இடுகைகள்

வரலாற்றை உண்மைகளின் அடிப்படையில்தான் பார்க்கவேண்டும் - வரலாற்று ஆய்வாளர், எழுத்தாளர் வில்லியம் டால்ரிம்பிள்

படம்
  வரலாற்று ஆய்வாளர் வில்லியம் டால்ரிம்பிள் வில்லியம் டால்ரிம்பிள், டெல்லியைப் பற்றிய நிறைய நூல்களை எழுதியுள்ளார். டெல்லி பல்வேறு வம்ச மன்னர்களின் கதைகளைப் பேசிக்கொண்டே இருக்கும் நகரம். அங்கு எங்கு திரும்பினாலும் ஏதாவது ஒரு மன்னரின் கல்லறை, நினைவுத்தூண் இருக்கும். எழுத்தாளர் வில்லியம், டெல்லியில்   நிஜாமூதீன் கல்லறை அருகில் அறை எடுத்து தங்கியிருந்தார். சிலந்திவலைகள் கட்டிய மூலை, தூசி படிந்த ஜன்னல்கள், கசியும் நீர்க்குழாய்   என வசதிகள் நிறைந்த அறை அது. சிட்டி ஆஃப் ஜின் (1993), தி அனார்ச்சி, வொயிட் முகல்ஸ், ரிடர்ன் ஆப் எ கிங், தி லாஸ்ட் முகல் என தொடர்வரிசையாக நூல்களை எழுதியுள்ளார். 2021ஆம் ஆண்டு ‘கம்பெனி குவார்டர்’ என்ற நூலை எழுதினார். இப்போது இந்து நாளிதழின் இந்து லிட் ஃபார் லைஃப் நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருக்கிறார். அவரிடம் அவரின் அடுத்த நூல், பாட்காஸ்ட், வரலாறு பற்றியும் பேசினோம். நீங்கள் காலத்திற்கு ஏற்ப உங்களை புதுப்பித்துக்கொள்கிறீர்களா? நான் முதல் நூல் எழுதும்போது என்ன செய்தேனோ அதைத்தான் இப்போதும் செய்துகொண்டிருக்கிறேன். எனது பேச்சுகள் குறிப்பிட்ட காட்சிப்பரப்பை விளக்கி வரு

பேய்ப்படங்களை கேலி செய்யும் சிரிப்பே வராத படம் - இடியட் - ராம் பாலா

படம்
  இடியட் இயக்குநர் ராம்பாலா மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி செம்மனூர் ஜமீன், அவரது படைத்தளபதிகளால் நயவஞ்சகமாக கொல்லப்படுகிறார். கூடவே அவரது மனைவி, மகன், மகள் என எல்லோரும்தான்.அவர்கள் ஆவியாக வந்து தங்களைக் கொன்றவர்களின் வம்சாவளியை எப்படி பழிவாங்குகிறார்கள் என்பதே கதை. படம் பேய்ப்படமாக இருந்தாலும் ஒட்டுமொத்தமாக பேய்ப்படங்களை கிண்டல் செய்வதுதான் படம் நெடுக நடக்கிறது. ஆனால் படத்தில் எந்த காட்சிக்கும் நமக்கு சிரிப்பே வருவதில்லை என்பதுதான் பேரதிர்ச்சி. ராசுக்கவுண்டர், அவரது மகன் சின்ராசு ஆகியோருக்கான உறவு காட்டப்படும்போது சற்று ஆறுதலாக இருக்கிறது. ஆனந்தராஜின் நடிப்பும், மிர்ச்சி சிவாவின் வசனக் காமெடிகளும்தான் முதல் பகுதியில் நம்மைக் காப்பாற்றுகிறது. பிற்பகுதி படம் முழுக்க சேனாபதி மனநல மருத்துவமனையில்தான் நடக்கிறது. இடியட் படம் பேய்ப்படங்களை கிண்டல் செய்கிற படம். எனவே, இது பயமூட்டும் பேய் படமாக உருவாகவில்லை. குறைந்தபட்சம் அப்படி கிண்டல் செய்கிற இயல்பில் பார்வையாளர்கள் சந்தோஷப்பட ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. திரையில் இருவர் இருக்கிறார்கள். எப்போதும் பேசிக்கொண்டே

ஆராய்ச்சிக்காக திருமணத்தைக்கூட மறந்துபோகும் கல்லூரி பேராசிரியர் - ஃபிளப்பர் - ராபின் வில்லியம்ஸ்

படம்
  ஃபிளப்பர் ஆங்கிலம் ராபின் வில்லியம்ஸ்   பிலிப் என்ற ஞாபக மறதி கொண்ட ஆராய்ச்சியாளர், ஆய்வு செய்து ஃபிளப்பர் என்ற புதிய பொருளைக் கண்டுபிடிக்கிறார். அதன் விளைவாக அவரது தொழில், தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களும் விளைவுகளும்தான் கதை. மேரி ஃபீல்ட் என்ற கல்லூரி நிதி இல்லாமல் தடுமாறுகிறது. அதை அதன் தலைவரான பணக்கார தொழிலதிபர் மூட நினைக்கிறார். அதைக் காப்பாற்ற அந்த கல்லூரி ஏதாவது கண்டுபிடிப்புகள் செய்து தன்னை தக்கவைக்க வேண்டும். அதேநேரம், கல்லூரி முதல்வர் சாராவின் காதலர் பிலிப் அதற்கான முயற்சியில் இருக்கிறார். பிலிப், ஞாபக மறதி கொண்ட பேராசிரியர். ஆனால் ஆராய்ச்சியில் கெட்டிக்காரர். அவரது நண்பர் , பிலிப்பின் ஆராய்ச்சியை காப்பி அடித்து… நேரடியாக சொல்லிவிடலாம். திருடி புகழ்பெற்றால் கூட அதைப்பற்றி கவலைப்படாமல் பிலிப் வேலைசெய்கிறார். ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார். கிறுக்குத்தனம் கொண்ட மனிதர். ஞாபக மறதியால் தனது காதலி சாராவுடன் சர்ச்சில் நடக்கும் திருமணத்திற்கு கூட போக முடியாத நெருக்கடி. இந்த நிலையில் அவரது ஆராய்ச்சியில் உருவாகும் ஃபிளப்பர் எப்படி சொந்த வாழ்க்கை நெருக்கடிகளை தீர்த்

பேராசை பூதம் - ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை 2023 பாகம் 1 - மின்னூல் வெளியீடு

படம்
  அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் அறிக்கை பற்றிய அம்சங்களை திரு. இரா.முருகானந்தம் தமிழாக்கம் செய்ய அறிவுறுத்தினார். பங்குச்சந்தை, முதலீட்டு நிதி  என்பதெல்லாம் நான் இதுவரை செய்யாத விஷயங்கள். ஆனாலும் முருகு அவர்களின் நம்பிக்கை என்னை எழுத வைத்தது. அப்படித்தான் ஹிண்டன்பர்க் அமைப்பின் ஆங்கில அறிக்கையின் ஒருபகுதி நூலாகி இருக்கிறது.  அதானி குழுமத்தின் மோசடிகளில் ஒருபகுதிதான் இந்த நூல். மொத்தம் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இவற்றில் நீங்கள் அதானி குழுமம் எப்படி இயங்குகிறது, நிதி பரிவர்த்தனை முறை, மோசடியாளர்களின் கூட்டு, மோசடி முறை, வெளிநாட்டு மோசடி நிறுவனங்கள் எங்கெங்கு உள்ளன, அதற்கான ஆதாரங்கள் என அனைத்தையும் தெளிவாக தெரிந்துகொள்ள முடியும்.  ஒரு நிறுவனம் வளர்கிறது, உச்சமான சொத்து மதிப்பு பெறுகிறது, உலகளவில் தொழிலதிபர் வணிக இதழ்களின் பெருமைக்குரிய பட்டியல்களில் இடம்பெறுகிறார். இதெல்லாம் சாதாரண மக்களுக்கு எள் அளவு கூட பயனில்லாத செய்தி. ஆனால் அந்த தொழிலதிபர், பங்கு விலையை செயற்கையாக உயர்த்தி பொதுத்துறை வங்கிகளில் கடன்களைப் பெறுகிறார். அதை வைத்து முறைகேடுகளில் ஈடுபடுகிறார். இதனால் நிறுவனம் திவால் ஆகும் சூ

பத்திரிகையாளர்களுக்கான கொள்கை கையேடு - டியர் ரிப்போர்டர் - புதிய மின்னூல் வெளியீடு

படம்
  உலகளவில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் தமிழ் நாளிதழ் குழுமத்தில், சிறு வார இதழ் ஒன்றில் வேலை செய்யும்போது, பத்திரிகையாளர்களுக்கான கொள்கை, கோட்பாடு பற்றி எழுத நினைத்தேன். ஆனால் வேலை நெருக்கடி காரணமாக,  தமிழாக்க நூல் செய்யவேண்டுமென நினைத்துக்கொள்ள மட்டுமே முடிந்தது. ஆனால் இப்போது  நேரம் கிடைக்க, டியர் ரிப்போர்டர் எனும்  சிறுநூல் எழுதி தொகுத்து தயாராகிவிட்டது.  டியர் ரிப்போர்டர் நூலில் பத்திரிகையாளர்கள் பின்பற்ற வேண்டிய  அடிப்படை கொள்கை என்ன, சவாலான சூழ்நிலைகளை எப்படி எதிர்கொள்வது, செய்தியை எழுதும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும், எதில் கவனம் செலுத்தவேண்டும் என்பதைப் பற்றிய கொள்கைகள் கூறப்பட்டுள்ளன.  அச்சு, காட்சி ஊடகம் என இரண்டிற்குமான அடிப்படைக் கொள்கைகள் ஒன்றுதான். இதில், குறிப்பிட்ட ஊடக நிறுவனம் கடைபிடிக்கும் கொள்கைகள் சற்று மாறுபடக்கூடியவை. ஆனால், அதைப்பற்றி பொதுவான பரப்பில் ஒருவர் எதையும் கூறிவிட முடியாது. ஆனால் பத்திரிகையாளர் எப்படி இருக்கவேண்டும், அரசியல், பொருளாதார, சமூக பரப்பில் நடைபெறும் விஷயங்களுக்கு எப்படி எதிர்வினை ஆற்றவேண்டும் என்பதை நாம் கூறமுடியும். அதைத்தான்

10.வணிகமே செய்யாமல் பெரும்தொகையைக் கடன் கொடுக்க முடியும் - மோசடி மன்னன் அதானி

படம்
  சிங்கப்பூரில் வினோத் அதானிக்கு சொந்தமான நிதி நிறுவனம் உள்ளது. 2013-2015 காலகட்டங்களில், இந்த நிறுவனம் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு அதிக லாபம் காட்டும் விதமாக பயன்படுத்தப்பட்டது.   2013-2015ஆம் ஆண்டு கார்மிசல் அண்ட் போர்ட் சிங்கப்பூர் ஹோல்டிங்க்ஸ் லிட். நிறுவனத்தை வினோத் அதானி நிர்வாகம் செய்து வந்தார். (ப.2) இந்த நிறுவனத்தில் இருந்து மூன்றுநிதி   பரிவர்த்தனைகள் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மொத்த வருமானம் அதிகரித்தது. சொத்துகளுக்கு ஏற்படும் சேதம் அடிப்படையில் பெரிய நிறுவனம் என்ற அங்கீகாரத்தை இழக்கும் நிலையை அதானி குழுமம் நிதி பரிவர்த்தனை மூலம்தான் சமாளித்தது. ஆஸ்திரேலியாவில் உள்ள சுரங்கம், ரயில்வே, துறைமுகம் ஆகிய நிறுவனங்களுக்கு நிதி பரிவர்த்தனைகள் செய்யப்பட்டன. ஆனால் இந்த நிதி பரிவர்த்தனை அதானி என்டர்பிரைசஸ் நிறுவனங்களின் ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. ஹிண்டன்பர்க் அமைப்பு செய்த ஆய்வில் நிதி பரிவர்த்தனைகளைச் செய்த நிறுவனம் சிங்கப்பூரைச் சேர்

மறைந்துள்ள பாலைவன நகரின் பொக்கிஷத்தை எடுக்க நடக்கும் போராட்டம்! - சாண்ட் சீ - சீன தொடர்

படம்
  சாண்ட் சீ - பிரதர் ஹாவோ   சாண்ட் சீ (2018) சீன டிவி தொடர் 53 எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப் இயக்குநர்கள் – லீ ஸே லூ, மாவோ குன் யூ, சூ ஷி திரைக்கதை எழுத்தாளர்கள் – ஸாங் யுவான் ஆங்க், டாங்க் ஷி சென் அம்மா இல்லாமல் அப்பாவின் அடி, உதைகளை வாங்கி வளர்கிறான் லீ சூ, பல்கலைக்கழக தேர்வை எழுதவெல்லாம் விருப்பமில்லாத மனநிலை. இவனுக்கு இருக்கும் ஒரே தோழன், சூ வான். பணக்காரன். இவன் நன்றாக படிப்பவன். ஆனால் பெரும்பாலான நேரங்களில் தனது பள்ளியில் மாணவிகளை படமெடுத்து வைத்து, யாரோடு டேட்டிங் போகலாம் என யோசிப்பவன்.   அடுத்து, ஹாவோ. இவன் பள்ளியில் படிப்பவனல்ல. இறந்தவர்களுக்கு சடங்கு செய்யும் நிறுவனத்தை ஹாவோவின் பாட்டி நடத்திக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஹாவோ ஆதரவாக இருக்கிறான். இவனது வேலை சட்டவிரோதமாக போதைப்பொருட்களை விற்பது.   பிறகு பணக்காரன் பள்ளி மாணவனான சூ வானை ஏதோ ஒருவகையில் மிரட்டி காசைப் பிடுங்குவது… இந்த மூன்றுபேர்களின் நட்புதான் தொடரின் முக்கியமான அம்சம். இது கடந்த காலத்தில் நட்பாக இருந்த அயர்ன் ட்ரையாங்கில் என்ற மூவரை நினைவுபடுத்தும் விதமாக உள்ளது.   பள்ளி மாணவன் லீ சூ, ஒர

9. வெளிநாட்டு போலி நிறுவனங்கள் மூலமாக நடந்த நிதி முறைகேடு - மோசடி மன்னன் அதானி

படம்
  வினோத் அதானி, தான் உருவாக்கிய போலி நிறுவனங்களைப் பற்றிய கவனம் கொள்ளாமல் இல்லை. வரி விலக்கு கொண்ட நாடுகளில் போலி நிறுவனங்களை உருவாக்கியவர், அதன் மீது பிறருக்கு சந்தேகம் வராமல் இருக்கவே அவற்றுக்கென தனியாக வலைத்தளங்களை உருவாக்கி வைத்தார். அந்த வலைத்தளங்களில் காணப்படும் சில அம்சங்களைப் பார்ப்போம்.   பெரும்பாலான வலைத்தள பெயர்கள் அனைத்தும் ஒரே நாளில் தனித்தனி வணிக நிறுவனங்கள் போல உருவாக்கப்பட்டவை. எ.டு. ஹிண்டன்பர்க் அமைப்பு செய்த ஆராய்ச்சியில் ஐந்து நிறுவனங்கள் 2017ஆம் ஆண்டு மே 4ஆம் தேதி தொடங்கப்பட்டவை என தெரிய வந்தது. மீதி ஐந்து நிறுவனங்கள் 2016 ஜூன் 1ஆம் தேதி தொடங்கப்பட்டவை. அனைத்து வலைத்தளங்களின் பக்கங்களின் தலைப்புகளும் ஒன்று போலவே அமைந்திருந்தன. முகப்பு, நிறுவனம் பற்றி, சேவைகள், கேலரி (விலை கொடுத்து வாங்கிய புகைப்படங்கள்), தொடர்புகொள்ள என தலைப்புகள் அப்படியே மாறாமல் இருந்தன. தொடர்பு முகவரியில் உள்ள முகவரி, வணிக முகவர் ஒருவரின் முகவரியைக் கொண்டிருந்தது. உண்மையான வணிக நிறுவனத்தின் பெயரில் முகவரி இல்லை. நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள், குழுக்கள் பற்றி எந்த தகவல்களும் இல்லை