இடுகைகள்

தீவிரவாதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விமான விபத்தில் குடும்பத்தை கொன்ற தீவிரவாதிகளை உணர்ச்சிவசப்படும் பெண் பழிவாங்க முடியுமா? தி ரிதம் செக்ஷன் 2020

படம்
      Director: Reed Morano Produced by: Barbara Broccoli, Michael G. Wilson Writer(s): Mark Burnell  ரெகுலரான பழிக்குப்பழி கதைதான். பழி வாங்குபவள்  கொஞ்சம் மனிதநேயம் பார்த்து இறப்பவனுக்கும் குடும்பம், குழந்தைகள் இருக்கிறார்கள் என நினைத்துப் பார்த்து கண்ணீர் விடுபவளாக இருந்தால்.... அதுதான் தி ரிதம் செக்ஷன் படத்தின் கதையும் கூட.  பிளாக் லைவ்லி(ஸ்டெபானி), ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவி. அவளது அன்பான குடும்பம் விமானத்தில் பயணிக்கிறது. ஆனால் அதில் பிளாக் லைவ்லியால் பயணிக்க முடியவில்லை. அதேசமயம் அந்த விமானம் வெடிகுண்டு வைத்து வெடிக்க வைக்கப்படுகிறது. இதில் அதில் பயணித்த அத்தனை பேரும் இறந்துபோகிறார்கள். ஆனால் இதனை செய்த யூ17 என்பவனுக்கு எந்த தண்டனையும் கிடைக்கவில்லை. அவனுக்கு எதிராக தடயங்கள் இல்லை என சிஐஏ கைவிரித்து விடுகிறது.    குடும்பம் ஒட்டுமொத்தமாக இறந்துபோனதால், தவிக்கும் ஸ்டெபானி மனமுடைந்து போதைக்கு அடிமையாகிறாள். விபசாரம் செய்து வருகிறாள். எல்லாம் பிழைத்திருக்கத்தான். அவளது குடும்பத்தின் திடீர் இழப்பை அவளால் தாங்க முடிவதில்லை.  அப்போது அவளை சந்திக்கும் செய்தியாளர் அவளுக்கு விமான வெடிப்ப

தொன்மைக்காலத்திலிருந்து மக்களை துன்பத்திலிருந்து காக்கும் காவலர்கள்! - தி ஒல்டு கார்டு

படம்
            தி ஓல்டு கார்டு                     தி ஓல்டு கார்டு உலகை காக்கும் பணியில் ஆதி காலம் முதல் இன்று வரை ஈடுபடும் குழு ஒன்று உள்ளது. இவர்கள் ஒருவரையொருவர் கனவுகள் மூலம் கண்டுபிடிக்கிறார்கள். தங்களோடு இணைத்துக்கொள்கிறார்கள். பிறருக்கு வயதானாலும் இவர்களுக்கு வயதாகாது. இவர்களின் உடலிலுள்ள மரபணுக்களை திருட மருந்து நிறுவனம் திட்டம் தீட்டுகிறது. இதற்கு காப்பான் குழுவிலுள்ள ஒருவரே உடந்தையாகிறார். அந்த சதியில் அவர்கள் வாழ்க்கை என்னவானது? துரோகியை கண்டுபிடித்தார்களா? உலகை காப்பாற்றும் பணியை தொடர்ந்தார்களா என்பதுதான் கதை படத்தின் தயாரிப்பாளரும், நாயகியும் சார்லீஸ் தெரோன்தான். எனவே அந்த குழுவின் பாஸ் கூட அவரேதான். கதை திடுக்கென தொடங்கி, குழந்தைகளை மீட்கும் பணியின்போதுதான், அவர்கள் யார், அவர்கள் சக்தி என்ன என்பது பார்வையாளர்களுக்கு அறிமுகமாகிறது. படத்தின் சிஜி சமாச்சாரங்கள் சிறப்பாக உள்ளன. அடுத்தடுத்த பாகங்கள் எடுப்பதற்கான அடிப்படைக் கதையை இப்படத்தில சொல்லி விட்டடார்கள். எனவே அடுத்த பாகங்கள் படமாக எடுக்கப்பட்டால் இப்படத்தை பார்ப்பது முக்கியம். கிறிஸ்துவர்கள் சிலுவைப் போரில் ஈடுபடும், மதம்தா

நான் உளவாளியாக விரும்பவில்லை! - அலெக்ஸ் யங்கர், முன்னாள் தலைவர் எம்16 அமைப்பு

படம்
         அலெக்ஸ் யங்கர் முன்னாள் எம்16 தலைவர் நீங்கள் உளவாளியாக விரும்பினீர்களா? ரகசிய உலகில் பணியாற்ற வேண்டும் என்று எப்போதும் நான் நினைக்கவில்லை. என் வழியில் இந்த வாய்ப்பு வந்தது என்று சொல்லலாம். தொழில் வாழ்க்கையில் தனியாக வாழ வேண்டியிருக்கும் அல்லவா? வழக்கத்திற்கு மாறான வாழ்க்கையைத்தான் நான் வாழ்ந்து வந்தேன். 30 ஆண்டுகளில் அது இயல்பாகிவிட்டது. வேலைக்காக தனிமைப்படுத்தப்பட வேண்டி இருந்தது. இப்படிப்பட்ட ஆட்களுக்கு இடையில் நெருக்கமான உறவு இருந்தது. உங்கள் குடும்பத்தினரிடம் நீங்கள் உண்மைகளை சொல்லியிருக்கிறீர்களா என் குழந்தைகளிடம் சரியான நேரம் வரும்போது சொல்லமுடியும் என்று நம்புகிறேன். மற்றபடி அனைவரிடமும் இதுபற்றி பேசுவது கடினமானது. நீங்கள் திரைப்படங்களில் காணும் அறமில்லாத சூழ்நிலை வேறு. உண்மையில் அமைப்பு, அதிலுள்ள மனிதர்கள், நமது மதிப்புகள் எப்போதும் இப்பணியில் மாறுவதில்லை. நீங்கள் ஆப்கானிஸ்தானில் பணியாற்றியுள்ளீர்கள். அமெரிக்கா அங்கு, அமைதிக்கான ஒப்பந்தம் சார்ந்து செயல்பட்டுள்ளது. இங்கு அங்கு தாலிபன்கள் ஆட்சிக்கு வந்துள்ள நிலையை எப்படி பார்க்கிறீர்கள்? இப்போது அவர்கள் ஆட்சிக்கு வந்தாலும

சீனாவுடன் பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதனை தவிர்க்கமுடியாது! - வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்

படம்
    வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்     வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் முந்தைய அரசு கடைபிடித்த வெளிநாட்டு கொள்கைகளுக்கும் இப்போதையை அரசு கடைபிடிக்கும் கொள்கைகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன? இன்று உலகம் நிலையில்லாது மாறிவிட்டது. அதனால் அதற்கேற்ப நாம் வெளியுறவுக் கொள்கைகளை கடைபிடிக்க வேண்டியதிருக்கிறது. அமெரிக்கா தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறது. சீனாவின் ஆதிக்கம் வளர்ந்துவருகிறது. ஐரோப்பிய நாடுகளின் செயல்பாடுகளிலும் மாறுதல்கள் தொடங்கிவிட்டன. மிகவும் ஊக்கம் கொண்ட நாடாக ரஷ்யா, ஜப்பான் ஆகியவை உள்ளன. மத்திய கிழக்கு நாடுகளி்ன் அதிகாரம் மாறி வருகிறது. இதற்கேற்ப இந்திய வழியில் நாம் நடைபோட்டால்தான் நெ.1 அந்தஸ்தை நாம் அடைய முடியும். உள்நாட்டு தீவிரவாதம், வறுமை, பொருளாதார வளர்ச்சி என பல்வேறு அம்சங்களோடு போராட வேண்டியுள்ளது. கடல் பாதுகாப்பு, எல்லைகள் ஆகியவற்றைப் பொறுத்தவரை இலங்கை, மொசாம்பிக், நேபாளம், ஏமன் ஆகிய நாடுகள் முக்கியமானவை. நாம் பல்வேறு நாடுகளுக்கு கோ்விட் -19 நோய்த்தொற்றுக்கு மருந்துகளை அனுப்பி உதவியுள்ளோம். இந்தியா தேசிய அளவிலும், உலக அளவிலும் தெற்காசியாவில் முக்கியமான நாடு எ

டாஸ்க்கை முடிக்க ரோபோக்களுடன் ராணுவ வீரர்கள் உரையாடலாம்! - செயற்கை நுண்ணறிவில் இது புதுசு!

படம்
      cc       ராணுவ கூட்டாளியாகும் செயற்கை நுண்ணறிவு !   அமெரிக்க ராணுவ அமைச்சகம் , ராணுவ வீரர்களுடன் பேசும் தன்மை கொண்ட செயற்கை நுண்ணறிவு சாதனத்தை உருவாக்கியுளளனர் . அமெரிக்காவின் ராணுவப்பிரிவும் , சதர்ன் கலிஃபோர்னியா பல்கலைக்கழகமும் சேர்ந்து செய்த ஆராய்ச்சியின் விளைவாக புதிய செயற்கை நுண்ணறிவு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது . இந்த ஏ . ஐ . அமைப்பு மூலம் வீரர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கப்படுகிறது . இதன்மூலம் ராணுவத்திற்கு செலவுகள் குறைய வாய்ப்பிருக்கிறது . அடுத்து , இந்த ஏ . ஐ . மூலம் வீரர்கள் உரையாடியபடி பயிற்சி செய்வதனால் , செயற்கை நுண்ணறிவை எளிதாக புரிந்துகொண்டு பணியாற்ற முடியும் . எதிர்காலத்தில் ஏ . ஐ . பெருமளவு ராணுவத்தில் செயல்பாட்டிற்கு வரப்போகிறது . அதனைப் புரிந்துகொணடு அதற்கேற்ப எளிதாக செயல்படலாம் . தற்போது உள்ள செயற்கை நுண்ணறிவு சாதனங்களை விட அடுத்த தலைமுறைக்கான ஏ . ஐ . சாதனங்கள் தானியங்கி முறையில் செயல்படக்கூடியவை . அதனை வீரர்கள் எளிதாக ஏற்றுக்கொண்டு செயல்பட்டால் மட்டுமே கடினமான ராணுவப்பணிகளை வெற்றிகரமாக முடிக்க முடியும் . '' கடல் , நில

உளவு பார்க்கும் விலங்குகள் - பயிற்சி கொடுக்கும் அமெரிக்கா!

படம்
giphy தெரிஞ்சுக்கோ! விலங்குகளை உளவு பார்க்க பயன்படுத்துவது தொன்மைக் காலத்திலிருந்து நடைபெற்று வருகிற சங்கதி. மனிதர்கள் என்றால் உடனே போட்டுத்தள்ளி விடுவார்கள். ஆனால் புறா, கிளி, மீன் என்றால் எளிதாக கண்டுபிடிக்க முடியாது. நஷ்டம் குறைவு. எனவே, உளவு பார்க்க விலங்குகளை அனைத்து நாட்டு ராணுவங்களும் பயிற்றுவிக்கின்றன. ஐஎஸ் தீவிரவாதி தலைவரையும் இம்முறையில் உளவு பார்த்து நாயை விட்டு கண்டறிந்தது அமெரிக்கப்படை. அண்மையில் பெலுகா திமிங்கலம் நார்வேயில் பிடிபட்டது. அதில் செயின் பீட்டர்ஸ்பர்க்கின் சொத்து என எழுதப்பட்டிருந்தது. அனைவரும் ரஷ்யாவை குற்றம் சாட்ட, எங்களுக்கும் அந்த மீனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என காசை வெட்டிப்போட்டது போல ரஷ்யா பேசியது. டேட்டா அமெரிக்காவில் 2012ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஸ்பாவார் அமைப்பு,  85க்கும் மேற்பட்ட டால்பின் மீன்களை உளவு பார்க்க பயிற்றுவித்து வருகிறது. மேலும் இந்த அமைப்பு 50 கடற்சிங்கங்களை - வால்ரஸ்  கட்டுப்படுத்தி வருகிறது. பாகிஸ்தான் நாட்டிலிருந்து இந்தியா எல்லைக்குள் 4.5 கி.மீ. பறந்து வந்த புறாவை இந்திய அதிகாரிகள் கைது செய்தனர். எப்போது

சிரியாவில் செயல்பட்ட ரகசிய நூலகம்!

படம்
டீன் வோக் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் எப்படி தன் வாழ்க்கையில் தன் ஆசைகளைத்துரத்தி வென்றார் என்பதே நூலின் மையம். கருப்பின அம்மா, ஐரிஷ் கத்தோலிக்க அப்பா இருவரின் காதல் பரிசாக பிறந்தார். பள்ளியில் நண்பர்கள் கிடைக்காமல் அல்லாடி தன் ஆசிரியர் மூலம் ஊக்கம் பெற்று பத்திரிகை பாதையைத் தேர்ந்தெடுத்து வென்ற கதை ஊக்கமூட்டுகிறது. எபோனி, தி வோக், டீன் வோக் என பத்திரிகைகளில் பெற்ற அனுபவங்கள் உங்களுக்கு உதவக்கூடும். தீவிரவாதக்குழுக்களைப் படித்திருப்பீர்கள். புகைப்படங்களை நாளிதழ்களில் பார்த்திருப்பீர்கள்.  அதிலும் பெண்களே உறுப்பினர்களாக இருந்து, பெண்ணே கேங் லீடராக இருந்து வழிநடத்தினால் எப்படி இருக்கும்? 1978-85 காலகட்டத்தில் பாதுகாப்பு அதிகாரியாக செயற்பட்ட வில்லியம் விரட்டிப்பிடித்த கம்யூனிச தீவிரவாத அமைப்பு பற்றிய நிகழ்வுகளை இந்த நூல் கொண்டுள்ளது. அமெரிக்காவின் முதலாளித்துவ கொள்கைகளை எதிர்க்கும் சாம பேத தண்ட அமைப்பு இது. நவ.7, 1983 அன்று அமெரிக்க தலைநகரில் வெடிகுண்டு வைக்கும் தீவிரத்துடன் இருந்த அமைப்பு வங்கிக் கொள்ளைகளிலும் தொடர்புடையது. எப்படி வில்லியம் இந்த அமைப்பின் நடவடிக

தீவிரவாத அமைப்பைச் சந்திப்பது பெருமையா? -ஜெர்மன் தூதர்

படம்
யா ஆர்எஸ்எஸ், கோல்வால்கர், சாவர்கர் காலத்திலிருந்தே ஜெர்மனியின் நாஜிக் கொள்கையை புகழ்ந்து பேசிவருகிறவர்கள். அவர்கள் நாஜி படையினரைப் போலவே ஷாக்கா எனும் பயிற்சி முறைகளை செய்து வருகிறவர்கள். வாஜ்பாய் காலத்தில் அரசு அமைப்புகளுக்குள் ஊடுருவ முயன்று தோற்றவர்களுக்கு, 2014 ஆம் ஆண்டு மோடி ஆதரவு தர இன்று அனைத்து அமைப்புகளையும் உடைத்து நொறுக்கி அதன் நம்பகத்தன்மையை தூள் தூளாக்கி வருகின்றனர். அண்மையில் ஜூலை 17 அன்று ஜெர்மனியைச் சேர்ந்த இந்தியாவிற்கான தூதர், ஆர்எஸ்எஸ் தலைமையகத்தை சுற்றிப்பார்த்து அதனை பெருமையாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். இதுவே இணையத்தில் மிகவேகமாக பரவி வரும் செய்தி. ஆர்எஸ்எஸ், கலாசாரத் தளத்தில் முக்கியப் பங்காற்றும் அமைப்பு. கலை, அறிவியல், விவசாயம், தொழில்நுட்பம் என அனைத்து தளத்திலும் இதற்கு கிளை அமைப்புகள் உண்டு. ஜனநாயகத்திற்கு ஆதரவான அனைத்து அமைப்புகளிலும் கிளைபரப்பி வரும் ஆர்எஸ்எஸ் அமைப்பு அதன் ஜனநாயகத் தன்மையை வற்றச்ச்செய்து அதனை மற்றொரு ஆர்எஸ்எஸ் போல ஒற்றைத் தலைமைக்கு கட்டுப்பட்டதாக மாற்றி வருகிறார்கள். 2002 ஆம்ஆண்டு  குஜராத் கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டத

ஜெய்ஸ் இ முகமது அமைப்பு மிகப்பெரிய வெற்றியை ருசித்திருக்கிறது

படம்
Scroll.in நேர்காணல் பத்திரிகையாளர் அனடோல் லீவன் தமிழில்: ச.அன்பரசு இந்தியா பாகிஸ்தானுடன் போர் தொடுப்பது இறுதியான தீர்வைத் தருமா? ராணுவ நடவடிக்கை சிறிய அளவில் தீர்வுகளைத் தரலாம். பாகிஸ்தானுக்கு பெரிய அளவு முதலீடு கிடையாது. அந்நாட்டிற்கு சீனா, சவுதி அரேபியா ஆகியோர் உதவுகின்றனர். ராணுவத்தாக்குதல் தொடங்கினால் இருநாடுகளுக்கும் இடையே அணு ஆயுதப் போர் நடப்பது நிச்சயம். அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முயல்வதே இதற்கு தீர்வு. இந்தியாவுக்கு வேறு என்ன வாய்ப்புகள் உள்ளன?  இந்தியா அமெரிக்காவை அணுகி, பொருளாதார ரீதியில் பாகிஸ்தானுக்கு நெருக்கடிகளை அளிக்கலாம். ஆப்கன் பிரச்னையில் ட்ரம்ப் அரசுக்கு பாகிஸ்தானின் உதவி தேவைப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்கா இந்தியா சொன்னவுடன் அதற்கு உடனே சம்மதம் தெரிவித்து விடாது. மோடி பேச்சுவார்த்தைக்கான நேரம் கடந்துவிட்டது என்று கூறியிருக்கிறாரே? மோடி பேசுவது அனைத்தும் வெற்றுப் பேச்சு. இந்தியா பாகிஸ்தானுடன் போர் தொடுத்தால் அது பேரழிவாகவே இருக்கும். போரின் பின்னணியில் உருவாகும் தீவிரவாதம், அகதிகள் பிரச்னைகளை சமாளிப்பது சாதாரண காரியம் அல்ல. தாமதமாகவேனு