இடுகைகள்

இறப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆன்மா இல்லாத அரக்கனை எதிர்கொள்ளும் டைலன் டாக்கின் போராட்டம்! - இது கொலையுதிர் காலம்

படம்
  டைலன் டாக் சென்னை புத்தகத்திருவிழா 2021 நந்தனம் ஒய்எம்சிஏ டைலன் டாக் துப்பறியும் இது கொலையுதிர்க்காலம் ஆக்கம் - செர்ஜியோ போனெல்லி தயாரிப்பு சன்ஷைன் லைப்ரரி டைலன் டாக் இங்கிலாந்தில் 18ஆம் நூற்றாண்டில் நடைபெறும் கதை. இதில் முதல் காட்சியே டெர்மினேட்டர் படம் போல அதிர வைக்கிறது. முரட்டு மனிதர் அலுவலகம் ஒன்றுக்குள் வந்து ஹண்ட் என்பவரைப் பற்றி கேட்டு அவரை  சந்திக்க அனுமதி கேட்கிறார். அப்பாயின்ட்மெண்ட் இல்லாதவர் என்பதால் அவரை அனுமதிக்க முடியாது  என வரவேற்பறைப் பெண் சொல்ல, அந்த மர்ம மனிதர் ஹண்ட் என்று சொல்லியபடி உள்ளே செல்கிறார்.  பாதுகாப்பு அதிகாரிகள் வருவதற்கு முன்னரே ஹண்டை வேட்டையாடத் தொடங்கிவிடுகிறார் அவர். இதில் அலுவலகமே ரத்தக்களறியாகிறது. யார் இந்த மனிதர், அவருக்கும் ஹண்ட் என்பவருக்கும் என்ன தொடர்பு என்பதுதான் கதையின் அமானுஷ்ய புள்ளி.  டைலன் டாக் டைலன் டாக்கைப் பொறுத்தவரை கதையில் சண்டைகளை விட நுணுக்கமான மூளை விளையாட்டும், விதியின் காய்நகர்த்தல்களும் , உணர்ச்சிகரமான காட்சிகளும் நிறைந்திருக்கும். இந்த நூலிலும் புராணகால சம்பவம் ஒன்று ஜெர்மனியிலிருந்து தொடங்கி இங்கிலாந்தில் வாழும் டைலன் டாக

ஆம்புலன்ஸ் வாகனத்தை வேகமாக இயக்க உதவியவர்!

படம்
              ஆம்புலன்ஸ் வாகனத்தை வேகமாக இயக்க உதவியவர் ! கடந்த ஆண்டு மார்ச் 28 அன்று , சிவ்பால் சிங் , தனது இரண்டரை வயது மகனை விபத்தில் இறந்தார் . விபத்து நடந்து அந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் சரியான நேரத்திற்கு வரவில்லை என்பதால் , மகனைக் காப்பாற்ற முடியாமல் போன வருத்தம் அவரது மனதில் இப்போதும் உள்ளது . இதற்காகவே 31 வயதான சிவ்பால்சிங் , ஆம்புலன்ஸில் பணியாற்றுவதற்காக 350 ஊழியர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை வழங்கியுள்ளார் . மகன் இறந்துபோன பதினைந்து நாட்களுக்குள்ளாகவே கோவிட் தொடர்பான பல்வேறு சிகிச்சைகளை வழங்குவதற்கான பணியில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார் . சேவ் லைஃப் எனும் நிறுவனத்தில் இணைந்து அவசரகால உதவிகளை விபத்துக்குள்ளானவர்களுக்கு வழங்குவது பற்றி பயிற்சி அளித்து வருகிறார் . இவரது குழுவினர் ஆயிரம் பேர்களுக்கும் , இவர் மட்டுமே 350 பேர்களுக்கும் அவசரகால உதவிகளைக் கற்றுக்கொடுத்துள்ளனர் . ஆம்புலன்ஸ் தாமதமின்றி செயல்பட்டால் மட்டுமே நோயாளிகளை நாம் காப்பாற்றமுடியும் . ஒருமணிநேரத்திற்குள் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு செல்லாதபோது நாம் உயிரை காப்பாற்றுவது கடினம் என்றார் சிவ்பால்

வீட்டுப்பூனைகளால் காட்டுயிர்கள் அழிந்து வரும் அவலம்!- மேற்கு நாடுகளில் மக்களுக்கும் சூழலியலாளர்களுக்கும் வலுக்கும் மோதல்!

படம்
              காட்டு விலங்குகளை அழிக்கும் வீட்டுப்பூனைகள் ! நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த தில் பர்க் பல்கலைக்கழக பேராசிரியர் ஆரி ட்ரோபோர்ஸ்ட் . இவர் , அண்மையில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகள் காட்டில் உள்ள சிறுவிலங்குகளை வேட்டையாடுவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டார் . இதுவரை ஓநாய்களின் அழிவு , விலங்குகளை வேட்டையாடுவதற்கு அரசு அனுமதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கையாண்டவர் ட்ரோபோர்ஸ்ட் . ஆனால் அதைவிட பூனைகளைப் பற்றி இவர் எழுதிய ஆய்வறிக்கைக்கு கொலைமிரட்டல்களை சந்தித்து வருகிறார் . ஆஸ்திரேலியா , இங்கிலாந்து , அமெரிக்கா , நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பூனைகளை வளர்ப்பவர்களும் , சூழலியலாளர்களு்ம இதுதொடர்பாக தீவிரமாக மோதி வருகின்றனர் . ஐரோப்பிய நாடுகளில் பூனைகள் வேட்டையாடுவதை அனுமதிக்கும் சட்டத்தை மாற்றவேண்டி சூழலியாளர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள் . அமெரிக்காவில் மட்டும் வீட்டுப்பூனைகளால் 630 கோடி சிறு காட்டு விலங்குகளும் , 130 கோடி பறவைகள் பலியாகியுள்ளன என்பதை ஆய்வறிக்கை வெளிப்படுத்தியுள்ளது . நெதர்லாந்தில் செய்த ஆய்வில் இதைப்போல இரு

கொரோனாவை தீரத்துடன் எதிர்த்த வீரர்கள்!

படம்
          காவல்துறை உங்கள் நண்பன் ! நிஷா சாவன் காவல்துறை துணை ஆய்வாளர் மும்பை புனேவிலுள்ள கிராமத்தை சேர்ந்தவர் நிஷா சவான் . இவர் , வாசி எனுமிடத்தில் தங்கியிருந்து கேர்வாடி காவல்நிலையத்திற்கு வந்து துணை ஆய்வாளராக பணிசெய்துகொண்டிருந்தார் . ஒருநாள் கணவரால் வன்முறையாக தாக்கப்பட்ட பெண்ணின் புகாரைப் பதிவு செய்துகொண்டிருந்தார் . புகார் கொடுத்த பெண் மாஸ்க் அணியவில்லை . அதை அப்போது பெரிதாக நிஷா எடுத்துக்கொள்ளவில்லை . ஆனால் சில நாட்களில் புகார் கொடுத்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு என உறுதியானது . அடுத்தடுத்த நாட்களில் நிஷாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . ஆனால் இவற்றை தனது பெற்றோருக்கு அவர் கூறவில்லை . பதினெட்டு நாட்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு சென்று வந்திருக்கிறார் . நோயிலிருந்து குணமாகி வந்த நிஷா , காலை எட்டு மணி முதல் மறுநாள் அதிகாலை இரண்டு மணி வரை டூட்டி பார்த்துவிட்டு வீடு திரும்பியுள்ளார் . இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் புனேவிலிருந்து உத்தரப்பிரத்தேசம் , ராஜஸ்தானுக்கு ரயில் , பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர் . அதற்கு முன்னர் அவர்கள் பத்து பேர்களை குழுவாக ப

நண்பர்கள் இறப்பைக் கண்ணில் பார்த்தும் கடமையில் தவறாமல் கடிதங்களை, மருந்துகளை வீடுகளுக்கு விநியோகித்த தபால்காரர்!

படம்
            அஞ்சல் வழியாக நம்பிக்கை ! பிரதீப் சாகு அஞ்சல்துறை ஊழியர் , மும்பை அஞ்சல்துறை ஊழியர்கள் கொரோனா காலம் முழுவதும் அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு கொண்டு சென்று கொடுத்து உதவியுள்ளனர் . 54 வயதாகும் சாகு , இந்தியா போஸ்டில் இருபத்தைந்து ஆண்டுகளாக பணிபுரிந்துவருகிறார் . திலக் நகர் , செம்பூர் , கோவண்டி , கர்லா என மும்பையைச் சுற்றியுள்ள நகரங்களுக்கு சைக்கிளில் கடிதங்கள் விநியோகித்து வந்தார் . அங்கு வாழும் மக்களுக்கு மிகவும் அறிமுகமான நபராக மாறிவிட்டார் பிரதீப் சாகு . ஆனால் கொரோனா காலம் மக்களுக்கு மட்டுமல்ல சாகுவுக்கும் பயம் ஏற்படுத்திய காலமாகவே உள்ளது . மூன்று குழந்தைகளுக்கு தந்தையான சாகு நோய்த்தொற்று பயம் விலகாமலேயே வேலை செய்து வந்துள்ளார் . அவரின் நண்பர்களை கொரோனாவுக்கு பலிகொடுத்தும் கூட பணியை கைவிடமுடியாமல் செய்தே ஆக வேண்டிய சூழல் . இந்தியா போஸ்ட் நிறுவனம் , கிராம ப்புறங்களில் அமைந்துள்ள பெரிய வலைப்பின்னலான அமைப்பு . மொத்தம் 1,56, 600 அஞ்சல் கிளைகள் நாடெங்கும் அமைந்துள்ளன . அரசின் நிதியுதவி , பாதுகாப்பு சாதனங்களை வீடுகளுக்கு

பனாரஸ் போரில் இறந்து போன மருத்துவரின் நண்பர், மறுபிறப்பு எடுத்து வந்தால்? - எட்கர் ஆலன்போவின் மூன்று கதைகள் - மருதா பாலகுருசாமி

படம்
                எட்கர் ஆலன்போவின் மூன்று கதைகள் மருதா பாலகுருசாமி இதில் இடம்பெற்றுள்ள மம்மியுடன் ஒரு உரையாடல் , கரடுமுரடான மலைகளின் கதை , எலிநோரா என அனைத்து கதைகளும் அமானுஷ்யம் திகில் கலந்தவைதான் . இதில் எலிநோரா மூன்றாவது கதை . புல்வெளி , பனித்துளி என காதல் நெஞ்சமெங்கும் கொட்டுவது போலான கதை . இறந்துபோன காதலிக்கு செய்துகொடுக்கும் சத்தியத்தை காப்பாற்ற முடியாத காதலனின் கதை . ஆனாலும் நேர்மையாக காதலித்தால் போதும் என அதுவே சத்தியத்தை மீறியதற்கான விஷயத்தை நேர் செய்துவிடும் என்கிறார்கள் . கதையில் எழுதப்பட்ட கவித்துவமான வார்த்தைகளை பிரமாதமாக உள்ளன . காதலை மறக்கமுடியதாக மாற்றுகின்றன . மம்மியுடன் ஒரு உரையாடல் என்ற கதை எகிப்திலிருந்து கொண்டு வரப்பட்ட மம்மியின் உடலை சோதிப்பதில் தொடங்குகிறது . அதன் உடல் உள்ள பெட்டியை வர்ணிக்கும்போது , நமது மனதில் அதற்கான திகில் பனி சூழத்தொடங்குகிறது . ஆனால் அந்தளவு பயந்துவிட அவசியமில்லை என பிறகுதான் நாம் புரிந்துகொள்கிறோம் . காரணம் இந்த மம்மிக்கு இறப்பு நேர்ந்து பாடம் செய்யப்படவிலை . மூளையும் , குடலும் உள்ளன . எனவே இந்த மம்மி மனிதர்களுடன்

திரில்லர் படங்களை பார்ப்பது ஆரோக்கியத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும்! - ரீலா? ரியலா?

படம்
    ரியலா ? ரீலா ? 1. திகில் , திரில் திரைப்படங்களைப் பார்க்கும்போது நம் உடலிலுள்ள ரத்தம் உறையும் . ரியல் : திகில் , திரில் நிறைந்த படங்களை இரவில் பார்த்திருப்பீர்கள் . அப்போது உங்களை அறியாமல் இதயத்துடிப்பு அதிகரிக்கும் . வியர்க்கும் . ஆனால் உங்கள் ரத்தத்தில் ஏதாவது மாற்றங்கள் நடந்திருக்கும் என யோசித்திருக்கிறீர்களா ? திரைப்படக்காட்சி வழியாக படத்தோடு ஒன்றிப்போகும்போது , நம் உடலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன . அதன் விளைவாக ரத்தத்தில் உள்ள புரதமான ஃபேக்டர் 7 மாறுதலுக்கு உள்ளாகிறது . இதன் விளைவாக ரத்தம் தற்காலிகமாக ஜெல் போல மாறுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் . படங்கள் பார்ப்பவர்களுக்கு மட்டும்தான் என்றில்லை . பங்கி ஜம்ப் விளையாட்டை மேற்கொள்கிறவர்களுக்கும்கூட உடலில் இந்த மாற்றம் ஏற்படுகிறது என ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர் . ஆபத்து ஏற்படும்போது உடல் தன்னைக் காத்துக்கொள்ளும் வழிமுறைதான் இது . வேறொன்றுமில்லை . 2 . உயரமான கட்டடத்திலிருந்து சில்லறைகளை கீழே வீசி , மனிதர்களின் தலையில் விழுந்தால் அவர் இறந்துவிடுவார் . ரியல் : முட்டாள்கள் தின கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒன்று

பாதாளச்சாக்கடைகளின் மூடி வட்டமாக இருப்பது ஏன்? பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
                  கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசிப்பது ஆபத்தானதா ? கார்பன் உள்ள பொருட்களை எரித்தால் உருவாகும் வாயுவின் பெயர்தான் கார்பன் மோனாக்சைடு . மோசமான வாயுக்கள் சுவாசிக்க தடுமாற்றம் தரும் வாசம் வரும் . கார்பன்மோனாக்சைடை ஒருவர் சுவாசிக்கும்போது அதனை அறிய முடியாது . காரணம் , இதற்கு நிறம் . வாசனை கிடையாது . இந்த வாயுவால் நிறைய மக்கள் அமெரிக்காவில் இறந்துள்ளனர் . அமெரிக்காவில் இந்த வாயுவை தற்செயலாக சுவாசித்து நிறைய மக்கள் இறப்பை எதிர்கொண்டுள்ளனர் . அமெரிக்காவில் இப்படி ஆண்டுதோறும் 170 பேர் இறந்துள்ளனர் . சிலர் இதனை தற்கொலைக்கும் பயன்படுத்துகின்றனர் . இன்று தயாரிக்கப்படும் கார்கள் பலவும் 70 சதவீதம் கார்பன் மோனாக்சைடை குறைத்து வெளியிடுகின்றன . மரங்களை வெட்டி எரிப்பது , எரிவாயுவில் இயங்கும் ஜெனரேட்டர்கள் ஆகியவை கார்பன் மோனாக்சைடுக்கு முக்கிய காரணிகளாக உள்ளன . ஒருவர் இந்த வாயுவை சுவாசிக்கும்போது அவருக்கு சுவாசிப்பது கடுமையாகும் . ரத்தவோட்டத்தில் ஆக்சிஜனை விட எளிதாக இந்த வாயு கலப்பதால் , உடலில் ஆக்சிஜன் பற்றாக்குறையாகும் . இதன் விளைவாக , குமட்டல் , தலைவலி ஏற்