இடுகைகள்

எவ்வளவு வேகமாக நகர்கிறோம்? - மிஸ்டர் ரோனி பதில்

படம்
pixabay மிஸ்டர் ரோனி எவ்வளவு வேகமாக நாம் நகர்கிறோம்? பஸ், கார், பைக் என நகர்ந்து செல்வது வேறு. ஆனால் பூமி தன்னைத்தானே சுற்றியபடி நகர்கிறது. அப்படியே நகர்ந்து சூரியனை சுற்றி வருகிறது. பூமி மட்டுமல்ல அனைத்து கோள்களும் நகர்ந்துகொண்டே இருக்கின்றன. பஸ்சில் அறுபது கி.மீ வேகத்தில் செல்லும்போது நாம் நகர்கிறோமா இல்லையா? நிச்சயமாக நகர்கிறோம். நகரும் வேகத்தை மட்டும் பார்ப்போம். பூமியின் வட்டப்பாதை பூமி தன்னைத்தானே சுற்றி வருவதால் நாம் நகருவது தெரியவில்லை. ஒரு நொடிக்கு 30 கி.மீ வேகத்தில் பூமி சுற்றி வருவதால், அதிலுள்ள நாமும் அதே வேகத்தில் சென்று கொண்டிருக்கிறோம். அதேநேரத்தில் இந்த வேகம் நின்று போனால், என்னாகும்? நாம் தூக்கி எறியப்படும். சூரிய மண்டலத்தின் வட்டப்பாதை ஒரு நொடிக்கு 230 கி.மீ வேகத்தில் சுற்றி வருகிறது. இந்த வேகத்தில் நமது சூரியமண்டலம் சுற்றி வருகிறது. பால்வெளியின் வேகம் ஒரு நொடிக்கு  ஆயிரம் கி.மீ. வேகத்தில் நகர்கிறது. நன்றி - ஹவ் இட் வொர்க்ஸ்

விண்வெளியிலுள்ள வேலைகள்! - பட்டதாரிகள் இதற்கும் விண்ணப்பிக்கலாம்

படம்
pixabay எக்ஸ்ட்ராடெரஸ்டரியல் சர்வேயர் விண்வெளியில் உள்ள கோள்களை ஆராயும் பணி. விண்வெளியில் சுற்றும் கற்களை, கோள்களைக் கண்டுபிடித்து அதிலுள்ள கனிமங்களை ஆராய முடியுமா என ஆராய்வார்கள். இப்பணியை இந்த பணியிடத்திற்கு வருபவர் செய்ய வேண்டும். ஆஸ்டிராய்டு மைனர் கோள்களை துளையிட்டு கனிமங்களை அகழ்ந்து எடுக்கும் பணியை செய்ய வேண்டும். ஆபத்தான பணிதான். ஆனாலும் நம் எதிர்காலத்தை உறுதி செய்வது இவரின் அர்ப்பணிப்பான பணிதான். அட்மாஸ்பியர் ஓவர்சீயர் பூமியை ஒத்த வேறு கோள்கள் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்து, அதில் உள்ள வாயுக்களின் தன்மையை ஆராய வேண்டும். இவரின் ஆய்வுதான் கோளின் தன்மையை பிறருக்குச் சொல்லும். கம்யூனிகேஷன் மற்றும் நேவிகேஷன் ஸ்பெஷலிஸ்ட்!  இந்தியோ, தமிழோ, தெலுங்கோ எந்த மொழியாக இருந்தாலும் சரி. விண்வெளியில் பேசியே ஆகவேண்டும். அப்போதுதான், அவர் சரியான பாதையில் நகர்ந்து செல்கிறாரா இல்லையா என்பதை உறுதி செய்ய  முடியும். இல்லையென்றால் அவர் விண்கலத்துக்கு சரியாக வரமுடியாமல் போகும் வாய்ப்பும் உண்டு. புரோபல்சன் இஞ்சினியர்! இஞ்சின் சூடாகி விட்டதா, கதிரியக்க பாதிப்பு உண்டா,

புதிய இந்தியா பிறந்துவிட்டதா?

படம்
pixabay புதிய இந்தியா பிறந்துவிட்டதா? உலக நாடுகள் முழுக்க அரசியல் நிலையின்மை காரணமாக  போராட்டங்கள், கிளர்ச்சிகள் வெடித்துள்ளன. மக்களின் எண்ணங்களை போராட்டங்களாக வெடிக்கச் செய்ய சமூக வலைத்தளங்கள் பெருமளவு உதவி வருகின்றன. தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளில் அடிப்படைவாத, தேசியவாத கட்சிகள் வென்றுவருகின்றன. இந்த போராட்ட அலையில் இந்தியாவும் தப்பவில்லை. இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் அமலான குடியுரிமை திருத்தச்சட்டம், நாடெங்கும் கடும் போராட்டங்களை கிளப்பியுள்ளது. இந்தியாவின் அண்டைநாடுகளிலுள்ள முஸ்லீம் அல்லாதவர்கள் அரசின் மூலம் குடியுரிமையை எளிதாகப் பெற முடியும் என்கிறது இச்சட்டம். ஏறத்தாழ முஸ்லீம்களை இரண்டாம் தர மக்களாக மாற்றும் இச்சட்டம் அமலாகிவிட்டது என உள்துறை அமைச்சககம் கூறிது.  இல்லை என பிரதமரும் பேச, விவகாரம் மேலும் குழப்பமாகிவிட்டது. தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் அசாம் மாநிலத்தில் தொடங்கப்பட்டது. ஆனால் திட்டத்தின் முடிவில் லட்சக்கணக்கான இந்துகள் குடியுரிமை இல்லாத நிலைமையில் இருப்பது தெரியவர, இந்திய அரசின் திட்டம் தோல்வியுற்றது. திரும்பவும் இத்திட்டத்தை மாநிலம் முழுவத

பட்டியலினத்தவர்கள் மீது தாக்குதல் - ராஜஸ்தான் முதலிடம்

படம்
கடந்த பத்தாண்டுகளில் பட்டியலினத்தவர்கள் மீது அதிகளவு தாக்குதல்கள் நடத்தப்பட்ட விவரம் வெளியாகியுள்ளது. கரகோஷத்துடன் முதல் இடத்தை ராஜஸ்தான் மாநிலம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 8,591 வழக்குகள் எஸ்சி, எஸ்டி இனத்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்காக பதியப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு இத்தாக்குதல்களின் அளவு 8,451ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் நாகர் மாவட்டத்தில் நடைபெற்ற தலித்துகள் மீதான தாக்குதலில் ஒருவரின் ஆசனவாயில் ஸ்க்ரூ ட்ரைவரை செருகியுள்ளனர். இவர்கள் திருடியதாக குற்றம்சாட்டப்பட்டு இப்படி ஒரு குரூரமான தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. பாஜக ஆட்சி செய்த முந்தைய காலத்திலும் தலித்துகள் மீதான தாக்குதல் குறையவில்லை. 2018ஆம் ஆண்டைவிட 2019ஆம் ஆண்டில் 50.67 சதவீதம் பட்டியலினத்தவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. 2018 இல் காவல்துறை பதிவுகள்படி 5,702 வழக்குகள்தான் பதிவாகியுள்ளன. இதில் 47 சதவீத தாக்குதல்கள் தலித்துகள் மீது நடத்தப்பட்டுள்ளது. குற்றச்சம்பவங்கள் நடக்கும் வேகமும் 31 சதவீதம் அதிகரித்துள்ளது. குற்றவழக்குகள் அதிகரிப்புக்கு முக்கியக்காரணம், காவல்நிலையத்திற்கு

வைரஸ்கள் ஏற்படுத்தும் பாதிப்பு!

படம்
giphy மிஸ்டர் ரோனி வைரஸ்கள் நம்மை எப்படி பாதிக்கின்றன? வைரஸ்கள் என்பதை புரதத்தை தம்முள் கொண்டவை. இவை வாழும் செல்களில் உள்ளே புகுந்து தம்மைப் பெருக்கிக் கொள்கின்றன. இவை முதலில் உள்ளே புகுந்தவுடன் நோய் எதிர்ப்பு சக்தியுடன் மோதுகின்றன. அவை பலவீனமாக இருந்தால் நமக்கு நோய் ஏற்பட்டுவிடும். உயிருள்ள செல்களில் உள்ளே புகும் வைரஸ், ஸ்டார் ஜெராக்ஸ் போல ஏராளமான காப்பிகளை தன்னைப்போலவே எடுத்து முஸ்லீம்கள் போல குடும்பத்தைப் பெருக்குகின்றன. அந்த செல்களுக்கும் வேலை என சில விஷயங்கள் உண்டு. அவை இயங்காமல் போகும்போது உடலில் பாதிப்பு ஏற்படுகிறது. அதாவது, அந்த இடத்தில் வலி, காய்ச்சல், எரிச்சல், சொல்ல முடியாத உணர்வு ஆகியவை ஏற்படும். சார்ஸ், கொரோனா ஆகிய வைரஸ் பாதிப்புகளில் சுவாசப்பாதை பாதிக்கப்படும். கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நிம்மோனியா ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பாமா படிக்கலாமா - மயிலாப்பூர் டைம்ஸ்!

படம்
மயிலாப்பூர் டைம்ஸ்! பாமா.... படிக்கலாமா? நம் ஊரைப் பொறுத்தவரையில் பாவம் என்று சொல்வது எல்லாம் பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்குத்தான். சில விஷயங்களை நீங்கள் தெரிந்துகொண்டால் அதற்குப்பிறகு பாவம், புண்ணியங்களை எளிதாக கைவிட்டுவிடுவீர்கள். அல்பன்லீபே சாக்லெட்டை சப்பி சாப்பிட்டு, தமன்னா சாப்பிடச்சொன்ன குச்சி மிட்டாய்க்கு நகர்ந்து இப்போது கோபிகோக்கு நகர்ந்து வருகிறார்களே அப்படித்தான். சினிமா பார்த்து பல விஷயங்களை தெரிந்துகொண்டிருப்பீர்கள். கேன்சர் வந்தால் எப்பாடு பட்டாலும் ரத்தம் கக்கித்தான் சாகவேண்டும். ஏன்? பின்னே புற்றுநோயை எப்படித்தான் பார்வையாளர்களுக்கு கடத்துவது? இப்படித்தான் ராமராஜன் படத்தில் ஒரு காட்சி. அனேகமாக மேதை எனும் படம் என்று நினைக்கிறேன். நாயகனின் திருமண முதலிரவு. ஆனால் அவர் கடமையே நான் கல்யாணம் செய்த பொண்டாட்டி என கர்ம சிரத்தையாக வேலைகளை செய்கிறார். முதலிரவில் வைத்திருக்கும் பால் தயிராக மாறியிருக்கிறது என காட்சி வைத்து மிரட்டியிருப்பார் இயக்குநர். அப்படிப்பட்ட சினிமாவிலும்  அனைவரும் பார்த்து வியந்தது என்னாச்சு என்று கேட்ட சமாச்சாரம் ஒன்று உண்டு. அதுதான்

அன்புள்ள அப்பாவுக்கு... மின்னூல் தரவிறக்க முகவரி!

படம்
அன்புள்ள அப்பாவுக்கு மின்னூலை  நீங்கள் எளிதாக தரவிறக்கிக் கொள்ள முடியும். அதற்கான வலைத்தள இணைப்பை கீழே கொடுத்துள்ளேன். பீடிஎப் கோப்பைத் தரவிறக்க http://www.mediafire.com/file/hnhihfe9mrs4psm/AA.pdf/file இ பப் கோப்பைத் தரவிறக்க http://www.mediafire.com/file/n4sybn548xu9j3c/aa_bk.epub/file

தாமதமாகும் இழப்பீட்டுப் பணம்! - கடத்தலில் மீட்கப்படுபவர்களுக்கு கிடைக்காத நீதி!

படம்
கருப்பு இந்தியா கொல்கத்தாவில் கடத்தல் தொழிலிருந்து மீட்கப்படுபவர்களுக்கு கிடைக்கவேண்டிய இழப்பீட்டு பணம் வழங்கப்படாமல் இருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது. 2016 ஆம் ஆண்டிலிருந்து  2019 வரையிலான அரசின் இழப்பீட்டு திட்டத்தின் வழியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 சதவீத நிவாரணத்தொகை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எஸ்எல்எஸ்ஏ எனும் இத்திட்டத்தில் கடத்தலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறது கொல்கத்தா அரசு. இதில் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து விசாரணை என்ற பெயரில் பலமணி நேரங்கள் காக்க வைக்கின்றனர். ஆனால் அதற்கான இழப்பீட்டை முழுமையாக வழங்குவதில்லை. பலரும் இதன் காரணத்தால் நீதிமன்றத்தை நாடி தங்களுக்கு நிவாரணம் பெறும் நிலைமை உள்ளது. தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் தகவல்படி, நடப்பு ஆண்டிலும் கடந்த ஆண்டிலும் மனிதர்களை கடத்திச்செல்லும் சம்பவங்கள் இங்கு அதிகரித்த வண்ணம் உள்ளன. 2012 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 3500 கடத்தல் சம்பவங்கள் இங்கு நடைபெற்றுள்ளன. சன்ஜோக் எனும் ஐந்து வழக்கறிஞர்களைக் கொண்ட குழு இதற்கான தகவல்களை நாடு முழுவதும் தேடி சேகரித்துள்ளது. சன்ஜோக் குழுவைச்

அன்புள்ள அப்பாவுக்கு.... மின்னூலின் அட்டைப்படம் வெளியீடு!

படம்
நாம் எப்போதும் அம்மாவிற்கு நன்றி கூறுகிறோம். அவளை நினைவுகூர்ந்து நெகிழ்கிறோம். அவள் அடையாளம் காட்டித்தான் அப்பா என்பவரை அறிகிறோம். வீட்டிற்கு, உறவுகளுக்கு, உணர்ச்சிகளுக்கு அம்மா வழிகாட்டுகிறார். புரிந்துகொள்ள உதவுகிறார்.  சமூகத்திற்கு, வெளியில் நடக்கும் விஷயங்களுக்கு அப்பா வழிகாட்டுகிறார். அவர் பெரியளவில் பாராட்டுகளில் பங்குகொள்வதில்லை. வெற்றியிலும் கூட ஒதுங்கியே நிற்கிறார். அப்பாவையே மகன் தன் முன்மாதிரியாக கருதுவது வரம்தான். அப்படி ஒரு அப்பா அனைவருக்கும் அமைந்துவிடுவதில்லை. சில விஷயங்களைப் புரிந்துகொள்ள நாம் உரையாடித்தானே ஆகவேண்டியதிருக்கிறது. அப்படி அதிகம் பேசாத தந்தைக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பே இந்த மின்னூல். உங்களுக்கு இந்த நூல் விரைவில் இலவசமாக கிடைக்கும். தரவிறக்கிக்கொள்ளலாம். இப்போது அதன் அட்டைப்படம் மட்டும். படம்:Pixabay

அப்பாவின் பாசத்தை புரிந்துகொள்ளும் மகன்கள்! - நாளும் பண்டிகைதான்

படம்
பிரதி ரோஜூ பண்டக - தெலுங்கு இயக்கம் மாருதி தசரி ஒளிப்பதிவு ஜெய் குமார் இசை தமன் எஸ் தெலுங்கில் நேரடியாக இங்கு வாழ்பவர்களுக்கு புத்திமதி சொல்லி படம் எடுப்பார்கள் அல்லது வெளிநாடு வாழ் மனவாடுகளுக்கு ஏ3 ஷீட் முழுக்க புத்திமதி சொல்லி படமெடுப்பார்கள். இது இரண்டாவது வகையைச் சேர்ந்தது. சதாவனம் பவதி படத்தின் மறுமதிப்பு போல இருக்கிறது. ஆனால் சுவாரசியம் குறைவு. கிராமத்தில் இருக்கும் சத்யராஜூக்கு திடீரென உடல்நலக்குறைவு. மருத்துவமனையில் சோதித்தால்  நுரையீரல் புற்றுநோய் என கண்டுபிடித்து ஐந்து வாரங்கள் கெடு விதிக்கிறார்கள். அவரின் மூன்று மகன்கள், ஒரு மகள் ஆகியோர் அமெரிக்கா, ஆஸ்திரேலியா என பல்வேறு நாடுகளில் வசிக்கிறார்கள். இவர்கள் தம் தந்தையைப் பார்க்க வந்தார்களா? சத்யராஜூக்கு என்னாச்சு என்பதுதான் கதை. ஆஹா! சத்யராஜ், அவரது பேரனாக நடித்திருக்கும் சாய் தரம் தேஜ் ஆகியோர் நன்றாக நடித்திருக்கிறார்கள். சத்யராஜின் மூத்த மகனான ராவ் ரமேஷ் பிரமாதப்படுத்தியிருக்கிறார். இவருக்கான காட்சிகள் அனைத்துமே பகடியாக இருக்கிறது. இவரின் தான், தன் குடும்பம், தன் மகன் என்ற சுயநலம்தான் தவறு என படத்த