இடுகைகள்

வறுமையின் எல்லைக்கோடு மறைகிறதா?

படம்
வறுமையின் எல்லைக்கோடு மறைகிறதா?  இந்தியா விரைவில் மக்களின் வறுமை நிலை குறித்த ஆய்வறிக்கையை  வெளியிட உள்ளது. இந்திய மக்களின் பொருளாதாரம், பெருமளவில் விவசாயம் மற்றும் அதன் துணைத்தொழில்களைச் சார்ந்தே உள்ளது. விவசாயம் இயற்கைப் பேரிடர், நீர்வளம் குறைவு, நிலவளம் போதாமை மற்றும் அரசுகளின் திட்டச்செயலின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. விவசாயத்தை மீட்க இந்திய அரசு நலிந்த விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்திவருகிறது. மானிய உதவிகள், பயிர்காப்பீட்டுத் திட்டம், அதிக மகசூலுக்கான கலப்பின பயிர்கள் உருவாக்கம் உள்ளிட்டவை இதில் அடக்கம். சுடும் வறுமை மக்களின் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக இந்திய அரசு பல்லாயிரம் கோடி செலவழித்தாலும் அதற்கான பலன்களை பார்க்கும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. உலகவங்கி இந்திய அரசுடன் இணைந்து 2011 ஆம் ஆண்டு இந்திய மக்களின் வறுமைநிலை குறித்த அறிக்கையைத் தயாரித்து வெளியிட்டது. அதில் 28.6 கோடிப்பேர் வறுமை நிலையில்  தத்தளிப்பதாக தெரிய வந்தது. இப்பிரிவினரின் தினசரி வருமானம் தோராயமாக 135 ரூபாய் மட்டுமே. ”நடப்பு ஆண்டின்

பத்ம விருது கௌரவம்!

படம்
  இந்திய அரசு, குடியரசு தின விழாவில் நூற்று பனிரெண்டு நபர்களுக்கு பெருமைக்குரிய பத்ம விருதுகளை  அறிவித்துள்ளது பத்ம விருதுகள் 1954 ஆம் ஆண்டிலிருந்து இந்திய அரசால் ஆண்டுதோறும் குடியரசு தின விழாவில் வழங்கப்படுகிறது. தொடக்கத்தில் பாரத ரத்னா மற்றும் பத்ம விபூஷன் விருதுகள் மட்டுமே இருந்ததன. பின்னர் அடுத்த ஆண்டு ஜன.8 அன்று பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகள் இதனுடன் கூடுதலாக சேர்க்கப்பட்டன. பாரத ரத்னா விதி! விருதுப் பரிந்துரைகளை பிறர் அல்லது நாமே சுயமாக பரிந்துரைத்து இந்திய அரசுக்கு அனுப்பலாம். இதில் பாரத ரத்னா விருது மட்டும் இந்திய பிரதமர் குடியரசுத்தலைவருக்கு பரிந்துரை செய்து வழங்குகிறார். இதுவரை 45 பாரத ரத்னா விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஓராண்டுக்கு மூன்று பாரத ரத்னா விருதுகளை மட்டுமே வழங்க முடியும். பத்ம விருதுகளை ஆறுபேர் கொண்ட குழு தேர்ந்தெடுக்கிறது. இந்தியப் பிரதமரை தலைவராக கொண்ட இக்குழுவில் உள்துறை செயலர், குடியரசுத் தலைவரின் செயலர், கேபினட் செயலர் ஆகியோர் இடம்பெற்றிருப்பார்கள். அண்மையில் இந்திய அரசு அறிவித்துள்ள பத்ம விருதுப்பட்டியலில் 12 விவசாயிகள், 14 மருத்து

பப்ஜிக்கு தடை - மாணவர்களுக்கு உதவுமா?

படம்
பள்ளிகளில் பப்ஜிக்கு தடை? Business Today குஜராத் அரசு, அரசுப்பள்ளிகளில் பப்ஜி விளையாடுவதற்கு தடை ஆணை பிறப்பித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டான ப ப்ஜியை உலகளவில் டீம் சேர்த்துக்கொண்டு விளையாடலாம். இதுவரை ரிலீசான ஆப், விளையாட்டு தரவிறக்கம் என அனைத்திலும் இந்த விளையாட்டுதான் முன்னிலை பெற்றுள்ளது. அவ்வளவு ஏன்? பரீக்ஷா பெர் சாச்சா நிகழ்வு டெல்லியில் நடந்தது. அப்போது தன் மகன் ஆன்லைன் கேமில் விழுந்து கிடக்கிறான். படிக்கவே மாட்டேங்கிறான் என ஒரு அம்மணி புகார் கொடுத்தார். உடனே பதிலளித்த மோடி, ஆன்லைன் கேம் என்கிறீர்களே? ப ப்ஜியா? என பேசி அரங்கு அதிர கைத்தட்டல்களைப் பெற்றார். ட்ரெண்டிங் அப்படி பாய்ந்துகொண்டிருக்கிறது. நிலைமை அப்படியொண்ணும் சுமுகமாக இல்லை. டெல்லியைச் சேர்ந்த ப ப்ஜி விளையாட்டு வெறியர், தன் பெற்றோரையும் தங்கையும் கொன்றுவிட்டார். பெங்களூரைச் சேர்ந்த சிறுவனுக்கு ப ப்ஜி போதைக்கான சிகிச்சை வழங்கப்படும் அவசர நிலைமை. ஜம்மு காஷ்மீரில் உடற்பயிற்சியாளர் ஒருவர் விளையாட்டு லெவல்களை சூப்பராக ஜெயித்ததற்காக தன்னைத்தானே அடித்து காயப்படுத்திக்கொண்டு ஆஸ்பத்திரியில் கட்டுப்போட்டுக்
படம்
ராகுல்காந்தி குறைந்த பட்ச மாதவருமானம் பற்றி பேச, சாத்தியமா இல்லையா என சர்ச்சைகள் கிளம்பிவிட்டன. எதற்கு வம்பு, நேரடியாக ப.சிதம்பரம் அவர்களிடமே கேட்டுவிடுவோம். இந்த திட்டம் எப்படி சாத்தியமாகும்? சமூக பொருளாதார கணக்கெடுப்பு எடுத்து அதிலுள்ள தகவல்களின் அடிப்படையில் ஏழைகளுக்கு உதவி வழங்கலாமே? நகர்ப்புற, கிராமப்புற ஏழைகள் என அனைவருக்கும் அவர்கள் குறிப்பிட்ட அளவு சம்பாதித்தாலும் குறைந்தபட்ச வருமானத் திட்டம் அவர்களுக்கு உதவும். இப்போது வழங்கப்படும் தொகை குறித்து உறுதியாக கூற முடியாது. ஒரு குடும்பத்தில் மாத வருமானம் எவ்வளவு என கணக்கிட்ட பின்னரே திட்டம் அமலாகும் அல்லவா? இதில் நிறைய சவால்கள் உள்ளனவே? நிச்சயமாக. முதலில் எடுத்த ஆய்வுப்படி ஏழைகளுக்கு உதவுவோம் பின்னர் அனைவருக்குமான திட்டமாக மாற்றலாம். இதற்கான நிதியையும் இப்படி திட்டமிட்டுக் கொள்ளலாம். \ காங்கிரஸ் பாப்புலிச பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டதா? நிச்சயமாக இல்லை. 2004-2014 ஆம் ஆண்டுவரை காங்கிரஸ் அரசு,  பதினாலு கோடிப்பேர்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளது.  வறுமைக்கு எதிரான போராட்டம் இன்னும் முடியவில்லை. நன்றி: தி ஸ

தொல்எலும்புகளின் சுவை எப்படி?

படம்
அர்கன்சாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஜெனிஃபர் ஏன்?எதற்கு?எப்படிழ மிஸ்டர். ரோனி தொல்பொருட்களை சுவைத்தால் எப்படியிருக்கும்? இதென்ன யுனிபிக் பிஸ்கட்டா, வாங்கும் விலைக்கேற்ப ரசித்து சாப்பிட? முதலில் சாப்பிட வாயருகில் கொண்டுவருவதே பெரிய சாதனை. ஆனால் மனிதர்களில் சிறப்புத்தகுதி கொண்ட அகழாய்வு மனிதர்கள் இதுபோல கிறுக்குத்தனங்களை அடிக்கடி செய்வதுண்டு. பொதுவாக எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்கும். அதுசார்ந்து உப்புச்சுவையோடு டைனோசர் எலும்புகள் ருசிக்கும். உடனே வாயைக் கொப்புளித்து விடுவது டின்னருக்கு நல்லது. ஜெனிபரைப் பாருங்கள். கற்றுக்கொண்டு எலும்புகளை சுவையுங்கள். நன்றி: க்யூரியாசிட்டி

45 ஆண்டுகள் பின்தங்கிய இந்தியா

படம்
The Independent வேலைவாய்ப்பு சரிவு எவ்வளவு? 2017 மற்றும் 18 ஆண்டுகளில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்புகள் சரிவடைந்துள்ளதாக பிஸ்னஸ் ஸ்டாண்டர்டு பத்திரிகை தகவல் தெரிவித்துள்ளது. தேர்தல் வரும் நேரத்தில் வேலைவாய்ப்பு விவரங்களை வெளியிட பாஜக தயங்கி வருகிறது. தேசிய புள்ளியியல் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் வேலையின்மையின் அளவு 6.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த அளவு 1972-73 ஆண்டுகளை விட அதிகம். வேலைவாய்ப்பு குறித்த அறிக்கை அரசியலாக, முக்கியமான அதிகாரிகள்(பிசி மோகனன், ஜே மீனாட்சி) அரசின் நெருக்கடியைப் பொறுக்க முடியாமல் பதவியை கைவிட்டு விலகியுள்ளனர். முன்னமே வெளியிட தயாரித்த அறிக்கையை வெளியிட தாமதம் செய்தது காரணம் என ஊடகங்களிடம் பேசியுள்ளார் மோகனன். இந்த அறிக்கையில் நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை 7.8 சதவீதமும், கிராமப்புறங்களில் 5.3 சதவீதம் என இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையை இதற்கு முக்கியக் காரணமாக பொருளாதார வல்லுநர்கள் முன்வைக்கின்றனர். நன்றி: எகனாமிக் டைம்ஸ்

சுறாக்கள் மனிதனை நீரில் அடையாளம் காண்பது எப்படி?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர்.ரோனி சுறாக்கள் எப்படி மனிதர்களை நீரில் அடையாளம் காண்கின்றன? நாம் சூப்பர் மார்க்கெட்டுகளில் காய்கறி டிவிஷன்களை எப்படி அடையாளம் காண்கிறோம். சூப்பர் விற்பனைப் பெண் அங்கு நிற்கிறாள் என்பதை வைத்தா? கிடையாது. பழவாசனை, கீரைக்கட்டிலுள்ள மண்ணின் மணம், கருவேப்பிலையின் வேறுபட்ட மணம், உருளைக்கிழங்கின் வினோத மணம் என பல விஷயங்கள் இருக்கிறதல்லவா? அதேதான். சுறாக்கள் ஒரு கி.மீ தொலைவுக்கு முன்னரே நம்மை கண்டுபிடித்துவிடும் என்று கூறுவதெல்லாம் பூ என்று சொல்லி கற்பனையாகவே நம்மை நம்பவைக்கும் கதை. இரைதேடும் சக்தியைப் பொறுத்தவரை சுறாக்களும் பிற மீன்களும் ஒன்றுபோல்தான் இருக்கும். ஆனால் சில சுறாக்கள் சூட்டிகையாக மனிதர்களைக் கண்டுபிடித்து தாக்குவதற்கும், அதன் மோப்பத்திறனுக்கு எந்த சம்பந்தமுமில்லை. நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்

மூக்கு பத்திரம் ப்ரோ!

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர். ரோனி மூக்கில் அடிபட்டால் கண்ணில் கண்ணீர் வருவது ஏன்? கமர்கட்டை கடன் தரவில்லை என சுபாஷ் மூக்கில் குத்தினாலோ, இல்லை தானாகே மூக்கில் ரத்தம் சொட்டினாலோ கண்கள் கண்ணீரை சொட்டி சிம்பதி உருவாக்கும். காரணம் கண்களும், மூக்கும் ஒரே பகுதியாக இணைந்துள்ளதுதான் காரணம். இதனால்தான் காரக்குழம்பை கலந்துகொண்டு எஸ் மை ஹோட்டலில் வெளுத்தால் தலைமுடிகள் சிலிர்த்துக்கொண்டு நிற்க, மூக்கில் ஜலம் வரும் மாயாஜாலம். மூக்கில் இயல்பாக சுரக்கும் திரவம், அதில் புகுந்துள்ள மாசுக்களை இணைத்து வெளியேற்றுகிறது. எனவே மூக்கில் திரவம் சுரப்பது அதனைக் காக்கவே. அதில் ஜில்லெட் ஷேவரை வைத்து சுத்தம் செய்யும் அம்பிகளே இனி அப்படி செய்யாதீர்கள். மூக்கிலுள்ள முடிகள் தூசு தும்புகள் மூக்கினுள் செல்லாதிருக்கும் தற்காப்பு ஏற்பாடு. மூக்கில் முடிகள் பெரும் புதராக வளராமல் பார்த்துக்கொண்டால் போதும். மூக்கு மிகவும் சென்சிடிவ்வான பிரதேசம். கவனம் கவனம்.  

டாப் 5 போதை மருந்துகள்!

படம்
உலகின் டாப் 5 போதை வஸ்துகள் எவை? லான்செட் இதழ், 2007 ஆம் ஆண்டு செய்த ஆய்வுப்படி உலகை அடிமைப்படுத்தும் ஐந்து போதைப் பொருட்களை அட்டவணைப்படுத்தினர். மகிழ்ச்சி, உளவியல் தன்மை, தலைவலி, குமட்டல் உள்ளிட்ட தன்மைகளின் அடிப்படையில் மார்க் போட்டு போதைப்பொருட்களை அட்டவணைப்படுத்தினர். முதலிடம் ஹெராயின்(3 மார்க்), அடுத்தது கோகைன்(2.4),  நிகோட்டின்(2.2), பார்பிட்டுரேட்ஸ்(2), ஆல்கஹால் (1.9) என அமைந்தது இந்த வரிசை. நன்றி: க்யூரியாசிட்டி

நமது உடலிலுள்ள உண்மையான நீரின் அளவு என்ன?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? நமது உடலிலுள்ள தண்ணீரின் அளவு எவ்வளவு? உடனே பாடப்புத்தக பாதிப்பில் எழுபது என முந்திரியாக பதில் சொல்லாதீர்கள். அது தவறான விடை. நீங்கள் பிறக்கும்போது உங்களின் உடலில் அதிகபட்சமாக 78 சதவீத நீர் இருக்கும். பின்னர் படிப்படியாக 70, 65, என குறைவதுதான் உண்மை. டீனேஜ் பையனின் உடலில் அறுபது சதவீத நீரும், பெண்ணின் உடலில் 55 சதவீத நீரும் இருக்கும். ஐம்பது வயதுக்குப் பிறகு ஆண்களின் உடலில் 50 சதவீத நீரும், பெண்களின் உடலில் 45 சதவீத நீரும் இருக்கும். மெல்ல விகிதம் குறைந்து கொண்டே வரும்.  நம் உடலின் எலும்புகளில் 31 சதவீத நீரும், மூளை, இதயம், கல்லீரல் ஆகிய பகுதிகளில் 68 சதவீத நீரும் இருக்கும். உறுப்புகள் ஈரத்தன்மை இல்லாவிட்டால் அதன் இயக்கம் ஸ்தம்பிக்கும் அபாயம் உண்டு. எனவே நீர்ச்சுருக்கம் ஏற்படாதவாறு சரியான இடைவெளியில் நீர் பருகுவது நல்லது. நன்றி: க்யூரியாசிட்டி

விவசாயிகளுக்கு மரியாதை - பத்ம விருதுகள் 2019

படம்
விவசாயிகளுக்கு மரியாதை பனிரெண்டு விவசாயிகள் பத்ம விருதுகளை வென்றுள்ளனர். அதில் நான்கு பேர் மரபான விவசாயம் சார்ந்தவர்கள். அதில் கமலா புஜ்ஹாரியும் ஒருவர். இவர் கோரபுட் மாவட்டத்திலுள்ள(ஒடிஷா) தொன்மையான பயிர்வகைகளை காக்கும் முயற்சிகளில் ஈடுபட்ட விவசாயி. இவர் 2002  ஈக்குவடார் இனிசியேட்டிவ் என்ற விருதை தென் ஆப்பிரிக்காவில் பெற்று சாதித்தவர். மாநில திட்டக்குழு உறுப்பினராகவும் பணியாற்றிய பெருமை உடையவர். பீகாரின் முசாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமாரி தேவி, நிலத்தின் தரத்தை உறுதிசெய்து அதனை நேர்த்தியாக்கும் செயல்பாடுகளை முன்னெடுத்தவர். இவருக்கு பெயரே கிசான் சாச்சி என்பதுதான். 300 க்கும் மேற்பட்ட பெண்களை ஒருங்கிணைத்து சுய உதவிக்குழுவை உருவாக்கிய பெருமை கொண்டவர். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பாபுலால் தாகியா, இரண்டு ஏக்கர் நிலத்தில் நூற்றுபத்து வெரைட்டி பயிர்களை விதைத்தவர். மரபான பயிர்களை 2005 ஆம் ஆண்டிலிருந்து சேகரித்து வருகிறார் பாபுலால் தாகியா. பாடல்களில் மட்டுமே இருந்த பயிர்கள் பெருமளவு அழிந்தாலும் அவற்றை காக்க முயற்சித்து வருகிறார் பாபுலால் தாகியா.  விதைக்கான யாத்திரையை