இடுகைகள்

நட்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முரடன், சாமுராய், துறுதுறு பெண் என மூன்று பேரும் இணைந்து சாமுராயைத் தேடிச்செல்லும் பயணம்! - சாமுராய் சம்புலு - அனிமேஷன்

படம்
                  சாமுராய் சம்புலு அனிமேஷன் தொடர் இருபத்தி ஆறு எபிசோடுகள் குருவைக் கொன்றுவிட்டு சுற்றும் சாமுராய் வீரனும் , ரைகு தீவில் வளர்ந்த குற்றவாளி ஒருவனும் நண்பர்களாகி , இளம்பெண் ஒருவளுக்கு அவளது தந்தையைக் கண்டுபிடிக்க உதவுகிறார்கள் . தொடரின் டைட்டிலிலேயே ஜின் என்ற சாமுராய் வீரன் எப்படி , முகன் என்பவன் எப்படி , இவர்களை தனது பாதுகாவலர்களாக கொண்டு தந்தையைத் தேடும் ஃபு என்ற பெண்ணின் குணம் எப்படி என சொல்லிவிடுகிறார்கள் . இருபத்தி ஆறு அத்தியாயங்களில் சிறுகதை போல ஒரு கதையைச் சொல்லுகிறார்கள் . இவற்றில் ஜின் , முகன் என இருவருமே தங்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை எதிர்கொண்டு சண்டைபோடுகிறார்கள் , நகைச்சுவை செய்கிறார்கள் , காதலிக்கிறார்கள் , தங்களை நிழல் போலத் தொடரும் இறந்தகாலத்தை நினைத்து வருந்துகிறார்கள் , புதிய விஷயங்களைக் கற்கிறார்கள் . இரண்டு ஆண்கள் , ஒரு பெண் என்றால் முக்கோண காதல் இருக்குமே என்றால் அதில்தான் வேறுபாடு காட்டுகிறார்கள் . முகன் , காசு கொடுத்தால் எதையும் செய்யும் முரடன் . அதிகம் யோசித்து செயல்படுவது இவனுக்கு சரிவராது . கோபம் வந்தால் உடனே

சதியால் அக்காவை கொன்றவர்களை மறுபிறவி எடுத்து வந்து பழிதீர்க்கும் தங்கத் தம்பியின் கதை! அன்டேம்டு- சீன தொடர்

படம்
              அன்டேம்டு சீன தொடர் 51 எபிசோடுகள் எம்எக்ஸ் பிளேயர் சதிக்குள்ளாகி தனது குடும்பத்தை தொலைத்த வீரன் பதினாறு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டு வந்து எதிரிகளை அடித்து நொறுக்குவதுதான் கதை . சீனாவில் புகழ்பெற்ற நடிகர்களாக வாங் யிபோ , ஷியாபோ ஷான் ஆகிய இருவர்தான் தொடரை பார்க்கவேண்டும் என ஆர்வத்தைத் தூண்டுகிறார்கள் . இவர்களைச் சுற்றியுள்ள நட்பும் , அதைத்தாண்டிய நம்பிக்கையும் , பெண்களே பொறாமைப்படும் அழகும் தொடரை 2019 ஆம் ஆண்டின் முக்கியமான தொடராக மாற்றியுள்ளது . தொடர் தொடங்கும்போது மூ என்ற மூகமூடி அணிந்த ஒருவனின் உடலில் ஆவி ஒன்று அனுமதி கேட்டு நுழைகிறது . அதனை கண்டுபிடிக்கும் கோசு குல சீடர்கள் அதனை விரட்ட நினைக்கின்றனர் . மூவின் உடலில் ஏராளமான ரத்தக்காயங்கள் உள்ளன . அதனை குணமாக்க அதற்கு காரணமானவர்களை பழிவாங்கவேண்டும் . எனவே வே வூ ஷனின் ஆவி அதற்கான வேலையில் இறங்குகிறது . அப்போதுதான் சீடர்களின் பணிக்கு உதவியாக கோசு குலத்தைச் சேர்ந்த லான்சன் வருகிறான் . அவன் வேறு யாருமில்லை . இப்போது மூ உடலில் ஆவியாக வந்துள்ள வே வூ ஷனின் நெருக்க

வெளிநாட்டு பெண்களை இணைக்கும் கிளப்புகள்! - சமூக, கலாசார உறவுகளை பெண்கள் எப்படி பேணுகிறார்கள்?

படம்
              பெண்களை இணைக்கும் சமூக கிளப்புகள் டெல்லியில் வாழும் எழுத்தாளர்கள் நாவலில் பலரும் படித்திருக்கும் விஷயம்தான் . மேல்தட்டு வர்க்க குடும்ப பெண்கள் கிளப்புகளில் வந்து உட்கார்ந்துகொண்டு பல்வேறு பிரச்னைகளைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள் . இந்த கிளப்புகள் குறிப்பிட்ட ஊரைச் சேர்ந்தவர்கள் பேசுதவதற்கென உருவாக்கப்படுகின்றன . இவற்றில் சேருவதற்கு 4,500 முதல் ரூ .25 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கிறார்கள் . இதன் பிரயோஜனம் என்னவென்று சிலர் யோசிக்கலாம் . கிராமங்களில் உள்ள கல்லுக்கட்டு , சாவடி எதற்கு கட்டி வைக்கிறார்கள் . நாயம் பேசுவதறகும் , ஓய்வு எடுப்பதற்கும் , மக்கள் ஒன்றாக கூடும் ஓர் இடமாக இருக்கும் . அதேதான் இங்கும் . அமெரிக்காவில் பணிபுரிந்துவிட்டு டெல்லி , மும்பை , சென்னை என திரும்பி வந்துவிட்ட பெண்களுக்கு இங்கு இந்தியர்கள் வாழும் வாழ்க்கை புரிபடாது . வெகு ஆண்டுகளாக வெளிநாட்டில் வாழ்ந்தவர்களுக்கு திடீரென வாழ்க்கையை வேரோடு பிடுங்கி கொண்டு வந்து வைத்தால் எப்படியிருக்கும் ? கடினமாக இருக்கும் . யாரோடும் நம்பி ஒரு வார்த்தை பேசிவிட முடியாது . வெளியில் செல்லவே தயக்க

காதல் அகராதியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வார்த்தைகள் என்னென்ன?

படம்
            இன்று உலகில் புழங்கும் காதல் வார்த்தைகளை அறிவோமா ? 143 முதல் பிளேம்ஸ் வரை பல்வேறு காதல் வார்த்தைகளை காதல் உலகம் பார்த்து வந்துதது . இப்போது என்னென்ன வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள் என்பதை பார்ப்போமா ? ஃபிளியாபேக்கிங் டிவி ஒன்றில் ஒளிப்பரப்பாகும் ஃபிளியாபேக் சீரிஸின் பெயர் . மோசமான காதல் வாழ்க்கையைக் குறிக்க இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள் . கோட் கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் சிறந்த காதல் பார்ட்னரை குறிக்க இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள் . அபோகலிப்சிங் நமது வழியில் வரும் எந்த உறவையும் கைவிடாமல் அதனை கடைசி உறவாக நினைத்து நடந்துகொள்வது . கோவிட் காலத்தில் பலரும் கற்றுக்கொண்ட விஷயம் இது . பியூ / பூ / பே ஆண்டுதோறும் சிறியதாகிக்கொண்டு செல்லும் பார்ட்னரின் செல்லப்பெயர் . காதலிலிருந்து திருமண வாழ்க்கைக்கு சென்றாலும் அப்படியே பின்பற்றலாம் தப்பில்லை . எமோ சின்ன பிரச்னை என்றாலும் கரைந்தழுது மதிமுக வைகோ போல நடந்துகொள்பவர்களை இந்த வகையில் சேர்த்துக்கொள்ளலாம் . எல்லாவற்றிலும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக இருக்கும் நபர்களை ஹேண்ட

கண்டுபிடிப்பாளரின் வாழ்க்கையை மாற்றும் கிறிஸ்மஸ்! - ஜிங்கிள் அண்ட் ஜாங்கிள்

படம்
                  ஜிங்கிள் அண்ட் ஜாங்கிள் 2020 Directed by David E. Talbert Produced by Lyn Sisson-Talbert David E. Talbert Kristin Burr John Legend Mike Jackson David McIlvain Written by David E. Talbert Starring Forest Whitaker Keegan-Michael Key Hugh Bonneville Anika Noni Rose Madalen Mills Phylicia Rashad Lisa Davina Phillip Ricky Martin Music by John Debney Cinematography Remi Adefarasin படம் கிறிஸ்மஸ் சிறப்பைச் சொல்லும் நன்னெறி சார்ந்த படம் . படத்தில் வரும் ஜெரோனிகஸ் என்ற கண்டுபிடிப்பாளர் , முக்கியமான பாத்திரம் . இவரின் கண்டுபிடிப்புகள்தான் அங்குள்ள நகரவாசிகளுக்கு முக்கியமான பொழுதுபோக்கு விஷயமாக உள்ளது . அங்கு வேலை செய்யும் கஸ்டாஃப்சன் , தானும் கண்டுபிடிப்பாளராக முயல்கிறார் . ஆனால் அவருக்கு அதில் உள்ள பிரச்னையை புரிந்துகொள்வது கடினமாக உள்ளது . அவருக்கு ஜெரோனிகஸ் புகழ்பெறுவது பொறாமையைத் தூண்டுகிறது . அப்போது பார்த்து ஜெரோனிகஸ் கண்டுபிடிக்கும் பேசும் எந்திர மனிதன் இந்த பொறாமையை சாதுரியமாக பயன்படுத்திக்கொள்ள கஸ்டாப்சனை தூண்டுகிறான் . இதனால் ஜெரோ

அகதி சிறுவனைக் காப்பாற்ற முயற்சிக்கும் ஆறு மாணவர்களின் வீரச்செயல்! - 7 டேஸ் வார்- அனிமேஷன்

படம்
    7 டேஸ் வார்!   7 டேஸ் வார்! ஜப்பான் அனிமே மாமோரு கானுக்கு, தன்னுடைய வகுப்பில் கூடவே படிக்கும் தோழி மீது காதல். ஆனால் அதனை நேரடியாக சொல்ல துணிச்சல் இல்லை. நிறைய படிப்பவன். நிறைய விஷயங்களை தெரிந்து வைத்திருப்பவன். ஆனால் அவன் சொல்வதை காதுகொடுத்து கேட்க கூட அவனுக்கு நெருக்கமான நண்பர்கள் இல்லை. இந்த நிலையில் அவனது பள்ளித்தோழி கான் வாழும் இடத்திலிருந்து வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து செல்லும் சூழல் ஏற்படுகிறது. அப்போது அவளின் பிறந்த நாளும் வருகிறது. இதனைப் பயன்படுத்தி அவளை இம்ப்ரெஸ் செய்ய கான் முயல்கிறான். இதற்காக பயன்பாட்டில் இல்லாத தொழிற்சாலை ஒன்றுக்கு ஜாலியாக செல்ல திட்டமிடுகிறார்கள். அங்கு தோழியின் நண்பர்கள் அனைவருமே வருகிறார்கள். ஒரே வகுப்பில் இருந்தாலும் கூட அதிகம் பேசிப்பழகாத ஆட்கள். அங்கு வாழும் தாய்லாந்து சிறுவன், பெற்றோரை தவறவிட்டு அவர்களை தேடிக்கொண்டிருக்கிறேன். அவனைப் பிடிக்க ஜப்பான் குடியுரிமைத்துறை முயற்சிக்கிறது. கான் தலைமையில் அவனது நண்பர்கள் ஒன்று திரண்டு அந்த தொழிற்சாலையில் அச்சிறுவனைக் காக்க முயல்கிறார்கள். இது தேசிய அளவில் செய்தியாக, அச்சிறுவனின் பெற்றோர் கிடைத்தார்களா

தனது குடும்பத்தை அழித்தவர்களை அழிக்க போராடும் சிறுமி - பிளாக் ஃபாக்ஸ்

படம்
    black fox japan anime    ரிக்கா இசுகுரா, அவளது குடும்பத்தின் ஒரே வாரிசு. தாத்தா, பழைமையான தற்காப்புக்கலைகளை அவளுக்கு சொல்லிக்கொடுக்கிறார். அதேசமயம் போரிடும்போது எப்போதும் கருணை காட்டாதே என்று சொல்லிக்கொடுக்கிறார். ரிக்காவின் தந்தை ரோபோட்டிக்ஸ் ஆராய்ச்சியாளர். அவர் உருவாக்கும் நாய், கழுகு, அணில் ஆகிய ட்ரோன்களை போரில் பயன்படுத்த அவரது நண்பர் பிராட் நினைக்கிறார். ஆனால் ரிக்காவின் தந்தை அதற்கு மறுக்க, அவரது வீட்டில் நுழைந்து அவர்களைக் கொன்று ஆராய்ச்சிக்கான தகவல்களை எடுத்துக்கொண்டு வெளியேறுகின்றனர். இந்த முயற்சிக்கு என்ன செய்கிறோம் என்பது பற்றிய நினைவு இன்றி வெகுளியாக உதவுகிறாள் ரிக்கா.  நடக்கும் சண்டையில் சக ஆராய்ச்சியாளர் லாரன், அவரது மகள் மியாவின் சக்தியால் ரிக்காவின் தாத்தா இறந்துவிடுகிறார். ரிக்காவின் அப்பா, சுடப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார். அவர் முன்னமே கணினியை இயக்கி தனது ஆராய்ச்சியைக் காப்பாற்றி விடுகிறார். அவரது காவல் ட்ரோன்கள் ரிக்காவை காப்பாற்றி அழைத்து செல்லுகின்றன. ரிக்கா எப்படி பிராட்டை பழிவாங்குகிறார் என்பதுதான் ஒரு மணிநேர படத்தின் கதை.  ரிக்கா தனது பெயரை லில்லி என்று

என்னுடைய காதலி யார் என்று தெரியுமா? லெட் மீ இன்

படம்
  லெட் மீ இன்       லெட் மீ இன்   Directed by Matt Reeves Screenplay by Matt Reeves Based on Let the Right One In by John Ajvide Lindqvist   Music by Michael Giacchino Cinematography Greig Fraser   லெட் மீ இன் 2008ஆம் ஆண்டு வந்த ஸ்வீடன் படத்தை ஆங்கிலத்தில் ரீமேக் செய்திருக்கிறார்கள். லெட் தி ரைட் ஒன் இன் என்பதுதான் மூலப்படம். நியூ மெக்சிகோவின் லாஸ் அலமோஸில் 1980ஆம் ஆண்டு நடைபெறுகிறது படம். 12 வயது மகிழ்ச்சியில்லாத சிறுவன், ஓவன். அவனது பெற்றோர் விவகாரத்து பெற்றுவிட அம்மாவிடம் வளர்கிறான். பள்ளியில் அவனை அவனது வகுப்பு மாணவர்கள் மூவர் எப்போது அடித்து துன்புறுத்திக்கொண்டே இருக்கிறார்கள். இந்த நிலையில் அவன் வாழும் அபார்ட்மெண்டிற்கு அபி என்ற 12 வயது சிறுமி வருகிறாள். ஓவன், அடிக்கடி டெலஸ்கோப்பில் பக்கத்து வீட்டு  சரச சல்லாபங்களை பார்த்து நமக்கும் ஒரு பெண்தோழி இருந்தால் என கனவில் இருக்கிறான் சரியான அபி அவர்களது கட்டடத்திற்கு வர ஆஹா.. என மகிழ்கிறான். ஆனால் முதல் பேச்சிலேயே அபி நாம் நண்பர்களாக இருக்க முடியாது என மறுக்கிறாள். பின்னாளில் அவன் அவனை விரும்பி நட்புகொள்கிறாள். பகல் முழுவதும் வெளியே வரா