இடுகைகள்

#ஏன்?எதற்கு?எப்படி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாம் மகிழ்ச்சியை இழக்கும் வயது!

படம்
giphy மிஸ்டர் ரோனி நாம் மகிழ்ச்சியை இழக்கும் வயது எது? கல்யாணம் செய்துகொள்ளும் வயது என சீரியசாக காமெடி செய்யக்கூடாது. பொதுவாக நிறைய பொறுப்புகள் இந்தியர்கள் ஏற்கிறார்கள். இதனால் சொல்ல முடியாத கஷ்டங்களுக்கு ஆளாகி அறுபது வயதிலேயே இதயம் வெடித்து சாகிறார்கள். ஒகே இதனை மாரடைப்பு என வைத்துக்கொள்ளுங்கள். அதற்கு காரணம் மன அழுத்தம். இந்த பிரச்னைகள் தொடங்கும் வயது 47. வளர்ந்த நாடுகளில் 48 என்கிறது ஆய்வு. இந்த வயது தொடங்கி ஐம்பது, அறுபதுகளில் மெல்ல தூக்கமும் குறையத்தொடங்கும். உங்கள் வாயில் நிறைய புலம்பல்களும் கேட்கத் தொடங்கும். இதுபற்றி ஆராய்ந்த மருத்துவர் டெரங்க் செங், மகிழ்ச்சி என்பது யு வடிவத்தை ஒத்தது என்கிறார். இதுபற்றி 2015ஆம் ஆண்டு ஒரே வயது கொண்டவர்களை ஆராய்ந்தார். ஆராய்ச்சிக்கு உட்பட்டவர்கள் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். இதுபற்றி மருத்துவர் டீன் பர்னட், “மனதில் மகிழ்ச்சி இல்லாதவர்கள் இளமையில் இறந்துவிடுகிறார்கள். காரணம், இளம் வயதில்  நிறைய பொறுப்புகள் கிடையாது. நாற்பது மற்றும் ஐம்பது வயதுகளில் நிறைய பொறுப்புகள் இருக்கிறது. இளம்வயது பிள

பீர் குடித்தால் ஹேங் ஓவர் ஏற்படுகிறதா?

படம்
giphy மிஸ்டர் ரோனி பீர் குடிப்பதற்கு முன்பு ஒயின் குடித்தால் ஹேங்ஓவர் ஏற்படாது என்கிறார்களே? அது உண்மையா? இந்த விஷயத்தில் பாதிப்பு ஏற்படுத்துவது ஆல்கஹால்தான். இதில் பல்வேறு மதுபானங்களில் உள்ள ஆல்கஹால் அளவுதான் போதை ஏற்படுத்துகிறது. பீர் குடிப்பதற்கு முன்பு வைன் என்பது ஆராய்ச்சிப்படி மோசமான தலைவலியை சிலருக்கு ஏற்படுத்தியது. அடிப்படையில் மது குடித்தால் உடலிலுள்ள நீரை டீ, காபியை விட வேகமாக வெளியேற்றுகிறது. இதன் காரணமாக உங்களுக்கு உடலில் நீரின் அளவு மிகவும் குறைகிறது. இதனால் காலையில் தலைவலி கண்டிப்பாக ஏற்படும். இதனைத் தவிர்க்க வைனை முன்னால் குடித்து பீரை பின்னால் குடிக்கலாமா என்று கேட்க கூடாது. மதுவை குறைவாக அருந்தினால் பாதிப்பு குறைவாக இருக்கும். மதுவை கல்லீரல் பிரித்து செரிக்கும்போது அசிட்டால்டிஹைடு எனும் நச்சுப்பொருள் உருவாகிறது. இதுவும் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே எதைக்குடித்தாலும் நீரை குறிப்பிட்ட இடைவெளியில் நீங்கள் குடித்தே ஆகவேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு லிட்டர் நீர் நமது உடலில் இருந்து வெளியேறியே ஆகவேண்டும். இதனை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

அதிகளவு தண்ணீர் குடித்தால் என்னாகும்?

படம்
giphy மிஸ்டர் ரோனி நாம் தினசரி அவசியம் குடிக்கவேண்டிய நீரின் அளவு என்று ஏதாவது உண்டா? உங்களுக்கு தாகம் ஏற்பட்டால் கோலா, ப்ரூட்டி குடிக்காமல் தண்ணீர் குடித்தாலே போதும். இவ்வளவு நீர் என்று எந்த அளவும் நீர் குடிப்பதில் கிடையாது. ஏசியில் உட்கார்ந்து இருப்பவருக்கும், பைக்கில் வெளியே அலைபவருக்கும் உணவு, நீர் தேவை மாறுபடும். நீங்கள் பிஸ்லெரி நீரை பாட்டில் பாட்டிலாக கேன் கேனாக குடித்தாலும் உடலைப் பொறுத்தவரை  ஒருமணி நேரத்திற்கு 800 மி.லி அல்லது ஒரு லிட்டர் நீரை வெளியேற்றும். மூன்று மணிநேரத்தில் ஏழு லிட்டர் நீரைக் குடித்தாலே உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும். உடலிலுள்ள சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம் ஆகியவற்றை அளவுக்கு அதிகமான நீரை குடிப்பது வெளியேற்றி விடும். இது உடலை கடுமையான சோர்வில் தள்ளும். இந்தவகையில் மூளை பாதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. நன்றி - பிபிசி

வெறும் வயிற்றில் காபி குடித்தால் செரிமானம் பாதிக்கப்படுமா?

படம்
giphy மிஸ்டர் ரோனி காபியை வெறும் வயிற்றில் குடிக்கலாமா? நெஸ்லே சன்ரைஸ், ப்ரூ இன்று பலரின் காலை நேரங்கள் விடிவதில்லை. ஆனால் இது சரிதானா? தண்ணீருக்கு அடுத்து அதிகப்படியாக உலகமெங்கும் பருகப்படுவது காபிதான். இதற்கு சாதகமான ஆராய்ச்சிகள் உலகமெங்கும் உண்டு. எப்படி கோலா பானங்களில் பாதிப்பில்லை என்று சொல்கிறார்களோ அதேபோல காபியையும் சொல்வதுண்டு. வெறும் வயிற்றில் காபியை குடித்தால் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அதிகரிக்கும். அதுவும் கூட தற்காலிகமாகத்தான். பின்னர் தொடர்ந்து நீங்கள் காபியை வெறித்தனமாக காலையில் குடித்து வந்தால், இதன் அளவு குறைந்துவிடும், காஃபீன் அளவு தினசரி 400 மி.கி அளவுக்கு குறைவாக எடுத்துக்கொள்வது நல்லது. எதற்கு தெரியுமா? அப்போதுதான் காபிக்கு நீங்கள் அடிமையாக இல்லாமல் இருப்பீர்கள். இதன்விளைவாக காபியை குடித்தே ஆகவேண்டும் என்ற நிலை வராது. காபி குடித்தால் எந்த விளைவும் ஏற்படாமல் இருந்தால் எப்படி? பதற்றம், கழிச்சல், ரத்த அழுத்தம் ஆகிய பிரச்னைகள் ஏற்படும். இதற்கு பதிலாகத்தான் தூக்கம் வராமல் சக்திமானாக உட்கார்ந்து வேலை செய்வதற்கான சக்தியை காபி வழங்குகிறது. வெறும்

கொத்துமல்லி சுவை ஓவ்வொருவருக்கும் மாறுபடுமா?

படம்
மிஸ்டர் ரோனி கொத்துமல்லியை சாப்பிடும் சிலர் அதை சோப்பின் சுவையுடன் ஒப்பிடுகிறார்களே அது ஏன்? காரணம், அவர்களின் உடல் அந்தளவு நுட்பத்தன்மையுடன் இருப்பதுதான். இதனால், கொத்துமல்லியை சுவைக்கும் ஐந்தில் ஒருவருக்கு அது சோப் சுவையைப் போல உள்ளதாக தோன்றுகிறது. இதற்கு காரணமான வேதிப்பொருள் அல்டிஹைடு. அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் 14 ஆயிரம் பேரின் டிஎன்ஏவை ஆராய்ந்தனர். அதில் இரண்டு டிஎன்ஏ மட்டும் மாறுபட்டு இருந்தது. அதுவே கொத்துமல்லியை சோப்பு சுவையில் காண்பித்த மனிதர்களுடையது. இவர்களின் மரபணுவில் அல்டிஹைடு இருப்பதே காரணம். நன்றி - பிபிசி

காபியை குடித்துவிட்டு தூங்கினால் என்னாகும்?

படம்
giphy மிஸ்டர் ரோனி காபி குடித்து தூங்கினால் என்ன விளைவு ஏற்படும்? நீங்கள் கடுமையான உழைப்பாளி. வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள். தூங்க கூட நேரமில்லை. அப்போது என்ன செய்வீர்கள்? டீயை விட காபியை இப்போது தேர்வு செய்யலாம். இதன் விளைவுகள் என்ன? பொதுவாக மிகவும் சோர்வாக இருக்கிறது. உடனே காபியை குடிக்கத் தோன்றுகிறது. உடல் சோர்வாக தூக்கம் வருவது போன்று இருந்தால் 30 நிமிடங்கள் ஓய்வு எடுப்பது நல்லது. காபி குடித்தால் இதே தூக்க நேரத்தை பத்து நிமிடங்களாக மாற்றிக்கொள்ளலாம். இது ஆழமான தூக்கத்தை ஒத்த நல்ல பயன்களைக் கொடுப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். உண்மையில் டீ, காபி குடித்தால் உங்களுக்கு தூக்கம் வராது. அப்படி தூங்கி எழுந்தாலும் மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும். எப்படி? காபி குடித்தவுடன் அதன் மூலக்கூறுகள் சிறுகுடலுக்கு செல்கிறது. அங்கிருந்து அதிலுள்ள அடென்சின் மூலக்கூறுகள் மூளையில் உள்ள செல்களுக்கு செல்கிறது. காபீனின் தன்மையால் மூளை சோர்விலிருந்து விழிக்கிறது. இந்த மாற்றங்கள் காபி குடித்த 20 நிமிடங்களிலிருந்து தொடங்கிவிடுகிறது. இதனால் காபி குடித்து எழும் நேரம் குறைகிறது. எழும்போத

கர்ப்பிணிகளுக்கு சுவையுணர்வு மாறுவது ஏன்?

படம்
giphy மிஸ்டர் ரோனி கர்ப்பிணிகளுக்கு நாக்கின் சுவை ஏன் மாறுகிறது? புளி, சாம்பல் தேடி ஓடுகிறார்கள் என்று நேரடியாக கேட்காமல் மறைத்து கேட்கிறீர்கள். காரணம் ஒன்றுதான். உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் வேகமாக அதிகரிக்கும் காலகட்டம் அது. இதனால் உடலில் நடக்கும் மாறுதல்களால் நாக்கின் சுவை அறியும் தன்மை மாறுபடுகிறது. ஜிங்க் குறைபாட்டால் சுவை அறியும் தன்மை மாறுகிறது என்று முதலில் பலரும் நினைத்து வந்தார்கள். ஆனால், 2009ஆம் ஆண்டு டோக்கியோ பல்கலைக்கழகம் செய்த ஆய்வில் ட்ரைமெஸ்டரில் கர்ப்பிணிகளின் சுவையுணர்வு மாறுபடுவதில்லை. ஜிங்க் அளவிலும் மாற்றமில்லை என்று கூறியிருக்கிறார்கள். 2006ஆம் ஆண்டு பிரிஸ்டல் பல்கலைக்கழகம் செய்த ஆய்வில், உடலில் சிறுநீர் பாதையில் பல்வேறு பிரச்னைகளை கர்ப்பிணிகள் சந்திப்பதாக கண்டறிந்து கூறினர். இதுதான் நாக்கின் சுவையுணர்வை பாதிக்கிறதா என்று உறுதியாக தெரியவில்லை. ஆனால் நாக்கின் சுவை உணர்வுக்கும் நம் மூளைக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. நன்றி - பிபிசி

உளவியல் ஆப்களால் நன்மை உண்டா?

படம்
giphy மிஸ்டர் ரோனி ஸ்மார்ட் போன்கள் ஆப்கள் நம் உளவியலை மேம்படுத்துமா? கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோர் ஆகியவை தினந்தோறும் ஆயிரக்கணக்கான ஆப்ஸ்களை வெளியிடுகின்றன. பொதுவாக ஆப்களை நீங்கள் பயன்படுத்தும்போது, அதன் விளைவாக தனிமைப்படுதல், தூக்க குறைவு, உடல் சோர்வு ஆகியவை ஏற்படும். ஆனால் உளவியல் ரீதியான அறிகுறிகளை கண்டறிந்து அதற்கான மருத்துவரை தொடர்புகொள்ள உதவும் ஆப்கள் இன்று சந்தையில் உள்ளன. இவை எல்லாமே மருத்துவமனை சென்று ஏராளமான சோதனைகளை செய்வதற்கு முன்னாடியே உங்களை சோதித்து உங்களது பிரச்னைகளை உங்களுக்கு சொல்பவை என்பதை மறந்துவிடாதீர்கள். அதைத்தாண்டி இதில் பெரிய சிறப்புகள் இல்லை. இங்கிலாந்திலுள்ள என்ஹெச்எஸ் அமைப்பு 2014இல் செய்த ஆய்வுப்படி, அங்கு வாழும் மக்கள் வாரத்தில் ஆறில் ஒருவருக்கு மன அழுத்த பிரச்னைகள் ஏற்படுவதாக கூறியுள்ளனர். அமெரிக்காவின் மசாசூசெட்சிலுள்ள போஸ்டன் நகரில் பெத் இஸ்ரேல் மருத்துவ மையம் உள்ளது. இதில் பணிபுரியும் ஜான் டோரஸ் ஆப்ஸ்களை ஆதரிக்கிறார். இலவசமாக உங்களுக்கு ஆப் ஸ்டோரில் கிடைக்கும் ஆப்களில் மிகச்சிலவே உங்களது தகவல்களை தம் ஆராய்ச்சிக்கு பயன்படுத்த

பனிக்காலத்தில் நமது மூச்சுக்காற்றை நாம் பார்ப்பது எப்படி?

படம்
giphy மிஸ்டர் ரோனி நம் மூச்சுக்காற்றை நாம் எப்படி பார்க்க முடிகிறது? டிசம்பர் தொடங்கி ஜனவரி முடியும் வரை கூட பனியின் தாக்கம் அதிகம் இருக்கும். அப்போது உங்கள் மூச்சுக்காற்றை எளிதாகப் பார்க்க முடியும். நாம் ஆக்சிஜனை இழுத்து கார்பன் டை ஆக்சைடை வெளியிடுவது போல தோன்றும். அப்போது நீர் மூலக்கூறுகளையும் நாம் ஆவியாக்கி வெளியிடுகிறோம். வாயு வடிவில் நீர் பெரியளவு ஆற்றல் இழப்பின்றிதான் உள்ளது. வெப்பமாக உள்ள நீர், உங்கள் உடலுக்குள் செல்லும்போது குளிர்கிறது. ஆனால் இதனை நீங்கள் எளிதாக உங்கள் மூச்சுக்காற்று என அடையாளப்படுத்த முடியாது. குளிர்காலத்தில் உடல் தன்னை சூடுபடுத்திக்கொள்ள முனைகிறது. அப்போது உங்கள் மூச்சுக்காற்றிலிருந்து வெளிவரும் நீர் ஆவியாதலை எளிதாக கவனிக்கமுடியும். பனிக்காலத்தில் சூழல் ஏற்கெனவே தீவிரமான அடர்த்தியில் இருக்கும். எனவே, வெயில் காலத்தை விட பனிகாலத்தில் நம் மூச்சுக்காற்றை நம்மால் கவனிக்க முடியும். பிறருக்கும் நமது மூச்சை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். நன்றி - மென்டல் பிளாஸ்

டீ பேகை அழுத்திப் பிழிந்து குடித்தால் என்னாகும்?

படம்
giphy மிஸ்டர் ரோனி க்ரீன் டீ குடிக்கும்போது டீ பேக்கை சிலர் மெதுவாக நனைத்து எடுக்கிறார்கள். சிலர் அதனை கையில் வைத்து பிழிகிறார்கள். இது ஆபத்தானதா? துணியைக்கூட இறுக்கமாக வைத்து பிழியாதீர்கள். ஆயுள் குறையும் என துணிக்கம்பெனி சொல்கிறார்கள். அதற்காக வேலைக்காரர்கள் என்ன இலவம் பஞ்சையா வைத்து தேய்த்து அழுக்கை நீக்குகிறார்கள். அடித்து பிழிகிறார்கள் அல்லவா? அப்புறம் என்ன? டீ பேக்கை அப்படி விரல்களால் கசக்கி பிழிந்தால் என்னாகும் தெரியுமா? அதிலுள்ள டானின் எனும் மஞ்சள் நிற அமிலம் டீயில் அதிகம் கலக்கும். கசப்புச்சுவை அதிகரிக்கும். இது ஒன்றும் உங்களுக்கு பெரிய ஆபத்தை கொண்டு வந்து சேர்க்காது. பயப்படாதீர்கள். நன்றி: பிபிசி 

உடல் களைத்து தளர்ந்து தூங்குகிறீர்களா?

படம்
மிஸ்டர் ரோனி மிகவும் உடல் தளர்ந்து சோர்ந்து தூங்குவது சாத்தியமா? கணக்கு பாடத்தின் முதல் அத்தியாயத்தைப் பார்த்தாலே தலை கிறுகிறுவென்று ஆகி படுத்து தூங்கியவனைப் பார்த்து இந்தக்கேள்வி. பொதுவாக நமக்கு ஐம்புலன்கள் பகலில் வேலை செய்யும். அதில் சிலருக்கு பாரபட்சமாக சில உறுப்புகள் வேலை செய்யப்பட திறன்கள் மாறும். ஆனால் இயல்பாக கண்கள் சோர்ந்து போனால், மூளை படுத்துவிடும். உடனே ரேடியேட்டருக்கு தண்ணீர் ஊற்றுவது போல எதையும் செய்ய முடியாது. உடனே தூங்கிப்போனால் உடல் புத்துணர்ச்சியோடு எழும். அப்போது உணவு, தண்ணீர் கூட உடலுக்கு தேவைப்படாது. பேய்த்தூக்கம் போல சிலர் தூங்குவார்கள். மிகவும் உடல் தளர்ந்து தூங்குவது என்பது அரிசி மூட்டை தூக்குவது, பழக்கமின்றி திருவண்ணாமலை கிரிவலம் சுற்றுவது போன்றவை செய்தால் நிச்சயம் கடுமையாக சோர்ந்து போய் தூக்கம் வரும். நன்றி - பிபிசி

மனிதர்களின் கண்களில் மாற்றம் ஏற்பட்டது எப்படி?

படம்
மிஸ்டர் ரோனி பாலூட்டிகளின் கண்களில் வெள்ளை நிறம் அதிகம் இருப்பதில்லை. ஆனால் நமது கண்களில் வெள்ளை நிறம் அதிகமாக  இருக்கிறது. என்ன காரணம்? பொதுவாக கூடி வேட்டையாடும் விலங்குகள் தமக்குள் செய்திகளை பரிமாறிக்கொள்ள இந்த வெள்ளை நிற சங்கதியை பயன்படுத்திக்கொள்கின்றன. பிற பாலூட்டிகளுக்கு இந்த நிறம் குறைவாக இருப்பதன் காரணம், பரிணாம வளர்ச்சிதான். புலி, சிங்கம்  போன்றவை தனியாக வேட்டையாடும். ஆனால் ஓநாய்கள் கூட்டாக வேட்டையாடும். இந்நேரங்களில் சின்ன சின்ன ஒலிகள், ஊளைகள் என சிக்னல்கள் கொடுத்து வேட்டையாடப் பாயும். இதில் மூத்த ஓநாய்களின் அறிவுரைப்படி இளைய ஓநாய்கள் ஆட்டு மந்தைகளை கொல்லும். பரிணாம வளர்ச்சி பங்காளிகளான மனிதக்குரங்களுக்கு கூட கண்களில் வெள்ளைநிறத் தன்மை குறைவுதான். இதனை உறுதியாக இப்படித்தான் என உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் இன்று நம்மிடையே மிக குறைவாக உள்ளன. நன்றி - பிபிசி

அலுமினிய பாயில் இனிப்பு மூலம் வயிற்றுக்குள் போனால்?

படம்
மிஸ்டர் ரோனி நான் சாக்லெட்டை ஆர்வமாக சாப்பிடும்போது, அதிலுள்ள அலுமினிய பாயிலையையும் சேர்த்து சாப்பிட்டுவிட்டேன். இது நச்சாக மாறி ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? வெறித்தனத்தை குறைத்து நிதானம் வளர்ப்பது நல்லது. விளம்பரங்களைப் பார்த்து அதே வேகத்தில் சாப்பிட்டால் எப்படி? அலுமினிய பாயில் உள்ள நச்சு வயிற்றில் உள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலத்தோடு வினைபுரியும். இதில் இரு சதவீத அலுமினிய குளோரைடு நச்சு, வயிற்றில் பாதிப்பு ஏற்படுத்தும். அதை தவிர்க்க முடியாது. ஆனால் இதனால் உடலுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏதும் கிடையாது. பயப்படாதீர்கள். உடலில் செரிக்காத சாக்லெட்டின் பகுதிகள் மலம் வழியாக வெளியேறிவிடும். நன்றி: பிபிசி 

நீளமான பெண்களின் முடி கிக் ஏற்றுகிறதா?

படம்
pixabay மிஸ்டர் ரோனி நீளமான முடி இருந்தால் பெண்களை பெண்தன்மை உள்ளவராக நினைக்கிறார்களே அது ஏன்? பொதுவாக பெரியாரியம் பேசும் பெண்கள் கூட தங்களின் நீளமான கவர்ச்சியான கூந்தலை வெட்டிக்கொள்வதில்லை. மிகச்சில பெண்கள்தான் பாப் கட்டிங் போல வெட்டிக்கொண்டு வலம் வருகிறார்கள். இயல்பாக பெண்களுக்கு முடி என்பது ஆண்களை கவனிக்க வைக்கும் ஒரு முக்கியமான அம்சம் என்பது தெரியும். எனவேதான் முடியை அவர்கள் சொத்து போல பராமரிக்கிறார்கள். 18ஆம் நூற்றாண்டு பிரான்சில் பெண்களுக்கு நிகராக ஆண்களும் ஜான் விக் போல முடியை வளர்த்துக்கொண்டு கோட் சூட் சர்க்காராக வலம் வந்தனர். ஆண்களின் உளவியல்படி நீளமான புட்டம் தொடும் முடி இருப்பது பெண்களின் கருவுறும் ஆற்றல் சரியாக இருப்பதற்கு அடையாளம் என கருதுகிறார்கள். எனவே, நீளமான முடி என்றால் ஆண்களுக்கு கிக் ஏறுகிறது. ஆண்களுக்கு இதுபோல என்ன என்று கேட்டு சிக்கல் செய்யக்கூடாது. பெண்களுக்கு இந்த மாதிரி என்பது ஆண்கள் பங்கேற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது. நன்றி - பிபிசி

மரபணு மாற்ற உயிர்களை பிறகோள்களில் உருவாக்க முடியுமா?

படம்
பிபிசி மிஸ்டர் ரோனி பூமியில் உருவாக்கிய மரபணு மாற்ற உயிர்களை நாம் பிறகோள்களில் காப்பாற்ற முடியுமா? இம்முறையில் யோசிப்பது நல்ல விஷயம்தான். ஆனால் டிஎன்ஏ முறையில் நாம் புதிய உயிரிகளை உருவாக்கினால் அவை வாழ்வதற்கு நீர் தேவை. வெள்ளியில்  நீரும் கிடையாது பனிக்கட்டியும் கிடையாது. வியாழனில் உள்ள யூரோபா நிலவில் நீர் உள்ளது. இதில் நாம் உயிர்களை உருவாக்க வாய்ப்புள்ளது. செவ்வாய் கோளில் பாக்டீரியா தாக்குப்பிடித்துவிட்டது. சாக்கடல், அன்டார்க் பகுதியிலும் கூட நுண்ணுயிரிகள் உள்ளன. நீர் இருந்தால் அக்கோளுக்கு ஏற்றபடி உயிர்களை நம்மால் உருவாக்க முடியும். நன்றி - பிபிசி

சூயிங்கம் வயிற்றில் செரிக்குமா?

படம்
giphy மிஸ்டர் ரோனி சூயிங்கத்தை செரிமானம் செய்ய எத்தனை நாட்கள் தேவைப்படும்? சூயிங்கத்தில் செரிமானம் செய்ய வயிறு பெரும்பாலும் சிரமப்படாது. அதில் பெரும்பாலும், இனிப்பு மற்றும சோயாபீன் கலவைகள் இருக்கும். ஈரமான குடலில் சூயிங்கம் ஒட்டாது. பெரும்பாலும் மலத்தின் வழியாக வெளியே வந்துவிடும். சிறுவர்கள் சூயிங்கம்மை நிறைய விழுங்கிவிடும்போது செரிமானக்கோளாறு ஏற்படும். இதன் விளைவாக, ஆபரேஷன் செய்த அதனை அகற்றும சூழல் ஏற்படலாம். நன்றி - பிபிசி 

நம் காதுகளை மட்டும் தூங்கும்போது கூட மூடமுடிவதில்லை ஏன்?

படம்
giphy மிஸ்டர் ரோனி கண்களை மூடுவது போல காதுகளை நாம் ஏன் மூடிவிட முடிவதில்லை? கண்களை மூடினால் காது விழித்திருக்கும். அப்போதுதான் நம்மை நாம் காப்பாற்றிக்கொள்ள முடியும். இல்லையெனில் நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை நாம் எப்படி அறிந்துகொள்வது? கண்களை மூடிக்கொண்டு தூங்கினாலும், வீட்டுக்குள் யாரே உள்ளே வருவதை எப்படி அறிகிறோம்- காதுகள் திறந்திருப்பதால்தான். இது ஆதிகாலத்திலிருந்து நமக்கு இயற்கை கொடுத்துள்ள ஃபயர்வால் என்று நினைத்துக்கொள்ளுங்கள். எந்த வருத்தமும் இருக்காது. அனைத்து விலங்குகளுக்கும் இந்த அம்சம் பொருந்தும். ஆனால் சீல் போன்றவை நீந்தும்போது மட்டும் அதன் காதுகளை மூடிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. நன்றி - பிபிசி 

சிறப்பு அங்காடிகளில் முட்டை குஞ்சு பொரித்து வருவது உண்டா?

படம்
giphy மிஸ்டர் ரோனி சூப்பர் மார்க்கெட் முட்டையில் கோழிக்குஞ்சு வருமா? அதற்கு வாய்ப்பு லேது பாவா. காரணம்,  கோழிகளின் பண்ணையில் பெரும்பாலும் இருப்பது பெண் கோழிகள்தான். அதுதான் பெயரிலே கோழிப்பண்ணை என்று இருக்கிறதே என கடிஜோக் சொல்லாதீர்கள். சேவல்களின் தேவை இன்று கிடையாது. இனப்பெருக்கம் செய்விப்பதற்கான பலவழிகளை அறிவியல் கூறியுள்ளது. எனவே கோழி முட்டையில் குஞ்சு பொரிப்பதற்கான வாய்ப்பு கிடையாது. வாத்துப்பண்ணைகளில் ஆண், பெண் என இரு வாத்துகளும் ஒன்றாக சுற்றித்திரிவதால் அவற்றின் முட்டைகள் சூப்பர் மார்க்கெட்டில் குஞ்சு பொரித்த செய்திகள் வந்திருக்கின்றன. நன்றி - பிபிசி

ஆண்களில் சிலருக்கு மட்டும் அதிக முடிகள் இருப்பது ஏன்?

படம்
giphy மிஸ்டர் ரோனி சிலருக்கு உடலில் அதிக முடிகள் இருக்கிறதே... அதற்கு காரணம் என்ன? ஏறத்தாழ பனிமனிதன் போல சிலர் தோன்றுவதற்கு அவர்களின் உடலிலுள்ள முடி காரணம். இவை மரபணு மற்றும் டெஸ்டோஸ்டிரோன் அளவு கூடுவதால் ஏற்படும் விளைவுகள் ஆகும். இதற்கான சிகிச்சைகள் இன்று கிடைக்கின்றன. அவற்றை சரி செய்துகொள்ளலாம். ஒரு வகையில் சில பெண்களுக்கு உடலில் இதுபோன்ற முடிகொண்ட ஆட்களைப் பிடிக்கலாம். எல்லாம் ஆதிமனிதனின் மீதான பாசம்தான். முடிகள் இருந்தால் அதற்கு மரபணுரீதியான சிகிச்சை என்பதை விட அவற்றை ட்ரிம் செய்துகொள்வது நல்லது. முடிகள் இருந்தால் வியர்க்கும். அதன்மூலம் பாக்டீரியாக்கள் பிரச்னை ஏற்படலாம். கவனமாக இருங்கள். நன்றி - பிபிசி  

நேற்று இன்று நாளை - நாஸ்டாலஜியா நல்லதா?

படம்
giphy மிஸ்டர் ரோனி நாஸ்டாலஜியா நல்லதா கெட்டதா? பொதுவாக நாம் கடந்த காலத்தில் செய்த தில்லுமுல்லுகள், போக்கிரித்தனங்கள், கோமாளித்தனங்கள் இவைதானே இன்று நம்மை வடிவமைத்துள்ளன. அதனால்தான் ஜென் இசட், மில்லினிய இளைஞர்களைக்கூட இறந்த காலத்திற்குள் சென்று பார்க்கும்படி திரைப்படங்கள் எடுக்கிறார்கள். இதன்மூலம் கடந்த காலத்தில் நடந்த சமாச்சாரங்களை சற்று கண்கொண்டு பார்க்கலாம். இன்றும் காமெடி என்றால் வடிவேலுவை பேசுபவர்கள் அடுத்து சபாபதி படத்து காமெடியில் சென்று முடிப்பார்கள். காரணம், அந்த பட கலைஞர்கள் இன்றைய கலைஞர்களுக்கு ஊக்குமூட்டுபவர்களாக இருந்திருப்பார்கள். பொதுவாகவே வரலாறு தெரிந்தால்தானே வரலாறு படைக்க முடியும் என்று கூறுவார்கள். அதுதான் விஷயம். இதில் எதிர்மறையான விஷயங்களை விட நேர்மறையான சங்கதிகள் நிறைய உள்ளன. எனவே நாஸ்டாலஜியாவுக்கு சென்று வருவது உங்களை புத்துணர்வாக்கும் வாய்ப்பு உள்ளது. நன்றி - பிபிசி