃப்ளோரோ கார்பன் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தினால் என்ன ஆகும்? குளோரோப்ளோரோ கார்பன்களைப் பற்றி ஏராளமான விஷயங்களை  பள்ளியில் படம் வரைந்து பாகம் குறித்து படித்திருப்பீர்கள். பசுமை இல்ல வாயுக்களில் ஒன்று, நம் தலைக்கு மேல் உள்ள 30 கி.மீ. பரப்பில் உள்ள ஓசோன் படலத்தைப் பாதிக்கிறது. ஓசோன் வாயுவின் அளவைக் குறைக்கும் குளோரோஃப்ளோரோ கார்பன் அளவைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்று ஆராய்ச்சியாளர்கள் ரூம் போட்டு யோசித்தனர். இதன்விளைவாக பிறந்ததுதான் மான்ட்ரியல் நெறிமுறை ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தில் 197 நாடுகள் இணைந்துள்ளன. இந்நாடுகளுக்கு ஒரு நோக்கம் உண்டு. ஒரே நோக்கம்தான் ப்ரோ. , 2050 க்குள் உலகில் பல்வேறு செயல்பாடுகளின் விளைவாக வெளியேறும் குளோரோஃப்ளோரோ கார்பன் அளவைக் கட்டுப்படுத்துவதுதான். இல்லையெனில் கட்டுப்படுத்த முடியாத மழை, வெள்ளம், அனல் காற்று என வெப்பமயமாதலின் விளைவுகள் அதிகரிக்கும். கூடுதலாக புற ஊதாக்கதிர்கள் உள்ளே வருவதால் தோல் புற்றுநோய் பாதிப்பும் அதிகரிக்கும். நன்றி - பிபிசி

கூல்ட்ரிங்க்ஸிலுள்ள கார்பன் டை ஆக்சைடு சூழலைப் பாதிக்குமா?

படம்
மிஸ்டர் ரோனி குளிர்பானங்களில் கார்பனைப் பயன்படுத்துகிறார்கள். இதன்விளைவாக, சூழலில் கார்பன் அளவு அதிகரிக்குமா? இதற்கான பதிலை நான் நாமக்கல்லில் தயாரித்த டெய்லி - ஆரஞ்சு சோடாவை ஒரு சிப் அடித்தபடிதான் எழுதுகிறேன். நண்பர்களே, குளிர்பானத் தயாரிப்பு காரணமாக வெளியிடப்படும் கார்பன் வெளியீடு வேறு. அதனைக் குடித்துவிட்டு ஏப்பம் விடும்போது வரும் கார்பன் அளவீடு வேறு. மனிதர்கள் சராசரியாக பயன்படுத்தும் பொருட்களின் அளவுப்படி கார்பன் அளவு மதிப்பிடப்படுகிறது. நீங்கள் கூறும் கார்பன் அளவு என்பது தொழில்துறையில் அளவிடுவார்கள். மற்றபடி குறிப்பிட்ட பயன்பாட்டால் எவ்வளவு என அளவிடுவதுதான் சரியான அளவு. கார்பன் டை ஆக்சைடு குளிர்பானத்தில் மிக குறைவான அளவே இருக்கும். அதனால் கார்பன் அதிகரிப்பு என்பது மேலோட்டமாக பிரச்னையை புரிந்துகொள்வது என்றே எனக்கு படுகிறது. குளிர்பான பாட்டிலை குடித்துவிட்டு தீவைத்து எரிக்காமல் அதனை முறைப்படி மறுசுழற்சிக்கு அனுப்புங்கள். அதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும். கார்பனின் அளவையும் நாம் கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடியும். நன்றி - பிபிசி

கேட்ஜெட்ஸை மழையில் காப்பாற்றுவது எப்படி?

படம்
மிஸ்டர் ரோனி மழைநாட்களில் என்னையும் கேட்ஜெட்ஸையும் எப்படி பாதுகாப்பது? மான் மார்க் குடைகளை பாத்திரக் கடைகளில் கேட்டு வாங்குங்கள். பட்டன்களை நன்கு அழுத்திப்  பார்த்துவிட்டு காசு கொடுங்கள். இதுதான் அடிப்படையானது. மற்றபடி ரெயின்கோட், வாட்டர் ப்ரூஃப் ஷூக்கள் போன்றதெல்லாம் உங்கள் பட்ஜெட் சம்பந்தப்பட்ட விஷயங்கள். எது சாத்தியமோ அதனை வாங்குங்கள். இவையெல்லாம் மழை, நீர் இறைத்துச் செல்லும் கார்கள் ஆகியவற்றையும் கவனத்தில் கொண்டு வாங்க வேண்டும். நன்றி - டி3 இதழ்

நம்பிக்கை மனிதர்கள் - நீர், சுகாதாரம், கிராம நலவாழ்வு

படம்
நம்பிக்கை மனிதர்கள் டாக்டர் வினோத் டாரே கழிவறை சுத்தம் ஜீரோ கழிவுகள் கொண்ட கழிவறைகளை நீங்கள் 2006க்கு முன்னர் யோசித்திருக்கிறீர்களா? கான்பூர் ஐஐடியைச் சேர்ந்த வினோத் டாரே அதன் பனிரெண்டு பேர்  கொண்ட குழு மூலம் சாத்தியம் ஆக்கியிருக்கிறார். மத்திய அரசின் மனிதவளத்துறையும், ரயில்வே துறையும் இணைந்து  கான்பூர்  ஐஐடியிடம் கழிவற்ற கழிவறை உருவாக்கும் பணியை அளித்தன. வினோத் டாரேவின் சீரிய பணியால் இன்று காஷ்மீர் முதல் கோவை தொடக்க பள்ளி வரை கழிவற்ற கழிவறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக கடந்த 2013ஆம் ஆண்டு நீரற்ற சிறுநீர்கழிப்பிடம், கழிவற்ற கழிவறை ஆகியவை புகழ்பெற்றன. இதில் மனிதர்களின் கழிவுகள் அங்குள்ள மண் மூலம் உரமாக மாற்றப்படுகிறது. இதற்கு நீர் தேவையில்லை. “இந்த தொழில்நுட்பத்தை பல்வேறு வணிக நிறுவனங்கள் விற்கச்சொல்லி கேட்டனர். ஆனால் நான் இது மக்களுக்குச்சென்று சேரவேண்டும் என்பதால் அதற்கு சம்மதிக்ககவில்லை ” என்கிறார் டாக்டர் வினோத் டாரே. 2 தண்ணீர் காந்தி கர்நாடகத்தைச் சேர்ந்தவர்தான் தண்ணீர் காந்தியான அய்யப்ப மசாகி. கர்நாடகத்தின் கடக் மாவட்டத்தைச் சேர்ந்த மசாகிக்

மழைநீர் சேகரிப்பாளர் இந்திரகுமார்! - மாமனிதர் போற்றுதும்!

படம்
மழைநீர் சேகரிப்பு  மாமனிதர்! ஆண்டுதோறும் ஜனவரி முதல் பிப்ரவரி மாதத்திற்குள் சென்னையில் குடங்களைத் தூக்கிக்கொண்டு மக்கள் அலையத் தொடங்கிவிடுகின்றனர். காரணம், சென்னை பெருநகரம் அதனைச் சுற்றியுள்ள ஏரிகளை மட்டுமே குடிநீர் தேவைக்கு நம்பியுள்ளது. வீட்டைச் சுற்றிலும் கசிவுநீர்க்குட்டைகள், மழைநீர்  சேகரிப்புத் தொட்டிகளை அமைத்து நிலத்தடி நீரைச் சேமித்து பயன்படுத்தி வருகிறார் மழைநீர் சேகரிப்பாளரான இந்திரக்குமார். "எங்க வீட்டிலுள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்பை, எக்ஸ்னோரா அமைப்பின் நிமல் சார்தான் அமைச்சுக் கொடுத்தார். 1998 ஆம் ஆண்டில்தான்  நிலத்தடிநீர் சேகரிப்பைத் தொடங்கினேன்.  இதுவரை நாங்க தண்ணீர் பஞ்சத்திற்காக அலையும் நிலை வரலை" என்று பேசத் தொடங்கினார். இவர் தன் வீட்டில் மழைநீர் தேங்கும்படியான கொல்லைப்புறத்தை தாழ்த்தியும், வாசல்புறத்தை உயர்த்தியும் கட்டியுள்ளார். வாசல் வழியாக வரும் நீரை, கசிவுநீர்க்குட்டைகள் மூலமாக நிலத்தடி நீராக சேமிக்கிறார். கூடுதலாக அருகிலேயே மரங்கள் வளர்ப்பதால், மண்ணரிப்பு பிரச்னையின்றி நீர் சேகரமாவதோடு, கோடையிலும் சில்லென காற்று வீசுகிறது.  ”எங்க வீட

மழையில் நனையும்போது ஒருவரின் முடி அடர் கருப்பாக தெரிவது ஏன்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி நீரில் நனைந்தவுடன் முடி ஏன் கூடுதல் கறுப்பாக தெரிகிறது? நீரில் நனைந்த பெண்ணைப் பார்த்துவிட்டு ஏக காலமாக ரசித்துவிட்டு அறிவியல் கேள்வியை கேட்கிறீர்கள். ரைட் அறிவியல் அதிலும் உண்டுதான். இதில் நீர் செய்யும் மாயாஜாலம் ஏதுமில்லை. நீர் வெளிப்படையாக வறண்ட கூந்தலை ஈரமாக்கி ஒன்றுசேர்க்கிறது. அதில் ஒளி படும்போது நமக்கு முடியின் நிறம் கூடுதல் கருப்பாக இருப்பது போல தோன்றுகிறது. கருப்பு நிறம் என்றால் அது எதையும் பிரதிபலிப்பதில்லை என்பதை அறிவீர்கள்தானே? நன்றி: பிபிசி

ஓடினால் மழை குறைவாக நனைக்குமா?

படம்
Erika Lidberg \pinterest ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர். ரோனி மழை பெய்கிறது. அப்போது நடந்து சென்றால் அதிகம் நனையுமா? அல்லது ஓடினால் அதிகம் நனையுமா? முட்டை, கோழி கேள்வி அல்ல. அறிவியல்பூர்வமான விளக்கம் உள்ளது. ஹார்வர்டு கணித வல்லுநரான டேவிட் பெல், இதற்கான விளக்கம் தேடி அலைந்த  ஆண்டு 1976.  தெருவில் நடந்து சென்றுகொண்டிருக்கிறீர்கள். நூறு மீட்டர் தொலைவில் நீங்கள் அடைய வேண்டிய இடம். சட்டென மழை பிடித்துக்கொண்டு அடித்துப் பெய்கிறது. செங்குத்தான் மழைத்துளிகளில் ஓடுகிறீர்கள். முகத்தில் அறைகிறது மழை. இப்போது நீங்கள் குறைவாகவே நனைவீர்கள் என்கிறது டேவிட்டின் ஆய்வு.    The Mathematical Gazette இதழில் வெளியானது இவரின் விரிவான ஆய்வு. மழை பெய்யும்போது நடந்து போவது, ஓடுவது என்பதில் பெரியளவு வித்தியாசம் இல்லை. ஏன் என்றால் கீழே தேங்கும் தண்ணீரால் பாதி, பெய்யும் மழையால் பாதி என நனைவீர்கள்.  உசேன் போல்டு கணக்காக ஓடினால் மழைநீர் உங்களை குறைவாகவே நனைக்கும். இதன் அளவு 10 சதவீதம்.  நன்றி: பிபிசி

யானையின் உடம்பில் சுருக்கங்கள் ஏன்?

படம்
ஏன்? எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி யானையின் உடம்பில் சுருக்கங்கள் ஏன்? ஆப்பிரிக்க யானை ஒன்றை ஸ்விட்சர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தனர். மைக்ரோஸ்கோப்பில் பார்த்தபோது, அதன் உடலில் சிறுசிறு பள்ளங்களாக தோல் அமைந்துள்ளதை வியந்தனர். இத்தன்மை உடலில் இருந்து நீர் ஆவியாவதைத் தடுக்கிறது. ஏறத்தாழ பிற யானைகளோடு ஒப்பிட்டால் பத்து சதவீதம் நீர் குறைவாக ஆவியாவதால் உடலின் வெப்பநிலை பிரச்னை இன்றி இருக்கும்.  சேறு, மழை என வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் யானை தன் கெட்டியான தோலின் மூலம் நீரைச்சேமித்து உடலின் வெப்பநிலையை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்கிறது.                  ஆசிய யானைகள் சற்று மென்மையான தோலினைக் கொண்டுள்ளதால் அவை ஈரப்பதமான சூழலிலேயே இருப்பதைக் கவனித்திருப்பீர்கள்.  நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்(படம்,தகவல்)- சார்லட் கார்னி