இடுகைகள்

அறையில் மலராக பூக்கும் பூஞ்சை! - முருகானந்தம் ராமசாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  அன்புள்ள இரா.முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? நலமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். வரும் வாரத்தில் நாளிதழ் வேலைகள் தொடங்கவுள்ளன. தீபாவளி  அன்று தாமதமாக எழுந்தேன். இப்போது நான் இருக்கும் மூன்றாவது மாடியில் மொத்தம் பத்துக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். முதலில் நான்கு பேர்கள்தான் இருந்தோம். இப்போது பக்கத்து அறையில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்துவிட்டனர். இவர்கள் அதிகாலை 5 மணி முதல் 8.30 மணி வரை குளியலறை, கழிவறையைப் பிடித்துக்கொள்கிறார்கள். எனவே, நான் அவர்களுக்கு முன்னதாகவே எழுந்து குளித்துவிட்டு 7 மணிக்கு அலுவலகத்திற்கு சென்று விடுகிறேன்.  அந்திமழை இதழைப் படித்தேன். பெண்களின் மனத்தைப் பற்றி சிறப்பிதழாக செய்திருந்தார்கள். எழுத்தாளர் கலாப்ரியா எழுதியிருந்த கட்டுரை நன்றாக இருந்தது. நாளிதழ் வேலைகள் தொடங்கிவிட்டால் வாழ்க்கை மிக பரபரப்பாக மாறிவிடும். இப்போதே ஓரளவு எழுதி வைத்துக்கொள்ள முயன்று வருகிறேன். கிழக்கு பதிப்பகத்தில் அருகர்களின் பாதை  நூலை வாங்க வேண்டும். தீபாவளிக்கு முதல்நாள் எங்கள் அலுவலகத்தில் உள்ள கிழக்கு பதிப்பகத்திற்கு சென்றோம். அங்கு சென்றபோது ஊழிய

அலப்பறை டில்லுவுக்கு ஆப்பு வைக்கும் செக்ஸி காதலி! - டிஜே டில்லு - சித்து, நேகா ஷெட்டி

படம்
  டிஜே டில்லு கதை, திரைக்கதை சித்து ஜோனல்கட்டா இயக்கம் விமல் கிருஷ்ணா இசை ஸ்ரீசரண் பகலா ராம் மிர்யாலா பின்னணி இசை  தமன் எஸ் தெலுங்கானாவில் வாழ்பவர் டிஜே டில்லு. இவர் அப்பா வைத்த பெயர் பால கங்காதர திலகர். அதை ஸ்டைலாக மாற்றி வைத்துக்கொண்டு உள்ளூர் விசேஷங்களுக்கு பீதி ஏற்படுத்தும் படி டிஜே செய்துகொடுத்து அலப்பறை கொடுத்து வருகிறார்.  இவர் வாழ்க்கையில் வருகிறார் ராதிகா. டிஜே டில்லு மொழியில் ஆஸ்கார் அவார்ட் வின்னர் ராதிகா ஆப்தே. இவரை டில்லு உண்மையில் காதலிக்கிறார். ஆனால் ராதிகா டில்லுவை காதலெல்லாம் செய்யவில்லை. சில சிக்கல்களுக்கு பயன்படுத்திக்கொள்கிறார். இவற்றிலிருந்து டில்லு எப்படி மீள்கிறார் என்பதே கலாட்டாவான கதை.  சித்துவின் எழுத்திலும் திரைக்கதையிலும் உள்ள பகடி இப்படத்திலும் உண்டு. முந்தைய படங்களை விட இதில் காமெடி சிறப்பாக மெருகேறியுள்ளது.  என்னை எப்பவுமே ஏன் டில்லு நம்ப மாட்டேங்குற? ராதிகா, நிஜமாகவே இந்த கேள்வியை நீ என்கிட்ட கேட்கிறியா? பிளானை சரியா போட மாட்டியா? பாரு பிகின்னர்ஸ் மிஸ்டேக்ஸ்.... கான்ட்ரிபியூஷன் பண்ணாம கரெக்ஷன்  மட்டும் சொல்லிக்கிட்டு இருக்குற... பிரஷ்ஷர் எனக்கு பிளஸ்ஸர்

ஆன்மிக அனுபவ தரிசனம் தரும் அருகர்களின் பாதை! - முருகானந்தம் ராமசாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  ஜெயமோகனின் அருகர்களின் பாதை நூலைப் படித்துக்கொண்டு இருக்கிறேன். கிழக்கு பதிப்பகத்தில் வாங்கிய கட்டுரை நூல். ஐந்து மாநிலங்கள் வழியாக செய்த பயணம் பற்றி பிரமாதமாக எழுதியிருக்கிறார். புனைவு அளவுக்கு படிமங்கள் கிடையாது. ஐந்து மாநிலங்கள் வழியாக  சமண ஆலயங்களைத் தரிசித்து செல்லும் பயணம், சந்தித்த மனிதர்கள், கோவில் சிற்பங்கள், அதன் வர்ணனை என அசத்தலாக இருக்கிறது.  எழுத்தாளர் ஜெயமோகன் இங்கு மழை தூறலாக கனமழையாக என பல்வேறு வடிவங்களில் நாள் முழுவதும் சொட்டிக்கொண்டே இருக்கிறது. நேற்றிலிருந்து இன்றுவரை கூரையிலிருந்து விழும் மழைநீரின் ஒலி, சிற்சில வேறுபாட்டுடன் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஈரமான காற்று எப்போதும் ஒருவித பிசுபிசுப்பான தன்மையைக் கொடுக்கிறது. வெளியே குளிர்ச்சி, சட்டைக்கு உள்ளே புழுக்கம் என வித்தியாசமான சூழல் இருக்கிறது. நேஷனல் புக் டிரஸ்டில் புத்தகங்களை வாங்க அருகிலுள்ள தாமரை பப்ளிஷர்ஸை அணுகி உதவி கேட்டேன். அவர்கள் ஒரு வாரத்திற்கு மேலாகும் என்று சொன்னார்கள். வேலை செய்யும் இதழுக்காக சில நூல்கள் தேவைப்படுகின்றன.  பிரன்ட்லைன் சந்தா முடிந்துவிட்டது. ரீடர்ஸ் டைஜெஸ்ட் இதழை வாங்க நினைத்துள்ளேன்.

திருமண மகிழ்ச்சி! - முருகானந்தம் ராமசாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  12.10.2021 ---------------------- அன்புள்ள முருகு அண்ணாவுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?  நேற்றிரவு பிரன்ட்லைனில் அசாம் முஸ்லீம்கள் பற்றிய கட்டுரையைப் படித்தேன். அதில் அரசு நிலத்திலிருந்து அவர்களை எப்படி அரசு நிர்வாகம் ஒடுக்கி வெளியேற்றியது என்று எழுதியிருந்தனர். இதுபற்றிய கட்டுரையை தீஸ்தா செடல்வாட் எழுதியிருந்தார். அது உண்மையில் கோரமான நிகழ்ச்சி. 1800களிலிருந்து அசாமில் தங்கி வாழ்பவர்களை முஸ்லீம் என்ற காரணத்திற்காகவே வெளியேற்ற முனைகிறார்கள். இதில் குடியுரிமை பிரச்னை என்பது தனி விவகாரம்.  நீண்டநாள் நண்பரான கார்ட்டூன் கதிரை அவரது வீட்டுக்குச் சென்று பார்த்தேன். திருமணமான பிறகு, அவரை இப்போதுதான் பார்க்கிறேன். சிறிய வீடுதான். மனைவியோடு மகிழ்ச்சியாக இருக்கிறார். நன்றாக இருந்தால் சரிதான்.  எங்கள் பத்திரிகை இன்னும் சில வாரங்களில் தொடங்கிவிடும் என நினைக்கிறேன். கம்பெனி ஆச்சரியமாக போனஸ் பணத்தை போட்டிருக்கிறார்கள். பெரும்பாலும் அடிப்படைச் சம்பளத்தை கொடுத்தார்கள். அதில் பலரும் இன்னும் கொடுத்திருக்கலாம் என்று புலம்பினார்கள்.  லாக்டௌனில் சம்பளத்தை பிடித்துக்கொண்டார்கள். அதை இப்போது போடுவதாக

சர்வாதிகார அதிபரின் கோமாளித்தனமான உரைகள்! - பன் பட்டர் ஜாம் - மின்னூல் வெளியீடு- அமேஸான்

படம்
  பொதுவாகவே சர்வாதிகாரிகள் ஊடகங்களை மிக திறமையாக தந்திரமாக கையாண்டு தங்கள் வசப்படுத்திக்கொள்வார்கள். இதன்படி மெகந்தியா நாட்டு அதிபர் ******** மாதம்தோறும் மக்களுக்கு வானொலி வழியாக உரையாற்றுகிறார். நாட்டின் பிரச்னைகளை பேசுவதை விட அதை மடைமாற்றி தனது கனவுகளைப் பற்றியும், தொழிலதிபராக உள்ள நண்பர்களின் முன்னேற்றங்களையும் பேசுகிறார். அதனை சாத்தியப்படுத்துவதால் என்ன நன்மை என்பதையும் வெளிப்படையாக சில சமயங்களில் உளறுகிறார்.  நாடு முழுக்க பிரிவினை, சீரழிவுகள் இருந்தாலும் அதிபரின் சொத்துக்களும் அவரின் இனாம் தாரர்களான தொழிலதிபர்களும் வளர்ந்துகொண்டே இருக்கிறார்கள். இதுபற்றிய பகடியான சில சமயம் கோபம் வரும்படியான பதினெட்டு உரைகளை இந்த நூல் கொண்டுள்ளது.  பன்பட்டர்ஜாம்  நூலை வாசிக்கும்போது, சமகால நிகழ்வுகள் உங்களுக்கு நினைவுக்கு வந்தால் அதற்கு காரணம், நாம் கேள்வி கேட்காமல் வரிசையில் நின்றுகொண்டிருப்பதே என்று உணருங்கள். சர்வாதிகார, ராணுவ ஆட்சி நடைபெறும் தேசங்களை உதாரணமாக கொண்டு எழுதப்பட்ட நூல் இது.  இதற்கான உத்வேகத்தை திரைப்படக் கலைஞர் சார்லி சாப்ளின் வழங்கினார். நூலின் அட்டைப்படத்தை அழகுற வரைந்த கதிர் அவர

மிருதங்க கைவினைஞர்களின் தாழ்வுணர்ச்சி கொண்ட வாழ்க்கை! - செபாஸ்டியன் குடும்பக்கலை - டிஎம் கிருஷ்ணா தமிழில் அரவிந்தன்

படம்
  செபாஸ்டியன் குடும்பக்கலை - காலச்சுவடு செபாஸ்டியன் குடும்பக்கலை டிஎம் கிருஷ்ணா தமிழில் டிஐ அரவிந்தன் காலச்சுவடு பதிப்பகம் 195 ரூபாய் டிஎம் கிருஷ்ணா புகழ்பெற்ற வாய்ப்பாட்டு கலைஞர். கர்நாடக இசை உலகில் பலரும் இவரது பாடல்களை அறிவார்கள். பாடல்களை சபாக்களைக்  கடந்து பாடும் இடங்களும் கிருஷ்ணாவின் புகழ் பரப்பின. சூழலுக்கு ஆதரவான பாடல்களை பாடும் ஆர்வமும் திறனும் கொண்டவர். அவர், மிருதங்க கைவினைஞர்களைப் பற்றி ஆய்வுகள் செய்து, நான்கு ஆண்டுகள் உழைத்து எழுதிய நூல்தான் இது.  ஆங்கிலத்தில் வெளியான நூலின் தமிழ் வடிவம். நூலின் வெளியீடு மார்ச் 3 அன்று வெளியாகிறது. சென்னை புத்தகத் திருவிழாவில் நூலை வேகமாக அச்சிட்டு கொண்டு வந்திருக்கிறார்கள். நூலின் ஆராய்ச்சி தகவல்கள், ரோஹினி மணியின் ஓவியங்கள், கூறுப்படும் பல்வேறு சாதி பற்றிய ஆய்வுத் தகவல்கள் வாசகர்களை வியக்க வைக்கிறது.  பறையர்கள் எனும் சாதியினர் சாதிக் கொடுமை தாங்காமல் கிறிஸ்தவர்களாக மாறுகிறார்கள். இவர்கள்தான் மாடு, எருமை, ஆடு ஆகிய விலங்குகளின் தோல்களை வாங்கி மிருதங்கங்களை உருவாக்குகிறார்கள். இதனை வாசிக்கும் பிராமணர்கள், இசைவேளாளர்கள் இதற்கான அங்கீகாரத்தை

ஆனந்த பஜார் பத்திரிகையின் பயணம்- நூற்றாண்டு கொண்டாடும் பத்திரிகை -2

படம்
அவீக் சர்க்கார், ஏபிபி குழுமம்,கொல்கத்தா  அசோக்குமாரின் மூத்தமகன் அவீக். இவர் இங்கிலாந்தில் புகழ்பெற்ற  பத்திரிகையாளர் ஹெரால்ட் ஈவன்ஸிடம் வேலை செய்தார். ஹெரால்ட் ஈவன்ஸ், தி டைம்ஸ், சண்டே டைம்ஸ் நாளிதழ்களில் ஆசிரியராக சாதித்தவர். இவர் காலத்தில்தான் அந்த நாளிதழ்களில் பல்வேறு புலனாய்வு செய்திக்கட்டுரைகள் வெளியாயின. பத்திரிகையும் மெல்ல வளர்ச்சி பெற்றது. பிறகு ரூபர்ட் முர்டோக் நிறுவனத்தை வாங்கியவுடன் ஈவன்ஸ் வெளியேற்றப்பட்டார். அவரிடம் பத்திரிக்கை வேலைகளைக் கற்றவர் அவீக் சர்க்கார்.  1983ஆம் ஆ ண்டு அசோக் குமார் திடீரென காலமானார்.  அவீக் சர்கார் தனது சகோதரர் அனுப்புடன் சேர்ந்து ஆனந்தபஜார் பத்திரிகையை நிர்வாகம் செய்யத் தொடங்கினார். ஆனந்தபஜார் பத்திரிகை பிரிட்டிஷ் காலத்தில் சுதந்திரத்திற்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்டது. பின்னாளில், இந்தியா சுதந்திரம் பெற்றபிறகு நேருவின் கொள்கைகளை பின்பற்றியது. வங்கப்பிரிவினை சம்பவம் நடைபெற்றபோது, விடுதலைக்கு ஆதரவாக ஆனந்தபஜார் செயல்பட்டது.  அப்போது வங்காளத்தில் தி ஸ்டேட்ஸ்மேன் பத்திரிக்கை முதலிடத்தில் இருந்தது. கல்வி கற்றவர்கள் இந்த பத்திரிக்கையைத்தான் வாங்கி படி