இடுகைகள்

பயணிக்கும் வீரர்கள்- கிரேக்க வரலாற்றினூடே ஒரு பயணம்

படம்
உங்களின் முதல் இரு படங்கள் போலில்லாது சில எழுச்சியூட்டும் சம்பவங்களுக்கு பயணிக்கும் வீரர்கள் படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தில் அரசியல் விஷயங்களுக்கும் எழுச்சியூட்டும் விஷயங்களுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?        பாலியல் சார்ந்த விஷயங்கள் உருவாவது கதாபாத்திரங்களுக்கிடையேதான். கிளிமெம்னெஸ்ட்ரா, ஈகிஸ்டஸ் மீது கொள்ளும் காதல் மற்றும் எலக்ட்ராவின் எதிர்வினை அவர்களுடைய ஆளுமை சார்ந்த அவற்றை மட்டுமே அடிப்படையாக கொண்டதுதான். இது போன்ற உறவுகள் தனிப்பட்ட ரீதியில் நின்றுவிடக்கூடியவைதான். அம்மாவின் காதலன் என்பதைத் தாண்டி ஈகிஸ்டஸ் சில குணங்களை கொண்டவனாக இருக்கிறான். அவன் ஒரு நம்பிக்கைத் துரோகி கூட. அவன் கொல்லப்படுவது கிளிமெம்னெஸ்ட்ராவுடன் கொண்ட காதலுக்காக மட்டுமல்ல அவனது அகும்மெம்னோனை விடுவித்து ஜெர்மன்காரர்களிடம் காட்டிக் கொடுத்ததன் காரணமாகத்தான். எலக்ட்ராவின் மீதான வன்புணர்ச்சி முழுக்க அரசியல்ரீதியிலானது, எந்த ஒரு வடிவிலான வன்முறையின் கீழேயும் அதன் ஆதாரமாக பாலுணர்வுத் தூண்டுதல்தான் இருக்கிறது. எலக்ட்ரா விசாரணையின்போது வன்புணர்ச்சி செய்யப்படுவது  படத்தி

கிரேக்க நிலப்பரப்பினூடே ஒரு வரலாற்றுப்பயணம்-பயணிக்கும் வீரர்கள்

படம்
உங்களது கதாநாயகர்களை புராண புனைவில் ஈடுபடுத்தி வெவ்வேறு வரலாற்று உள்ளடக்கங்களில் பொருத்துவது ஆபத்தானதாக தெரியவில்லையா?  நோக்கம் மற்றும் சூழல்கள் வேறுவேறானவை. ஒன்றுபோன்றவையல்ல. வரலாறு அவர்களை பாதிக்கிறது. மாற்றங்களை செய்யத்தூண்டி அவர்களை மாற்றுகிறது. மிகத்துல்லியமாக ஒரு வரலாற்றுத் தருணத்தில் கிடைக்கும் இடங்களில் அவர்கள் நகர்ந்து செல்வதற்கு உதவும் வகையில் கதாபாத்திரங்களை வடிவமைக்க முயற்சிக்கிறேன். ஆகஸ்ட் 4 ஆம் தேதி விருந்தொன்றில் ஈகிஸ்டஸ் எனும் ராணுவ வீரன் பொய்யான ஒரு கூட்டிணைவை ஜெர்மன் வீரரிடம் ஏற்படுத்திக்கொள்கிறான். அகமெம்மோன் இறப்பிற்கு பின்னே அவனது அதிகாரம் கொண்ட ஆளுமை மற்றவர்களுக்கு தெரியவருகிறது. ஈகிஸ்டஸ் யார் என்பதை ஆராய்ந்து பார்த்தால் தனிப்பட்ட நோக்கம், உளவியல் சார்ந்த தன்மையை முதன்மையாக கொள்ள வேண்டியிருக்கிறது. அது எனக்கு ஆர்வமூட்டுவதாக இல்லை. ப்ரெச்டியன் புராணம் போல படத்தினை உருவாக்க முயற்சி செய்ய விரும்புகிறேன். என்றாலும் உளவியல் தன்மையின் முன்னிலையை விரும்பவில்லை. எப்படி இதில் திரைக்கதையினை இணைக்க முடிந்தது? புராண புனைவை பயன்படுத்தியிருக்கிற விதம

கிரேக்க நிலப்பரப்பினூடே ஒரு வரலாற்றுப்பயணம்: பயணிக்கும் வீரர்கள்

படம்
கிரேக்க நிலப்பரப்பினூடே ஒரு வரலாற்றுப்பயணம்: பயணிக்கும் வீரர்கள் மைக்கேல் டிமோ பவுலோஸ் மற்றும் ப்ரைடா லியப்பாஸ் – 1974 ஆங்கில மொழிபெயர்ப்பு: டான் பைனாரு தமிழில்: லாய்ட்ட்டர் லூன் பயணிக்கும் வீரர்கள் படத்தினை திட்டமிட்டு தொடங்கும்போது, அந்த நேரத்தில் அரசியல் சூழ்நிலைகள் எப்படி இருந்தன?       படத்தினை உருவாக்கத் தொடங்கிய காலம் மார்க்கென்சினிஸின் விடுதலை பெறுவதற்கான கலகங்கள் தொடங்கிய காலமாகவும் தொடர்ச்சியான வன்முறைச் சம்பவங்கள் நிகழ்வதற்கு முந்தைய காலமாகவும் இருந்தது. 1939 – 52 காலத்தில் குறிப்பிடவேபடாத பல வரலாற்று நிகழ்வுகளை கொண்டுள்ளதை தணிக்கை அமைப்பு அங்கீகரிக்க மறுத்துவிட்டது. ஆயினும் நாங்கள் படத்தினை காட்சிபடுத்த திட்டமிட்டோம். நாங்கள் படத்தினை தொடங்கும் முன்னே வன்முறைச் சம்பவங்கள் நிகழத்தொடங்கிவிட்டன. இந்த முறையில் படத்தினை உருவாக்கினால் கிரீசில் அதனைத் திரையிட என்றுமே முடியாது. ஆனால் இந்த முடிவில் என்ன புத்திசாலித்தனம் உள்ளது? தயாரிப்பாளரிடம் இது குறித்து பேசி படம் கிரீசில் தடை செய்யப்பட்டால் அதனைக் கொண்டே அயல்நாட்டில் திரையிடும் வாய்ப்பை பெற முயற்சிக்கலாம்

36 நாட்களில் : தியோ ஏஞ்சலோ பவுலோஸ் த- லாய்ட்டர் லூன்

படம்
உங்கள் படங்களுக்கு திரும்பிச் செல்ல விரும்புகிறேன். சில பையன்கள் துண்டறிக்கைகளை விநியாகிக்கும் காட்சி எதைக் குறிக்கிறது? இது அந்தக் காலகட்டத்தின் அரசியல் நிலைமைகளைக் குறிக்கிறது. துண்டறிக்கைகள் கொடுப்பது தடை செய்யப்பட்டிருந்தாலும் அவர்கள் அதனைப் புறம் தள்ளி அப்படி செயல்படுகிறார்கள். படத்தின் உள்ளடக்கமாக இரு விஷயங்கள் உள்ளன. ஒன்று சட்டம், இன்னொன்று இளைஞர்கள் அதனை சவாலாக ஏற்று அதற்கு எதிராக செயல்படுகிறார்கள். அரசு குறித்து சில விஷயங்களை அடிக்கோடிட்டு காட்ட இது ஒரு வழியாகும். இறுதிக் காட்சியில் மூன்று அரசு அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்படுகிறார்களே ஏன்?        சர்வாதிகாரத் தலைமையின் ஆட்சிக்கு முன்பு தூக்கிலிடுவதுதான்  பெருமளவு நடைமுறையில் இருந்தது. ஆனால் நடைமுறையில் ஏதேனும் ஒரு பழைய முறையில் மக்கள் கொல்லப்பட்டுக்கொண்டே இருந்தனர். இரண்டாம் உலகப்போரில் மெட்டாக்சஸ் இறந்த பிறகே, அந்த நிகழ்ச்சிகள் குறித்த மக்களின் கருத்துகள் சுதந்திரமாக வெளிப்படத் தொடங்கின. பின்டாரின் எழுத்துகள் குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள்?        முசோலினி ரோமன் நாட்டு செவ்விலக்கியங்களை

36 நாட்களில்: தியோ ஏஞ்சலோ பவுலோஸ் நேர்காணல் (தமிழில்:லாய்ட்டர் லூன்)

படம்
மறுகட்டமைப்பு படமானது ஜெர்மன் தொலைக்காட்சியில் திரையிடப்பட்டது தங்களுக்கு பெரும் உதவியாக இருந்திருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.        உண்மைதான். ப்ரான்சில் அப்படம் விருதுபெறவும் அதுதான் காரணம். இங்கிலாந்தில் பிபிசியில் அப்படம் திரையிடப்பட்டது. கிரீஸ் எனும் சிறிய நாட்டில் இப்போது நான் முக்கியமான மனிதராக மாறி இருக்கிறேன் உலகளவிலான அங்கீகாரம் பெற்ற ஒருவரை நீங்கள் எந்தக்காரணமும் இல்லாமல் சிறையில் அடைக்கமுடியாது. கிரீசில் கலாசார, பண்பாட்டு முயற்சிகளுக்கு இருக்கும் வாய்ப்பு, இடம் என்று இதனைக் கூறலாமா?        எந்தப்பணியிலும் நாங்கள் இதனை மனதில் கொண்டுதான் வேலை செய்கிறோம். எ.கா: சின்குரோனோஸ் கினிமாடோகிராபோஸ் எனும் சினிமா தொடர்பான பத்திரிகையில் நான் தனிப்பட்டரீதியாக அதில் பங்காற்றவில்லை. அது என்னை அடையாளப்படுத்தும்போது மிக எளிதாக இடதுசாரி பதிப்பகமாக அடையாளப்படுத்தப்படும் அபாயம் உள்ளது என்பதை நான் மறுக்கமுடியாது. உங்களுடைய திரைப்பட பாணி மிகவும் நீள்வடிவம் போலானது. திரையில் இருப்பதை புரிந்துகொள்ள பார்வையாளர்களும் பங்களிக்கவேண்டும் என்ற முறையில்தான் அது உள்ளது.

முகமூடிகளின் விலக்கம்: 36 நாட்களில்(தியோ ஏஞ்சலோ பவுலோஸ்)

படம்
எப்படி உங்களால் படத்தினைத் தயாரிக்க முடிகிறது? கிரீக் திரைப்படப் பள்ளியில் என்னுடைய நண்பர்கள் சிலர் ஆசிரியர்களாக உள்ளனர். அங்கே கல்வி கற்ற ஒருவரின் கணவர் பெரும் பணக்காரரும் மறுகட்டமைப்பு படத்தின் மீது பெரும் மரியாதை கொண்டவரும் ஆவார். அவர் என்னுடைய படம் ஒன்றினைத் தயாரிக்க விருப்பம் தெரிவித்தார். நான் அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டேன் அவ்வளவுதான். நாங்களிருவரும் நண்பர்களும், அரசியல்ரீதியிலான ஒத்த கருத்துகளைக் கொண்டவர்களும் கூட. நாங்கள் படத்தினை உருவாக்கி முடிக்கும்போது அவருடைய அரசியல் விழிப்புணர்வு முற்றிலும் மேம்பட்டு வேறு ஒன்றாகயிருந்தது. ‘‘ உங்களுடைய படத்தினால் நான் என்னுடைய பணத்தினை இழந்தாலும், இந்தப் படத்தின் மூலமாக  முன்னெப்போதும் அறியாத பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். அந்த அனுபவங்கள் பெருமதிப்பானவை ஆகும்.’’ என்று கூறினார் அவர். ‘‘உங்களுடைய படத்தினால் ஒரு பென்னி கூட பெறவில்லை’’ என்று கூறும் வகையான தயாரிப்பாளர் அல்ல அவர். மறுகட்டமைப்பு படத்திற்கு பணியாற்றிய குழுவே இப்படத்திற்கும் இணைந்து பணிபுரிந்தோம். அதிகளவில் பணம் கிடைத்ததால் குழு சிறிது பெரிதாக மாறியது அவ்வளவுதான்.

அதிகாரத்தின் முகமூடி விலக்கம்: 36 நாட்களில் திரைப்படம்

படம்
அதிகாரத்தின் முகமூடி விலக்கம்: 36 நாட்களில் திரைப்படம் உல்ரிச் கிரிகோர் -1973 இப்படத்திற்கான வரலாற்றுப் பின்புலம் என்ன?        இது கூட அல்லது குறைச்சலாக சில உண்மையான விஷயங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. துப்பாக்கியை பயன்படுத்தி குற்றவாளி ஒருவன் அவனைச் சிறையில் சந்திக்கவரும் வலதுசாரி உறுப்பினர் மூலம் பிணை பெறுகிறான். பிறகு இருவருக்குமான நீண்ட கால உறவு தெரிய வந்தாலும் அவர்களது உறவின் தன்மை தெளிவானதாக இல்லை. நாடாளுமன்ற உறுப்பினருக்கும், குற்றவாளிக்கும்  ஏதேனும் ஒப்பந்தம் இருக்கிறதா? யாருக்கும் தெரியாது. குற்றவாளி தன் நண்பனுக்கு எழுதும் கடிதத்தில் ‘‘நான் அவனைக் கொல்லப்போகிறேன், பிறகு என்னையும் நானே அழித்துக்கொள்வேன். இனி எப்போதும் அவர்களை என்னை கைது செய்வதற்கான எந்தக்கோப்புகளும் கிடைத்து அவை நிரூபிக்கப்படப் போவதில்லை’’ என்று குறிப்பிடுகிறான்.        ஆனால் பிணை கொடுத்தவர் அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒரு மனிதர் என்பதால் இந்த வழக்கு ஒரு சிக்கலான கட்டத்தை எட்டுகிறது. பிணை வழங்கியவர் வலதுசாரி குழுக்களில் ஒருவர் என்பதால் அவ்வட்டாரங்களில் வேதனையான வருத்தங்கள் எழுகின்றன.

நாடிழந்தவர்களுக்கான இரங்கற்பா இறுதிப்பகுதி: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
படங்களைத் தயாரிக்கும் முன்னணி பெரும் நிறுவனங்கள் திரையரங்கு குழுமங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தாங்கள் தயாரிக்கும் படங்களை மட்டும் திரையிடக்கூறுகிறார்கள் என்கிறீர்களா?        திரையரங்குகளில் எனது படம் திரையிடப்பட நான் ஒரு விநியோகஸ்தரைக் கண்டுபிடித்து அவரிடம் படத்தை ஒப்படைக்கவேண்டும். ஆனால் எனது படம் அவர்களது தயாரிப்பான படங்களோடு போட்டியிடுவதாக அவர்கள் நினைத்தால் அதனை அலமாரியில் வைத்து விட்டு மறந்துவிடுவார்கள். மொத்தமாக அனைத்து படங்களுமாக சேர்த்து கிரீசில் எத்தனை படங்கள் உருவாக்கப்படுகின்றன?        ஆண்டு முழுவதும் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுபவை மொத்தம் 120 படங்கள் தோராயமாக இருக்கும். ஆனால் இவை அனைத்தும் ஏதேன்ஸில் வெளியிடப்படாது. அவை முறையான முதல் காட்சி என்பதைத் தவிர்த்து பொதுவான வெளியிடலாக வெளியிடப்படும். கிரீஸ் நாட்டில் சில விதிகள் உள்ளன. மக்கள் படங்களின் கீழ் வரும் சப்டைட்டில்களை வாசிக்க மாட்டார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும் கிரீசில் குடும்பத்தோடு படம் பார்க்கச்செல்பவர்கள் அதிகம் என்பதால் எந்தப்படம் வயது வந்தவர்களுக்கானது என்று சா