இடுகைகள்

விண்வெளியில் இந்தியாவின் யுரேகா சாதனைகள் ! இந்தியா 75

படம்
  இந்தியாவின் யுரேகா தருணங்கள்! இந்தியா 75 சிறந்த அண்டைநாடு இதற்கு இந்தியாவைத்தான் அடையாளமாக சொல்லவேண்டும். அண்மையில் ஆப்கானிஸ்தானில் ஜனநாயக அரசை உருவாக்க பல்வேறு பிரயத்தனங்கள் செய்து முதலீடு செய்து கோட்டை விட்டாலும் அங்குள்ள மக்களின் வாழ்வாதார நம்பிக்கையாக இந்தியா இருக்கிறது. இருக்கும். 1971ஆம் ஆண்டு வங்கதேசம் விடுதலை பெறுவதற்கு இந்தியா உதவி செய்தது. அன்றைய பிரதமர் இந்திரா காந்தி இந்த விஷயத்தில் தீவிரம் காட்டி வெற்றி பெற்றார். அகதிகள் அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் செல்வதற்கும் உதவினார். பாகிஸ்தானின் ராணுவ அத்துமீறல்கள் குறித்த உலக நாடுகளின் கருத்துகளையும் கவனப்படுத்தினார். சோவியத்துடன் ஒப்பந்தங்களை செய்தார். மதம் சார்ந்த நாடு என்பதை இந்தியா, தனது செயல்பாடுகளால் மாற்றியது என மேற்சொன்ன சம்பவங்களை வைத்து உறுதி செய்யலாம்.  இறுதியாக ஜெயம்! 1961ஆம் ஆண்டு கோவாவை போர்ச்சுகீசியர்களிடமிருந்து இந்திய அரசு மீட்டது. இதற்கு ஆபரேஷன் விஜய் என்று பெயரிட்டனர். இப்போராட்டத்தில் ஏழு ராணுவ வீர ர்கள் பலியானார்கள். இந்த வெற்றியின் மூலம் 450 கால ஐரோப்பியர்களின் காலனி ஆட்சி முழுமையாக முடிவுக்கு வந்தது. 36 ம

உலக நாடுகள் வெளியேறியவுடனே மாற்றுப்பாலினத்தவரை வேட்டையாடுவதே தாலிபனின் திட்டம் ! - நேமத் சதத்

படம்
                நேமத் சதத் அமெரிக்க எழுத்தாளர் .      ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் . தனது ஓரினச்சேர்க்கை தன்மையை வெளிப்படையாக அறிவித்த முதல் ஆப்கானியவர் இவர்தான் . 2013 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்கன் பல்கலைக்கழகத்தில் ஓரினச்சேர்க்கையாளர் என்று உண்மை தெரிந்ததால் உடனே ஆசிரியர் பணியை விட்டு விலக்கப்பட்டார் . தற்போது ஆப்கானிஸ்தானிலுள்ள மாற்றுப்பாலினத்தவர்களுக்காக பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார் . ஆப்கானிஸ்தானிலுள்ள மாற்றுப்பாலினத்தவர்களுக்கு எப்படி உதவப்போகிறீர்கள் ? நான் ஆப்கனிலுள்ள 125 மாற்றுப்பாலினத்தவர்களை பட்டியல் போட்டு வைத்துள்ளேன் . அவர்களுக்கு அமெரிக்காவில் அடைக்கலம் தருவதற்கான விசாக்களை ஏற்பாடு செய்து தரவுள்ளேன் . இதனை இரு வழிகளில் செய்ய உள்ளேன் . முதலாவது ஆப்கனிலுள்ள தன்னாரவ தொண்டு நிறுவனத்தில் மூலம் மாற்றுப் பாலினத்தவர்களை அங்கிருந்து அனுப்பி வைப்பது . மற்றொன்று நாடாளுமன்ற உறுப்பினர் , ஸ்காட் பீட்டர் மூலம் சட்டத்துறையில் பேசி மாற்றுப் பாலினத்தவர்கள் பாதுகாப்பாக மீட்பது என முடிவு செய்துள்ளேன் . இரண்டு வாரங்களில் அத்தனை பேர்களையும

சிங்காரச்சென்னைத் திட்டம் 2.0 - சந்தோஷம் கிடைக்குமா?

படம்
                சிங்காரச்சென்னை வேண்டுமா ? சந்தோஷச் சென்னை வேண்டுமா ? சென்னை மாநகரம் தனது 382 ஆம் ஆண்டு பிறந்த தினத்தைத் கொண்டாடுகிறது . இதை இங்கு வாழும் பலரும் நம்புவதற்கு கடினமாகவே இருக்கிறது . நூற்றாண்டுகளுக்கு முரர் கிழக்கிந்திய கம்பெனி , மெட்ராஸ் எனு்ம் இந்த துண்டு நிலப்பகுதியை வணிகத்திற்காக வாங்கியது . அதில்தான் இன்று கலை , கலாசாரம் , வணிகம் என அனைத்தும் வளர்ந்துள்ளது . நவீன காலத்தில் சென்னையை மேம்படுத்த பலரும் ஏராளமான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்கள் . பெரும்பாலும் திமுக அரசு என்று உறுதியாக சொல்லலாம் . இந்த கட்சிக்கு சென்னை என்பது தொப்புள்கொடி உறவு என்று கூறலாம் . முன்னர் ராபின்சன் பூங்கா இப்போது அறிஞர் அண்ணா பூங்காவில்தான் சி . என் . அண்ணாதுரை திமுகவைத் தொடங்கினார் . கட்சி பெயரை குடந்தை நீலமேகம் அறிவித்தார் . 1949 ஆம்ஆண்டு செப்டம்பர் 17 அன்று கட்சி தொடங்கப்பட்டது . சென்னையை அழகுபடுத்தும் திட்டமாக சிங்காரச்சென்னை என்பது 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோது தொடங்கப்பட்டது . இப்போது ஆட்சித்தலைவராக உள்ள ஸ்டாலின் தனது பழைய திட்டத்திற்கு

இந்தியாவில் மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள்! இந்தியா 75

படம்
  சிறந்த வாழ்க்கை  நகரங்களின் அதிகரிப்பு தந்த வாய்ப்பு இந்திய நகரங்கள் ஏராளமான மாற்றங்களைப் பெற்றன. கடந்த காலத்தில் இருந்த சாதி, குடும்ப பெருமை குறைந்தது வேலை வாய்ப்புகள் அதிகரித்தன. பிற மாநிலங்களிலிருந்தும் கூட தென்னிந்தியாவிற்கு ஏராளமான தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து வாழத் தொடங்கினர். மெட்ரோ நகரங்களில் மட்டுமல்லாது, பிற இரண்டாவது, மூன்றாவது கட்ட நகரங்களிலும் வளர்ச்சி கிடைக்கத் தொடங்கியுள்ளது. மக்களின் வருகையால் அரசும் பல்வேறு அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.  அனைவருக்குமே அன்பு பாலின ரீதியாக சிறுபான்மையினருக்கு மதிப்பு கிடைக்கத் தொடங்கியிருக்கிறது. 2001ஆம் ஆண்டு நாஷ் பவுண்டேஷன் இதற்கான வழக்கைத் தொடுத்தது. இதில் மாற்றுப்பாலினத்தவர்களை குற்றவாளிகளாக கருதும் காலனிய சட்டமான பிரிவு 377 ஐ நீக்க கோரினர்.  ஆமை வேகத்தில் நடந்த வழக்கு 2009இல் நடைபெற்றபோது உயர்நீதிமன்றம் இந்தபிரிவு வயது வந்தோருக்கு பொருந்தாது என கூறிவிட்டது. ஆனாலும் மீண்டும் சிலர் வழக்குப் போட இப்போது வழக்கு பத்தாண்டுகளுக்கு பிறகு உச்சநீதிமன்றத்தில் உள்ளது.  மாற்றுப்பாலினத்தவருக்கு உரிமை சமத்துவம் அனைத்து பாலினத்தவர

கலைத்துறையில் சாதித்த இந்தியா! இந்தியா 75

படம்
  கலைகளில் சாதனை சாகித்திய அகாதெமி, இந்தியாவில் நூல்களை பல்வேறு மொழிகளில் வெளியிட்டு வரும் நிறுவனம். இந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக 1953ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களின் கலாசாரங்களை சாகித்திய அகாதெமி ஒன்றிணைக்கிறது. இதுவரை ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை பதிப்பித்திருக்கிறது. ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், இளைய எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்களை கௌரவித்து வருகிறது. போடோ, டோக்ரி, கொங்கணி போன்ற மொழிகளிலுள்ள இலக்கியப் பொக்கிஷங்களையும் அனைவரும் அறியும்படியாக மொழிபெயர்க்கும் பணியை சாகித்திய அகாதெமி செய்கிறது.  தூர்தர்ஷன் அறிமுகம் இன்று அனைவரும் ஓடிடியில் வெளியாகும் படங்களை பார்க்கவும், இணையத்தில் உள்ள வெப் சீரிஸ்களையும் பார்த்து வருகிறோம். ஆனால் இந்தியாவில் தொடக்கத்தில் தூர்தர்ஷன்தான் அனைவருக்கும் ஒரே டிவியாக இருந்தது. 1959ஆம்ஆண்டு தூர்தர்ஷன் தொடங்கப்பட்டது. பல்வேறு தொலைக்காட்சிகளை தொடங்கி மூடினாலும் கூட தூர்தர்ஷனிடன்  21 சேனல்கள் உள்ளன. இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. கிராமங்களில் தூர்தர்ஷன் மட்டுமே ஒரே டிவியாக முதலில்

நேரு செய்த பெரும் தவறு இதுதான்! - அரவிந்த் பனகரியா, பொருளாதார பேராசிரியர், கொலம்பியா

படம்
                இந்தியா வல்லரசாக மாறுவதை தடுத்த நேரு இந்தியா தனது 75 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது . ஆனால் தனது நூறாவது ஆண்டைத் தொடும்போது வல்லரசாக வளர்ச்சி பெற்ற நாடாக மாறியிருக்குமா என்பதே சந்தேகமாக இருக்கிறது . சுதந்திரம் பெற்று ஒரு நாடு 75 ஆண்டுகள் கடந்து வந்திருக்கிறது என்பது பெரிய விஷயம் . பிற நாடுகள் இதே காலகட்டத்தில் இந்தியாவை விட மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளனர் . ஆனால் அதில் பின்தங்கிவிட்டோம் . பொருளாதார ரீதியாக இந்தியா பெரும்தோல்வியை தழுவியுள்ளது . இதற்கு முக்கியமான காரணம் , சுதந்திரம் பெற்றபிறகு ஆட்சிக்கு வந்த பிரதமரான நேருவும் அவர் கடைபிடித்த சோசலிச கொள்கையும்தான் . பலருக்கும் கேளவிகள் மனதில் தோன்றலாம் . அவர் கடைபிடித்த கொள்கையில் என்ன பிரச்னை என்று ? அவர் பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினார் . கனரக பெரும் தொழிற்சாலைகளை கட்டினார் . இவற்றில் கிடைக்கும் லாபம் அரசுக்கு வரும் . இது தனியாரின் சொத்துக்களைப் போல அரசு சொத்தாக மாறும் என நினைத்தார் . இந்த தொழிற்சாலைகளுக்கான முதலீடு அதிகம் . நேருவின் சோசலிசம் , மார்க்சிசத்தின் புரட்சிகர கூறுகளை த

தெருக்களில் பெண்களை தாலிபன்கள் அடிப்பது உறுதி! - ஸார்கோனா ராஸா

படம்
            ஸார்கோனா ராஸா பிரிட்டிஸ் ஆப்கன் பெண்கள் சங்கம் காந்தகாரில் பிறந்தவரான ராஸா , 1994 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பி இங்கிலாந்திற்கு அடைக்கலம் தேடி குடும்பத்தோடு இடம்பெயர்ந்துவிட்டார் . 2004 ஆம் ஆண்டு தொடங்கி ஆப்கானிஸ்தானுக்கு வந்து சென்றுகொண்டிருக்கிறார் . ஆப்கனிலுள்ள பெண்களின் நிலை இனி என்னவாகும் என்று அவரிடம் பேசினோம் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள தாலிபன்கள் பெண்கள் விவகாரத்தில் முன்னர் நடந்துகொண்டது போல கடுமையாக நடந்துகொள்ளவில்லையே ? நீங்கள் இதனை நம்புகிறீர்களா ?   முன்னர் தாலிபன்கள் நடந்துகொண்டதை விட இப்போது மென்மையாக பெண்கள் விவகாரத்தில் நடந்துகொள்வதாக நான் நம்பவில்லை . காரணம் இன்று ஊடகங்கள் நிறைய வந்துவிட்டன . அவர்களிடம் நேர்மறையாக தங்களை காட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது . முஸ்லீம் நாடுகளில் பெ்ணகள் தலையை மறைக்காமல் டிவியில் வந்திருக்கிறார்களா என்று சொல்லுங்கள் . ஆண்களும் , பெண்களும் கலந்து படி்த்த பல்கலைக்கழகங்ளில் பெண்க்ள் மட்டும் தனியாக படிக்கவேண்டும் என தாலிபன்கள் கூறுவார்கள் . தாலிபன்கள் ஆட்சிக்கு வரும் முன்னர் பெண்கள் தலையை மறைக்காமல