இடுகைகள்

வன்மமாக மாறும் வெறுப்பு - கடிதங்கள் - கதிரவன்

படம்
  3.4.2022 மயிலாப்பூர் அன்புள்ள கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?  ரொம்ப நாட்களுக்குப் பிறகு நான் உங்களிடம் பேசி இருக்கிறேன். மகிழ்ச்சி. தம்பியின் திருமணம் சிறப்பாக நடக்க வாழ்த்துகிறேன். நாளிதழ் வேலைகள் தொடங்கிவிட்டன. இம்முறை துறை சார்ந்த வல்லுநர்களை தேடி எழுத வைக்க இருக்கிறேன். முயற்சி பலிதமாகுமா என்று தெரியவில்லை. கஷ்டம்தான். முயல்கிறேன். இன்று சக்தி சாரின் அறைக்குச் சென்றேன். வடபழனி. கேம்பஸ் என்ற ஹோட்டலில் புட்டும் கடலைக்கறியும் வாங்கிக் கொடுத்தார். டீப் வாட்டர். பவர் ஆஃப் டாக் என்ற இரு படங்களைப் பார்த்தேன். டீப் வாட்டர், மனைவி மீது கொலைவெறி பாசம் கொண்ட கணவரின் அதீத செயல்பாடுகளைப் பேசுகிறது. குறைந்த வசனங்கள். நிறைந்த உடல்மொழி என படம் எடுத்திருக்கிறார்கள்.  பவர் ஆஃப் டாக் படம், பெண் இயக்குநர் ஜேன் கேம்பியன் எடுத்தது. ஒருவரின் மனதில் உருவாகும் வெறுப்பு எப்படி வன்மமாக மாறி குற்றச்செயல்களுக்கு தூண்டுகோலாகிறது என்பதே படம். இந்து ஆங்கில நாளிதழில் சூழல் பற்றிய கட்டுரைகளை சிறப்பாக எழுதுகிறார்கள். இதை மொழிபெயர்த்து எழுத வேண்டும். எங்கள் நாளிதழ் இனி நூலகங்களில் கிடைக்கும் என்று ஆசிர

மனதைக் காப்பாற்றும் வாசிப்பும் எழுத்தும்! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  21.3.2022 மயிலாப்பூர் அன்புக்குரிய கதிரவனுக்கு, வணக்கம்.  எப்படி இருக்கிறீர்கள்? தேர்தல் கால பணி செய்திகள் முடிவுக்கு வந்திருக்கும். சென்னையில் வெயில் தாக்கம் மெல்ல கூடி வருகிறது. எனது அறையில் அனல் வீசுகிறது. இரவு உறங்குவது கடினமாகி வருகிறது. காய்ச்சல் வந்தவரின உடல் போல வேர்த்துக் கொட்டுகிறது.ஏறிய வெப்பம் ஏறியதுதான்.  கடும் வெயில் நடுக்கும் குளிர் என இனி வாழ்க்கை நடக்கும். ஐஐடிஎம் பற்றிய செய்தி ஒன்று எழுதினேன். தாய் நாளிதழில் தாறுமாறு ஆபரேஷன் செய்ததில் செய்தி ஏதும் விளங்கவில்லை.  நான் எழுதிய அமைச்சர் பற்றிய ஒற்றைக் குறிப்பு, எடிட்டர் என்மீது கோபப்பட அத்தனை வாய்ப்புகளையும் தந்தது.  சந்தேகம் வந்தால் இனி எழுதாதே என்று சொல்லிவிட்டார்.  இந்த மாதம் நாளிதழ் வேலைகள் முடிந்தவுடன் ஊருக்குப் போக வேண்டும். பார்ப்போம் திட்டம் எந்தளவு சாத்தியமாகிறது என்று...தற்போதைக்கு எழுதுவதும், வாசிப்பதும், தேநீர் குடிப்பதும் பெரிய விடுதலையாக இருக்கிறது. இந்த ஆண்டில் இதுவரை சந்திக்காத புதிய மனிதர்களைச் சந்திப்பேன் என நினைக்கிறேன்.  பன்பட்டர்ஜாம் என்ற கட்டுரை நூலை எழுதிவருகிறேன். கோமாளியான சர்வாதிகாரி நாட்டு மக்

கண்ணில் தென்படும் டிஷர்ட் அழகிகள்! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  12.3.2022 மயிலாப்பூர் அன்புள்ள தோழர் கதிரவனுக்கு, வணக்கம். எப்படி இருக்கிறீர்கள்? எங்கள் மேன்ஷனில் கேரளத்து சேட்டா ஒருவர் தங்கியிருந்தார். அவரைப் பற்றி எனக்கு நினைவில் உள்ள சித்திரம் மலமோ, சிறுநீரோ இதோ வந்துவிட்டது என்ற நிலையில்தான் அவருக்கு நினைவுக்கு வரும். உடனே 50 மீட்டர் தூரத்திலுள்ள பொதுகழிவறைக்கு உசேன் போல்ட் போல ஓடுவார். விஷ்க் என்ற காற்று உராயும் சத்தம் தான் கேட்கும். ஆள் கடந்திருப்பார். அண்மையில் தான் ஆளைக்காணோம். அறையைக் காலி செய்துவிட்டார் என்று தகவல் கிடைத்தது. அறையை சுத்தம் செய்த கோபி அண்ணா, சேட்டன் நிறைய மதுப்புட்டிகளை குடித்துவிட்டு எறிந்திருக்கிறார் என்றார். அடுத்தவர்களை பிரச்னை செய்யாமல் அறையில் வைத்து குடித்திருக்கிறார் என மகிழ வேண்டியதுதான்.  புதிதாக ஏழு பேர் தங்கும் அறையில் தங்கியுள்ளவர்கள், சினிமா ஆட்கள் போல. சில பெண்கள்  நடிக்கும் வாய்ப்புக்காக வந்துபோய்க்கொண்டு இருக்கிறார்கள். புதிதாக சந்தைக்கு வரும் டீஷர்டுகளை இந்த வகையில் அறிந்துகொள்ள ஆண்டவன் அருள் பாலித்திருக்கிறான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பித்து. என்ன சொல்வது? இன்று இதழின் சீஃப் டிசைனர் எழுதிய சிறுகதை தேற

5 ஜியால் முன்னேறும் துறைகள்! - போக்குவரத்து, சூப்பர் ஆப், விற்பனைத்துறை

படம்
  5 ஜி பயன்கள்  ஸ்மார்ட்போன் பயனாளர்கள் டேட்டா வேகம் பத்து மடங்கு அதிகரிக்கும். தரவிறக்க வேகத்திற்கு வட்டவடிவில் சுத்துவதை நீங்கள் பார்க்கும் துரதிர்ஷ்டம் நேராது. ஓடிடி தளத்தில் நிகழ்ச்சிகளை பார்ப்பது வேகமாகும்.  வீடு வீஆர் விளையாட்டுகளை எளிதாக விளையாடலாம். 8கே அளவிலான டிவிகளைப் பயன்படுத்தலாம்.  கல்வி  பெருந்தொற்றில் அறிமுகமான டிஜிட்டல் கல்வி இன்னும் வேகமாகும். நெடுந்தொலைவில் இருந்தாலும் கூட ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எளிதாக கல்வி கற்றுத் தரமுடியும்.  விற்பனை விரல் முனையில் தட்டினால் பொருட்கள் வாசலில் வந்து நிற்கும். குரல் வழி ஆணை, உடல்மொழி மூலம் நீங்கள் எளிதாக பொருட்களை வாங்கலாம். பணத்தை வேகமாக செலுத்தலாம். அமேசான் கோ போல கேஷியர் இல்லாத சூப்பர் மார்க்கெட்டுகள் உருவாக வாய்ப்புள்ளது.  வங்கி மொபைலில் இருந்தே வங்கியில் செய்யும் அனைத்து விஷயங்களையும் செய்யலாம். வங்கிக்கு செல்வது என்பது மிக அரிதான நிகழ்வாக மாறும்.  விவசாயம்  பயிர் விதைப்பது தொடங்கி சாகுபடி வரையிலான அனைத்து விஷயங்களும் தொழில்நுட்ப ரீதியாக ஒழுங்குபடுத்தப்படும்.  உற்பத்தித்துறை இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் முறையில் சென்சார், கருவிகள

வீடு என்பது நம் அனைவருக்கும் முக்கியமானது! - விஷால் பரத்வாஜ், இந்தி சினிமா இயக்குநர்

படம்
  விஷால் பரத்வாஜ்  இந்தி சினிமா இயக்குநர் மாரேங்கே டு வாஹின் ஜாகர் என்ற பாடலுக்காக விஷாலுக்கு, தேசிய விருது கிடைத்துள்ளது.  உங்களுக்கு முன்னரே தேசியவிருது கிடைத்துள்ளது. இப்போது கிடைத்த விருது எந்த வகையில் முக்கியமாகிறது? பெருந்தொற்று காலகட்ட அவலத்தைச் சொல்லும் ஆவணப்படத்திற்கான பாடல் இது. நமக்கு பெருந்தொற்று காலத்தில் பிழைப்புக்கான பிரச்னை எழவில்லை. ஆனால், தினசரி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இவர்கள் தான் தங்கள் வீட்டை எட்ட பல கி.மீ. நடக்க நேரிட்டது.இவர்களைப் பார்க்கும்போது எனது பிள்ளைகள், மனைவியோடு வீட்டில் பாதுகாப்பாக இருந்தது கடும் குற்றவுணர்ச்சியை அளித்தது.  இதனால்தான் ஆவணப்படத்தை இயக்கி அதற்கென பாடலை உருவாக்கினேன்.  நெட்பிளிக்ஸிற்காக கூஃபியா என்ற திரில்லர் படத்தை உருவாக்கியுள்ளீர்கள். இது சவாலைக் கொடுத்ததா? இல்லை. இப்படி இயங்குவது எனக்கு விருந்து சாப்பிடுவது போலத்தான். இந்த வாய்ப்பு எனக்குள்ளிருந்து குழந்தையை வெளியே கொண்டு வருவது போல இருந்தது. நான் சாகச நாவல்கள், உளவு நாவல்களை விரும்பி படிப்பவன்.  குட்டே என்ற படத்தை உங்கள் மகன் இயக்கியுள்ளார். நவம்பரில் வெளியா

கோழிக்கறியை எப்படி சாப்பிடுவது? - கடிதங்கள் - கதிரவன்

படம்
  7.3.2022 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.  நலமா? நான் இன்று அலுவலக வேலையாக ஐஐடி ரிசர்ச் பார்க்கிற்கு சென்றேன். அங்குள்ளவர்கள், நிறுவனங்கள் என அனைத்துமே தனி உலகம் போல தோன்றியது. லெஜண்ட் ஓவியர் சொன்னது உண்மைதான். சாப்பிடும்போது யாரும் கைகழுவவில்லை. எல்லாமே ஸ்பூன், ஸ்போர்க் தான். 2047ஆம் ஆண்டு இந்தியா பற்றிய ஐடியாக்களை சொல்லுகிறார்கள். போய் அதைப்பற்றி கருத்துகளை எழுதிக்கொண்டு வாருங்கள் என நாளிதழ் ஆசிரியர் அனுப்பினார். அதாவது கருத்தரங்கு நடக்கும் காலையில் பத்து மணிக்கு தகவல் சொன்னார். எனவே, அலுவலக சகா காந்திராமனையும் அழைத்துக்கொண்டு சென்றேன்.  பேச்சாளர்கள் பிரமாதமாக கருத்துகளை பேசினார்கள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு அபாரம்.  எங்களைத் தவிர மற்றவர்கள் உணவுக்கூடத்தில் ஸ்பூனையே பயன்படுத்தினர். கனமான பீங்கான் தட்டு. அதைப்பிடிக்க இரண்டு கவளம் சோறு சேர்த்து சாப்பிடவேண்டும். அதில் ஸ்பூனை வைத்து சாப்பிட முயன்றால், சோறு நழுவிக்கொண்டே இருந்தது. என்னடா இது ஈரோட்டுக்காரனுக்கு வந்த சோதனை என்று பார்த்தால், கோழிக்கறியை தட்டில் போட்டு என் பிடறிக்கு பின்னாடியே ஒருவர் நின்று கறுக் மொறுக் கென சாப

நண்பர்களைப் பெறுவதில் நல்லதிர்ஷ்டம் இல்லை! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  4.3.2022 மயிலாப்பூர் அன்பிற்கினிய  நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா? நேற்று நான் திருவண்ணாமலை சென்றேன். அங்கு சென்று புகைப்படக்கலைஞர் வினோத் அண்ணாவைச் சந்தித்தேன். சிறிதுநேரம் பேசியிருந்துவிட்டு மதியம் 2 மணிக்கு பஸ் ஏறிவிட்டேன். பஸ் கோயம்பேடு வர 8 மணி ஆகிவிட்டது. இடையில் ஏதோ பாலம் கட்டும் வேலை நடைபெற்றது. இதனால் கிராமங்களுக்குள் போய் பஸ் வெளியே நின்று நின்று நகர்ந்தது. அறைக்கு வரும்போது மணி 9 ஆகிவிட்டது.  எங்கள் நாளிதழ் அலுவலகத்தில் கோ ஆர்டினேட்டர் தந்திரமாக அரசியல் செய்து பல்வேறு ஆட்களை காய்களை பயன்படுத்தி வருகிறார். அவரது பெயரை பத்திரிகையில் ஆசிரியர் போடவில்லை. இதற்கு என் பெயர் முன்னே இருப்பது காரணம் என பிரசாரம் செய்து வருகிறார். கூடவே, பத்திரிகையில் வேலை செய்யும் மூத்த செய்தி ஆசிரியர் பெயர் அங்கு வரவேண்டியது நியாயமாம். சக உதவி ஆசிரியர்கள் தன்னை இழுக்காதவரை எனக்கென்ன அக்கறை என கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். சீஃப் டிசைனர் கோ ஆர்டினேட்டரை தூண்டிவிட்டு தனக்கு சாதகமாக எடிட்டோரியலை வளைத்து வருகிறார். நான் வேலையை விட்டு விலகுவதே இவர்களது லட்சியம் என நினைக்கிறேன். இதற்காக வாய்ப்பு கிடைக்