இடுகைகள்

கட்டுரை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மொழிபெயர்ப்பாளர்களை ஏன் மதிக்க வேண்டும்?

மொழிபெயர்ப்பாளர்களை ஏன் மதிக்க வேண்டும்?                                            டிம் பார்க்ஸ் தமிழில்: எதிராஜ் அகிலன்      நீங்கள் நேசித்து வாசிக்கும் மிலன் குந்தேராவை எழுதியது யார்? விடை: மைக்கேல் ஹென்றி ஹைம். அறிவார்ந்த எழுத்தாளர் என்று கருதப்படும் ஓரான் பாமுக்கை? அவரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மௌரீன் ஃப்ரீலி. கற்பனை வளம் கூடிய பாண்டித்யம் மிக்க ராபர்ட்டோ காலஸ்ஸோ? ம்ஹ்ம். நான்தான்.      தன் வேலையை முடித்துவிட்ட பிறகு மொழிபெயர்ப்பாளன் காணாமல் போய்விடவேண்டும். படைப்புத்திறன் மிகுந்த, கவர்ச்சிமிக்க, பேரெழுத்தாளர் மட்டுமே புவியெங்கும் வியாபித்து நிற்க விரும்புவார். அவருடைய வாசகர்களில் பெரும்பான்மையோர் உண்மையில் அவருடைய எழுத்தை வாசிப்பதில்லை என்ற யதார்த்தத்தை ஜீரணிக்க முடியாது.      நான் மொழிபெயர்ப்பு பணிகளிலும் ஈடுபடுவதுண்டு என்ற தகவல் என் புதினங்களை வாசிக்கும் வாசகர்களை அதிருப்தி கொள்ள வைப்பதை அவர்களை சந்திக்கும்போது கண்டிருக்கிறேன். தான் முக்கியமான எழுத்தாளர் என்று நம்பும் ஒருவர் செய்யக்கூடாத காரியமாக மொழிபெயர்ப்பு பணியினை பார்க்கிறார்கள்.      ஒரு மொழிபெயர்ப்பாளர

அழியாத கறைகளும், நீங்காத குருதியின் வீச்சமும்

அழியாத கறைகளும், நீங்காத குருதியின் வீச்சமும் -       முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தமிழில்: ச.ஜெ. அன்பரசு நரேந்திர மோடி பெரும்பகுதி இந்தியர்களுக்கு நவீன மோசஸாக, மேசியாவாக காட்சியளிப்பதோடு, மனச் சோர்வடைந்த இந்தியர்களை பாலும் தேனும் கரை புரண்டோடும் தேசமாக மாற்றும் வல்லமை கொண்டவராகவும், பிரதமர் பதவிக்கு முற்றிலும் பொருத்தமானவராக  அடையாளம் காட்டப்படுகிறார். இதனை பா.ஜ.க மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகிய அமைப்புகள் மட்டும் கும்பமேளாவில் கூறவில்லை. இந்தியர்களில் கல்வி கற்ற வகுப்பில் உள்ள படித்த இளைஞர்கள் மோடியால் பெரும் உணர்வெழுச்சிக்கு ஆட்பட்டு அவரை பின்பற்ற விரும்புகிறார்கள் என்று மோடியின் பிரம்மாண்ட விளம்பரங்கள் கூறுகின்றன. நான் தில்லியிலிருந்து போபாலுக்கு விமானத்தில் சென்றபோது, அருகில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அமர்ந்திருந்தார். மோடி பற்றிய அவரது கருத்தைக் கேட்டேன். உடனே மோடி பற்றிப் புகழ்ந்து பேசத்தொடங்கினார். நான் இடைமறித்து, 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் இஸ்லாமிய மக்கள் கொல்லப்பட்டது குறித்து கேட்டபோது, இஸ்லாமிய மக்கள்தான் குஜராத்தில் எப்போதும் பிரச்சனைக

இந்திய வேளாண்மையின் சவால்கள்

இந்திய வேளாண்மையின் சவால்கள்                               இரா.முருகானந்தம்         இந்தியா ஒரு வேளாண்மை சார்ந்த நாடு என நாம் வெகு நாட்களாக சொல்லிக்கொண்டிருக்கிறோம். சந்தேகமின்றி இந்தியா இன்றும் கூட வேளாண்மை சார்ந்தே இருக்கின்றது. இந்தியா போன்ற செறிவான மக்கள் தொகை கொண்ட மித வெப்ப மண்டல நாடு வேளாண்மையைச் சார்ந்ததாக இருப்பதால் மட்டுமே ஆயிரம் பின்னடைவுகள் இருப்பினும் ஒரு நாடாக நீடிக்க முடிகிறது. இது இயல்பானதும், புவியியல் மானுடவியல் காரணிகளை உள்ளடக்கியதுமாகும். மக்கள்தொகை பெருக்கமும், நெருக்கமும் மிக்க இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள்  வேளாண்மையை முதன்மைப்படுத்தியே தங்களின் இருப்பை உறுதி செய்து கொள்ள முடிகிறது.             இந்திய வேளாண்மை விரிவானதொரு வரலாறு, பண்பாடு, மரபார்ந்த பின்னணி கொண்டது. வேளாண்மை என்பது முன்னோடிகளால் ஒரு தொழிலாக ஒரு வாழ்க்கை முறையாக கருதி செய்யப்பட்டது. இந்தியாவின் சிக்கலான சமூகப்படி நிலைகளைத் தீர்மானிக்கும் காரணியாக வேளாண்மையும், அதன் முக்கிய ஆதாரமான நிலங்களுமே இருந்தன என்பதை நமது வரலாற்றை ஓரளவு கவனித்தாலே புரிந்துகொள்ள முடியும்.             ஆங்கிலே

உலகின் தொழிற்சாலையாக மாறுமா இந்தியா?

உலகின் தொழிற்சாலையாக மாறுமா இந்தியா?                    ஒரு அலசல் பார்வை                                                 அரசுகார்த்திக் இந்தியாவில் உருவாக்கப்படும் பொருட்கள் உலகமெங்கும் விற்கப்படும் நிலையினை உருவாக்கப்படவேண்டும் என்று இந்தியாவில் உருவாக்குவோம்(Make in India) எனும் திட்டத்தினை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்திருக்கிறார். பல முதலீட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க அனுமதிக்க ஏதுவாக பல்வேறு தொழில் சட்டங்கள், சுற்றுச்சூழல், தொழிலாளர் நலன் உள்ளிட்ட சட்டங்கள் தளர்த்தப்பட இருக்கின்றன. சீனாதான் உலகின் தொழிற்சாலை என்று இன்றுவரை அழைக்கப்படுகிறது. இந்நிலை மாறுமா? சாதக, பாதக அம்சங்களை அலசுகிறது இக்கட்டுரை.  இந்தியாவில் தொழில் இன்றுவரை             இந்தியாவில் தொழில் தொடங்குவது அவ்வளவு எளிதாக எந்த தொழில் முனைவோருக்கும் இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் நடைமுறைகள் பல மாதங்களுக்கு நீளும். ஒரு தொழில் செய்கிறார் தன்னிடம் தொழில் தொடங்குவதற்கான உரிமம், சுற்றுச்சூழல் உரிமம் உட்பட பனிரெண்டு உரிமங்களை தன்னகத்தே கொண்டிருக்கவேண்டும். இவற்றில் சில உரிமங்களைப் பெற பல மாதங்கள்வரை காத்த

நினைவில் இரண்டு தலைமுறையின் டிக்.. டிக்..டிக் ஒலி

நினைவுக்குறிப்புகள் நினைவில் இரண்டு தலைமுறையின் டிக்.. டிக்..டிக் ஒலி                            டான்ஜூவான் ப்ரூட்             இந்திய மக்களின் நாடித்துடிப்பாக நகர்ந்துகொண்டிருந்த ஹெச்எம்டி வாட்ச் தொழிற்சாலைகள்  தொடர்ந்த வருவாய் இழப்பினால் மூடப்பட்டுவிட்டன. நமது மூத்த தலைமுறையின் கையில் இனி அவை இழந்துவிட்ட வாழ்வின், அணியப்பட்ட தருணத்தின் மகிழ்வான பொழுதுகளை நினைவுபடுத்தியபடி இருக்கும்.             1960 ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டு நம் முந்தைய இரு தலைமுறைகளின் கைகளில் அணியப்பட்ட கைகடிகாரம் என்றால் நினைவுக்கு வருவது ஹெச்எம்டி நிறுவனத்தின் கடிகாரங்கள்தான்.  பல வெளிநாட்டு வாட்ச் நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு வாட்ச் நிறுவனங்களின் கடும் போட்டியை எதிர்கொள்ள முடியாமல் 2000 ஆண்டிலிருந்து ஹெச்எம்டி நிறுவனம் இழப்பை எதிர்கொள்ளத் தொடங்கிவிட்டது.             கைகடிகாரங்கள் என்பது இன்றுமே எனக்கு ஒரு பெரிய ஆச்சர்யத்தையும், அற்புதத்தையும் ஒருசேர மனதில் ஏற்படுத்தும் ஒன்றாகவே இருக்கிறது. நாளிதழில் கைகடிகாரங்களின் படங்களைப் பார்த்தாலும் உட்புற டயல், வடிவமைப்பு, நீர் உள்ளே புகாத வசதி என்று திர

தொடர்பு அறுந்துபோகும் பிஎஸ்என்எல்

தொடர்பு அறுந்துபோகும் பிஎஸ்என்எல்                                                         ச.ஜெ அன்பரசு         அரசு நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களோடு போட்டியிலிருந்தால், குறிப்பிட்ட நிறுவனத்தின் ஏகபோக ஆதிக்கத்தை தடுக்கமுடியும் என்று பல துறைகளிலும் அரசு நிறுவனங்கள் தொடங்கப்பட்டு அவைகளில் நெய்வேலி நிலக்கரி நிறுவனம், செயில், கெயில், பிஎஸ்என்எல், பெல் உள்ளிட்ட நிறுவனங்கள் வெற்றிகரமாக இயங்கி வருவதோடு இவற்றில் பல நிறுவனங்கள் அவற்றின் சிறப்பான சேவைக்காக மத்திய அரசின் நவரத்னா உள்ளிட்ட  விருதுகளைப் பெற்றவையாகும். பொதுத்துறை நிறுவனங்களான 260 நிறுவனங்களில் பத்து நிறுவனங்கள் அவை நஷ்டப்படுகின்றன என்று கூறி அவை மூடப்படபோகின்றன. வெற்றிகரமாக செயல்பட்டு வந்த அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் இந்நிலையடைய காரணம் என்ன என்று ஆராய்கிறது இக்கட்டுரை. இன்றைய நிலைமை             1990லிருந்து பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கைகள் அமல்படுத்த தொடங்கியதிலிருந்து அரசு நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள்  தொடங்கப்பட்டுவிட்டன. ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக ரூ. நாற்பத்து ஐயாயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக வருவ

தமிழன் முற்றத்து நாகரிகக் கொடிமரம்

      தமிழன் முற்றத்து நாகரிகக் கொடிமரம் ·         அன்பரசு சண்முகம் தமிழ் பழங்குடி மக்களின் மொழியான தமிழ் மொழி குமரிக்கண்டத்தில் தோன்றியது  ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் எனவும், தமிழர் நாகரிகமும், தமிழ் இலக்கணவிலக்கியமும் தோன்றியது  இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன் எனவும்,  தேவநேயப்பாவாணர் தமிழ் வரலாறு நூலில் தெளிவுற கூறியுள்ளார்.. தமிழர்களின் அடையாளம் வேட்டி என்பதைவிடவும் மொழி என்பதுதான் முக்கியமானது. அதோடு தமிழர்களின் மரபான உணவுப்பழக்கங்கள், கலாச்சாரங்களில் தாவரங்களுக்கும், மரங்களுக்கும் இருந்த பங்கு முக்கியமானது. நகரங்கள் தோன்றியது உழவுத்தொழிலில் சிறந்த மருத நிலத்தில்தான். உழவுத்தொழிலில் வேளாண்மையும், பதினெண்பக்க தொழில்களும், பிறதொழில் செய்வோர்க்கும் போதிய உணவும், வாணிகமும் ஏற்பட்டன. பல்வேறு அடையாளங்களை தன்னகத்தே கொண்ட தமிழர்களுக்கு மிக நெருங்கிய உறவு கொண்ட அழிந்துவரும் பனைமரம் குறித்துப் பேசுவோம். பனை என்றால் நமக்கு மனதில் உடனே தோன்றுவது வெயில் காலத்தில் நாம் தள்ளுவண்டிக்கடைகளில் உறிஞ்சும் நுங்குதான். அதற்குமேல் அதில் அறிவது அதன் ஓலைகளில் செய்து வைத்திருக்கும் விசிறி