இடுகைகள்

ஏன்?எதற்கு?எப்படி ரோனி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அட்ரினலின் சுரப்பு ஆபத்தா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி நாம் பயப்படும்போது உடல் நடுங்குவது ஏன்? இஎம்ஐ கட்டாதபோது, மனைவி சொன்ன காய்கறியை வாங்காதபோது, பிறந்தநாளுக்கு பார்ட்டி என்ற சொல்லை நண்பன் சொல்லுவானோ என நினைக்கும்போது நம் உடல் நடுங்கத்தொடங்கும். இதற்கு காரணம், மூளையிலுள்ள அமைக்தலா எனும் பகுதியாகும். இந்நேரத்தில் மூளையில் அட்ரினலின் வேதிப்பொருள் அபரிமிதமாக சுரக்கும். இதன் விளைவாக காந்தியின் நோஞ்சான் உடல் கொண்டவர்களின் உடலும் கூட வேகமாக முறுக்கிக்கொண்டு வலிமை பெறும். இதற்கு காரணம், அப்போது ஏற்படும் நெருக்கடிக்கு ஏற்ப அதனை சமாளிப்பதற்குத்தான். அதிகளவிலான அட்ரினலின் சுரப்பது உடலை கட்டுப்படுத்தமுடியாதபடி மாற்றிக்கொண்டிருக்கும். இதனை அறிவிக்கும் உடல்மொழிதான் உடல் நடுங்குவது. இதன் அர்த்தம் நீங்கள் ஹெர்குலஸ் போல வலிமை பெற்றவர் ஆகிறீர்கள் என்பதல்ல. அந்த நேரத்திற்கு அப்படி இருப்பீர்கள். அம்புட்டுத்தேன். நன்றி: பிபிசி

பல்துலக்கியவுடன் ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் கசப்பது ஏன்?

படம்
ஏன்? எதற்கு ?எப்படி? மிஸ்டர் ரோனி பல் துலக்கியதும் ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் ஏன் கசக்கிறது? பற்பசையில் உள்ள சோடியம் லாரல் சல்பேட்தான், பிரஷ்ஷில் தேய்த்து பற்களிலுள்ள மாவுப்பொருட்களை அகற்ற உதவுகிறது. அதேசமயம், இந்த வேதிப்பொருட்கள் வாயில் நுரையை உருவாக்குகிறது. அதேசமயம் சுவை உணர்வு மொட்டுகளை மெல்ல உணர்விழக்க செய்கிறது. பாஸ்பாலிபிட்ஸ் எனும் வேதிப்பொருளை செயலிழக்க வைப்பதால், ஆரஞ்சு ஜூஸ் குடிக்கும்போது உங்களுக்கு அதன் சுவை தெரிவதில்லை. இது ஆரஞ்சின் இனிப்பை மட்டுமே கட்டுப்படுத்தும், அதன் துவர்ப்பு கசப்பை அப்படியே உங்களுக்கு வழங்கி விடும். நன்றி: பிபிசி 

99.9 சதவீதம் கிருமிகளை அழிக்க முடியுமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி 99 சதவீத கிருமிகளை கொல்வோம் என கழிவறை கிருமிக்கொல்லி நிறுவனங்கள் கூறுகின்றன. அப்போது மீதியுள்ள 1 சதவீத கிருமிகளைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டுமா? 99 சதவீத தூய்மை, பாக்டீரியாக்களைக் கொல்கிறோம் என்று கூறுவது பைத்தியக்காரத்தனமானது. லேபில் செய்யும் ஆய்வு அடிப்படையில் 99 சதவீதம் என்று கூறுகின்றனர். ஆனால் இது வியாபாரத்திற்கான ஐடியா. மற்றபடி உங்கள் குடலை அல்லது தரையை 99.9 சதவீதம் துடைப்பதால் என்ன ஆகப்போகிறது.  நோய் எதிர்ப்பு சக்தி திடமாக இருந்தால், பாக்டீரியா, பூஞ்சைகளைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. எனவே, ஒரு சதவீதம் மட்டுமல்ல; 99.9 சதவீத கிருமிகளைப் பற்றியும் நாம் கவலைப்பட வேண்டியதில்லை.  செய்தி, படம் - பிபிசி

சன்ஸ்க்ரீம் பயன்படுத்தினால் கேன்சர் வருமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி நிச்சயமாக கிடையாது. சூரியனிலிருந்து வரும் ஒளியில் புற ஊதாக்கதிர்களால் ஏற்படும் பாதிப்பை சன்ஸ்க்ரீம்கள் தடுக்கின்றன. இதனால் தோல் பாதிப்படையாமல் இருக்கிறது. பொதுவாக, விட்டமின் டி எனும் சத்தை சூரிய ஒளி நம் தோலில் பட்டால் மட்டுமே தயாரிக்க முடியும். இதனை உடலில் ஈர்க்க கால்சியம் சத்து அவசியம். அதேசமயம் அளவுக்கு மீறி, புற ஊதாக்கதிர்கள் உடலில் பட்டால் தோல் கேன்சர் வர வாய்ப்புள்ளது. இங்கிலாந்தில் 16 ஆயிரம் பேர் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக மக்களைப் பாதிக்கும் புற்றுநோய் லிஸ்டில் தோல் புற்றுநோய் ஐந்தாவது இடத்தில் உள்ளது. செய்தி படம் - பிபிசி

கேரமல் சாக்லெட்டுகளை அதிகம் சாப்பிடுகிறீர்களா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி உப்பும், சர்க்கரையும் கலந்த சாக்லெட்டுகளை அதிகமாக சாப்பிடுவது ஏன்? காரணம், உப்பும் சர்க்கரையும் கலந்த சாக்லெட்டுகள் மூளையில் ஏற்படுத்தும் மகிழ்ச்சிகர உணர்வுதான். வட இந்திய உணவு, தென்னிந்திய உணவு என சாப்பிட்டு சோர்ந்த வயோதிக அன்பர்கள்,  கேரமல் சாக்லெட்டுகள், அதே டேஸ்டில் அமைந்த ஐஸ்க்ரீம்களில் சொக்கிப்போவது இதனால்தான். இதனை ரோனி, சேட்டா கடையில் காபி பைட் வாங்கி சாப்பிட்டுவிட்டு சொல்லவில்லை. 2016 ஆம் ஆண்டு ஃப்ளோரிடா பல்கலைக்கழக ஆய்வு கூறுகிறது. செய்தியும் படமும்  - பிபிசி -லூயிஸ் விலாஸன்

சிம்மெட்டரி வடிவம் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி இயற்பியலாளர்கள் ஏன் சிம்மெட்டரி வடிவம் குறித்து பேசியபடி இருக்கிறார்கள்? சிம்மெட்டரி என்பது வரிக்குதிரைகளின் உடலிலுள்ள பேட்டர்ன்கள் போலத்தான். இதனைப் பேசக்காரணம், அவை எதிர்காலத்தில் ஆற்றல் துறையில் பயன்படும் என்று அவர்கள் நம்புகிறார்கள். சிம்மெட்டரிகளின் தொடர்பு பற்றி நூறாண்டுகளுக்கு முன்பே ஜெர்மன் கணிதவியலாளர் எம்மி நோதர் கூறியிருக்கிறார். இது விண்வெளியில் உள்ள ரகசியங்களைக் கண்டுபிடிக்க உதவும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். நன்றி: பிபிசி படம் பின்டிரெஸ்ட்

இதயம் சற்றே இடப்பக்கம் அமைந்துள்ளதற்கு காரணம் இதுதான்!

படம்
ஏன்? எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி இதயம் ஏன் சற்று இடப்பக்கமாக உள்ளது? இதயத்தின் இடது வென்ட்ரிக்கிள் உடல் முழுக்க ரத்தத்தை பம்ப் செய்யும் வேலையைச் செய்கிறது. இதற்கு அதிக இடம் தேவைப்படுகிறது. இதயத்தின் லப்டப் சத்தம் உங்களுக்கு இதை உறுதிப்படுத்தும். இதில் விதிவிலக்காக சில பேருக்கு பத்தாயிரத்தில் ஒருவருக்கு வலது பக்கம் அமைந்திருக்கும். இதற்குப் பெயர்  dextrocardia’. படம் செய்தி - பிபிசி

ஆண்களுக்கு மூன்று மார்பக காம்புகள் சாத்தியமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி ஆண்களுக்கு மூன்று மார்பக காம்புகள் இருக்குமா? ஏன் இப்படி உருவாகிறது? பெரும்பாலான பாலூட்டிகளுக்கு நிறைய மார்பக காம்புகள் உண்டு. மனிதர்கள் தங்கள் பரிணாம வளர்ச்சியில் ஒரு செட் மார்பக காம்புகளோடு நிற்கிறார்கள். இன்றும் பதினெட்டு நபர்களில் ஒருவருக்கு இதுபோல மூன்று மார்பக காம்புகள் உண்டு. இதில் சில ஜீன்கள் மீண்டும் தூண்டப்பட்டால் இப்படி காம்புகள் உருவாக வாய்ப்புண்டு. இந்த ஜீனின் பெயர்  NRG3. இது ஒரு பெரிய குறைபாடு கிடையாது. விரும்பினால் நீங்கள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கிக்கொள்ளலாம். 

மது குடித்தால் மூளைக்குள் என்னாகிறது?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி மது குடித்தால் பதற்றம் ஏன் அதிகரிக்கிறது? காதலில் பிரேக் அப் ஆகியிருக்கிறது என்றால் டாஸ்மாக்கில் போய் கல்ப்பாக சரக்கு போட்டீர்கள் என்றால் உடனே போனை எடுத்து காதலியிடம் சண்டை போடுவீர்கள். வம்பு இழுப்பீர்கள். காரணம், மது உள்ளே சென்றதும் உங்கள் மூளையில் உடலை தளர்வு செய்வது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. அதேசமயம் அப்போது உங்கள் மனதை எது ஆட்கொண்டிருக்கிறதோ அந்த உணர்வை சற்றே உயர்த்தும். இதன்காரணமாக கோபத்துடன் டாஸ்மாக் செல்பவர்கள், சரக்கை அடித்து விட்டு வெளியே வரும்போது கொலை செய்துவிடலாம் என்ற எண்ணத்துடன் இருப்பார்கள். எனவே, ஃபாரம் மாலில் எலைட் பார் திறந்திருக்கிறார்கள். அங்கு வாங்கி வீட்டில் வைத்து அருந்திவிட்டு கலவரம் செய்யாமல் கமுக்கமாக படுத்து தூங்குங்கள். செய்தி - படம் - பிபிசி

ஒருவர் அழகானவர் என்று எப்படி முடிவு செய்கிறீர்கள்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி ஒருவர் அழகாக இருக்கிறார் என நாம் முடிவு செய்வதற்கு காரணம் என்ன? ரேமண்ட் சர்ட், கெனித் பார்க்கர் பேண்ட் போட்டதற்காக ஒருவரை நாம் அழகாக இருக்கிறார் என்று கூறிவிடுவதில்லை. காரணம், உடை ஒருவரை கவனிக்க வைக்கலாம். ஆனால் கண்கள்தான் அவர் அழகாக இருக்கிறாரா இல்லையா என்று கூறும். அப்படி கூறுவதற்கான விஷயமாக உளவியலாளர்கள் வரையறுப்பது முகத்தின் வடிவம். நீளமாக, வட்டமாக சதுரமாக என பெரும்பாலும் யாரையேனும் நினைவுபடுத்தும் பழகிய முகம்போல இருப்பவர்களே அழகானவர்கள் என்று கூறப்படுகிறார்கள். நாம் இப்படி சொன்னதற்காக, மனைவியையோ, காதலியையோ நீ அவளைப்போல என உதாரணம் சொல்லி வாங்கிக் கட்டிக்கொண்டால், எங்களைக் குற்றம் சொல்லாதீர்கள். நன்றி:பிபிசி

கேரட் தின்றால் இருட்டில் பார்க்க முடியுமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி கேரட் தின்றால் இருட்டில் கண்கள் தெரியுமா? கண்களில் ஆரோக்கியத்திற்கு காய்கறிகள் நல்லது. கேரட்டும் அப்படியே. அதற்காக நாய், பூனை போல உங்கள் கண்கள் இருட்டிலும் கவனிக்கும் திறன் பெறமுடியாது. கேரட்டிலுள்ள பீட்டா கரோட்டின், கண்களிலுள்ள ரெட்டினாலுக்கு உதவுகிறது. இதனால் கண்பார்வை ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறலாம். இரண்டாம் உலகப்போரில் இரவில் தாக்கிய ஜெர்மனி நாட்டு விமானங்களை சுட்டுவீழ்த்த கண்பார்வை இல்லை என வீர ர்கள் தடுமாறினர். அப்போது அவர்களுக்கு அரசு கேரட்டை வழங்கியதாகவும், அதனால் அவர்கள் ஜெர்மனியை வீழ்த்தியதாகவும் கதை உண்டு. ஆனால் அது உண்மையல்ல. ரெட்டினாலிலிருந்து கிடைக்கும் ரெட்டினல் எனும் சுரப்பி கண்பார்வை, பெருக உதவுகிறது. மற்றபடி விட்டமின் ஏ வீக்காக இருந்தால் ஸ்பெக்ஸ் மேக்கர்ஸிடம் அப்பாய்ட்மெண்ட் கேட்டு கண்ணாடி வாங்கி போட்டுக்கொள்வதே நல்லது. நன்றி - பிபிசி

பெட்ரோல் டேங்கில் சர்க்கரை போட்டால் என்னாகும்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி வாகனங்களின் டேங்கில் சர்க்கரையைப் போட்டால் இஞ்சின் சேதமாகுமா? கொட்டும் சர்க்கரை வீணாகும். அடுத்து பர்சின் பணம் காலியாகும். நிறைய படங்களைப் பார்த்துவிட்டு அந்த பாதிப்பில் கேட்கிறீர்கள். ஆனால் உண்மையில் சர்க்கரை என்பது பெட்ரோல், டீசலில் கரையும் தன்மை கொண்டதல்ல. லிட்டர் அளவில் ஒரு டீஸ்பூன் என்பது பிரச்னை அல்ல. ஆனால் பாரி சுகர் போன்ற பாக்கெட்டுகளை வாங்கி கிலோ கணக்கில் கொட்டினால் டேங்க் முழுக்க நிறையும் சர்க்கரை வண்டி இயக்கத்திற்கான பெட்ரோல், டீசலை வண்டிக்கு செலவிட விடாது. மற்றபடி மெக்கானிக் உங்களது பர்சின் கனம் குறைக்கச்செய்யும் வித்தைகள் இதில் வராது. இஞ்சின் போயிடுச்சு சார் என்று கூறுவது சும்மா ஹம்பக். டேங்கை சுத்தம் செய்தால் போதும். பத்மினி கார் முதல் போர்ச் கார் வரை பிரமாதமாக ஓடும்.

வெயிலில் நின்றால் கொழுப்பு குறையுமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி சூரிய ஒளியில் நின்றால் கொழுப்பு குறையுமா? சூரிய ஒளி தோலில்பட்டால் உடல் விட்டமின் டி சத்தை தயாரித்துக்கொள்கிறது. இது கொழுப்பு குறைய உதவுகிறது என்று புரிந்துகொள்ளுங்கள். கோடையில் நீங்கள் தோட்டவேலை செய்தால் வியர்வை வரும். எடை குறையும். பனிக்காலத்தில் இதைச் செய்யமுடியாது. எனவே டயட்டில் இருந்து எடை குறைப்பதே சிறப்பு. கொழுப்பு குறைய வெயிலில் நின்று நீர்ச்சுருக்கம் ஏற்பட்டுவிடப்போகிறது. ஜாக்கிரதை நன்றி: பிபிசி

ஆண்களின் வன்முறைக்கு காரணம் இதுதான்!

படம்
ஏன்?எதற்கு? எப்படி? மிஸ்டர் ரோனி ஆண்கள் தீவிரமான வன்முறையில் ஈடுபடுகிறார்கள். பெரும்பாலான கலவரங்கள், வன்முறைகள் அனைத்திலும் பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கையே அதிகம். இதற்கு காரணம் என்ன? உலகமெங்கும் பெரும்பாலான சமூகங்களில் ஆண்களுக்கு அதிகாரம் கொடுத்து அப்படி வளர்ப்பதுதான் காரணம். பெண்களை வீட்டுவேலைகள், அடுத்த தலைமுறையை வளர்ப்பதற்கான பயிற்சிகளை கொடுத்து வளர்க்கிறார்கள். இதனால் குற்றச்செயல்களில் இயல்பாகவே ஆண்களின் பங்கு அதிகமாக இருக்கும். பரிணாமவளர்ச்சி காலகட்டத்தில் ஆண்கள் தங்களின் வலிமையை நிரூபித்தால்தான் பெண்களைப் பெறமுடியும். இதனால் வலிமை என்பது ஒருகாலத்தில் ஆண்களுக்கு சமூக அந்தஸ்தாக இருந்தது. இன்று அது வீடாக, ஐடி வேலையாக, சொத்து மதிப்பாக மாறியிருக்கிறது அவ்வளவுதான். அண்மையில் 63 நாடுகளில் எடுக்கப்பட்ட சர்வேயில், இளைஞர்கள் தங்கள் வயதிலுள்ள பெண்களை விட அதிக சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு முக்கியக்காரணம், பரிணாம  வளர்ச்சிதான். நன்றி: பிபிசி

விலங்குகள் தப்பித்து பிழைத்து வாழ முடியுமா?

படம்
பிபிசி அழிவிலிருந்து விலங்குகள் தாமே தப்பித்துக்கொண்டுவிட முடியுமா? நிச்சயமாக முடியாது. காரணம், நீங்களே லேஸ் சிப்ஸ் வாங்குகிறீர்கள். அதில் நண்பர்களுக்கு பகிர்ந்தது போக உங்கள் வீட்டு பெட் செல்லம் வாலாட்டி கெஞ்சினால் சிறிது கொடுப்பீர்கள். ஆனால் அதில் மிச்சம் வைத்து தூக்கிப்போடுவது வாய்ப்பில்லை அல்லவா? அதேதான் கான்செப்ட். ஒரு விலங்கு பசிக்காக வேட்டையாடும்போது, அதில் முழுமையாக இறங்கிவிடும். அந்த இனம் அழிவில் இருக்கிறதா என்பது பற்றி இங்கு கவலை அவசியமில்லை. பசி தீர்ந்தால்தான் அந்த விலங்கு உயிர்பிழைக்கும். பரிணாம வளர்ச்சி என்பது அடுத்தநொடி நிகழ்ந்துவிடாது. பல்லாண்டுகள் அதற்குத் தேவை. இதற்கும் கூட நம்மிலும் வலிய விலங்குகள், நோய்கள், இயற்கை இடர்பாடுகளைத் தாங்கி நடந்தால்தான் அது சாத்தியமாகும். குறிப்பிட்ட விலங்குகளை மட்டுமே வேட்டையாடி உண்ணும் விலங்குகள், பறவைகள் இயற்கையில் தாக்குப்பிடித்து வாழ்வது கடினம். நியூசிலாந்தில் ஹாஸ்ட் எனும் கழுகு, மோவா என்று பறக்கமுடியாத பறவையை மட்டும் வேட்டையாடி உண்ணும். அங்கு மனிதர்களின் பெருக்கம் அதிகமானபோது, இறைச்சிக்காக அப்பறவையை வேட்டையாடி

டைனமோக்கள் எலக்ட்ரிக் கார்களுக்கு உதவுமா?

படம்
பிபிசி ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி டைனமோக்களைப் பயன்படுத்தினால் எலக்ட்ரிக் கார்களின் வேகத்தை அதிகரிக்க முடியுமா? இன்றைய கார்களில் கைனடிக் வகை ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான செட்டிங்குகள் உண்டு. பேட்டரிகள் மூலம் இயங்கும் எலக்ட்ரிக் கார்களுக்கு இந்த அமைப்பு மூலம் கூடுதல் ஆற்றல் கிடைக்கலாம். இப்போது கார்களின் சக்கரங்கள் இயங்கும்போது கிடைக்கும் ஆற்றல் பேட்டரிகளில் சேகரிக்கப்படுகிறது. ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.100 சிசி வண்டி என்றாலும் முழுத் திறனில் அது ஓடாது. எனவே சிறியளவிலான ஆற்றல் சேகரிப்பு மட்டுமே இப்போது சாத்தியமாகும். நன்றி: பிபிசி

மவுத்வாஷ் பயன்படுத்தலாமா?

படம்
பிபிசி குழந்தைகள் மவுத்வாஷ் பயன்படுத்தலாமா? 6-14 வரையிலான குழந்தைகள் ப்ளூரைடு கலந்த பற்பசை, மவுத் வாஷ் பயன்படுத்தும்போது, பற்கள் சொத்தையாகாமல் காப்பாற்றப்படுவது உண்மைதான். ஆனால் உணவு உண்ட பிறகு மவுத் வாஷ் பயன்படுத்தி பற்களின் நலம் காப்பாற்றப்பட்டதற்கு எந்த வித அறிவியல் ஆதாரங்களும் கிடையாது. எனவே பல் மருத்துவரிடம் கலந்து ஆலோசித்துவிட்டு குழந்தைகளுக்கு மவுத்வாஷ் பரிந்துரைக்கலாம். நன்றி: பிபிசி

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே டெக்னாலஜி!

படம்
பிபிசி ஏன்? எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி இன்றுள்ள அனைத்து தொழிற்நுட்பங்களும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிடைத்திருந்தால் எப்படியிருக்கும்? ஜாலியான கற்பனைதான். ஆனால் இன்றுள்ள உலகம் நமக்கு கிடைத்திருக்காது. அப்போதே தொலைபேசி, அட்வான்ஸ் வாகனங்கள் என்று போரிட்டு உலகை உடைத்து கடாசியிருப்பார்கள்.  நம் முன்னோர்கள் வழியாக கத்தி, வாள், கோடாளி என போரிட்டு இன்று லேசர் கதிர்களை ஆயுதமாக்குவது வரை முன்னேறியிருக்கிறோம். இன்று உலகில் உள்ள மக்கள்தொகையில் அன்று 4 சதவீதம் மட்டுமே இருந்தனர் என்பதை மனதில் கொள்ளுங்கள்.  அதேசமயம் கரிம எரிபொருட்களின் ஆபத்தை உணர்ந்த முன்னோர்களால் நாம் இன்று முழுக்க சூழலுக்கு உகந்த பொருட்களை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உட்பட பயன்படுத்த தொடங்கியிருப்போம். குறைந்தபட்சம் அதிக மாசுபாடு பிரச்னைகளைக் குறைத்திருக்கவும் வாய்ப்புண்டு.  வேக்குவம் ட்யூபில் மணிக்கு 8 ஆயிரம் கி.மீ வேகத்தில் பயணிக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொண்டிருப்போம். பேசாமல் மூளை - கணினி இணைந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேலை பார்க்கும் நுட்பம் வந்திருக்கும் என ஆச்சரியங

இசை அலைகள் - நிறைவடைவது எங்கு?

படம்
பிபிசி ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி இசை அலைகள் நிறைவடைவது எங்கு? மூடிய ஒரு அறைக்குள் இசை அலைகள் பரவும் போது எதிரொலியை உருவாக்குகின்றன. அதே மூடப்படாத பரப்பில் காற்றின் வேகத்தைப் பொறுத்து அது பிறரின் காதுக்கு கேட்கலாம். மனிதர்களின் காதுகள் கேட்கும் அலைவரிசை வரையில் ஒலி கேட்கும். அவற்றின் அதிர்வெண் அதிகரிக்கும்போது நம்மால் அவற்றை உணர முடியாது. இவ்வகையில் நாம் பார்வை சார்ந்து இயங்குபவர்களே. காட்டில் வாழ்ந்தபோது, ஐம்புலன்களும் கூர்மையாக இருந்தால் மட்டுமே இயற்கை விலங்குகளைத் தாண்டி உயிர்வாழ முடியும். பின் நிலைமை மாறியது. 1,493 மி/செகண்ட் வேகத்தில் நீரில் இசை அலைகள் பரவும். காரணம், காற்றை விட நீரில் அழுத்தம் குறைவு. இசை அலைகளை உருவாக்க ஆற்றல் தேவை. இதன் முடிவு என்பது அது வெளியிடப்படும் ஊடகம் பொருத்தது.

தலையில்லாத கோழி வாழுமா?

படம்
பிபிசி ஏன்?எதற்கு?எப்படி?  மிஸ்டர் ரோனி கோழி தலையில்லாமல் எத்தனை நாட்கள் வாழும்? 1940 ஆம் ஆண்டு அமெரிக்காவில், மைக் என்ற கோழி தலையின்றி பதினெட்டு மாதங்கள் உயிர் வாழ்ந்தது. கோடாரியால் தலை வெட்டப்பட்ட  கோழி இது. தாய்லாந்தில் மார்ச் 2018 ஆம் ஆண்டு, இதுபோல கோழி ஒன்று வாழ்வதாக பதிவு உள்ளது. இதுகுறித்த வீடியோவும் இணையத்தில் உண்டு. தலையில்லாமல் வாழ்வது பெரும்பாலும் கடினம். ஏனெனில் தலை வெட்டப்பட்டபிறகு ரத்தம் அதிகம் வீணாகி விடும். எனவே கோழி உயிர்பிழைப்பது மிக கடினம். பாதுகாக்கப்பட்ட சூழலில் இது சாத்தியமாகும். எடுத்துக்காட்டாக ஆய்வகம்.