இடுகைகள்

விலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பொருட்களின் விலையேற்றத்தை சமாளிக்க உதவும் டிப்ஸ்கள்! - வாங்கும் பழக்கத்தை ட்யூன் பண்ணுங்க!

படம்
  உணவுப்பொருட்கள் விலை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதை எதிர்கொள்ள என்ன செய்வது என நாம் நிர்மலா சீதாராமனிடம் அட்வைஸ் கேட்க முடியாது. அட்வைஸ் கேட்கிறாயே அதற்கென தனி ஜிஎஸ்டி போட்டுவிடுகிறேன் என்று கூட உத்தரவிடலாம்.  திட்டமிடுங்கள்  ஆன்லைனோ, இன் ஸ்டோரோ எதுவாக இருந்தாலும் ஆஃபர் உள்ள பொருட்களை வாங்குவது முட்டாள்தனம். உங்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் வாங்குவது புத்திசாலித்தனம், புரமோட்டர்கள் உங்களை கடைகளுக்கு சென்று துரத்தி பொருட்களை வாங்க வைக்க முயல்வார்கள். அவர்கள் பொருட்களை திருடும் காக்கைகளைப் போல கை தூக்கி விரட்டி விட்டு எதற்கு கடைக்கு வந்தீர்களோ அந்த வேலையைப் பாருங்கள். அதுதான் வாழ்க்கை வளம் சேர்க்கும்.  சூப்பர் மார்க்கெட்டோ, ஹைப்பர் மார்க்கெட்டோ எதுவாக இருந்தாலும் வாங்க வேண்டிய பொருட்களை நீங்கள் பட்டியல் போட்டபின்னரே கடைக்கு போகவேண்டும். அப்படி போகாதபோது பர்சிலுள்ள பணம் வெட்டியாக செலவாகும்  பிராண்டிற்கு மாற்று  இதுவரை பிராண்டுகளை வாங்க நிறைய செலவு செய்திருப்பீர்கள். ஆனால் இனிமேல் அது சாத்தியமாகாது. எனவே, சூப்பர் மார்க்கெட்டுகளில், ஹைப்பர் மார்க்கெட்டுகளில் உள்ள கம்பெனியின் சுயமான மா

பயன்பாடற்ற சுரங்கத்திலிருந்து மின்சாரம் எடுக்கமுடியுமா?

படம்
  பயன்பாடற்ற சுரங்கத்திலிருந்து மின்சாரம்! பிரான்சில் உள்ள நகரம், ஏவியன். இங்கு முன்னர் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது. தற்போது பயன்பாடற்ற அதிலிருந்து வெளியாகும் மீத்தேன் வாயுவை சேகரித்து மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறார்கள். 50 அடி ஆழத்தில் குழாய்களைப் பதித்து அதன் மூலம் மீத்தேன் வாயுவை சேகரித்து பயன்படுத்துகிறார்கள்.  பொதுவாக பயன்பாடற்ற நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு வெளியாகும். இதனைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம் சிலர் முயன்று வருகிறார்கள். மீத்தேனிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வது புதிய முயற்சி அல்ல. 1950ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்தில் பயன்பாடற்ற சுரங்கங்களிலிருந்து மீத்தேன் வாயுவிலிருந்து மின்சாரத்தை பெற்று வருகிறார்கள். ஜெர்மனியில் இப்படி பெறும் மின்சாரம் மூலம் 1,50,000 வீடுகள் பயன்பெறுகின்றன.  சுரங்கத்தில் வெளியாகும் மீத்தேனை தடுப்பது கடினம். இந்த வாயு, நீருடன் சேர்ந்தால் நச்சுத்தன்மையை உருவாக்கும். வாயுவை அப்படியே வளிமண்டலத்தில் சேருமாறு விட்டால், பசுமை இல்ல வாயுக்களின் அளவு கூடும். பிரான்ஸில் ஃபிராங்கைஸ் டி எனர்ஜி என்ற அமைப்பு, மீத்தேனை சேகர

நுண்ணுயிரிகளிடமிருந்து மனிதர்களைக் காப்பாற்றும் ஆன்டிபயாடிக்!

படம்
  நோய்களின் அரண் - முறிமருந்து(Antibiotic) நமது இயற்கைச்சூழலில் ஏராளமான நுண்ணுயிரிகள் காணப்படுகின்றன. நமது உடலிலும் கூட வாழ்கின்றன. ஒருவருக்கு நிம்மோனியா எனும் காய்ச்சல் ஏற்பட பாக்டீரியா எனும் நுண்ணுயிரிகளே முக்கியக் காரணம். நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகளை தடுக்க முதலில் மருத்துவர்கள் தடுமாறினர். பிறகுதான், நோய்க்கு காரணமான நுண்ணுயிரிகளை தடுக்கும்  வேறுவகை நுண்ணுயிரிகள் உண்டு என்பதை கண்டறிந்தனர். இப்படி சிலவகை பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளிடமிருந்து பெறும் வேதிப்பொருட்களை ஆன்டிபயாடிக்காக (முறி மருந்து) பயன்படுத்தினர்.  இந்த கண்டுபிடிப்பு மூலம் தீர்க்கவே முடியாது என கருதப்பட்ட பாக்டீரியா தொடர்பான நோய்களை எளிதாக  குணமாக்க முடிந்தது. தற்போது தயாரிக்கப்படும் முறிமருந்துகளுக்கு, ஆதாரமாக ஸ்ட்ரெப்டோமைசிஸ் (Streptomyces) எனும் பாக்டீரியாக்களை பயன்படுத்துகின்றனர். இந்த பாக்டீரியா, பெரும் காலனியாக வளர்ந்து பெருகுகிறது.  பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்த முறிமருந்துகளை நெடுங்காலமாக மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, நோய் உண்டாக்கும் பாக்டீரியங்கள் மெல்ல வலுப்பெற்று வருகின்றன. ஸ்டேபிலோகாக்

லிக்விட் நானோ யூரியா- சாதாரண யூரியாவிற்கு மாற்று!

படம்
  இந்தியாவில் விரைவில் லிக்விட் நானோ யூரியா விற்பனைக்கு வரவிருக்கிறது இதனை குஜராத்தில் உள்ள கலோல் தொழிற்சாலை தயாரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதனை கடந்த வாரம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.  இந்திய கூட்டுறவு விவசாயிகள் உரச்சங்க நிறுவனம் தயாரிக்கிறது. இதன் விலை அரைலிட்டர் பாட்டில் 240 ரூபாய் வருகிறது. இதில் மானிய உதவி ஏதும் கிடையாது. சாதாரணமாக விவசாயிகள் வாங்கும் யூரியா 50 கிலோ 300க்கு விற்கிறார்கள். 300 ரூபாய்க்கு விவசாயிகளுக்கு யூரியா கிடைக்க அரசு இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்கிறது.  உலகசந்தையில் ஒரு மூட்டை யூரியாவின் விலை 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை விற்கிறது. இதனை லிக்விட் நானோ யூரியா மாற்றும் என கருதப்படுகிறது.  யூரியா என்பதே நைட்ரஜன் சத்தை செடிகளுக்கு கொடுப்பதுதான். புதிய நானோ ரகத்தில் நைட்ரஜன் நானோ பார்டிக்கிள் வடிவில் இருக்கும். இதனை நேரடியாக செடி அல்லது பயிர் மீது தெளிக்க வேண்டியதுதான். சாதாரண யூரியாவின் செயல்திறன் 25 சதவீதம் என்றால் இதன் திறன் 85-90 சதவீதம் என்கிறார்கள். அரசைப் பொறுத்தவரை லிக்விட் நானோ யூரியா மூலம் இறக்குமதி குறையும் என நினைக்கிறது.  2 முதல்

காப்புரிமையற்ற தடுப்பூசி

படம்
  பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் காப்புரிமையற்ற  தடுப்பூசியின் பங்கு! உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் பெருந்தொற்று, கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதிலிருந்து தம்மைக் காக்க உலக மக்கள்தொகையில் தோராயமாக 60 சதவீதம் பேர் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர். இதுவே தற்போது மாறிவரும் வைரஸ் வகைகளுக்கு ஏற்ப பெருமளவு மக்கள் பலியாகாமல் தடுத்து வருகிறது.  மேல்தட்டு, நடுத்தர வர்க்க மக்களில் 77 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசியேனும் செலுத்தியுள்ளனர். வறுமையான நாடுகளில் இந்த வகையில் 10 சதவீத மக்களுக்கே தடுப்பூசி கிடைத்துள்ளது. இந்த இடைவெளியை காப்புரிமை இல்லாத கோர்பேவாக்ஸ் (CORBEVAX ) போக்கும் என மருத்துவர் வல்லுநர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.  வேறுபாடு என்ன? புரத துணைப்பிரிவு (protein subunit) தடுப்பூசி வகையைச் சேர்ந்த கோர்பேவாக்ஸ், உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத ஸ்பைக் புரதத்தை கொரோனாவிலிருந்து பெற்றுள்ளது. இதைப் பயன்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டிவிட்டு எதிர்கால நோய்த்தொற்றுகளைத் தடுக்கிறது. பிற தடுப்பூசிகள், உடலில் ஸ்பைக் புரதத்தை உருவாக்க தூண்டுகின்றன. கோர்பேவாக்ஸ், நேரட

தேவைக்கும் உற்பத்திக்குமான தடுமாற்றமான உறவு! - டேட்டா ஜங்க்ஷன்

படம்
  சைக்கிள், கழிவறை நாப்கின் தாள்கள், செமி கண்டக்டர்கள் ஆகியவை இப்போது தட்டுப்பாடாக உள்ளன. இதற்கு காரணம், பெருந்தொற்று எனலாம். உண்மையில், விற்பனைக்கும் , உற்பத்திக்கும், தேவைக்கும் இடையிலுள்ள இடைவெளிதான் இதற்கு காரணம். இதனை புல்விப் விளைவு என்கிறார்கள் . இப்போது அதனைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.  செமி கண்டக்டர்கள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் துறைகளின் எண்ணிக்கை 169. இதனை கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.  சிப் தட்டுப்பாட்டில் அமெரிக்காவில் 1 சதவீத ஜிடிபி வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.  நடப்பு ஆண்டில் 78 சதவீதம் சைக்கிள் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் சைக்கிள் விற்பனை 38 சதவீதமாக மட்டுமே  இருந்தது.  பெருந்தொற்று ஏற்பட்டு பொதுமுடக்கம் அமெரிக்காவில் நடைமுறையில் இருந்த்து. அப்போது மட்டும் அமெரிக்காவில் கழிவறை நாப்கின்களை வாங்க 1.4 பில்லியன் டாலர்களை செலவழித்திருந்தனர்.  சூப்பர் மார்க்கெட்டின் மேனேஜருக்கு கடையில் விற்பனையாகும் பொருள் பற்றித்தான் தெரியும். அவருக்கு, குறிப்பிட்ட பொருள் தொழிற்சாலையில் எந்தளவு விற்பனையாகிறது என்று தெரியாது. தொழிற்சாலையில் உள்ள

தடுப்பூசி விலை நிர்ணயித்தல் விவகாரத்தில் மத்திய அரசு தவறு செய்துவிட்டது! - அமர்த்தியா லகிரி

படம்
                அமர்த்தியா லகிரி பேராசிரியர் , பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் பொதுமக்கள் மத்திய அரசின் தடுப்பூசி திட்டம் மீது நம்பிக்கை இழந்துள்ளனர் . ஏப்ரல் மாதத்தில் தடுப்பூசிகளை மாநிலங்கள் பெறும்படி மத்திய அரசு உத்தரவிட்டது விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது . இதில் என்ன பிரச்னை இருக்கிறது என்று நினைக்கிறீர்கள் ? இந்தியாவின் தடுப்பூதி திட்ட முறை கடுமையான தேக்கத்தை சந்தித்துள்ளது . தொடக்கத்திலேயே இந்திய அரசு தேவையான தடுப்பூசிகளை தயாரிக்க ஆர்டர் கொடுக்கவில்லை . இந்தியாவுக்கு இரண்டு பில்லியன் டோஸ்கள் மருந்து தேவை . இதில் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 12 சதவீதத்தினர் மட்டுமே முதல் டோஸ் மருந்தைப் பெற்றுள்ளனர் . அரசு இப்போதுதான் கோவிஷீல்டு மருந்திற்கான நூறு மில்லியன் டோஸ் ஆர்டர்களை அளித்துள்ளது . சீரம் இன்ஸ்டிடியூட்டின் மருந்து தயாரிப்புத் திறன் 700 மில்லியன் டோஸ்களாக உள்ளது . பாரத் பயோடெக் நிறுவனத்தின் திறன் 150 மில்லியன் டோஸ்களாக உள்ளது . இங்கு கூறியிருப்பது நிறுவனங்களில் ஆண்டு தயாரிப்பு . ஆனால் மத்திய அரசு பற்றாக்குறையைப் போக்க மருந்துகளை இறக்குமதிசெய்வதற்கான முயற்

எளிதாக கிடைக்கும் பிளாஸ்டிக்!

படம்
                பிளாஸ்டிக் . இன்று சூழலியலாளர்கள் கனவிலும் கூட எதிர்த்து வரும் பொருள் . ஆனால் பிளாஸ்டிக் , புழக்கத்திற்கு வந்தபிறகுதான் மக்களுக்குத் தேவையான தினசரி பொருட்களின் விலை குறைந்தது . இன்று எந்த பொருளையும் எளிதாக எடை குறைந்த மலிவான விலையில் பிளாஸ்டிக்கால் உருவாக்க முடியும் . கச்சா எண்ணெய் , எரிவாயு ஆகியவற்றிலிருந்து பிளாஸ்டிக் பெறப்படுகிறது . கார்பன் கொண்டுள்ள மூலக்கூறுகளை பாலிமர் என்று கூறலாம் . பெரும்பாலான தொழிற்சாலை தயாரிப்பு பிளாஸ்டிக்குகளில் மோனோமர்கள் பயன்படுகின்றன . பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்வது என்பது அதனை அதிக வெப்பநிலையில் உருக்கி வேறு ஒரு பொருளாக மாற்றுவதுதான் . தெர்மோபிளாஸ்டிக்குக்குகளை எளிதில் உருக்கினாலும் தெர்மோசெட் வகை பிளாஸ்டிக்குகளை இப்படி மாற்றி வேறு பொருட்களாக மாற்றுவது கடினம் . கச்சா எண்ணெய வளம் என்பது தீர்ந்துபோக கூடியது என்பதால் , கரும்பு , சோளத்திலிருந்து பயோபிளாஸ்டிக் தயாரிக்கும ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன . இதன் விளைவாக பிளாஸ்டிக்கை 3 டி பிரிண்டில் முறையில் உறுப்புகளை உருவாக்குவதற்கும் பயன்படுத்த முடியும் . இதிலுள்ள வக

வணிகரீதியான மின்விளக்குகள் கடந்து வந்த பாதை! - இதில் பங்களித்த முக்கியமான அறிவியலாளர்கள்

படம்
              வணிக ரீதியான மின் விளக்குகள் சர் ஹம்பிரி டேவி 1802 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அறிவியலாளர் டேவி , பிளாட்டினம் இழை மீது தனது பேட்டரியைப் பயன்படுத்தினார் . அவரது சோதனை பயன் கொடுத்தது . பின்னாளில் இந்த முறை நல்ல பயன் கொடுத்தது என்றால் அச்சமயம் பிளாட்டினம் பெரியளவு ஒளிரவில்லை . ஆனாலும் பின்னாளில் இந்த முறை மேம்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது . வாரன் டி லா ரூ 1840 ஆம் ஆண்டு வேதியியலாளரும் , வானியலாளருமான ரூ , பிளாட்டினம் காயில் பொருத்தப்பட்ட வேக்குவம் குழாயில் மின்சாரத்தை செலுத்தினார் . இன்று நாம் பயன்படுத்தி வரும் மின் விளக்குகளுக்கான அடிப்படை இதுதான் . ஆனால் இதற்கான செலவுதான் கூடுதல் . எனவே மக்களிடையே புகழ்பெறவில்லை . ஜீன் ராபர்ட் ஹூடின் 1852 ஆம் ஆண்டு ஹூடின் தனது எஸ்டேட்டில் மின் விளக்குகளை வெளிப்படையா ஒளிர வைத்தார் . ஆனால் இந்த மின்விளக்குக்கான முறையான தொழிற்சாலை , விலைகுறைந்த பல்புகள் என அவர் திட்டமிடவில்லை . எனவே வணிக ரீதியான பல்புளள் விற்பனைக்கு வரவில்லை . ஜோசப் ஸ்வான் பிரிட்டிஷ் இயற்பியலாளர் சூழலுக்கு உகந்த பல்புகளை கண்ட

திருடப்படும் பைக்குகள் எங்கு செல்கின்றன? - அலசல் ரிப்போர்ட்

படம்
  சென்னை பெருநகரில் மாதம்தோறும் அறுபது பைக்குகள் திருடப்படுகின்றன. இதனை பதிவு செய்வதில் காவல்துறை பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. இப்படி திருடப்படும் பைக்குள் என்னாவாகின்றன என்று அந்த உலகைப் பார்க்க உள்ளே நுழைந்தால் பொல்லாதவன் பட அனுபவம் இன்னும் பெரிய கான்வாஸில் கிடைக்கிறது.  குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தப்படும் பைக்குளை திருடர்கள் நோட்டமிட்டு பார்த்து வைத்துக்கொள்கின்றனர். பின்னர், அதன் லாக்கை லாவகமாக உடைத்து திறந்து விடுகின்றனர். இதற்கு மாஸ்டர் கீ உதவுகிறது. இந்த நேரத்தில் காவல்துறை ரோந்து வருமே, அதற்கு சமாளிக்க அருகிலுள்ள தியேட்டரில் சினிமா டிக்கெட்டுகளை வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். பிரச்னையாக இருக்கும் கேமராக்களிடமிருந்தும் தப்பித்தான் பைக்கை திருடி கொண்டு செல்கிறார்கள்.  இந்த வியாபாரம் இரண்டு வகையில் நடைபெறுகிறது. ஒன்று, பத்தாயிரம் ரூபாய் தருகிறேன். எனக்கு பைக் வேண்டும் என்று சொல்லும் கல்லூரி மாணவர்கள், போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் இந்த சட்டவிரோத செயலுக்கு முக்கியமான ஆட்கள்.  இந்த பிராண்ட் பைக் வேண்டும் என ஏஜெண்டுகளிடம் சொல்லி சிலர் வாங்குகிறார்கள். இந்த வியாபாரம் நம்பகமானது. இ

வைரம் ஏ டூ இசட் தகவல்களை அறியலாம் வாங்க!

படம்
  வைரம் ஏ டூ இசட்! கோகினூர் வைரம் இந்தியாவின் பெருமைக்குரிய அடையாளம். தங்கம் மட்டுமல்ல வைரத்திற்கும் இந்தியா புகழ்பெற்றது என உலகம் அறிந்தது பின்னர்தான். வைரத்தைக் குறிக்கும் ஆங்கிலச்சொல்லான டைமண்ட் என்பது கிரேக்க வார்த்தையான அடமாவோவிலிருந்து(Adamao) உருவானது. இதன் பொருள், வலிமையானது.  இது ஒன்றும் புதிய விஷயமல்ல. வைரம் என்பது கடினமானது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அது மிகப்பழமையானது. வைரங்கள் பிரித்தெடுக்கப்படும் பாறைகளின் வயது 1600 மில்லியனாகவும், வைரங்களின் வயது 3.3 பில்லியன் ஆண்டுகள் ஆகவும் உள்ளது. கடுமையான வெப்பநிலை மற்றும் அழுத்தம் காரணமாக வைரங்கள் உருவாகின்றன. இப்படிக் கிடைத்த வைரங்களில் சில நம் சூரியமண்டலத்தைவிட காலத்தால் முந்தையவை என்பது ஆச்சரியம்தானே! கார்பன் அழகு! வைரத்தின் உறுதியான கட்டுமானத்திற்கு கார்பன் காரணம் என்பதை அறிந்திருப்பீர்கள். நியூட்ரலான கார்பன் அணுவில், ஆறு புரோட்டான்கள், ஆறு நியூட்ரான்கள் இதன் அணுக்கருவில் உள்ளன. இதற்கு பதிலீடான எண்ணிக்கையில் எலக்ட்ரான்களும் உள்ளன.  இதிலுள்ள எலக்ட்ரான் கட்டமைப்பு 1s22s22p2 என்று குறிப்பிடுகின்றனர். கார்பன் அணுக்கள் க்யூப

உருளைக்கிழங்கே உணவு- பொருளாதார தாக்குதலில் ஈரான்!

படம்
pixabay ஈரானில் உணவு பரிதாபம்! வளமான, போர்களைச் சந்திக்காத நாடுகளில் உருளைக்கிழங்கு என்பதற்கு பொருள், உருளைக்கிழங்கு சிப்ஸ், உருளைக்கிழங்கு பொரியல் மட்டுமே. ஆனால் வறுமை, சர்வாதிகாரம், பொருளாதாரத் தடை ஆகியவற்றைச் சந்திக்கும் நாடுகளுக்கு உருளைக்கிழங்குதான் உணவாதாரமே. எனவேதான் உடல்பருமனுக்கு உருளைக்கிழங்கு பெருமளவு இகழப்பட்டாலும், அதன் உற்பத்தியை குறைப்பதில்லை. காரணம், காலம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ஈரான் தற்போது அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைச் சந்தித்து வருகிறது. இதன் விளைவாக வெளிநாடுகளில் வாங்கி வந்த சோளம், அரிசி, பார்லி ஆகியவை அங்கு நிறுத்தப்பட்டுவிட்டன. தற்போது அங்கு மக்களுக்கு உணவாதாரத்திற்கு உருளைக்கிழங்குதான் ஒரே வழி. 2009 ஆம் ஆண்டு பிரதமரான ஈரான் அதிபர் மஹ்மூத் ஆமடினேஜாட் ஆட்சியில் மக்கள் கடும் பிரச்னைகளைச் சந்தித்தனர். இதன் விளைவாக, அவர்களின் கடந்த காலத்தை நினைவூட்டும்படி, நமக்கு உருளைக்கிழங்கு வேண்டாம் என தேர்தல் பிரசாரத்தில் எதிர்கட்சி தலைவர்கள் அலறினர். ஏறத்தாழ உருளைக்கிழங்கு என்பதே அங்கு மறைந்து வந்த நேரத்தில் மீண்டும் அதனை மக்கள் நாட வேண்டிய சூழ

கலக்கும் சோலார் கார்!- வாங்க முடியுமா? - லைட்இயர் ஒன்!

படம்
உலகம் முழுக்க சோலார் காய்ச்சல் பரவி வருகிறது. ஆனால் பேட்டரி கார்களை, பைக்குகளை நம்பி பயணிப்பது பலருக்கும் அலர்ஜியாக உள்ளது. டக்கென எங்காவது நின்றுவிட்டால் என்ன செய்வது என்று?  டெஸ்லா போன்ற நிறுவனங்கள் இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை. வந்தாலும் விலை அதிகம். என்ன செய்வது? நெதர்லாந்தைத் சேர்ந்த லைட் இயர் எனும் நிறுவனம் ஆற்றல் வாய்ந்த சோலார் காரை உருவாக்கி நம்பிக்கை தருகிறது. இதன் ஒன் எனும் வகைக்கார் ரேசில் கலந்து வெற்றி வாகை சூடியுள்ளது. 2013, 15,17 ஆண்டுகளில் இந்த சம்பவத்தை ஒன் கார் நிகழ்த்தியது. சோலார் காருக்கு வானிலை முக்கியம். இந்த ஒன் வகைக்கார் மழை பெய்யும் காலத்தில் 400 கி.மீ, வெயில் காயும் நேரங்களில் 725 கி.மீ தூரம் என பயணிக்கும் என்று கம்பெனி கூறுகிறது. பொதுவாக ஒருநாள் இரவு மட்டும் சார்ஜ் செய்தால், 250 வோல்ட்ஸ் கரண்ட் தேவை. 350 கி.மீ தூரம் ஜரூராக பயணிக்கலாம் என கேரண்டி தருகிறது லைட் இயர். இந்தியா போன்ற நாடுகளில் சார்ஜிங் பாய்ண்ட் தேவையில்லை. காரணம் இங்கு கொளுத்தும் வெயில்தான். கார் தானாகவே சார்ஜ் செய்துகொள்ளும். எனவே, பாரத் பெட்ரோல் பங்க் சென்று சார்ஜ் போடும் அவஸ்த