இடுகைகள்

ஹூவெய் கம்பெனிக்கு அடுத்த சிக்கல்!

படம்
ஹூவெய் நிறுவனத்திலிருந்து கூகுள் விலகல்! சீன நிறுவனமான ஹூவெய், அமெரிக்காவின் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. அதன் நிறுவனரை கைது செய்தது இருநாட்டு நல்லுறவையும் பாதித்துள்ளது. இந்நிலையில் அக்கம்பெனியின் வணிகத்தை குலைக்கும் வகையில் அடுத்த நடவடிக்கையை எடுத்துள்ளது. விரைவில் ஹூவெய் போனுக்கான சேவையிலிருந்து கூகுள் விலகவுள்ளது. இதற்காகவெல்லாம் ஹூவெய் கவலைப்படவில்லை. நாளை இங்கிலாந்தில் ஹானர் 20 மாடலை வெளியிடவுள்ளது. இது இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகில் சாம்சங் நிறுவனத்திற்கு அடுத்த இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஹூவெய்தான். கூகுளின் ஆண்ட்ராய்டை பெருமளவு பரப்பியதிலும் சீன நிறுவனமான ஹூவெய்யின் பங்கு அதிகம். இப்போது அமெரிக்க அரசின் வற்புறுத்தலால் கூகுள் தன் சேவைகளை ஹூவெய் நிறுவன போன்களில் தொடரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கூகுளின் முடிவைத் தொடர்ந்து இன்டெல், க்வால்காம் ஆகிய நிறுவனங்களும் தங்களின் தொடர்பை சீன நிறுவனங்களிடம் முறித்துக்கொள்ளவிருக்கின்றன. ஏறத்தாழ சீனாவுடனான பனிப்போரை வணிகத்திலிருந்து அமெரிக்கா தொட

முஸ்லீம் எழுத்தாளர்களை மிரட்டும் பயம் என்ன?

படம்
முஸ்லீம் எழுத்தாளர்கள் அஞ்சுவது ஏன்? பாஜக அரசு கருத்தியல் ரீதியாக தொடர்ந்து சிறுபான்மையினரை அச்சுறுத்தி வருகிறது. இதன் விளைவு எப்படியிருக்கிறது? அரசு அளிக்கும் தடுப்பூசியைக் கூட தன் இனத்தை அழிக்கும் முயற்சியாக பயப்படும் அளவுக்கு சென்றிருக்கிறது. இது மட்டுமல்லாமல் முஸ்லீம் மக்களை தொடர்ச்சியாக கிண்டல் செய்வது, உரிமை கேட்பவர்களை பாகிஸ்தானுக்கு செல்லக்கூறுவது என நிலைமை எல்லை மீறி சென்றுகொண்டிருக்கிறது. இதற்கு குறிப்பிட்ட ஒருவரைக் குறைசொல்வதை விட நாட்டின் நிலை அப்படி யோசிக்க சொல்லுகிறது என புரிந்துகொள்ளலாம். நாட்டின் நிராதரவான நிலையை எப்படி மக்களிடம் அரசு ஒப்புக்கொள்ளும்.? உடனே பாகிஸ்தான்தான் பிரச்னைக்கு காரணம், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள்தான் இந்தியாவின் பிரச்னைக்களுக்கு மூல ஊற்று என பற்றி வைத்தால் போயிற்று. அனைத்து ஊடகங்களும் கைப்பிடியில் இருக்க கவலை என்ன? நான்கு ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய குழந்தையை நான் பெற்றெடுத்தேன். அப்போது அவளை முஸ்லீம் பெயரைச் சொல்லி எப்படிக்கூப்பிடுவது பிரச்னை ஏற்படுமா என்றுகூட பயந்துகொண்டிருந்தேன் என கூறுகிறார் எழுத்தாளர் நாசியா எரும். மதரிங

போர்டு விளையாட்டு கலாசாரம்- சூடுபிடிப்பதன் காரணம்

படம்
போர்டு கேம் விளையாட்டில் கற்றுக்கொள்ளவேண்டியது என்ன? இன்டோர் விளையாட்டுதான். ஆனால் அதிலும் பல்வேறு திறன்களைச் சொல்லித்தரத்தொடங்கியுள்ளன போர்டு கேம் விளையாட்டுகளுக்கான கஃபேக்கள். இதில் என்ன கற்றுக்கொள்ளலாம்? டெப்ட்ஸில்லா என்ற விளையாட்டு கடன் எப்படி வளருகிறது என்பதை விளையாடுபவர்களுக்கு விளக்குகிறது. கடன், வட்டி ஆகியவற்றினையும் தெளிவாக காட்டுகிறது. வட்டி எப்படி வளர்ந்து சிக்கலாக மாறுகிறது என்பதைக் காட்டுகிறது. டிவியில் கேம் ஆப் த்ரோன்ஸ் பீக்கில் இருக்கும்போது மயிலாப்பூரில் போர்ட் கேம்களுக்கான கபேயை மென்பொருள் பொறியாளர்கள் மூவர் இணைந்து தொடங்கியிருக்கின்றனர். வருண் தேவநாதன், ஸ்ரீராம் மகாலிங்கம், ஷ்ரவண் சந்தோஷ் ஆகியோர்தான் இந்த டிரெண்டை மயிலாப்பூரில் அமுல்படுத்தியிருப்பவர்கள். தொண்ணூறுகளில் உலகில் போர்டு கேம்களில் மாற்றம் தொடங்கியது. இதில் பல்வேறு ஐடியாக்களுடன் போர்டு கேம்கள் புதிதாக ஐரோப்பாவில் ரீஎன்ட்ரியாகி மக்களைக் கவர்ந்தன. வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் இந்தியாவுக்கு வரும்போது கொண்டு வந்த போர்டு கேம்களில் செட்லர்ஸ் ஆப் கேட்டன், சிட்டாடெல், புவர்ட்டோ ரிகோ ஆகியவை முக்கியமான

குடிமகனே... இந்தியாவின் குடிமகனே!

படம்
ஆல்கஹால் குடிகாரர்கள் உலகமெங்கும் ஆல்கஹால் பருகும் அளவு அதிகரித்து வருகிறது. இதிலும் சீனர்கள் இந்தியர்களை மிஞ்சி விட்டார்கள். அண்மையில் இதுகுறித்து லான்செட் அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. தொண்ணூறுகளை விட 2017 ஆம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில் வயது வந்தோர் பருகும் ஆல்கஹாலின் அளவு பத்து சதவீதம் கூடியுள்ளது.  மால்டோவா அனைத்து நாடுகளிலும் முன்னிலை வகிக்கிறது. இதற்கடுத்து ரஷ்யா, பிரான்ஸ், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகள் வருகின்றன. மால்டோவா நாடு தனிநபராக குடிக்கும் ஆல்கஹால் அளவு பதினைந்து லிட்டர்.  தொண்ணூறுகளில் உலகில் குடிக்கும் மதுபானங்களின் சராசரி அளவு 5.9 லிட்டராக இருந்தது. தற்போது இந்த அளவு 6.5 லிட்டராக மாறியுள்ளது. இந்தியாவில் 40 சதவீத ஆண்களும் 22 சதவீத பெண்களும் மது அருந்துகின்றனர். இது தொண்ணூறுகளைவிட இருமடங்கு அதிகம். இந்த எண்ணிக்கை இப்படியே வளர்ந்தால் உலகமெங்கும் 2030 ஆம் ஆண்டு அரைவாசி வயது வந்தோர் மதுவருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பார்கள். உலக சுகாதார நிறுவனம் இது குறித்து பிரசாரத்தை செய்து வருகிறது. 2025 ஆம் ஆண்டுக்குள் 10 சதவீத மக்களை இப்பழக்க

மக்கள் கொடுத்த பொறுப்பை அரசியல் தலைவர்கள் உணரவேண்டும்! - துன்பெர்க்

படம்
நேர்காணல் - கிரேட்டா துன்பெர்க் உலகளவில் இயற்கை சூழலியலுக்களான நாயகியாக மாறியிருப்பவர் இவர்தான். ஸ்வீடனைச்சேர்ந்த பதினாறு வயது சிறுமி கிரேட்டா துன்பெர்க், சூழலியலுக்காக போராடுவதில் முன்நின்று உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். வெப்பமயமாதலை சமாளிக்க இந்தியா என்ன செய்யவேண்டும்? அது குறித்த பிரசாரத்தை மக்களிடம் செய்யவேண்டும். அதற்குப் பிறகு வெப்பமயமாதலைக் குறைக்கும் முயற்சிகளை அரசு தீவிரப்படுத்தவேண்டும். இந்தியா வளரும் நாடு என்பதால் அதனை விட ஸ்வீடன் நாடு இதில் பிற நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டுமென நினைக்கிறேன். மோடிக்கு ஏதேனும் செய்தியை சொல்ல விரும்புகிறீர்களா? பிரதமர் மோடி வெப்பமயமாதலை முக்கியமான பிரச்னையாக எடுத்துக்கொண்டு செயலாற்றவேண்டும். இல்லையென்றால் வளரும் தலைமுறை இந்த பிரச்னையின் விளைவுகளை உணரமாட்டார்கள். உங்களுக்கு பொறுப்புகள் இருந்தாலும் அதனை நிறைவேற்றாதபோது உலகமே பின்னாளில் உங்களை அவதூறாக பேசும். இந்தியாவிலுள்ள பள்ளிக்குழந்தைகளுக்கு ஏதேனும் செய்தியை சொல்ல விரும்புகிறீர்களா? வெப்பமயமாதலுக்காக போராடும் அனைத்து பள்ளி மாணவ, மாணவியருக்கும் நான் வ

விழிபிதுங்கும் சென்னை! - அதிகரிக்கும் ட்ராஃபிக்

படம்
போக்குவரத்து நெரிசல் காரணம் என்ன? சென்னையில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இன்னும் சில நாட்களில் பள்ளி தொடங்கவிருக்கிறது. அப்போது இன்னும் நெருக்கடி அதிகரிக்கும். அதுகுறித்த டேட்டாவைப் பார்ப்போம். பீக் அவரில் தோராய வேகமாக செல்லும் வாகனங்களின் வேக அளவு டெல்லி - 11 கி.மீ, பெங்களூரு - 7 கி.மீ, சென்னை - 16 கி.மீ. சென்னையில் வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட வேண்டும். இப்போதைக்கு 2 லட்சம் வாகனங்கள் நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் தேவை. நகரில் ஓடும் கார்களை வரிசையாக நிறுத்தி வைத்தால் 4,235 கி.மீ. தூரம் கச்சிதமாக நிறுத்தமுடியும். சென்னையில் 8 லட்சத்து 47 ஆயிரம் கார்களும், 42 லட்சம் பைக்குகளும் உள்ளன. கார்களை நிறுத்த தேவைப்படும் இடம்  135 சதுர அடி. என்ன செய்யலாம்? வாகனங்களின் வேகத்தை சீராக பராமரிக்க வேண்டும். சாலை கட்டமைப்புகளை மாற்றறலாம். மெட்ரோ ரயில் சேவைகள் நகரின் கடைசி முனை வரைக்குமான போக்குவரத்துசேவைகள் பொதுப்போக்குவரத்தை மேலும் நவீனப்படுத்துதல் பார்க்கிங் நிறுத்த அமைப்புகளை சீரமைத்தல் நன்றி: தி டைம்ஸ் ஆப் இந்தியா

தற்கொலைக்கு தூண்டிய சைக்கோ மனிதர்!

படம்
அசுரகுலம் ஹிரோஷி மெயுவெ 1968 ஆம் ஆண்டு ஆகஸ்ட் எட்டு அன்று பிறந்தவர் ஹிரோஷி. இவரைப்பற்றி ஏன் எழுதுகிறோம் என்றால் பணத்திற்காக கொலை செய்வது தாண்டி மனநிலையின் அழுத்தம் தாங்காதவர்கள்தான் சமூகத்திற்கு பெரும் சோதனையாக அமைகிறார்கள். இவர்கள், அந்தந்த காலகட்டத்தை நம் மனதுக்கு உணர்த்துகிற சாட்சிகள் கூடத்தான். ஹிரோஷி மூன்று பேர்களைக் கொன்றதற்காக தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார். மூன்றுபேரையும் நேரடியாக கொல்லவில்லை என்பதுதான் இவரைப் பற்றி நாம் எழுதக்காரணம். இவரது ஆளுமை மாற்றத்திற்கு மர்ம நாவல்கள்தான் காரணம் என்றால் நம்புவீர்களா? ஆம் கொலை, கொள்ளை நாவல்களை படித்தவர். அதனை பரீட்சித்து பார்க்க முயற்சித்துதான் பெரும் தீவினையில் அவரைக் கொண்டு வந்து சேர்த்தது. கான்சாவா இன்ஸ்டிடியூட் டெக்னாலஜியில் மாணவராக சேர்ந்து படித்தார். அங்கு ஒரு மாணவரை அடித்து கொலை செய்ய முயற்சித்து தோற்றுப்போனார்.  பின், 1988 ஆம் ஆண்டு படிப்பை விட்டு நின்றார். பின் ஏனோதானோவென்று வேலைக்கு சென்று வந்தார். மீண்டும் மனதில் அசுரன் தலைதூக்க, யோசிக்கவேயில்லை. கூட வேலை செய்தவரை தூக்கிப் போட்டு மிதித்தார். போலீசாருக்கு

ஹீலியம் வாயு - பறப்போம் வானிலே

படம்
ஹீலியம் வாயுக்கள் இல்லாமல் வெப்ப வாயு பலூன்களில் பறப்பதை நாம் யோசிக்க முடியாது. இவற்றை பெறுவது எப்படி? ஈசியான வழி இயற்கை எரிவாயுவிலிருந்து பெறுவதுதான. உலகிலுள்ள ஹீலியம் வாயுவின் அளவு 23 சதவீதம். ஹீலியம் வாயுவுக்கான சந்தை மதிப்பு 1.5 பில்லியன் டாலர்கள். இதில் வெப்பவாயு பலூன்களில் அடைக்கப்படும் ஹீலியம் வாயுவின் அளவு மட்டும் 8 சதவீதம். கிரையோஜெனிக்ஸ் முறையில் பயன்படும் ஹீலியம் வாயுவின் அளவு  29% பதினான்கு தாவரங்களிலிருந்து ஹீலியம் வாயுவை உருவாக்க முடியும். 2009 -2015 ஆம் ஆண்டில் அதிகரித்த ஹீலியம் வாயுவின் விலை 400 சதவீதம். க்ளீவ்லாந்தில் 1.5 ஹீலியம் பலூன்கள்(1986) பறக்கவிடப்பட்டு உள்ளன. நன்றி: க்வார்ட்ஸ்

அமெரிக்காவின் நூறு டாலர் டேட்டா!

டாலர்தேசம்! அமெரிக்காவின் நூறு டாலர் நோட்டுக்கு நிறைய சிறப்பம்சங்கள் உண்டு. அதில்தான் முதல் அதிபரான பெஞ்சமின் ப்ராங்க்ளின் அமைதியாக நம்மைப் பார்த்துக்கொண்டிருப்பார். அவை பற்றிய சிறிய டேட்டா உங்களுக்காக.... நூறு டாலர் நோட்டைத் தயாரிக்க அமெரிக்காவுக்கு 14.2 சென்ட்ஸ் செலவாகிறது. நூறு டாலர் நோட்டின் ஆயுள்காலம் தோராயமாக 15 ஆண்டுகள். காட்டன் லினன் பேப்பர் ரூபாய் நோட்டுகளை விட கனடாவில் தயாரிக்கப்படும் பாலிமர் ரூபாய் நோட்டுகள், 2.5 மடங்கு அதிக ஆயுள் கொண்டவை. ரூபாய் நோட்டுக்களை பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கித் தர கிரேன் அண்ட் கோ கம்பெனி பெறும் ஒப்பந்த ஊதியம் 46 மில்லியன் டாலர்கள். நூறு டாலர் நோட்டில் 70 சதவீதம் பருத்தியும் பிற பகுதிகள் லினன் மூலமும் உருவாகிறது. நியூசிலாந்து நாட்டில் உலா வரும் நூறு டாலர்களின் மதிப்பு 2000 -2005 காலகட்டத்தில் 1.2 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது. இந்தியா தடாலடியாக 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்ததால் புழக்கத்திலிருந்த 86% ரூபாய் நோட்டுக்களின் அளவு சரிந்து போனது. நன்றி: க்வார்ட்ஸ்

டாக்சி டிரைவரின் விபச்சார வெறியாட்டம்!

படம்
அசுரகுலம் ஹிரோகி ஹிடாகா பெரிய கொலைகாரர் என்று சொல்லமுடியாது. நான்கு கொலைகள்தான் செய்தார். 1996 ஆம் ஆண்டு சம்பவத்தை நிகழ்த்தி புகழ்பெற்றார். 1962 ஆம் ஆண்டு பிறந்த ஹிரோகி நல்ல மாணவர்தான். ஆனால் பல்கலையில் சேர எழுதிய தேர்வு தோல்வி தர அஞ்சாதே கிருபாவாக மாறி சரக்கு போட்டு துயரத்தில் ஆழ்ந்தார். ஃபுகுகோகா பல்கலையில் சீட்டு கிடைத்தாலும் ஏனோ ஹிரோகிக்கு அது செட் ஆகவில்லை. சோற்றுக்கு வழிவேண்டுமே? 1989 ஆம் ஆண்டு டாக்சி ஓட்டத் தொடங்கினார்.  வாழ்க்கை ஏதோதானோவென ஓடியது. தொண்ணூற்று ஒன்றில் திருமணம் நடந்தது. ஓராண்டிலேயே குழந்தை பிறந்தது. ஜாதகத்தில் சந்திரன் நீச்சமானாரா என்று தெரியவில்லை. ஹிரோகியின் மனைவி, மனநிலை பிறழ்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன்பின் ஹிரோகிக்குள் உள்ளிருந்த சாத்தான் சுவர் ஏறிக் குதித்தார். 1996 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் செக்சுக்கான என அணுகிய நான்கு பெண்களைப் போட்டுத்தள்ளினார். சும்மாயிருப்பார்களா ஜப்பான் போலீஸ். வளைத்து பிடித்தார்கள். கொலையோடு பெண்களிடம் 1, 20, 000 டாலர்களை ஆட்டையப் போட்டிருந்ததைக் கண்டுபிடித்து தங்கள் பாக்கெட்டில் சேமி

ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் பாதிப்பு ஏற்படுவது ஏன்?

படம்
அசுரகுலம் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் ஒரு பெண் குற்றவாளி ஒருவரால் கடத்தப்படுகிறாள். அவரோடு பல நாட்கள் கைதியாக, பணயப் பொருளாக இருக்கும்போது, கடத்தல்காரரை நம்பி தன்னுடைய பாதுகாவலராக நினைத்துகொள்வதை உளவியலாளர்கள் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் என்று குறிப்பிடுகின்றனர். பெயர் வந்த கதை 1973 ஆம் ஆண்டு ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகர். அங்குள்ள பெத்த பேங்கில் திடீர் கொள்ளை. கூடவே பணயக்கைதியாக ஆறுபேர்களை பிடித்து வைத்துக்கொண்டார் கொள்ளைக்காரர். அந்த ஆறுபேரும் மெல்ல கடத்தல்கார ருக்கு ஆதரவாக மாறி நடந்துகொண்டதை பின்னர் விசாரணையில் போலீசார் கண்டுபிடித்தனர். அந்த நிலைக்கு விவகாரம் நடந்த நகரின் பெயரையே சூட்டினர். அந்த கைதிகள் கொள்ளையர்களால் சுடப்பட்டு காயமடைந்தாலும் அவர்களை நேசிக்கத் தொடங்கிய காரணத்தை அந்த பரம பிதா வந்தால்தான் ஏன் என்று கூற முடியும் என போலீஸ் தலையை பிய்த்துக்கொண்டது.  கொள்ளையர்களை போலீஸ் விரைவில் கைது செய்தது. பேங்கில் பணயக்கைதிகளாக இருந்த ஆட்களே சட்டரீதியில் அவர்களை விடுதலை செய்ய முயற்சித்தனர். சிறையில் சென்று கொள்ளையர்களை சந்தித்து போலீசாரை ஆச்சரியப்பட வைத்தனர். ஸ்டாக்ஹோம் சிண்ட்